கனல்விழி காதல் – 58
9279
11
அத்தியாயம் – 58
பலிஹில் பகுதியை சூழ்ந்த, வெள்ளை உடையணிந்த மனித வெள்ளம் தேவ்ராஜின் வீட்டில் அலைமோதியது. திரண்டு வந்த திரையுலகமும் படையெடுத்து வந்த தொழில் உலகமும் மௌனமாய் அந்த வீட்டிற்குள் சென்று வந்துக் கொண்டிருந்தது. சிவமாறனின் உடல் வைக்கப்பட்டிருக்கும் குளிர்பெட்டிக்கு அருகில் போடப்பட்டிருந்த பிளாஸ்ட்டிக் நாற்காலியில் துக்கம் தோய்ந்த முகத்துடன் இறுகிப்போய் அமர்ந்திருந்த இராஜேஸ்வரியை அனைத்துப் பிடித்திருந்தாள் பிரபாவதி.
இருபத்தியைந்து ஆண்டுகள் விலகியே இருந்துவிட்டாலும் இனைந்து வாழ்ந்த எட்டு ஆண்டுகளை அவள் மறக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஏங்கித்தவித்த நினைவுகள் அவள் நெஞ்சைவிட்டு அகலவில்லை. கடைசி நேரத்தில் சுற்றிச்சுற்றி வந்தாரே! சாகப்போகிறோம் என்று தெரிந்துதான் வந்திருப்பாரோ! – கலங்கியது அவள் உள்ளம்.
அவர் முதன்முதலில் வாங்கி கொடுத்த புடவை இப்போதும் அவளிடம் பத்திரமாக இருக்கிறது. அவர்களுடைய திருமணத்தின் போது அவளுடைய அண்ணன் நரேந்திரமூர்த்தி, மைத்துனனுக்கு அணிவித்த தங்கச்சங்கிலி இப்போதும் அவர் கழுத்தில் கிடக்கிறது. துரோகம் செய்துவிட்டாரே… இன்னொருத்தியை ஏறெடுத்துப் பார்த்துவிட்டாரே என்கிற கோபம் மலையளவு இருந்தாலும்… அவர் மீதான காதல் கடலைவிட ஆழமாக அவளுக்குள் புதைந்துக் கிடக்கிறதே… அதை அறிவாரா இந்த மனிதன்! நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். என்னை மீறி… என் பிரியத்தை மீறி… இவருக்குள் இன்னொரு காதல் எப்படி வந்தது! – அடிவயிற்றிலிருந்து எழுந்துவந்த துக்கம் அவள் நெஞ்சை அடைத்தது. மனம் கதறியது. கண்ணீர் கசிந்தது.
“டாடி… என்னை பாருங்க டாடி.. ப்ளீஸ்…. ஒரே ஒரு தரம் முழிச்சுப் பாருங்க…” – உதடுகள் முணுமுணுக்க… கண்ணீரில் கரைந்தபடி, தந்தையை படுக்க வைத்திருக்கும் குளிர்பெட்டியின் மீது தலைசாய்த்து படுத்திருந்தாள் பாரதி. வெகுவாய் முயன்று அவளை சேரில் அமரவைத்தாள் மதுரா. “காலையிலிருந்து அழுதுட்டு இருக்கீங்க… கொஞ்சம் தண்ணியாவது குடிங்க…” – அவளை பிடிவாதப்படுத்தி குளுக்கோஸ் கலந்த நீரை பருகச் செய்தாள் திலீப்பின் மனைவி.
கல்லில் செய்துவைத்த சிலைபோல் சற்று தொலைவில் ஒதுங்கி அமர்ந்திருந்த மாயாவின் கண்கள் எங்கோ நிலைகுத்தியிருந்தன. உறவுக்கார பெண் ஒருத்தி, “ஏம்மா இங்க வந்து உட்கார்ந்திருக்க? அப்பாவை வந்து பாரும்மா…” என்று அவளுடைய கையைப் பிடித்தாள். ‘வேண்டாம்’ என்று தலையசைத்து மறுத்தவளின் கண்கள் கசிந்தன. வருகிறவர்களெல்லாம் இராஜேஸ்வரியிடம் துக்கம் விசாரித்துவிட்டு தேவ்ராஜை தேடினார்கள். அவனை எங்கும் காணமுடியவில்லை. மதுராவின் பார்வை அடிக்கடி மடிப்பாக்கம் சென்று வந்து கொண்டிருந்தது.
அம்புலன்ஸ் வந்த உடனே மாடிக்கு ஓடிச் சென்று, “பாடி வந்துடிச்சு வாங்க…” என்று கணவனை அழைத்தாள் மதுரா. கோச்சில் கண்மூடி அமர்ந்திருந்த தேவ்ராஜ் கண்ணை திறக்கவே இல்லை.
“தேவ்…” – அவன் தோள் தொட்டு மெல்ல அழைத்தாள். அவனிடம் அசைவில்லை. “ஆளுங்கள்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க… நீங்க கீழ இருக்கணும்ல… எழுந்து வாங்க…” என்று மென்மையாக எடுத்துக் கூறினாள். அப்போதும் அவன் கண்திறக்கவில்லை. வேறு வழியில்லாமல் கீழே வந்துவிட்டாள். இப்போது ஆட்கள் அதிகமாக வராத துவங்கிவிட்டார்கள். அவனை கேட்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். இப்போதும் அவன் வரவில்லை என்றால் அதுவே பெரிய சலசலப்பாகிவிடுமே என்று பயந்தாள். அவள் பயந்தது போலவே நரேந்திரமூர்த்தி மகளை அழைத்து, “எங்கம்மா தேவ்?” என்று விசாரித்தார். ஓரிருநிமிடங்கள் யோசித்துவிட்டு, “இங்கதான் டாடி இருக்காரு” என்றாள்.
“இங்கன்னா… எங்க?”
“மேல…”
“மேலையா! மேலையா இருக்கான்? அங்க என்ன பண்ணறேன்?” – மகளை புதிராகப் பார்த்தார். அவள் பதில் சொல்ல முடியாமல் மெளனமாக நின்றாள். அவருக்கு புரிந்துவிட்டது.
“செத்துப்போன மனுஷன் மேல கோவப்பட்டு என்னம்மா பண்ணறது… போயி வர சொல்லு” என்றார்.
**********************
தேவ்ராஜ் வீட்டின் மெயின் கேட்டிற்கு வெளியே இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக ஒரு கார் காத்திருந்தது. அதிலிருந்து ஒருவரும் இறங்கவில்லை. உள்ளே சமாதானம் பேச சென்றவர்களும் வெளியே வரவில்லை. ஒவ்வொரு நொடியையும் யூகம் போல் கடத்திக் கொண்டு காருக்குள் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் மோனிகா. அவள் காரைவிட்டு வெளியே வரும் தருணத்திற்காக விழிப்போடு காத்திருந்தன கேமிராக்கள். திரையில் பார்த்த நடிகையின் உணர்வுகளை நேரில் பார்க்க வேண்டும் என்கிற துடிப்போடு, காவலர்கள் போட்ட தற்காலிக தடுப்பிற்கு வெளியே காத்திருந்த சினிமா ரசிகர்கள் ஏராளம். முக்கியஸ்தர்களும் பிரபலங்களும் சாதாரணமாக உள்ளே சென்று வந்து கொண்டிருக்கும் அந்த வீட்டிற்குள் அவளுக்கு மட்டும் இடமில்லாமல் போய்விட்டது.
மோனிகா வெளியே காத்திருக்கும் விஷயம் உள்ளே மெல்ல கசிந்தது. கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. மரப்பாச்சி பொம்மை போல் இராஜேஸ்வரி உணர்வுகளற்று அமர்ந்திருக்க பாரதியும் மாயாவும் உக்கிரமானார்கள். “அவ உள்ள வரவே கூடாது… எங்க டாடியோட பிணத்து மேல அவ நிழல் கூட படக்கூடாது” என்று பொருமினார்கள். மோனிகாவின் பக்கத்திலிருந்து அழுத்தம் அதிகமானது.
தேவ்ராஜ் மாடியிலிருந்து இறங்கி வரவே இல்லை. இராஜேஸ்வரி உடைந்து போயிருந்தாள். பெண்பிள்ளைகள் இருவரும் உணர்ச்சிவசத்திலிருந்தார்கள். முடிவெடுக்கும் ஸ்தானத்தில் இருந்த நரேந்திரமூர்த்தி, மோனிகாவை வீட்டிற்குள் வர கூடாது என்றார் முடிவாக. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்ய எவ்வளவோ முயன்றார்கள்.
“அந்த பொண்ண பார்க்க பாவமா இருக்கு. உங்க வார்த்தைக்காக வெளியே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கு. பத்து நிமிஷம் வந்து பார்த்துட்டு போகட்டுமே சார்…” என்று கெஞ்சி கேட்டார்கள்.
“அந்த பொண்ணும் வாழ்க்கையில நிறைய இழந்துருக்கு சார். நீங்க பெரிய மனுஷன். யோசிச்சு ஒரு நியாயமான முடிவா சொல்லுங்க…” – நியாயம் பேசினார்கள்.
“எதுக்கு கூட்டத்துல அசிங்கமா பிரச்சனை பண்ணிக்கிட்டு… வெளியில மீடியாக்காரனெல்லாம் இருக்கான். அந்த பொண்ணு கார்லேருந்து இறங்கினா சுத்திடுவானுங்க… இன்னும் ஒரு மாசத்துக்கு ஊர் முழுக்க இதே பேச்சா இருக்கும். பேசாம பத்தோட பதினொன்னா வந்துட்டு போகட்டும்னு விடுங்க” என்று அறிவுரை கூறினார்கள். எதுவும் எடுபடவில்லை அவரிடம்.
“இன்னைக்கு நீங்க சொல்றதுக்கு நா தலையாட்டிட்டேன்னா…. நாளைக்கு என்னோட மருமகன் என்னை மன்னிக்கமாட்டான். உங்க எல்லாரையும் நா வேண்டி கேட்டுக்கறேன். அந்த பொண்ண இங்கிருந்து கிளம்ப சொல்லுங்க. இதுக்குமேல பேசறதுக்கு இதுல எதுவுமே இல்ல” என்று உறுதியாக கூறிவிட்டு எழுந்துவிட்டார்.
மோனிகாவிற்கு அலைபேசியில் விபரம் தெரிவிக்கப்பட்டபோது அவள் இடிந்து போய்விட்டாள். சற்றுநேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாள். சில வருடங்களுக்கு முன், அவர் சொன்ன ஒரு விஷயம் இப்போது அவள் நினைவில் வந்தது. தன்னுடைய மரணத்திற்கு பிறகு இது போல் ஏதேனும் பிரச்சனை வந்தால் நீ மற்றவர்களிடம் உதவி கேட்பதை விட தேவ்ராஜிடமே நேரடியாக பேச முயற்சி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். ஒரு நொடிகூட யோசிக்கவில்லை. தீர்க்கதரிசி போல் அவர் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்கிற முடிவுடன், தன் கையிலிருக்கும் சிவமாறனின் அலைபேசியிலிருந்தே அவனுக்கு தொடர்பு கொண்டாள் மோனிகா.
வெறுப்பா… கோபமா… தூக்கமா என்று இனம்பிரிக்க முடியாத ஒரு கலவையான உணர்வோடு போராடிக் கொண்டிருந்தான் தேவ்ராஜ். அவரை மன்னிக்க முடியவில்லை.. அவருடைய மரணத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.. டீப்பாயில் கிடந்த அலைபேசி ஒலித்தது.
காலையிலிருந்து எந்த அழைப்பையும் ஏற்காதவன், தந்தையின் அலைபேசியிலிருந்து அழைப்பு வந்ததும் நிமிர்ந்து அமர்ந்தான். இதற்கு முன் எத்தனையோ முறை அவருடைய அலைபேசியிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. தவறுதலாக எடுத்துவிட்டாலே ஒழிய, பெரும்பாலும் அவருடைய அழைப்பை ஏற்காதவனுக்கு, இன்று அழைப்பது தந்தையாக இருக்க முடியாது என்று தெரிந்தும் அந்த அழைப்பை உதாசீனப்படுத்த முடியவில்லை. ஏதோ ஒரு வினோதமான உணர்வு… ஒரு உந்துதல்… எடுத்துவிட்டான்.. ஆனால் பேசவில்லை. அந்த பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல், “ஒரு நிமிஷம்… ஒரே ஒரு நிமிஷம் நா உங்ககிட்ட பேசணும்” என்றது. அந்த குரலை கேட்டதுமே அவன் ரெத்தம் கொதித்தது. அழைப்பை துண்டிக்க எத்தனித்தான்.
“நா பண்ணின எல்லாமே தப்புதான்…” என்கிற அவளுடைய உடைந்த குரல் அவனை தடுத்தது. பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.
“கல்யாணம் ஆன மனிதனை நா விரும்பினது தப்பு… என்னால உங்க குடும்பத்துல பிரச்சனை வந்தது தப்பு… உங்க எல்லாரோட மனசையும் காயப்படுத்தியது பெரிய தப்பு… ஆனா… நா பண்ணின தப்புக்கெல்லாம் இந்த தருணத்துலயா நீங்க தண்டனை கொடுக்கணும்? இருவத்தஞ்சு வருஷம் வாழ்ந்திருக்கேன்… அப்போவெல்லாம் என்னை அடிச்சு… கலாட்டா பண்ணி அவர்கிட்டேருந்து பிச்சுவிடாத நீங்க… இன்னைக்குதானா அதை செய்யணும்?” – அவள் குரல் யாசித்தது.
“நா அவர்கிட்டேருந்து எதையுமே எதிர்பார்த்ததில்ல… எனக்கு அவரை பிடிச்சிருந்தது… அவர் கூட கடைசிவரைக்கும் இருக்கணும்னு தோணிச்சு… எங்க உறவை இந்த உலகம் எவ்வளவு கேவலமா பார்க்கனும்னு எனக்கு தெரியும்… இந்த உறவுல நியாயமா ஒரு பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய எந்த உரிமையும் எனக்கு கிடைக்காதுன்னும் தெரியும். ஆனாலும் என்னால முடியல… அவர்கிட்டேருந்து விலக முடியல… என்னோட ஆசை… இயலாமை எல்லாத்துக்கும் உங்க அம்மாவோட வாழ்க்கையை பலிகொடுத்துட்டேன். பெரிய பாவம்தான்… அந்த பாவத்துக்கான தண்டனையை இன்னைக்கு கொடுத்துடாதீங்க… அவரோட முகத்தை… நா… கடைசியா… ஒருதரம் பார்க்கணும்… ப்ளீஸ்….” – தழுதழுத்தாள்.
சட்டென்று போனை அனைத்து கட்டிலில் தூக்கியெறிந்தான் தேவ்ராஜ். அவனுக்குள் ஒருவிதமான படபடப்பு… போராட்டம்… எவ்வளவு தைரியம்! அவனுடைய குடும்பத்தை சிதறடித்துவிட்டு… அவனுடைய துன்பத்திற்கெல்லாம் மூலக்காரணமாகிவிட்டு… அவனுக்கே போன் செய்து பேசுகிறாளென்றால்! யார் கொடுத்த தைரியம்! – அவன் உடல் இறுகியது. அவனுக்குள் இருக்கும் மிருகம் ஆக்ரோஷத்துடன் உறுமியது. உணர்வுகள் கட்டுக்குள் வர சில நிமிடங்கள் பிடித்தன.. அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அவள் பேசியதை சிந்தித்துப் பார்த்தான்.
குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சிவமாறனுக்குத்தான் இருந்தது. பொறுப்புகெட்டத்தனமாக நடந்துகொண்டது அவர்தான். அவரிடம் மட்டும்தானே அவன் கேள்வி கேட்க முடியும்! மோனிகா யார் அவனுக்கு? அவளிடம் ஏன் அவன் கோபப்பட வேண்டும்… அவளை ஏன் தண்டிக்க வேண்டும்? – எதிரி என்கிற அளவில் கூட அவளை தன்னோடு தொடர்பு படுத்திக்கொள்ள அவன் விரும்பவில்லை.
அதுமட்டும் அல்ல… அவன் விரும்பினாலும் விரும்பவில்லையென்றாலும் இருபத்தியைந்து வருடங்கள் அவள் அந்த சிவமாறனோடு ஊரறிய பகிரங்கமாக வாழ்ந்தது உண்மை. இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படியிருக்கும் போது… அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளும் தார்மீக உரிமை அவளுக்கு இருக்கிறது. அதை தடுப்பது தன் தகுதிக்கு இழுக்கென்று நினைத்தான். மறு நொடியே ரஹீமை அலைபேசியில் அழைத்து கீழே என்ன நடக்கிறது என்கிற விபரத்தை கேட்டு தெரிந்துக் கொண்டான். பிறகு நரேந்திரமூர்த்தியை தன்னுடைய அறைக்கு வரச்சொல்லி, மோனிகாவை தடுக்க வேண்டாம் என்று கூறினான். அவர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார்.
“என்னப்பா சொல்ற நீ? அவளை எப்படி நம்ம வீட்டுக்குள்ள விடுவ?” – கோபத்துடன் கேட்டார்.
“அந்த பொம்பள இந்த வீட்டுக்குள்ள இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே நுழஞ்சிடிச்சு. அப்போ காட்டியிருக்க வேண்டியதுதானே இந்த கோபத்தை?” – காட்டமாகக் கேட்டான்.
“இந்த பிரச்சனை இவ்வளவு தூரத்துக்கு போகும்னு நா நினைக்கலப்பா” – தடுமாற்றத்துடன் பதில் சொன்னார்.
“எவ்வளவு தூரத்துக்கு போகும்னு நினைக்கல? மனைவியையும் குழந்தைகளையும் அம்போன்னு விட்டுட்டு, அந்த பொம்பள கழுத்துல தாலி கட்டியிருக்காரு… குடும்பம் நடத்தியிருக்காரு… பப்ளிக் ஃபங்ஷன்லயெல்லாம் கையை கோர்த்துக்கிட்டு போயி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்காரு… இதுக்கும் மேல என்ன நடக்கணும்னு காத்துக்கிட்டு இருந்தீங்க? எங்க அம்மாவுக்கு நீங்கதானே அண்ணன்? அவங்களுக்காக பேச வேண்டியவர் நீங்கதானே? ஏன் அமைதியா இருந்தீங்க? நமக்கெதுக்கு பிரச்சனை… நம்ம குடும்பத்தை நாம பார்ப்போம்னு இருந்துட்டீங்க இல்ல? இதுவே உங்க பொண்ணுக்கு நடந்தா சும்மா இருப்பீர்களா?” – பொங்கிவிட்டான். அவர் மீது இருந்த ஆத்திரத்தையெல்லாம் கொட்டிக் கவிழ்த்துவிட்டான். பதறிப்போய்விட்டார் நரேந் திரமூர்த்தி.
“என்னப்பா இப்படியெல்லாம் பேசுற.. அன்னைக்கு இருந்த சூழ்நிலை அப்படி…”
“என்ன சூழ்நிலை… அன்னைக்கு அவரு உயிரோட இருந்தாரு… இன்னைக்கு இல்ல… அவ்வளவுதானே? அவருகிட்ட காட்ட முடியாத உங்க வீரத்தை… அந்த பொம்பளைகிட்ட காட்ட போறீங்களா? – முகத்தில் அடித்தது போல் பேசினான்.. நரேந்திரமூர்த்தியின் முகம் கன்றிப் போய்விட்டது. அவரால் அவனை நேருக்குநேர் பார்க்கமுடியவில்லை. அவன் பேசுவதில் உண்மை இருந்தாலும், அதை பொட்டில் அறைந்தது போல் இப்படி முகத்திற்கு நேராக சொல்லிக் காட்டுவான் என்று அவர் நினைத்ததே இல்லை. சவுக்கடி போல் வந்து விழுந்த வார்த்தையில் குன்றிப் போனவர், அதற்கு மேல் அங்கு நின்று பேச்சை வளர்த்துக் கொண்டிருக்க விரும்பாமல் சட்டென்று திரும்பி அறையிலிருந்து வெளியேறிவிட்டார்.
11 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
தேவ் சரியாகத்தான் சிந்திக்கின்றார்,அவர்களுக்கு தவறிழைத்தது சிவமாறன்தானே,இவர்கள் அவரிடம் மட்டும்தான் கோபப்படலாம்,மோனிகாவிடம் இவர்கள் கோபத்தை காட்டி என்னவாகப்போகின்றது.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sow Dharani says:
செம செம பதிவு……. மோனிகா பேசிய வார்த்தைகள் எல்லாம் ரொம்ப ரொம்ப உண்மை……. கோவம் காட்ட வேண்டிய நேரத்தில் ஒதுங்கி போயிடு….. கடைசி நேரத்தில் இப்படி நடந்துக்க கூடாது
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mercy Aruna says:
Sabash Dev, your question are very correct. You
Have written the situations as if watching a movie.
Very interesting Nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
nallaaaaa ketaanay kaylviiiii pathi solungaaaaaaaa maamaaaaa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sasi Kala says:
Nice eppi…Who is the guy in this pic?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Priya says:
SUPER epi.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
தேவ்…மாற்றம் தொடக்கம்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Dev konjam konjama maaritu irukanu idhula irundhe theriyudhu….. thanthai melayum monica melayum evvalavu kobam irundhalum nyayathai correct ah pesi irukan…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Super epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Super dev correct than kettan avanga mamava kalyanam panni 3kulanthai erukkura oruthar Mela kathal vandhathu thappu illaiyam Enna niyam rajeswari Amma manasu 25 Years evalo kastapadurathukum bharathi sariyana mental
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Dev .. Manithan da nee …