Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 6

அத்தியாயம் – 6

பிரம்மாண்டமான அந்த கல்லூரியினைப் பார்த்து அளந்தபடி வந்த அருண், நேராக பிஎஸ்சியிடம்தான் வந்தான்…

“ஹலோ பிரண்ட்”

“என்னங்க உங்களுக்கு தரலையா, இது என்ன சுண்டலா! இந்தாங்க பிடிங்க” என்று அருணிடம் ஒரு பேப்பரைத் திணித்தான் பிஎஸ்சி…அதைப் பார்க்கமலேயே, அருண் கேட்டான்…

“இல்லைங்க நான் காலேஜுக்கு புதுசு…இப்பத்தான் போஸ்ட் க்ராஜுவேட் ஜாய்ன் பண்ணியிருக்கேன் க்ளாஸுக்கு வழி தெரியல…அதான்”

“அப்டி போடு அருவாள! ஆண்டவா.. உங்களுக்கு வேற காலேஜே கிடைக்கலையா!”

“ஏங்க, இந்த காலேஜுக்கு என்ன?”

“அதுசரி, நேத்துவர நானும் அப்படித்தான் நெனச்சேன்… அந்த பேப்பரப் படிங்க” படித்ததும் அருண் சொன்னான்…

“ஏங்க நல்ல விஷயந்தானே!”

“அய்யய்யோ மறுபடியும் மொதல்லருந்தா! நம்மளால விரல சுத்த முடியாதுடா சாமி. அதை விடுங்க நீங்க எந்த மேஜர்”

“எம்எஸ்சி ஃபிஸிக்ஸ்”

 



 

“ஓ… நானும் அந்த மேஜர்தான். ஆனா, இப்பத்தான் க்ராஜூவேட்டே… முடிப்பனா இல்லையானு தெரியல! எல்லாம் அந்த ஜலாலுக்கே வெளிச்சம்”

“ஜலாலா.. என்ன ப்ரோ  சொல்ற”

“அண்ணா! அத போகப் போக தானா தெரிஞ்சுப்பீங்க…நீங்க நேர போய்… லெப்ட்ல திரும்பினீங்கன்னா… அங்க மொத பில்டிங்”

“ஓ… தேங்க்ஸ்”

“நில்லுங்க… அவசரப்படறீங்களே! அங்க ஆபீஸ் ரூம் இருக்கும்னு சொல்லவந்தேன். அங்க போய் கேட்டுங்கங்க” என்று ஐநூறாவது பேப்பரை தன் சட்டையிலேயே சொருகிக்கொண்டு நடையைக் கட்டினான் பிஎஸ்சி…

நேராக நடந்த அருண்  ஜலால் கும்பலை க்ராஸ் செய்கையில் அந்த விபரீதம் நடந்தது!

ர்ர்ரப்… ஒரே அறை! ஜலாலின் கண்ணத்தில் அறைந்தான் ஒருவன்.

வெட வெட என நெடுமரமாய் வளர்ந்த அவனின் அறையை வாங்கிய அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் கல்லாய் நின்றான் ஜலால்…

“ராஸ்கல்…. நீ யார்ரா என் தங்கச்சிக்கு பீஸ் கட்ட நாயே…. பணக்காரன்னா அவ்ளோ திமிரா… நாங்கள்லாம் கிராமத்து ஆளுங்க… சொருகிட்டு போய்ட்டே இருப்போம்… இன்னொரு தரம் என் தங்கை விஷயத்துல தலையிட்ட, உங்கப்பன் உனக்கு கொள்ளி போட வேண்டியதாகிடும்! ஜாக்கிரதை!” நடந்தது எல்லாம் ஜலாலுக்கு உரைக்கும் முன் அந்த நெடு நெடு போயே போய்விட்டான். அதிர்ச்சியில் மரம்போல் இருந்தவனை அல்லக்கைகள்தான்   சுரண்டினர்….

சுற்றி பார்வையை விட்டான் ஜலால்… ஒரு நூறு பேராவது பாத்திருப்பார்கள்! எவ்வளவு பெரிய அவமானம்! கொதித்தது ஜலாலின் ரத்தம்.

M.Sc., physics Dept.,

வகுப்பின் நுழைவில் இருந்த பெயர் பலகையை பார்த்து நிச்சயித்து, உள்ளே நுழைந்த அருணின் முதல் பார்வையே அந்த “ரப்” மாணவன் மீதுதான் விழுந்தது.இடைவேளையின் போது அவனிடம் சென்றான் அருண்

“ஹலோ… ஐஆம் அருண்” என தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொண்டான்.

“ஹலோ! ந்யூ கமரா! என் பேரு சுடலையாண்டி, சுடலைனு கூப்பிடுவாங்க”

“ஓ… நல்ல பேரு! அக்மார்க் கிராமத்துப் பேரு. நானும் உங்கள மாதிரி கிராமத்திலிருந்து வந்தவந்தாங்க!கொஞ்சம் கோபக்காரன் தான் உங்கள மாதிரி”

“உங்., உங்களுக்கு எப்படி தெரியும்”

“நீங்க காலைல ஒருத்தர சூடா கவனிச்சீங்களே, அப்போ அங்கதான் இருந்தேன்! யாருங்க அந்த பையன் வெளி ஆளா!”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல! இந்த காலேஜ்தான்! இன்ஃபேக்ட் நம்ம க்ளாஸ்தான்…” அந்த “நம்ம” என்பதில் ஒரு அன்யோன்யம் இருந்தது.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, என்ன விஷயம்னு நான் தெரிஞ்சுக்கலாமா! என்னடா முதல் அறிமுகத்திலயே பெர்சனல் மேட்டர் கேக்கறேன்னு நினைக்காதீங்க! ஏதோ ஒரு அட்டேச்மெண்ட் உங்கள்ட்ட… தட்ஸால்!” என்றான் அருண்..

“ம்… இதில என்ன இருக்கு! எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயந்தான்.

அஃப்கோர்ஸ் அந்த நாயைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கறது நல்லதுதான்… அவன் ஒரு பக்கா ரோக்! இந்த காலேஜ் டீனுடைய பிரண்டோட பையன். பார்ட்னர்னு கூட பேசிக்கிறாங்க. அந்த திமிர்ல காலேஜையே தன் கைப்பிடிக்குள்ள வச்சுருக்கான்., இன்க்லூடிங் ஃப்ரொபஸர்ஸ். என் சிஸ்டர் இங்கதான் படிக்கறா! பிஎஸ்சி செகண்ட் இயர். அவகிட்ட வாலாட்டீர்கான். ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர்ல ஜாய்ன் பண்ணியிருக்கா! அந்த ஃபீஸ இவன் கட்டிருக்கான். பணத்திமிர். பணத்தால எல்லாரையும் வாங்கிடலாம்னு இருக்குதுங்களே சிலதுங்க! அந்த வகைல இவனும் ஒருத்தன். அதான்! சூடா கொடுத்தேன்” என்றான்.

என்னவோ அருணுக்கு சுடலையைப் ரொம்ப பிடித்துப் போனது.




Comments are closed here.

You cannot copy content of this page