Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம்- 5

அத்தியாயம் – 5

துள்ளிக்கொண்டு வாசலை அடைந்ததுமே அம்மா அப்பாவை மறந்து போனாள் உஷா. வழக்கம்போல் பிள்ளையாரைக் க்ராஸ் பண்ணுகையில் அந்த குரல் அவளைத் தேக்கியது….

 

“எக்ஸ்க்யூஸ்மி” சட்டென நின்றவள் குரல் கொடுத்தவனை இரண்டு விநாடிகள் கண்கொட்டாமல்  பார்த்தாள்.. அப்பா என்ன ஒரு அழகு… கொஞ்சம் கூட பிசிரடிக்காத முகம்… அளவுடனான மீசை…கச்சிதமான உடை…தயங்கியபடி நின்றவளை, அவன் கேஷுவலாக….

 

“ஹலோ உங்களத்தான்” என்றான்.

 

“ம்…. யார் நீங்க… என்ன வேணும்”… பதறினாள்…அவள் பதறுவதைப் பார்த்தவன்…

 

“ப்ளீஸ் ப்ளீஸ் பதறாதீங்க., நிக்க வேணாம்., ரோட்ல எல்லாரும் வெறிப்பாங்க, நடந்துகிட்டே பேசுங்க”

 

திடீரென, அப்பா சொன்னது ஞாபகம் வந்தது உஷாவிற்கு … இவன் அவனாக இருப்பானோ!  சே சே பாத்தா அப்படி தெரியலையே… ரெண்டுங்கெட்டான் மனசோடு, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்…

 

“ஹலோ மிஸ்டர்… தெருவில ஒரு பொண்ணுகிட்ட டீஸென்ஸியே இல்லாம பேசறீங்க… என்னவோ பத்து வருஷம் தெரிஞ்ச மாதிரி, நிக்காம நடங்கறீங்க”

 

“ஹலோ மேடம்… தெருவுல பேசினாலே டீஸன்ஸி இல்லனு அர்த்தமா. சரி போங்க!

 

காலேஜ் பஸ் போயிடப் போகுது. ஷர்மி ஸ்பாட்ல, அவளைத் தேடாதீங்க! அவ இன்னிக்கு வரமாட்டா”ஷர்மி பேரைச் சொன்னதும் நகர்ந்தவள் டக்கென நின்றாள்… “ஷர்மி… ஷர்மிய உங்களுக்கு எப்படித் தெரியும்”

 

“எங்க பேச விடறீங்க பொரிஞ்சுத் தள்றீங்களே நீங்கதான்”

 

“சரி பொரியல இப்ப சொல்லுங்க., ஷர்மிய உங்களுக்கு எப்படித் தெரியும்!”

 

“முதல்ல நடங்க… இன்னும் பத்து நிமிஷம் இருக்கு, உங்க பஸ் ஸ்பாட் வர்றதுக்கு., பேசிகிட்டே வரேன் கேளுங்க”  எதுவும் சொல்லத் தோன்றாமல்…. “உங்க பேரு”  என்றாள் நடந்தபடியே….

 

“எழிலன்”

 

அட! என்ன ஒரு பேரு! ஆளுக்கேத்த மாதிரி என நினைத்தவள் சுதாரித்தபடி…

 

“எழிலனா! ஷர்மி அவளோட லவ்வர் பேரு ஆனந்துன்ல சொன்னா!” மீண்டும் எழிலனை சந்தேகத்துடனே பார்த்தாள்…

 

“ஏங்க… நான் என் பேர் எழிலன்னுதான் சொன்னேன்…. ஷர்மியோட லவ்வர்னு சொல்லவே இல்லயே… நான் அவ அண்ணனா இருந்தா, என்ன பண்ணீயிருப்பீங்க… நீங்களே காமிச்சு கொடுத்தது போல ஆகாதா”

 

“ஷ்… ஆமல்ல”

 



 

அவள் படும் அவஸ்தையை ரசித்தவாரே அவன் சொன்னான்….

 

“கவலைப் படாதீங்க! நான் ஷர்மியோட அண்ணனும் இல்ல., லவ்வரும் இல்ல”

 

அந்த லவ்வரும் இல்லை என அவன் சொன்னதும், உஷாவின் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம்.,

 

“அப்போ நீங்க”

 

“நீங்க ஆனந்த்னு சொன்னீங்களே அந்த ஆனந்தோட பிரண்டு”

 

“உங்களுக்கு எப்படி ஷர்மிய தெரியும்” என்னவோ கேக்க நினைத்து எதையோ கேட்டாள்…

 

“என்னங்க நீங்க, உங்க பிரண்ட்  ஷர்மியோட ஆனந்தை உங்களுக்கு தெரியும் போது, என் பிரண்ட் ஆனந்தோட ஷர்மிய எனக்கு தெரியாதா”

 

அட! ஆமால்ல! ஏன் நமக்கு மூளை இப்படி குழம்புது!

 

“சரி… இப்ப என்ன விஷயம்… சீக்கிரம் சொல்லுங்க”

 

“ஷர்மிக்கு இப்போ உங்க  உதவி தேவைப்படுது”

 

“ஷர்மிக்கு என் உதவியா! ஏன் அவளுக்கென்ன! குண்டு கட்டா நல்லாதானே இருக்கா! டெய்லி ஆனந்தோட சுத்திட்டுதான இருக்கா”

 

“அவசர அவசரமா சொல்ல முடியாதுங்க. உங்க காலேஜ் பஸ் ஸ்பாட் நெருங்கிருச்சு. பக்கத்துல, ரோடு டர்ன் ஆகுது பாருங்க, அதுல திரும்புங்க., விவரமா சொல்றேன். அனேகமா நீங்க காலேஜ்க்கு லீவு போட வேண்டியிருக்கும் உங்கள ஒரு வீட்டிற்கு அனுப்பனும்”

 

“என்..ன..து… காலேஜ் லீவு போட்டுட்டு, வேற இடத்திற்கு போகனுமா? ஹலோ மிஸ்டர்…. பேர் என்ன சொன்னீங்க…

 

ஆங்… எழிலன்… இவ்வளவு நேரம் நான் பேசினதே பெரிசு! எனக்கு ஷர்மி மேட்டரும் வேணாம், குர்மி மேட்டரும் வேணாம்… ஆள விடுங்க” என நகர்ந்தவளிடம்…

 

“சரிங்க… போய்ட்டு வாங்க… ரொம்ப தேங்ஸ் அண்ட் சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்… ஷர்மிதான் சொன்னாளாம் ஆனந்த்கிட்ட… ‘உஷா எனக்காக உயிரையே கொடுப்பானு’… அந்த லூசு என்கிட்ட சொல்லி உங்களைப் பார்க்க சொன்னான்… விடுங்க., அவங்க எப்படியாவது போகட்டும், நமக்கென்ன, நான் வரேன்” அலுத்துக் கொண்டே திரும்பிப் பார்க்காமல் நடந்தான் எழிலன்.

 

 




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    உங்க கதை ரொம்ப சுவாரஸ்யமா போகுது


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    ஹா டர்னிங்ல வச்சு கடத்தப்போறானா? உஷாரா இரு உஷா

You cannot copy content of this page