குற்றப்பரிகாரம் – 9
1275
1
அத்தியாயம் – 9
செய்தியைக் கேட்டதும் தன்னை மறந்து கையைத்தட்டினார். அடிச்சான் பாருய்யா இத்தனை அனுபவசாலி இருந்து என்ன பிரயோஜனம். க்ரேட் ஸ்லிப்! நம்ம அமைச்சர்கள் அயல்நாடு போயிருந்ததால, நம்ம கவனம் முழுதும் அங்க இருந்தது. இத்தனை பேர்ல ஒருத்தருக்கு கூட, மத்த பாரின் கன்ட்ரீஸ்க்கு நாம அயல் தேசத்தவர்ங்கறது நினைப்புக்கு வரல… வாட் எ மிஸ்! என்றவர்…
“ம்… ஓகே… ஆக வேண்டியத பார்ப்போம். தீபக் நீங்க முட்டுக்காடு போங்க! அங்க இன்ஸ்பெக்டர் உங்களுக்காக காத்துக்கிட்டுருப்பார். முதல் பார்வை என்ன சொல்லுதுனு எனக்கு இன்பார்ம் பண்ணுங்க”
டிஐஜிக்கு சல்யூட் ஒன்றை உதிர்த்துவிட்டு கிளம்பினான் தீபக்.
அவன் முட்டுக்காடு சம்பவ இடத்திற்கு வந்ததும், சரக இன்ஸ்பெக்டர் ஒரு சல்யூட் வைத்தபடி “திஸ் சைட் சார்” என அழைத்துச் சென்றார்.
கறுத்த உருகுவே அமைச்சர், நெற்றியில் தோட்டாவை வாங்கி அதுவாகி போயிருந்தான்.
“யார் மொதல்ல பாடியைப் பார்த்தது”
“நான்தான் சார்”
“வாட் யூ மீன்”
“ஸ்டேஷனுக்கு கால் வந்தது சார். ஸ்பாட் சொல்லி, சீக்கிரம் போங்க, இப்பத்தான் சுடச்சுட முடிச்சேன்” னு
“யார் பேசினது, எனி பர்டிகுலர் நியூஸ்”
“நோ சார். பேசுனது ஆண். ஈசிஆர் ரோட் பப்ளிக் பூத்லருந்து பேசியிருக்கான். சிசிடிவி பார்வை படாத பூத்தா செலக்ட் பண்ணியிருக்கான்”
“எதாவது சரச் பண்ணீங்களா?”
“இல்ல சார் உங்களுக்காக காத்துருக்கச் சொல்லி ஆர்டர்!”
கானஸ்டபிளைவிட்டுத் தேடியதில், ப்ளாஸ்டிக் பேப்பரில் பாதுகாப்பாய் சுற்றி வைத்த காகிதம்
அந்நிய
மண்ணில்
அமைச்சரின்
ரத்தம்
அதிர்ச்சியாகிப் போனான் தீபக்.
என்ன இது அதேக் கடிதம்…
பாத்தியா நான் சொன்னபடி அந்நிய மண்ணில் அமைச்சரின் ரத்தம் என எகத்தாளத்திற்காக வைத்திருக்கிறானா?
அதற்கு எதற்கு இத்தனை பாதுகாப்பு! அப்போ, இந்த கடிதமும் நம்மிடம் கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணமா? ஆம் அப்படித்தான் இருக்கும்! அதனால்தான் அவனே போன் செய்து உடனே போகச் சொல்லியிருக்கான்
ஏன்? ஏன் அப்படி?
பலவிதக் குழப்பங்களுக்கிடையே
மற்ற பார்மாலிட்டீஸை இன்ஸ்பெக்டரைப் பார்க்கச் சொல்லிவிட்டு, டிஐஜிக்கு போன் செய்தான்.
தீபக்கின் அழைப்பிற்காகவே காத்திருந்தவர்…
“எஸ் ப்ரோஸீட் தீபக்”
“சார் கேஸ் கொஞ்சம் சிக்கலா இருக்கும் போலருக்கு”
“வாட் டூ யு மீன்?”
“ஆமா சார்! ஆசாமி முதலில் எழுதின லெட்டர் மாதிரியே இன்னொரு லெட்டர் டெட்பாடில இருக்கு. அதே வரிகள்… நேர்ல வந்து பேசறேன் சார்… வித்தின் டூ அவர்ஸ் ஐ வில் பீ தேர்” என்றவன் வினையாவிற்கு ஸ்வைப்பினான்.
“ஹலோ… சொல்லு தீப்”
“எங்க மேடம் நம்ம பெட்ரூம்ல இருக்கீங்களாக்கும்”
“எப்படி கண்டுபிடிச்ச!”
“அதெல்லாம் சஸ்பென்ஸ்”
“மண்ணாங்கட்டி சஸ்பென்ஸ்… நான் சொல்லவா! தீப்னு கொஞ்சிக் கூப்ட்டத வச்சு சொல்லியிருப்ப…. வெளில இருந்தா இப்டி கொஞ்சுவனா?”
“வாவ்… ஏஎஸ்பி சம்சாரம்னா சும்மாவா!”
“சாரி ஏஎஸ்பி சார்., நான் கர்னல் தீனதயாளுடைய மருமகள். அவருக்கு மருமகளானதுலருந்து இப்படித்தான்”
“அடிப்பாவி! இப்படி சேம் ஸைடு கோல் போர்றியே. சரி முக்கியமான விஷயம் சொல்லத்தான் போன் பண்ணேன்”
“ஷ்…. நானே சொல்றேன். ‘வினி வினி நான் வர்றதுக்கு லேட்டாகும். எனக்காக காத்துட்ருக்காத. நீ சாப்ட்டு தூங்கு’ இதானே… மனப் பாடமே ஆய்ருச்சுடா… என் கடமை புருஷா!”
“ஹஹ என்ன செய்றது வினி! என் உத்யோகம் அப்படி. பாரு இப்பக்கூட நூறடில பிணத்த வச்சுக்குட்டுத்தான் என் ஆசை மனைவியோட, அதுவும் காதல் மனைவியோட லவ் பண்ண வேண்டிருக்கு”
“ச்சீ…. எதுக்கு கண்டத பேசிக்கிட்டு… நம்மை நமக்குத் தெரியாதா தீப்”
“குட் ஸீ யு…பை”
தீபக்கிற்கு வினயாவுடன் இரண்டு நிமிடம் பேசுவது பூஸ்டிங் டானிக் போல…
டிஐஜி எஸ்பி தீபக்…
மூவரும் டேபிள் மேல் இருந்த இரண்டு கடித்ததையே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இரண்டும் ஒரே மாதிரி டைப் அடிக்கப் பட்டிருந்தது… ஒரே அளவு பேப்பர்… ஒரே கலர்… என்ன வித்யாசம்???
“ஒரு வேளை தெரியாமல் வைத்திருப்பானோ… என்றார் எஸ்பி”
“நோ சார்… இது வேற லெவல்னு நினைக்கிறேன். இத்தனை பேக் செஞ்சு வச்சுருக்கான்னா, இது நமக்கு சேதாரம் இல்லாம கிடைக்கனும்ங்கற ஒரே நோக்கம்தான்…
என்னவோ சொல்ல வரான்”
சொல்லியபடியே இரண்டு கைகளிலும் இரண்டு கடிதத்தையும் தூக்கி பளிச்சென்ற விளக்கொளியில் பார்த்தான் தீபக். பார்த்தவன் திடுக்கிடலோடு சொன்னான்…
“மைக்காட்… ஐ காட் இட் சார்”
அவனின் ஆர்வம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டது.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
என்ன இருக்கு அந்த கடிதத்தில?
நல்லா விறுவிறுப்பா போகுது கதை