கனல்விழி காதல் – 61
9424
10
அத்தியாயம் – 61
இரவு பதினோரு மணியிருக்கும். சோபாவில் அமர்ந்திருந்த தேவ்ராஜின் புருவங்கள் முடிச்சிட்டிருந்தன. அவனுடைய கண்கள் மடிக்கணினி திரையில் நிலைத்திருந்தது. கணினியின் திரை ஸ்லீப் மோடுக்கு சென்ற பிறகும் அதை மும்மரமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் கணவனை வியப்புடன் நோக்கினாள் மதுரா. மாலை வீட்டிற்கு வந்ததிலிருந்தே இப்படித்தான் ஏதோ சிந்தனையிலேயே இருக்கிறான். இரவு உணவை கூட கவனமில்லாமல் கடமைக்கு கொரித்துவிட்டு எழுந்தான். அவளோடும் அதிகம் பேசவில்லை. என்னவாக இருக்கும்! – சிந்தித்துப் பார்த்தவளுக்கு சரியான விடை புலப்படவில்லை.
“என்ன ஆச்சு தேவ்?” – அவனிடம் நெருங்கி மெல்லக் கேட்டாள். அவளுடைய குரல் அவன் செவியை எட்டவே இல்லை.
“தேவ்…” – “ஆங்…” – அவன் தோள்தொட்டு இன்னும் சற்று சத்தமாக அழைத்த பிறகு சட்டென்று திரும்பி அவள் முகம் பார்த்தான்.
“ஏதாவது பிரச்சனையா?” – மனைவியை குழப்பமாகப் பார்த்த தேவ்ராஜ், “ஏன் அப்படி கேட்கற?” என்றான்.
“என்னவோ போல இருக்கீங்களே!”
“ரியலி?” – சிறு புன்னகையுடன் கேட்டான். உடனே அவள் கணினித்திரையை சுட்டிக்காட்டி, “பத்து நிமிஷமா ஸ்லீப் மோட்ல இருக்கு. அதைக்கூட கவனிக்காம அப்படி என்ன யோசனை?” என்றாள். அந்த கணமே அவன் முகத்திலிருந்த புன்னகை மறைந்தது. அவன் மனதில் ஏதோ ஒரு குழப்பமோ கவலையோ இருப்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
“என்கிட்ட சொல்லக் கூடாத விஷயமா?” என்று மீண்டும் ஒருமுறை கேட்டாள். அவனுடைய குழப்பத்தை நீக்கி அவனுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் அவளை உந்தியது.
“ச்சே.. ச்சே… என்ன பேசற நீ?” – உடனடியாக மறுத்து அவளை இழுத்து தன் அருகில் அமரவைத்துக் கொண்டான். அவனுடைய வலிய கரம் அவளை தோளோடு அணைத்துப் பிடித்திருந்தது.
அவன் மடியிலிருந்த கணினியை மூடி டீப்பாயில் வைத்தபடி, “அப்போ சொல்லுங்க… என்ன பிரச்சனை?” என்றாள். அவளை யோசனையுடன் பார்த்த தேவ்ராஜ், “உன்ன இன்னைக்கு யார் பார்க்க வந்தது?” என்றான். இப்போது மதுராவின் புருவம் சுருங்கியது.
“உங்களுக்கு யார் சொன்னது?” என்றாள்.
“அதை பற்றி உனக்கு என்ன? வந்தது யாருன்னு மட்டும் சொல்லு” என்றான். அன்பாக அனைத்துக் கொண்டிருந்த போதும் கூட அழுத்தமான அவன் குரல் கட்டளையிட்டது.
“என்னோட காலேஜ் ஃபிரண்ட்… பேரு சோனியா… கல்யாண பத்திரிகை கொடுக்க வந்தா… ஆனா உங்க செக்யூரிட்டி உள்ள விடமாட்டேன்னு சொல்லிட்டாரு. நீங்கதான் சொல்லியிருந்தீங்களாமே” – மதுராவின் குரலில் வருத்தம் இழையோடியது. அவளை வேவு பார்ப்பது… அவளுக்கு வேண்டியவர்களை அவமதிப்பது எதுவுமே மாறவில்லை என்கிற எண்ணம் அவளை சுட்டது.
“அதனாலதான் நீ வெளியே போயி பார்த்தியா? எனக்கு போன் பண்ணியிருக்கலாம்… சரி விடு…” என்றான்.
“எனக்கு தோணல…” என்றாள் விட்டேற்றியாக. ஒருவாரமாக அவள் காட்டிய இணக்கம் குறைவது போல் தோன்ற அவனுக்கு என்னவோ போல் இருந்தது. ஒரு பெருமூச்சுடன் சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்து விட்டத்தை பார்த்தவன், “மது…” என்றான் ஆழ்ந்த குரலில். அவள் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். “எம்மேல நீ கோவப்படாத. இட் ஹர்ட்ஸ் மி… எ… லா…ட்…” என்றான்.
அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘தேவ்ராஜா இது! இவ்வளவு தழைத்து பேசுவது… அதுவும் அவளிடம்!’ – குடைபோல் விரிந்த விழிகளுடன் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவள் பக்கம் பார்வையைத் திரும்பியவன் அவளுடைய விரிந்த விழிகளைப்பார்த்து, “ப்ரிட்டி பால்ஸ்…” என்றான் இதழ்க்கடையோராம் நெளிந்த புன்னகையுடன். இன்னும் வியப்புடன் அவனைப் பார்த்தாள் மதுரா. ‘சற்று நேரத்திற்குள் எத்தனை மாற்றங்கள் அவனுடைய மனநிலையில்!’
“உங்கள புரிஞ்சுக்கவே முடியல” – மதுரா.
“ட்ரை பண்ணினாத்தானே…”
“நீங்க விட்டாத்தானே?”
“இறுக்கமா பிடிச்சு வச்சிருக்கும் போதே புரிஞ்சுக்க மாட்டேங்கிற… விட்டுட்டா எப்படி புரிஞ்சுப்ப…” – மெல்லிய நகைப்பில் வெளிப்பட்டது அவன் குறும்பு. குங்குமமாய் சிவந்துவிட்டது அவள் முகம்.
************
அதிகாலையிலேயே விழிப்புத்தட்டிவிட்டது தேவ்ராஜிற்கு. இப்போது முளைத்திருக்கும் இந்த புது பிரச்னையை வேரோடு பிடுங்கியெறிய வேண்டும். யாருடைய மனமும் இதில் புண்பட்டுவிடக் கூடாது… குறிப்பாக அம்மாவின் மனம். இடைவிடாத சிந்தனையினால் உறக்கம் அவனைவிட்டு காததூரம் ஓடிவிட்டது. நேற்று இரவு சற்றுநேரம் கண்ணயர்ந்ததே பெரியவிஷயம். மதுராவின் அருகாமை மனதை திசைதிருப்ப சற்று நேரம் பிரச்னையை மறந்திருந்தான். இப்போது மீண்டும் அது மண்டையில் ஏறி அமர்ந்துக் கொண்டு அவனை வதைத்தது. மனமெல்லாம் பாரமாக இருந்தது. படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள நினைத்தான். ஆனால் முடியவில்லை. உரிமையோடு அவன் கையில் தலைவைத்து நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்தாள் மதுரா. கலைந்திருந்த கேசம் சரிந்துவிழுந்து அவளுடைய பாதி முகத்தை மறைத்திருந்தது. அதை அவள் காதோரம் ஒதுக்கிவிட்டு நெற்றியில் இதழ்பதித்தவன் அவளை தன்னோடு அனைத்துக் கொண்டான்… இல்லையில்லை அவன்தான் அவளோடு ஒண்டி கொண்டான்… தாயின் அரவணைப்பை தேடும் குழந்தை போல…
தேவராஜ் மீண்டும் கண்விழிக்கும் போது படுக்கையில் மதுரா இல்லை. குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டது. பெருமூச்சுடன் தலையணையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு புரண்டுபடுத்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சட்டென்று திரும்பி ஆவலோடுப் பார்த்தான். மதுராதான்… உச்சந்தலையில் சுற்றியிருந்த டவலோடு குளியலறையிலிருந்து வெளியேறினாள். கணவனைப் பார்த்ததும், “மார்னிங்… முழிச்சாச்சா…” என்றாள் புன்னகையுடன்.
“பத்து நிமிஷம் ஆச்சு” என்றான். ஈரத்தலையை உலர்த்தியபடி கணவனை ஓரக்கண்ணால் கவனித்தாள் மதுரா. அவள் மனதில் இரண்டு கேள்விகள் உருத்திக் கொண்டிருந்தன. ‘வீட்டுக் காவல் ஏன் பலப்படுத்தப்பட்டுள்ளது…? நேற்று ஏன் கவலையாக இருந்தான்?’ – இந்த இரண்டு கேள்விகளையும் நேற்று அவனிடம் கேட்டுவிட்டாள். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை. மழுப்பலாக பேசி சூழ்நிலையின் திசையையே மாற்றிவிட்டான். இன்னும் அவனால் தன்னிடம் மனம்விட்டு பேச முடியவில்லை என்பது அவள் மனதை வருத்தியது.
“என்ன ஆச்சு?” – திடீரென்று வாடிவிட்ட அவள் முகத்தை கவனித்துவிட்டுக் கேட்டான்.
“என்ன?” – அவளுக்கு புரியவில்லை.
“ஏதோ யோசனையா இருக்க மாதிரி தெரியுதே!”
“ம்ம்ம்… வீட்ல செக்யூரிட்டி ஏன் டைட் பண்ணியிருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா?” என்றாள் மெல்லிய குரலில்.
அவளிடம் அனைத்தையும் கொட்டி மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறான். ஆனால் எப்படி முடியும்! அவளிடம் உருகி கரைந்திருந்த மனதை திடமாக்கிக் கொண்டு, “நீ பயப்படற மாதிரி ஒண்ணும் இல்ல…” என்றபடி படுக்கையிலிருந்தவன் அடுத்த கேள்வியிலிருந்து தப்பிக்க முயல்பவன் போல் சடாரென்று குளியலறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டான்.
அவன் வெளியே வரும் பொழுது டெரஸில் வந்துவிழும் காலை வெயிலை மேனியில் தாங்கியபடி பதுமை போல் நின்றாள் மதுரா. ஒரு நிமிடம் அவளை நின்று பார்த்தவன் பிறகு அலுவலகத்திற்கு தயாராகத் துவங்கினான். உடைமாற்றி… தலை சீவி… பெல்ட் வாட்ச் எல்லாம் போட்ட பிறகும் கூட அவள் உள்ளே வரவில்லை. கடந்த சில நாட்களாக ஒட்டுப்புல் போல தன்னை ஒட்டிக் கொண்டே திரிந்தவள் இன்று தனியாக சென்று நிற்பது என்னவோ போல் இருந்தது அவனுக்கு. “மது…” என்று அழைத்தான். ஒருமுறைக்கு இரண்டு முறை அழைத்த பிறகுதான் என்ன என்று கேட்டாள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அவள் கேட்ட விதத்திலேயே அவளுடைய கோபம் வெளிப்பட்டது.
“என்ன தெரியணும் உனக்கு இப்போ?” – மெல்லிய கோபத்துடன் கேட்டான்.
10 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Juleesakthi Julee says:
Nice epi sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kayalvizhi Ravi says:
தேவ் மனசுமை நீங்கி கொஞ்சம் நிம்மதியாக இருந்தான், மறுபடியும் பிரச்சனையா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
தேவ்வாவது மதுராவுக்கு ஒழுங்காக பதில் சொல்வதாவது,தேவ்விற்கு என்ன கவலை ,தேவ்வால் மற்றவர்கள் கவலையடைவதுதானே சாதரணமாய் நிகழும்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepa I says:
Nice ud.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Veni Karna says:
Oh romba chinna epi mam next update perithai thanga mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
nice update. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
seline seline says:
nice ud mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
சொல்லுவாளா…சொல்லுவானா..
கேட்பாளா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Enna kitta koobabada Madhu nu sonnapodhu velarntha kulandhaiya dhaan thoninadhu avanai paarthu….ippavavadhu open ah pesenda ava kitta