Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 20

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 57

அத்தியாயம் – 57

தேவ்ராஜ் காரிலிருந்து இறங்கும் பொழுதே துருவன் அவனை எதிர்கொண்டான். சற்று தொலைவில் திலீப் நின்றுக் கொண்டிருந்தான். இறுக்கமான முகத்துடன் ரஹீமிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த நரேந்திரமூர்த்தி தேவ்ராஜை பார்த்துவிட்டு அவனிடம் நெருங்கினார். “தே…வ் பா….ய்! நா அப்பவே சொன்னனே கே…ட்டிங்களா…!” என்கிற அலறலுடன் விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயிருந்து ஓடி வந்த பாரதி தமையனின் சட்டை காலரை பிடித்து உலுக்கினாள். ஆத்திரத்திலும்… கோபத்திலும்… துக்கத்திலும் அவளுடைய ஒவ்வொரு அணுவும் துடித்தது. “எத்தனை தரம் இந்த வீட்டு வாசல்ல வந்து நின்னுட்டு போனாரு… பார்க்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்துட்டீங்களே தேவ் பாய்… இனி எப்படி நம்ம டாடிய பார்க்க போறீ….ங்…க…” – அவன் மார்பிலும் முகத்திலும் அடித்தாள்… கத்தினாள்… கதறினாள்… கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். மரம்போல் இறுகிப்போய் நின்றான் தேவ்ராஜ்.

 

“நீங்க பழி வாங்கிட்டீங்க தேவ் பாய்… பழி வாங்கிட்டீங்க… இப்ப நிம்மதியா உங்களுக்கு… சொல்லுங்க…” – அவளுடைய சின்ன இதயம் வெடித்துச் சிதறிவிடுவது போல் இருந்தது.

 

“டாடி நம்ம கூட இல்ல… போயிட்டாரு… தேவ் பாய்… நம்ம டாடி போயி…ட்…டா…ரு…” – கதறி துடிக்கும் அந்த கன்னியின் கண்ணீர் கல்லையும் கரைத்துவிடும். ஆனால் அவளோடு உடன்பிறந்தவன் கற்சிலையாகவே மாறிவிட்டது போல் இறுகிப்போய் நின்றான்.

 

“ம்மாடி… விடும்மா… மனச தைரியப்படுத்திக்க கண்ணா…” – நரேந்திரமூர்த்தி தங்கைமகளை தாங்கிப் பிடித்தார். துருவனும் அவளுடைய தோளில் தட்டிக் கொடுத்து தேவ்ராஜிடமிருந்து பிரித்துவிட முயற்சி செய்தான். வீட்டிற்குள் இருந்த தன்னுடைய மனைவியை சைகை காட்டி அழைத்து, பாரதியை உள்ளே அழைத்துச் செல்லும்படிக் கூறினான் திலீப். மூவருமாக முயர்ச்சி செய்து ஒருவழியாக அவளை தேவ்ராஜிடமிருந்து பிரித்து உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

 

அவளுடைய அழுகை ஓயவில்லை… யாருடைய சமாதானத்திலும் அவள் அடங்கவில்லை. செய்தி தெரிந்ததிலிருந்து இப்படித்தான் கதறிக் கொண்டிருக்கிறாள். தொண்டை வறண்டுவிட்டது… சக்தியெல்லாம் விடிந்துவிட்டது… ஆனாலும் துக்கம் துளியும் குறையவில்லை. கடைசிவரை அவருடைய நிழல் இந்த வீட்டில் படாமலே போய்விட்டதே என்கிற ஆதங்கம் அவள் நெஞ்சை அடைத்தது. முழுதாக ஒரு நாள் கூட அவருடன் கழித்திருக்க மாட்டாள். அப்படியிருக்கும் போது இவளுக்குள் எப்படி இவ்வளவு பாசம் என்று அனைவரும் வியந்தார்கள். கொத்தி விரட்டும் கோழியை குஞ்சு சுற்றி சுற்றி வருமே… அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்…! ரெத்தம் துடிக்கும் போது அவளும் துடிக்கிறாள்.. அவ்வளவுதான்.

 

அந்த துடிப்பு தேவ்ராஜிடமும் இருந்தது. ஆனால் பழகிவிட்டது… இருபத்தியைந்து வருடமாக துடித்துக் கொண்டிருக்கிறான்! ஒவ்வொரு முறையும் அந்த நடிகையோடு அவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அட்டைப்படங்களில் பார்க்கும் பொழுதெல்லாம்… தன் தாயின் இடத்தை அவளுக்கு கொடுத்துவிட்ட அவருடைய துரோகத்தில் துடுதுடித்துப் போனானே… அதைவிடவா இது பெரிது! அவள் கையை பிடித்தபடி பொது நிகழ்ச்சிகளில் சுற்றிவரும் அவரை டிவியில் பார்த்துவிட்டு துக்கம் கொண்ட நாட்கள் எத்தனையெத்தனை! அந்த பிஞ்சு மனம் அனுபவித்த துக்கத்தைவிடவா இது பெரிது! பாரதிக்கு எதுவும் தெரியாது… அவள் குழந்தை… அவளுடைய தந்தை இறந்து இருபத்தியைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டது என்கிற உண்மை புரியாமல் இப்போது அழுது கொண்டிருக்கிறாள். – “தேவ்…” – சிலைபோல் நின்றுக் கொண்டிருந்த மருமகனை அழைத்தார் நரேந்திரமூர்த்தி.

 

மெல்ல திரும்பிப் பார்த்தான். “ஏம்ப்பா இங்கேயே நிக்கிற? உள்ள வந்து அம்மாவை பாரு…” – கண்களை இறுக்கமாக மூடி திறந்தான்.

 

“நியூஸ் தெரிஞ்சதுலேருந்து உனக்கு போன் ட்ரை பண்ணிகிட்டே இருந்தோம்பா… நீ எடுக்கவே இல்ல… ஹார்ட் அட்டாக்… காலையில மூணு மணிக்காம்” – பேச்சு கொடுத்தார். அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. பட்டமரம் போல் அப்படியே அசையாமல் நின்றான்.

 

“தேவ்… நீ ஸ்ட்ராங்கா இருக்க வேண்டிய நேரம் இது… ஒடஞ்சுபோயிடாத… நா இருக்கேன் உன்னோட. தைரியமா இரு…” என்றார். அவரை திரும்பிப் பார்த்தான். அவருடைய வார்த்தை அவன் மனதை தொடவில்லை. யாரோ யாருக்கோ சொல்வது போல் தோன்றியது.

 

‘இதே வார்த்தையை இருவபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீங்க எங்க அம்மாகிட்ட சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும் மாமா…’ என்கிற எண்ணம் தன்னைமீறி அவனுக்குள் எழுந்தது. அமைதியாக வீட்டை நோக்கி நடந்தான்.

 

“என்னப்பா முடிவு பண்ணியிருக்க?” – அவனோடு சேர்ந்து நடந்தபடி கேட்டார்.

 

“பாடி எங்க இருக்கு?” – தேவ்ராஜின் வெறுமையான குரலில் உணர்வுகளென்பது மருந்துக்கும் இல்லை.

 

“அந்த வீட்ல…”

 

“ஓ…!”

 

“என்னப்பா பண்ணலாம்…” – அவர் கேட்டதும் அவனுடைய பார்வை பாரதியிடம் சென்றது… திலீப்பின் மனைவியின் தோளில் துவண்டு கிடைக்கும் தங்கையைக் கண்டு அவன் மனம் கனிந்தது.

 

“இங்க கொண்டு வரதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…” என்று கூறிவிட்டு தாயைப் பார்த்தான். தளர்ந்துபோய் கிடந்தவள் கண்களில் கண்ணீர் கசிந்துக் கொண்டிருந்தது. பிரபாவதி அவளை மடிதாங்கியிருந்தாள். அருகிலேயே இறுகிய முகத்துடன் மாயா அமர்ந்திருந்தாள். தமையனைப் பார்த்ததும் அவள் கண்கள் கலங்கின. நாசி விடைத்தது. கோபமும் துக்கமும் அவள் முகத்தில் அப்பியிருந்தது. தேவ்ராஜின் பெண் உருவம் அவள்… அத்தனை உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு கற்சிலை போல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகிலேயே மதுராவும் அமர்ந்திருந்தாள். அவளுடைய பார்வை தேவ்ராஜின் மீதே பதிந்திருந்தது. அனைவரிடமும் ஒருமுறை பார்வையை வீசிவிட்டு ரஹீமை அழைத்து ஏதோ சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான். மதுராவின் பார்வை அவனை தொடர்ந்தது.

 

***********************

 

அனைத்தும் முடிந்துவிட்டது… ஆலமரம் வேரோடு சாய்ந்துவிட்டது… உலகமே இருண்டுவிட்டது… இனி அவள் யாருக்காக வாழ வேண்டும்? எதற்காக வாழவேண்டும்? அவளுக்கு அனைத்துமாய் இருந்தவர் அடியோடு சாய்ந்துவிட்டார். இனி என்ன இருக்கிறது அவள் வாழ்க்கையில்! கடவுளே! ஏன் இப்படி நடந்தது? நன்றாக பேசிக் கொண்டிருந்துவிட்டு படுத்த மனிதர் காலையில் கண்விழிக்காமல் போய்விட்டாரே! இல்லை… அவருக்கு ஒன்றும் இல்லை… “மாறன்… மா…ற…ன்! முழிச்சுப் பாருங்க மாறன்… ப்ளீஸ்… என்னை தனியா விட்டுட்டு போயிடாதீங்க… மா…ற…ன்…” – தரையில் விழுந்த மீனாக துள்ளித் துடித்தாள் மோனிகா. அவளுடைய கதறலில் சுற்றியிருந்தவர்களின் கண்கள் கசிந்தன.

 

அவளுடைய பெற்றோரும் உடன்பிறந்தவர்களும் அவளுக்கு துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்ள ஓடோடி வந்துவிட்டார்கள். திரை உலக நண்பர்களும் நலம்விரும்பிகளும், செய்தியை கேள்விப்பட்ட மறுநிமிடமே அவளை தேடி வந்து அரவணைத்துக் கொண்டார்கள். சிவமாறனின் மீது விழுந்து புரண்டு கண்ணீர்விட்டுக் கொண்டிருந்த அவள் எதையும் உணரவில்லை. உயிர்நாடியே அறுந்துவிட்டது… இனி யார் வந்தால் என்ன போனால் என்ன…! சுற்றத்தை மறந்து அவரை மட்டும் உற்று நோக்கிக் கொண்டிருந்த அவள் கண்கள் பரிதவித்தன.

 

அந்த நேரத்தில்தான் நரேந்திரமூர்த்தி தன் மகன்களோடு மோனிகாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் சிவமாறனின் உடலை எடுத்துச் செல்வதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அங்கே பெரிய எதிர்ப்பலை ஒன்று கிளம்பியது. மோனிகாவின் தம்பி துள்ளிக் குதித்தான்.

 

“அவரு இத்தனை வருஷமா இந்த வீட்லதான் வாழ்ந்துட்டு இருந்தாரு. அந்த குடும்பம் இவரை வேண்டான்னுதானே ஒதுக்கி வச்சிருந்தது. இப்ப என்ன புதுசா உறவு கொண்டாடிகிட்டு வந்திருக்கீங்க?” என்று ஆவேசப்பட்டான்.

 

“எத்தை வருஷம் வாழ்ந்திருந்தாலும் இது முறையற்ற வாழ்க்கை தம்பி… அதுதான் அவரோட குடும்பம்… அங்க தான் அவரோட மனைவி… குழந்தைங்க எல்லாம் இருக்காங்க… பிரச்சனை பண்ணாம விலகிக்க” என்று எடுத்துக்கூறினார் நரேந்திரமூர்த்தி.

 

“அப்போ எங்க அக்கா அவரோட வாழ்ந்த வாழ்க்கைக்கு என்னங்க அர்த்தம்? இருவத்தஞ்சு வருஷம்… அவருக்காகவே வாழ்ந்திருக்காங்க எங்க அக்கா…” என்று தாவினான்.

 

“இருபத்தஞ்சு வருஷம் உங்க அக்காவாலேயே என் தங்கச்சி கஷ்டப்பட்டிருக்கா தம்பி… உனக்கு வயசு பத்தாது… நகரு…” – அதட்டினார். இவர் குரலை உயர்த்தியதும் திரைஉலகத்தின் சில முக்கிய தலைகள் குறுக்கிட்டன.

 

“சின்ன பையன்கிட்ட என்ன சார் சத்தம் போடறீங்க? சிவமாறன் மோனிகாவைத்தான் தன்னோட மனைவியா எங்ககிட்டயெல்லாம் சொல்லியிருக்கார். நீங்க யாருன்னே எங்களுக்கெல்லாம் தெரியாது. எதுக்கு இங்க வந்து பிரச்சனை பண்ணறீங்க?” – மோனிகாவின் நலம் விரும்பியும் தோழனுமான பிரபல டைரக்டர் ஒருவன் குரலை உயர்த்தினான்.

 

“யோவ்… நீ யாருய்யா முதல்ல எங்க குடும்ப பிரச்சனையில் தலையிடறதுக்கு…” – கடுப்பாகிவிட்டான் திலீப். “பொறுமையா இருடா… டாடிதான் பேசிகிட்டு இருக்கார்ல” – தம்பியை இழுத்துப் பிடித்து அடக்கினான் துருவன்.

 

“என்ன இது புதுசா இருக்கு! மோனிக்காதானே சிவமாறன் சாரோட மனைவி… எத்தனை ஃபங்ஷன்ல பார்த்திருக்கோம். யாரு இவங்கல்லாம்…” – பழைய கதைகளை அறியாதவர்கள் சலசலத்தார்கள்.

 

“சிவமாறன் சாருக்கு இன்னொரு குடும்பம் இருக்கா! மோனிகா எப்படி பொறுத்துக்கிட்டாங்க!” – அனைத்தும் தெரிந்தாலும், மோனிகாதான் அவருடைய முதல் மனைவி என்பது போல் வேண்டுமென்றே சிலர் முணுமுணுத்தார்கள்.

 

“ஏய்… அதெல்லாம் பழைய கதைப்பா… சிவமாறன் சார் அந்த அம்மாவை எப்பவோ விவாகரத்து பண்ணிட்டாரு… இல்லன்னா இவ்வளவு வருஷம் சும்மா இருந்திருப்பாங்களா… பணத்துக்காக இப்ப வந்து பிரச்சனை பண்ணறாங்க… போலீசை கூப்பிட்டு விரட்டுங்கப்பா…” – எங்கிருந்தோ ஒருவன் கத்தினான்.

 

“இங்க பாருங்க சார்… நீங்க யாருன்னு எனக்கு தெரியாது. உங்க தங்கச்சியையும் நாங்க யாரும் பார்த்ததில்லை… சிவமாறனுக்கு பிள்ளைங்க இருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம் உண்மைதான்… அவங்களை வேணுன்னா வர சொல்லுங்க. காரியத்துல கலந்துக்கட்டும்… யாரு என்ன சொல்ல போறா! பாடியை இங்க வச்சாச்சு… எல்லாரும் வர ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கு மேல இங்கிருந்து எடுக்கறது நல்லா இருக்காது. அது அவருக்கும் அசிங்கம்… அவரோட மனமொத்து வாழ்ந்த மோனிகாவுக்கும் அசிங்…ஆஆ..ஏய்…. ஏ..” – அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் மீது பாய்ந்துவிட்டான் திலீப்.

 

“யாரு வீட்டுக்கு யாரடா வர சொன்ன ராஸ்க்கல்… உன்ன கொல்லாம விடமாட்டேண்டா… சாவுடா… சாவு…” என்று அவன் முகத்தை இவன் உடைக்க… இவன் மீது இன்னும் இருவர் பாய… அவர்களை தடுக்க முயன்ற துருவனை இன்னொருவன் தாக்க… இவனும் திருப்பித் தாக்க அந்த இடமே யுத்தக்களமாக மாறிவிட்டது.

 

நரேந்திரமூர்த்தி ஆடிப்போய்விட்டார். “விடுங்கடா… விடுங்கடா…” என்று கத்தினார். சத்தம் கேட்டு உள்ளேயிருந்து ஓடி வந்த மோனிகா, “நிறுத்துங்க… நிறுத்துங்க…” என்று கதறினாள். ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து… தடுக்க முயற்சி செய்தாள். “விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம்… நிறுத்துங்கடா…” – “ப்ரெஸ்க்காரன் வெளியே காத்துக்கிட்டிருக்கான்… விட்டுத்தொலைங்க…” – இன்னும் சிலரும் சண்டையை விளக்கிவிட்டார்கள்.

 

சிவமாறன் இறந்துவிட்ட செய்தியை நேரடியாக மோனிகாவே இராஜேஸ்வரிக்கு தெரியப்படுத்தியிருந்ததால், அவருடைய உடலை கொண்டுவருவதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று தப்புக்கணக்குப் போட்டு பிள்ளைகளை தனியாக அழைத்துக் கொண்டு வந்துவிட்டோமே என்று கலங்கினாலும், சிவமாறனின் உடலை எடுக்காமல் இங்கிருந்து ஒரு அடி கூட நகரக்கூடாது என்கிற உறுதியோடு மோனிகாவை ஏறிட்டுப்பார்த்தார்.




“ஏன் சார் இப்படி அராஜகம் பண்ணறீங்க? அவர் உயிரோட இருந்தப்ப யாராவது இந்த வீட்டுப்பக்கம் வந்திருப்பீங்களா? அவர் இல்லைன்னதும் வீடு புகுந்து ரகளை பண்ணறீங்களே! என்னதான் வேணும் உங்களுக்கு?” கண்ணீரும் கம்பலையுமாகக் கேட்டாள்.

 

“நா என் மச்சானோட பாடியை எடுத்துட்டு போக வந்திருக்கேன். பிரச்சனை பண்ணாம உன்னோட ஆளுங்களை விலக சொல்லு…” – மோனிகாவிற்கு சுரீரென்றது. அவரை எடுத்துட்டு போக போறாங்களா! “இது அவரு வாழ்ந்த வீடு சார்… அவரோட வீடு… அவங்களையும் பிள்ளைகளையும் வர சொல்லுங்க… அவங்க கால்ல விழுந்து கூட நா மன்னிப்பு கேட்கறேன். அவரை இங்கிருந்து கொண்டு போகணும்னு மட்டும் சொல்லாதீங்க…” – கையெடுத்து கும்பிட்டாள்.

 

“அக்கா… நீ எதுக்குக்கா கெஞ்சிகிட்டு இருக்க. நீ உள்ள போ நாங்க பேசிக்கிறோம்”

 

“மேடம்… நீங்க உள்ள போங்க…” – “ஆமாம்… நீங்க உள்ள போங்க… சிவமாறன் சாரை இங்கிருந்து யாரு கொண்டு போறாங்கன்னு நாங்க பார்க்கறோம்” – சிலிர்த்துக் கொண்டு முன்னோக்கி வந்தார்கள் சிலர்.

 

“இல்லல்ல… நீங்க இருங்க… இது எங்க பிரச்சனை. நானே பேசிக்கிறேன்…” – அவர்களை தடுத்தாள் மோனிகா.

 

“என்னம்மா பேசுற நீ? நீ வாழ்ந்த வீட்டுக்கு என் தங்கச்சசி எப்படி வருவா? மனசாட்சியே இல்லையா உனக்கு?” – ஆத்திரத்தில் வெடித்தார் நரேந்திரமூர்த்தி. பேச்சுவார்த்தை காரசாரமாக நடந்து கொண்டிருந்த போது திலீப் அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்று அலைபேசியில் யாருக்கோ அழைத்தான். பிறகு மீண்டும் வந்து தந்தையோடு இணைந்து கொண்டான்.

 

“நீங்களா எந்த முடிவையும் எடுக்காதீங்க. அவங்ககிட்ட கேளுங்க… பிள்ளைங்ககிட்ட பேசுங்க… அவங்க முடியாதுன்னு சொல்லிட்டா நா தடுக்க மாட்டேன். என்னைவிட அவங்களுக்குத்தான் இவர் மேல முழு உரிமையும் இருக்கு. ஆனா ஒரே ஒருதரம் அவங்ககிட்ட பேசிப்பாருங்க சார். அவரோட ஆன்மா இங்கதான் சுத்திகிட்டு இருக்கு. இங்கதான் சார் எல்லா காரியமும் நடக்கணும்… ப்ளீஸ்…” – மோனிகாவின் குரல் தழுதழுத்தது.

 

“உன்னோட நடிப்பை ஸ்கிரீனோட நிறுத்திக்க. உன்கிட்ட ஏமாற நா ஒண்ணும் சிவமாறன் இல்ல… நகரு முதல்ல” – அவளை அலட்சியமாக ஒதுக்கிவிட்டு மைத்துனனின் உடலை நோக்கி செல்ல எத்தனித்தபோது, திடுதிடுவென்று வாட்டசாட்டடமான ஆட்கள் சிலர் வீட்டிற்குள் நுழைந்தார்கள். “ஏய்.. யார்ரா நீங்கல்லாம்? யாரு… ஏய்… ஏய்…” – பதற்றத்துடன் தடுத்தவர்களை அனாசயமாக ஒதுக்கித்தள்ளிவிட்டு சிவமாறனின் உடலை நெருங்கினார்கள்.

 

அவர்களை தடுக்கச் சென்ற தந்தையையும் துருவனையும், “வெயிட்… நம்ம பசங்கதான்…” என்று கையைப் பிடித்து தடுத்தான் திலீப்.

 

அவர்கள் யார் மீதும் அனாவசியமாக கைவைக்கவில்லை. ஸ்ட்ரெச்சருடன் உள்ளே வந்த இருவரிடம் மற்றவர்கள் யாரும் நெருங்காமல் மட்டும் பார்த்துக் கொண்டார்கள். அந்த இருவரும் சிவமாறனின் உடலை அலேக்காக தூக்கிக் கொண்டு செல்ல எந்த தடையும் வராமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய அணுகுமுறையே சொன்னது… தொழில்முறை அடியாட்கள் என்று… கைகளைக் கோர்த்துக் கொண்டு அரனாய் நின்றவர்களைத் தாண்டி ஒரு அடிகூட ஒருவராலும் எடுத்து வைக்க முடியவில்லை.

 

“ஐயோ… வேண்டாம்… விட்டுடுங்க… ப்ளீஸ்… மாறன்… வேண்டாம்… கடவுளே…” – கத்தி கதறினாள் மோனிகா. கடைசியாக கணவனை ஒரு முறை தொட்டுப்பார்க்கத் துடித்தாள். அவளுடைய உயிரையே பிடுங்கி கொண்டு போவது போல் இருந்தது அவருடைய உடலை வலுக்கட்டாயமாக அவர்கள் எடுத்துச் செல்வது.

 

“சார்… வேண்டாம்… விட்டுட சொல்லுங்க… உங்களை கெஞ்சிக் கேட்கறேன்… ப்ளீஸ்… வேண்டாம். அவரை எடுத்துட்டு போக வேண்டாம்னு சொல்லுங்க…” – நரேந்திரமூர்த்தியிடம் ஓடிவந்து, அவர் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்… கையெடுத்து கும்பிட்டாள்… கண்ணீர்விட்டாள். அவர் மனம் இலகவில்லை. தன் தங்கை சிந்திய கண்ணீரைவிட இது ஒன்றும் பெரிதல்ல… நியாயமற்ற கண்ணீர் என்று எண்ணி இறுகிப்போய் நின்றார்.

 

ஆட்கள் ஸ்ட்ரெச்சரோடு வெளியே சென்று கொண்டிருந்தார்கள். விழுந்தடித்துக் கொண்டு அவர்களை தொடர்ந்து ஓடி, கதறலுடன் கணவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவள் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. இரக்கமின்றி அவளை இழுத்து கீழே தள்ளிவிட்டு, உடலை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள்.

 

மீண்டும் எழுந்து ஓடினாள். யார் பார்க்கிறார்கள்… என்ன பேசுகிறார்கள்… எதுவும் அவள் கண்களுக்கு தெரியவில்லை. நாம் ஒரு நடிகை… நம்முடைய ஒவ்வொரு அசைவும் செய்தியாகிவிடும் என்கிற நினைவெல்லாம் இல்லவே இல்லை… அவரை கொண்டு போகிறார்கள்… அவளுடைய மாறனை அவளிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்கிறார்கள்… அது ஒன்று மட்டும்தான் அவள் நினைவில் இருந்தது.

 

“ஐயோ கடவுளே…! அவரை இப்படி கொண்டு போறீங்களே… மாறன்… என்னைவிட்டு போகாதீங்க… ப்ளீஸ்… மா…ற…ன்…” என்று கத்திக்கொண்டே ஓடியவள் சக்தியெல்லாம் இழந்து தளர்ந்து… துவண்டு… நினைவிழந்து மண்ணில் விழுந்தாள்.

 

 




12 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Skanatharajah Sutha says:

    Nice…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pavithra Narayanan says:

    Kathal nalum morality thandina visyam both for antha dev Appa and Monika she deserves it .rajima oda trust brk pani…avanga life spoil senju..oru thappum seytaha en dev Ku intha alla LA thane keta peyar….pogatum…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kanimozhi Ramesh says:

    Itha nan ethir pakala sis monika vum pavam than


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    super update. eagerly waiting for your next update


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    opps ippoo vilanguthaaaaa monikaaaaaaa yevlooo alazga oru kudumbathai kathara vidaaiiiiiii


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Hmmm… Dev kobam nyayamanathu athey samayam monica.. Maran… Enna sollurathunu theriyala.. But Dev ku than support panna solluthu manasu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    என்னை பொறுத்தவரையில் மோனிகா மீதும் மாறன் மீதும் எனக்கு இரக்கமே வரவில்லை,ஒரு குடும்பத்தை சிதைய வைத்த ஒரு இழிவான பெண் ஆண் என்றுதான் தோன்றுகின்றது ,மாறன் மீது உண்மையான காதல்தான் மாறனுக்கும் மோனிகாவை பிடித்திருந்தது எல்லாமே சரிதான்,ஆனால் இருவரும் ஒரு குடும்பத்தை அழித்துவிட்டர்களே,இன்றய தேவ்வின் இந்த மனநிலைக்கு யார் காரணம் இவர்கள்தானே,தேவ் தாயிற்காகவும் பாரதிக்காக மட்டுமே மாறனின் உடலை வீட்டுக்கு கொண்டு அவர் சம்மதித்திருப்பார்.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Monicavin nilai patri enna solradhunu theriyalai…..but Maran udambai monica veetileye vaidhirukalam…..legal illegalo avarai unmaya monica nesicha


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    Very emotional.
    உயிரோடு கிட்டாத அனுமதி
    உயிரற்ற உடலுக்கு….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Ada pavame… Enna niyayam solradu???


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepika Balan says:

    A good punishment for monika.illegal relationship is very bad,she should pay for it


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Riy Raj says:

      இப்போதைய வலியை பார்ப்பவர்கள்… சிறு குழந்தையாய் 3 குழந்தையை தவிக்க வைத்த வலியை உணரமாட்டார்கள்….

You cannot copy content of this page