குற்றப்பரிகாரம் – 2
1655
2
அத்தியாயம் – 2
ஏக்கர் கணக்கில் வளைத்துப்போட்டு, ‘கல்விச் சேவை’ புரியும் ஏதோ ஒரு கல்வித் தந்தையின் ஏதோ ஒரு கல்லூரி….அரட்டை அடித்தபடியே உள்ளே வந்து கொண்டிருந்தவர்களிடம், முக்கியமாக வருங்காலத் தாய்க்குலங்களிடம் சீட்டு ஒன்றைக் கொடுத்துக் கொண்டிருந்தான் ஜூனியர் ஒருவன்.
‘ராகிங் செய்வது சட்டத்திற்கு விரோதமானது. ராகிங் செய்யும் மாணவர்கள் விசாரனையின்றி கல்லூரியிலிருந்து விலக்கப்படுவர்’ – கல்லூரி நிர்வாகம்.
என்று எழுதியிருந்த அந்தச் சீட்டு, கீழே அங்கங்கே கசங்கியும், கிழித்தும் போடப்பட்டிருந்தன. ஒரே ஒரு வாத்தி மட்டும் (அநேகமாய் லேங்குவேஜ் ஆசிரியராய் இருக்க வேண்டும்) அந்த சீட்டை வாங்கிப் பார்த்தார்! “அடடே இது நம்ம காலேஜ் அபீஸ் ரூம் நோடீஸ் போர்ட்ல இருக்கறதாச்சே!வெரி குட் வெரி குட்! எந்த கோர்ஸ்பா நீ ”
“பி.எஸ்.சி., ஃபர்ஸ்ட் இயர் சார்.,”
“பலே பலே பொறுப்பா நடந்துக்குறியே. ஐ அப்ரிஷியேட் யூ”
“சார்… அதெல்லாம் இல்ல சார்”….
“பின்ன! இவ்ளோ தைரியமா (!) அதுவும் இந்த காலேஜ்ல கொடுக்கறியே… உன்னைப் பாராட்டலாம்பா., தப்பே இல்ல”
“நீங்க வேற கடுப்ப கிளப்பாதீங்க சார்”
“ஏம்பா… பாராட்னா தப்பா”, என்றவரின் மூஞ்சிக்கு நேரே விரலை வைத்து சுத்தினான் பிஎஸ்சி…
“ஏன்டாப்பா… என் மூஞ்சில முறுக்கு புழியர”
“ப்ளாஷ் பேக் சார்”
கல்லூரிக்கே உரிய மரத்தடி…
“ஏ… பிடி பிடி… ஒரு எல்கேஜி வருதுபாரு”
“வாங்க ஜூனியர் சார்! வந்து சீனியர்ஸ்க்கு ஒரு வணக்கம் போட்டுட்டு போங்க”
“குட் மார்னிங்… சாரி வணக்கம்” என்றான் அந்த ஜூனியர் பயந்தபடி
“ஏன் சார் டர்ராகுறீங்க
நாமல்லாம் பிரண்ட்ஸ் ஆக வேணாமா! நீங்க என்ன பன்றீங்க…
“எ… என்…என்ன ராகிங்கா? அதெல்லாம் இங்க கிடையாதுனு சொன்னாங்களே! நோட்டிஸ் போர்டுல கூட போட்ருக்காங்களே”
“பார்றா., ‘சுவாமிநாதன்’ நம்மகிட்டயே ‘ வசூல்ராஜா’ வேலைய காட்டுது… அப்டியா சார் எங்களுக்கு தெரியாதே! மச்சான் உனக்கு தெரியுமாடா…
ம்.,ஹூம்… உனக்கு… இல்லடா… பாத்தியா எங்க யாருக்கும் தெரியல! அது என்ன நோட்டு”
“பிஸிக்ஸ் ரிகார்ட் நோட்”
“ரிகார்டலாம் நாங்க ப்ரேக் பண்ணிக்கறோம்..நீ என்ன பன்ற… அந்த போர்டுல சொன்னியே அத இதுல எழுதிட்டு வர! போ போ டைம் வேஸ்ட் பண்ணாத” தயங்கிய ஜூனியரைப் பார்த்து ஒரு ஜால்ரா சொன்னான்… “ஏய் அரவேக்காடு… தல சொன்னத செஞ்சிட்டு வா… இதோட விட்ருவோம்… இல்ல”
வேறு வழியில்லாமல் எழுதி கொண்டு வந்தவனின் முன்னாலேயே அந்தப் பக்கத்தை ‘டர்’ரெனக் கிழித்த தல, நோட்டை ஜால்ராக்களிடம் தூக்கியெறிந்தபடியே, ஜூனியரிடம் சொன்னான்…
“குட் சைல்ட்., நாளைக்கு இதே மாதிரி ஐநூறு காபி எழுதி கொண்டு வர… ஜெராக்ஸ்லாம் எடுக்கக் கூடாது… நீயேதான் எழுதனும், அக்கா எழுதினா அண்ணன் எழுதினான்னு சொல்லக்கூடாது”
தலைவிதியே எனத் தலையாட்டிவிட்டு திரும்பியவனை…”இரு… என்ன அவசரம், எழுதிட்டு எங்ககிட்ட காமிச்சுட்டு… அந்தோ தெரியுது பாரு காலேஜ் வாசல்… அங்க நின்னு, நாளைக்கு காலைல வர்ற ஸ்டூடன்ட்ஸ்க்கு கொடுக்கனும்… மெயினா மைனாக்களுக்கு கொடுக்கனும்… கொடுத்துட்டு பிச்சுகிச்சு நோட்டை வாங்கிட்டுப் போ…”
“இதான் சார் நடந்தது. அவங்கள பகைச்சுக்க கூடாதாமே… அதான்” “யாரு அவங்க?” வீராவேசமாய் கேட்ட ப்ரொபசர், பிஎஸ்சி கைக்காட்டிய கூட்டத்தைப் பார்த்ததும், சத்தமில்லாமல் நழுவினார்.
“என்னடா மச்சான் அந்த எல்கேஜி நம்மளை கை காமிச்சுட்டான் போல
மொழி மொறைக்குது” – ஒரு ஜால்ரா
“விடுறா… நாமதான்னு தெரிஞ்சதும் மொழி பம்மிக்கிட்டே எடத்தக் காலி பண்ணுது பாரு”- இன்னொரு ஜால்ரா “அதச் சொல்லு… தலைய பகைச்சுக்க முடியுமா? என்ன தல”
“பின்ன… காலேஜ் டீனோட க்ளோஸ் பிரண்டு எங்கப்பா! மொழிக்கு சீட்டுக் கிளிஞ்சுருமோனு பயம் இருக்காது”
“தல., அந்த பையனைக் கூப்ட்டு கேப்பமா”
“விடு விடு வேண்டாம். இதோட நிறுத்திப்போம்.
எங்க போய்டப் போறான்… இங்கதானே இருக்கப் போறான்”
திமிரின் மொத்த உருவமாய் பதில் சொன்னான், அந்த ஜால்ராக்கள் குறிப்பிட்ட தல என்னும் ஜலால்.
வாலை சுருட்டுவது போல் ‘தல’ய சுருட்ட, கல்லூரியில் காலை வைத்தான் அருண்!
2 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
College galattavudan amarkalama irundhadhu sir
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
வணக்கம் தோழமைகளே,
எழுத்தாளர் திரு சுரேஷ் அவர்களின் கதைகளை கண்மணி மற்றும் கொலுசு இதழ்களில் படித்திருப்பீர்கள். இப்போது அவருடைய கதைகளை சகாப்தத்திலும் பதிவேற்றம் செய்ய துவங்கியிருக்கிறார். நான் வாசித்துப்பார்த்தேன். கதை நன்றாக இருக்கிறது… நீங்களும் வாசித்துப் பாருங்கள்… வளரும் எழுத்தாளர்… குறைகளை பொறுத்து… நிறைகளை தட்டிக்கொடுங்கள். உங்களுடைய மேலான கருத்துக்கள் அவரை மெருகேற்றும் என்று நம்புகிறேன்.
நன்றி
நட்புடன்
நித்யா கார்த்திகன்.