குற்றப்பரிகாரம் – 8
1215
1
அத்தியாயம் – 8
சடக்கென ப்ரேக் போட்டதுபோல் நின்றாள் உஷா. திரும்பி நடந்தவனிடம்..
“கொஞ்சம் நில்லுங்களேன்”
தலையை மட்டும் திருப்பியவனிடம் கேட்டாள்….
“இப்ப நான் என்ன செய்யனும்… எனக்கு தலையும் புரியல வாலும் புரியல., பேசாம ஷர்மியவே கேட்டுர்றேன்” என செல்லை எடுத்தவளிடம்
“அய்யய்யோ காரியத்தையே கெடுத்தீங்க… ஷர்மிக்கு கால் பண்ணாதீங்க! அதுமட்டுமில்லாம தப்பித்தவறி ‘ஷர்மி, காலிங்னு’ வந்தாலும் எடுத்துறாதீங்க”
“என்னங்க குழப்புறீங்க”
“குழப்பலைங்க. ஷர்மி கன்ட்ரோல்ல அவங்க செல் இருந்தா, அவங்களே உங்களை காண்டாக்ட் பண்ணியிருக்க மாட்டாங்களா? ஏன் ஆனந்த் மூலமா என்னவிட்டு நேரடியா பாக்க சொல்லனும்”
“ஆமா! ஏன் ஷர்மியே போன் பண்ணி இருக்கக் கூடாது! ஷெபா… தல சுத்துது” என்ற போதே தூரத்தில் காலேஜ் பஸ் போவது தெரிந்தது… “அச்சோ பஸ்ஸும் போய்ருச்சு”
“போனா போகட்டும் விடுங்க! நான் சொல்றதுல, ஐ மீன் ஷர்மி செய்யச் சொன்னதுல உங்களுக்கு விருப்பமில்லைனா, நானே உங்களை காலேஜ்ல ட்ராப் பன்றேன் போதுமா”
“நான் இப்ப என்னங்க செய்யனும்… என்னை எதும் வம்புல மாட்டி விட்றாதீங்க”
“ஏங்க… என்ன பாத்தா வம்புல மாட்டி விடறவன் மாதிரியா தெரியுது!
நான் என் பிரண்டுக்கு உதவி செய்ய நினைக்கிறேன்…. நீங்க உங்க பிரண்டுக்கு விருப்பமிருந்தா செய்ங்க! இல்லைனா ஆள விடுங்க”
“அட! கீரல் விழுந்த ரெக்கார்டு மாதிரி அதையே சொல்லிட்ருக்காதீங்க… நான் என்ன செய்யனும்னு சொல்லுங்க”
“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். என் கூட வந்தா போதும். அங்க அநேகமா ஷர்மிதான் இருப்பாங்கனு நினைக்கிறேன்… மே பி ஷர்மி ரிலேஷன் வீடா இருக்கலாம்”
“அங்க போயி…”
“எனக்கென்னங்க தெரியும்… உஷாவை கூப்டுட்டு அங்க வா!
மத்ததை அங்க வச்சு பேசிக்கலாம்னான் ஆனந்த்.. நான் கூட, ‘நான் கூப்ட்டா அவங்க வருவாங்களா’ காலம் கெட்டுக் கெடக்குன்னேன்! ‘நீ ஷர்மி பேர சொல்லு.. என் பெயரையும் சொல்லு… கண்டிப்பா வருவாங்க’ன்னான்.
தெட்ஸால்…
‘எ…எங்…எங்க இருக்கு?”
“என்னங்க பயமா? உங்கள ஒன்னும் சினிமாவில காமிக்கறா மாதிரி சிட்டி அவுட்டர்க்கெல்லாம் தூக்கிட்டு போய்ட மாட்டேன்…. இங்கதான்
தி.நகர்ல அட்ரஸ்”
“ஹலோ… பயம்லாம் இல்ல… எங்கப்பா யார் தெரியுமா! சென்னைல லீடிங் லாயர். கமிஷனர் லெவல்ல செல்வாக்கு…. ஞாபகம் வச்சுக்கங்க. அது மட்டுமில்ல ஹேண்ட் பேக்ல வேற மிளகாத் தூள் வச்சுருக்கேன், ஜாக்ரத”
மிளகாய்த்தூள் என்றதும் எழிலன் தன்னையறியாமல் சிரித்துவிட்டான்.
“மிளகாதூள பத்திரமா வச்சுக்கங்க. இது முடியட்டும். தூளுக்காகவே உங்கள ஒரு தரம் கடத்திக் காமிக்கறேன்… இப்ப போலாமா!” என்றான் சிரித்தபடி…
அப்பா! என்ன ஒரு அழகான பல்வரிசை!
ரசித்தபடியே உஷா கேட்டாள்…
“எதுலப் போகனும்”
“ஏன்… டூ வீலர்லதான். உங்களுக்கு அப்ஜெக்ஷன் இருந்தா சொல்லுங்க… ஆட்டோலகூட போகலாம்”
என்னவோ அவனுடன் போவதே உஷாவின் மனசுல, ஒரு டன் ஐஸ்க்ரீம் வெச்ச மாதிரி ஜில்லுனு இருந்தது!
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… நா எப்படி உக்காரணுமோ அப்படி உக்காந்துப்பேன்.
என்னை அங்க விட்டுட்டு நீங்க போய்ருவீங்களா?”
“அது அங்க போனதும்தான் தெரியும். என்ன போலாமா?”
“ம்..” ஆசை ஒரு பக்கம், தயக்கம் ஒரு பக்கம், ஷர்மி ஒரு பக்கம் எனக் கலந்தடித்து வந்தது அந்த “ம்”.
“நடந்தபடியே வந்துட்ருங்க… நான் வண்டியைக் கொண்டு வரேன்”. அவள் பதிலுக்கு காத்திராமல் எழிலன் அவளைக் கடந்து எதிர்புறம் நகர்ந்தான்.
எழிலனின் நடையை பார்த்தபடியே நடந்தாள், உஷா!
நாம செய்றது சரியா?
மனதில் கேள்வியுடன் நடந்தாலும், எழிலன் வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்வதை ரசிக்கத்தான் செய்தது மனது. அதே நேரம், அவளின் பின்னால்
சட்டைப் பையில் வைத்திருந்த கடிதத்தை பிடித்தபடியே நெருங்கினான் அவன்!!!
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
ஐய்யோ இது என்ன புது twist….அப்ப எழிலன் கடத்தல்காரன் இல்லையா?