Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 11

அத்தியாயம் – 11

அப்பாவுடன் காரில் போவது… காலேஜுக்கு பஸ். தனக்காக ஒரு ஹோண்டா ஆக்டிவா!

ஆனால், இதுவரை பைக்கில் உஷா யாருடனும் போனதில்லை. அதுவும் அடுத்த ஆண்மகனுடன்?

நோ சான்ஸ்.

 

ஸ்டைலாக அருகில் வந்து நின்ற வண்டியில், பலநாள் உரிமையுடன் பழகியவள் போல், அவள் ஏறிப் போவதைப் பார்த்த, அவளை நெருங்கிய, சட்டைப்பை லெட்டர் இளைஞன்,  அதுவரை அவளைக் காதலித்த தன் ஒருதலைக் காதல் சுக்கு நூறாய் போனதை நினைத்து தேம்பத் தொடங்கினான்.

 

ஒரு அப்பிராணியை அழவிட்டது கூடத் தெரியாமல், எழிலனுடன் சென்றாள் உஷா…

 

“வண்டில போற சில பொண்ணுங்க துப்பட்டாவை வச்சு மூஞ்சிய மூடிக்கறாங்களே அதுமாதிரி நீங்க மூடிக்கலையா!” இயல்பாய் கேட்டான் எழிலன்

 

“நான் எதுக்கு மூடிக்கனும். நீங்க என்ன என் லவ்வரா இல்ல நான்தான் உங்க லவ்வரா? நான் என்ன திருட்டுத்தனமாவா வரேன்” ( பின் இதற்கு பெயரென்ன )

 

“அதுவும் சரிதான்… நாம என்ன லவ்வர்ஸா என்ன…”

 

உஷாவிற்கு ஒரு இனம்புரியாத ஏக்கம் பிறந்தது. சே… எனக்கென்ன ஆச்சு! இத்தனைநாள் இதுபோலெல்லாம் தோனுனதேல்லையே… மேலுக்கு கோபமாகப் பேசினாலும், இவனிடம் பேசிக்கிட்டே இருக்கனுமான்னு இருக்கே! ஏனிப்படி! (இந்த நேரம் பாத்து

‘அம்மாடி இதுதான் காதலா’ பாட்டு ஞாபகம் வந்து தொலைந்தது)

 

“என்னங்க சைலண்ட் ஆகிட்டீங்க…”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… ஆமா நீங்க என்ன பன்றீங்க…”

 

“நானா… நமக்கு விவசாயங்க…”

 

“அட! சொல்ல விருப்பமில்லைனா விடுங்க! அதுக்கெதுக்கு புனிதமான விவசாயத்து மேல பழியப் போடறீங்க., விட்டா கிராஜுவேட் முடிச்சுட்டு விவசாயம் பாக்றேன்னு சொல்வீங்க போல”

 

“நீங்க நம்பினாலும் நம்பலைனாலும் அதுதான் உண்மை. பிஈ., கிராஜுவேஷன் முடிச்சுட்டு விவசாயம்தான் பாக்றேன்… இன்பேக்ட் விவசாயமும்”

 

“நம்பவே முடியலைங்க”

 

“நாம நம்பறா மாதிரியே எல்லாமே வாழ்க்கைல நடக்குறது இல்லைங்க!  எத்தனையோ ஏமாற்றங்கள்… பாருங்க இப்ப கூட லவ்வு கிவ்வுனுலாம் நீங்க பேச மாட்டீங்கனு நெனச்சேன்… வண்டில உக்காந்த உடன  அதைத்தான் பேசுனீங்க”

 

“ஹலோ…  துப்பட்டா பத்தி நீங்க  சொன்னதுக்கு, நான் பதில் சொன்னேன்… நா இந்த மாதிரிலாம் யார்கிட்டையும் பேசினதில்ல”

 

“ஆமா… நாங்க மட்டும் டெய்லி பத்து பொண்ணுங்க கிட்ட பேசிட்டுத் திரியரமாக்கும்”

 

“யார் கண்டா?” பாக்க அழகா வேற இருக்கீங்க” பெண்களுக்கே உரிய சந்தேகக் கண் உஷாவிற்கும் தலைதூக்கியது…

 

“அடப்பாவமே! ஊர்ல் வந்து கேட்டுப்பாருங்க!

என்னை எவ்வளவு, ‘நல்லவேஏஏன்னு’ சொல்வாங்க தெரியுமா?

அட டிக்‌ஷ்னரி எடுத்து

எழிலன்னு  தேடிப்பாருங்க

‘யோக்கியவான்னு’ போட்ருக்கும்”

 

“சொன்னாங்க சொன்னாங்க”

 

“என்னது!” எனத்திரும்பியவனை…

 

“ஒன்னுமில்ல… நீங்க ரோட்டப் பாத்து ஓட்டுங்க”

 

“சொன்னா நம்புங்க. உங்கள்ட்டதான் மொத மொத பேசிருகேன்”

 

“சரி… நம்பிட்டேன்., இன்னும் எவ்வளவு தூரம் போகனும்”

 

“அவ்ளோதான்…. ரோடு திரும்பி கொஞ்ச தூரம்”

 

அடச்சே!அந்த கொஞ்ச தூரம் என்ற வார்த்தை

உஷாவை வேதனையாக்கியது.

 

சந்து திரும்பி ஒரு வளைந்த மரப்படி அமைத்த அப்பார்ட்மெண்ட் வாசலில் நிறுத்தினான்.

அவனைப்பார்த்து வாசலில் ஸ்டூல் போட்டு அமர்ந்திருந்த வாட்ச்மேன் ஒரு கும்பிடைப் போட்டான். கூடவே… தபால் கட்டு ஒன்றிலிருந்து தேடி, கவர் ஒன்றையும் எழிலனின்க் கையில் கொடுத்தான்.

 

காதல்….

அது வந்தவர்களுக்கு, உலகத்தில் தன்னைச் சுற்றி நடப்பது எதுவுமே தெரியாது. கண் பார்க்கும்., அறிவிற்கு எட்டாது! காது கேக்கும்., மூளைக்கு உறைக்காது.

 

இல்லையென்றால், ஷர்மி ரிலேஷன் வீடு என சொன்னானே… அப்புறம் எப்படி வெகுநாள் பழகியதுபோல் வாட்ச்மேன் வணக்கம் வைக்கிறான். அதுவும் தபால் கவர் ஒன்றையும் தருகிறானே என உஷா யோசித்திருப்பாள்.

 

அட எழிலனும் அதே தவறை செய்தது தான் ஆச்சர்யம்… உஷாவை என்ன சொல்லி கூட்டி வந்துள்ளோம் என்பதே மறந்து போய் வாங்கிய கவரின் அட்ரஸைப் பார்த்தபடியே படி ஏறினான்… ஒருவேளை அவனும் உஷா நிலைமையில் இருக்கிறானோ!

 

பூனைகள் ரெண்டும் கண்ணை மூடிக்கொண்டு படியேறின…




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    வெகு அருமையான எழுத்து நடை..,,ரொம்ப சுவாரஸ்யமா போகுது

You cannot copy content of this page