கனல்விழி காதல் – 63
9090
6
அத்தியாயம் – 63
“உனக்கு இப்போ என்ன தெரியணும்?” என்று கோபத்தோடு கேட்டாலும், அனைத்தையும் அவளிடம் சொல்லி முடித்துவிட்டான் தேவ்ராஜ். இறுகிப்போய் அமர்ந்திருக்கும் கணவனை இரக்கத்துடன் பார்த்தாள் மதுரா. அவளால் நம்பவே முடியவில்லை. பாரதியாவது… அந்த மோனிகாவோடு பழகுவதாவது! – “அந்த ஆள் சரியா பார்த்திருக்க மாட்டார் தேவ்… இது ஏதோ தப்பான இன்ஃபர்மேஷன்” என்றாள் உறுதியாக.
மனைவியை நிமிர்ந்து பார்த்த தேவ்ராஜ் கசப்புடன் சிரித்தான். “என்னை அவ்வளவு முட்டாள்னு நினைச்சியா?” என்றான். அவள் என்ன பதில் சொல்வாள்! நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திக்கொள்ளாமல் பேசமாட்டானே!
“பாரதிக்கு என்ன பிரச்சனை… ஏன் அந்த வீட்டுக்கு போனா… அந்த பொம்பளைகிட்ட என்ன பேசினா… இதெல்லாம் எனக்கு தெரியாம இருக்கலாம். ஆனா ஒண்ணும் மட்டும் நல்லா தெரியும்… அந்த பொம்பளைய நாலு தரம் மீட் பண்ணியிருக்கா… ரெண்டுதரம் வீட்ல… ரெண்டு தரம் வெளியில…” என்றான் முகத்தை சுளித்துக் கொண்டு.
“அவ ஏதோ விபரம் இல்லாம இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா… பொறுமையா எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா… நீங்க வருத்தப்படாதீங்க” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள். நம்பிக்கையில்லாமல் தலையை குறுக்காக ஆட்டினான் தேவ்ராஜ்.
“பாரதியை நினச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அவ நாம சொல்ற எதையும் கேட்கற நிலைமையில இல்லையான்னு தோணுது” என்றான் உள்ளடங்கிய குரலில்.
“ஏன் அப்படி சொல்லறீங்க? நீங்க சொன்னா அவ நிச்சயம் கேட்பா” – அவளை நிமிர்ந்து பார்த்த தேவ்ராஜின் கண்கள் அலைபாய்ந்தன.
“என்ன தேவ்?” – கவலையோடு கேட்டாள் மதுரா.
“அவ அந்த பொம்பளையை மட்டும் மீட் பண்ணல மது…”
“பின்ன?”
“அவளோட தம்பி ஒருத்தன் இருக்கான்… பாரதி அங்க போகும் போதெல்லாம் அவனும் கூட இருந்திருக்கான்” – மதுரா பேச்சிழந்து நின்றாள்.
‘கடவுளே! இது என்ன சோதனை!’ – அவள் மனம் அரற்றியது. ஓரிருநிமிடங்கள் திகைத்துப்போய் நின்றவள் பின் மனதை திடப்படுத்திக் கொண்டு, “இதெல்லாம் எதேர்ச்சையா கூட நடந்திருக்கலாம் தேவ். அவசரப்பட்டு எதையும் முடிவு செய்யாதீங்க” என்றாள்.
“ம்ஹும்… நா ரொம்ப நிதானமா இருக்கேன். இல்லன்னா அவன் டெய்லி என் தங்கச்சியை ஃபாலோ பண்ணறதுக்கு அவனை…” – சொல்ல வந்ததை முடிக்காமல் பற்களை நறநறத்தான்.
“என்ன!!! ஃபாலோ பண்ணறானா!” – அதிர்ந்தாள் மதுரா. கற்சிலைபோல் இறுகிப்போய் அமர்ந்திருக்கும் கணவனின் சிந்தனையில் குறுக்கிட்டு,
“தேவ்… திஸ் இஸ் சம்திங் சீரியஸ்… நீங்க உடனே இதை என்னன்னு பார்க்கணும். இல்லன்னா பாரதி பெரிய பிரச்சனையில சிக்கிக்குவா” என்றாள் பயத்துடன்.
ஆமோதிப்பாக தலையசைத்தவன், “ரெண்டுதரம் நம்ம கேட் வரைக்கும் வந்திருக்கான். அவனை என்ன பண்ணலாம்…?” என்று அவன் வெளிப்படையாக யோசிக்க மதுராவிற்கு மயக்கம் வராததுதான் குறை… “இங்கயா? நம்ம வீட்டுக்கு வெளியேவா…? கேட் வரைக்குமா!!” என்று நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் கேட்டவள், “அதனாலதான் சோனி காரை பிளாக் பண்ணினாரா செக்யூரிட்டி?” என்றாள்.
“ம்ம்ம்… புதுசா யார் வந்தாலும் உள்ள அனுமதிக்க வேண்டாம்னு சொல்லியிருந்தேன். இந்த விஷயமெல்லாம் அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு என்னால கற்பனை கூட பண்ண முடியல” என்றான். மதுராவிற்கு இப்போது அனைத்தும் தெளிவாக புரிந்துவிட்டது. பாரதியின் முட்டாள்தனத்தினால்… உணர்ச்சிவசப்படும் குணத்தினால் இந்த குடும்பத்தில் பெரிய புயல் ஒன்று வீசப்போகிறது என்பதை உணர்ந்தாள்.
அன்று காலை உணவிற்கு பாரதி வரவில்லை. தலைவலி என்று காரணம் சொன்னாள் இராஜேஸ்வரி. உண்மையில் பாரதிக்கு தேவ்ராஜை சந்திக்கும் தைரியம் இல்லை. நேற்று மோனிகாவோடு தன்னை பார்த்த தேவ்ராஜின் ஆள் நிச்சயம் போட்டுக்கொடுத்திருப்பான் என்று நம்பியவள் அவனுடைய கண்ணில் படாமல் தப்பித்துக்கொள்ள நினைத்தாள். ஆனால் எத்தனை நாட்களுக்கு அப்படி தப்பிக்க முடியும். அன்று இரவே தங்கையை சந்தித்துப் பேச அவளுடைய அறைக்கே வந்தான் தேவ்ராஜ்.
இது நாசுக்காக கையாளப்பட வேண்டிய விஷயம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று போட்டு உடைத்து சின்ன விஷயத்தை பெரிதாக்கிவிடக் கூடாது என்று படித்துப்படித்து சொல்லியிருந்தாள் மதுரா. எனவே நிதானமாகவே பேசினான்.
“என்ன பண்ணற? சாப்பிட்டியா? தலைவலியெல்லாம் எப்படி இருக்கு?” என்று விசாரித்துவிட்டு கடைசியாக, “உனக்கு என்ன அந்த மோனிகா வீட்ல வேலை?” என்றான். அந்த கேள்விக்கு வரும் பொழுது அவனுடைய குரலில் ஏற்பட்ட மாற்றத்தை எவ்வளவு முயன்றும் அவனால் தவிர்க்க முடியவில்லை. கையை பிசைந்துக் கொண்டு மெளனமாக நின்றாள் பாரதி.
“வாயைத் தெறந்து பேசு” – எரிச்சலுடன் அதட்டினான்.
“டாடியை பத்தி தெரிஞ்சுக்க போனேன்…” என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.
“அதுக்கு ஏன் அங்க போன? அம்மாகிட்ட கேட்க வேண்டியதுதானே?” என்றான்.
“அவங்களுக்கு என்ன தெரியும்… அவங்கதான் டாடி கூட இல்லவே இல்லையே!” – தேவ்ராஜின் புருவம் சுருங்கியது. இடுங்கிய கண்களுடன் தங்கையை பார்த்து, “அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாதா! அப்போ வேற யாருக்கு தெரியும்?” என்றான் எரிமலையின் சீற்றத்தை உள்ளே கட்டுப்படுத்தியபடி.
“உங்கள டாடி அடிக்கடி பார்க்க வந்தாங்க. நீங்கதான் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டிங்களே” என்றாள் குற்றம்சாட்டும் தொனியில்.
“அதுக்கு?”
“எதுக்காக வந்தாங்கன்னு கேட்க போனேன்”
“அதை அந்த பொம்பளைகிட்ட தான் போயி கேட்கணுமா?”
“அவங்கதானே டாடி கூட கடைசி நேரத்துல இருந்தாங்க…” என்றவளை கடுமையாக முறைத்தான் தேவ்ராஜ். ‘என்ன தைரியம்! மூளைச்சலவை செய்யப்பட்டவள் போல் திடீரென்று இப்படியெல்லாம் பேசுகிறாளே! பெற்ற தாயைவிட ஒரு தரம்கெட்ட பெண்தான் உயர்வு என்பது போல் எப்படி பேசுகிறாள்! அறிவை அந்த மோனிகாவிடம் விற்றுவிட்டு வந்துவிட்டாளா!’ – உள்ளுக்குள் கொதித்தான்.
“தேவ் பாய்… டாடி ரொம்ப நல்லவரு தெரியுமா? அம்மாவோட போட்டோவை இன்னமும் பார்ஸ்லேயே வச்சிருக்கார். நம்மளோட சின்ன வயசு டிரஸ்… டாய்ஸ்ல்லாம் கூட பத்திரமா வச்சிருக்கார்… அந்த வீடு இல்ல… நாமெல்லாம் சின்ன வயசுல இருந்தோமே! அந்த வீட்டுக்கு கூட அடிக்கடி போவாராம். அங்க போனா அம்மாகூட பேசற மாதிரி இருக்குன்னு சொல்லுவாராம் தெரியுமா?” – மூச்சுவிடாமல் தந்தையின் புராணத்தை படித்தாள்.
கைமுஷ்டி இருக்க தங்கையை வெறித்துப் பார்த்தான். அவனுடைய கோபத்தை உணரும் மனநிலையில் அவள் இல்லை. பட்டனை அழுத்திவிட்ட டேப் ரெக்காடரை போல படபடவென்று பொரிந்தாள். சின்ன குழந்தை என்று செல்லம் கொடுத்து வளர்த்ததன் பயனை இன்று அனுபவித்தான். அவளை எப்படி கையாள்வது என்றே அவனுக்கு புரியவில்லை. பிசினெஸ்ஸாக இருந்தால் டீல் பேசி முடித்துவிடலாம்… இந்த உறவுச் சிக்கலை… உணர்வு போராட்டத்தை எப்படி களைவது! செய்வதறியாது திகைத்துப் போய் நின்றான்.
“டாடியோட டைரி என்கிட்ட இருக்கு. படிக்கிறீங்களா பாய்… அம்மா பத்திதான் எழுதியிருக்கார்…. அம்மாதான் டாடியை புரிஞ்சுக்கல… அம்மாமட்டும் டாடியை மன்னிச்சு அவங்களை… அதான் அந்த மோனிகாவை விட்டுட்டு வர சொல்லியிருந்தா டாடி வந்திருப்பாரு… அம்மாவுக்குத்தான் ஒண்ணுமே தெரியல… தேவையில்லாம நாம எல்லாரும் பிரிஞ்சு தனித்தனியா வாழ்ந்துட்டோம்…” – “போதும் நிறுத்து… பேசாத… ஒரு வார்த்தை… பே…சா…த” – சுட்டுவிரல் நீட்டி எச்சரித்தான். அவனுடைய பெருமையெல்லாம் காற்றில் கரைந்த கற்பூரத்தை போல் காணாமல் போய்விட்டது. நெருப்பு தன்னால் போல் சிவந்திருக்கும் தமையனின் முகத்தை அப்போதுதான் கவனித்தாள் பாரதி. அதுவரை மனதில் தோன்றியதையெல்லாம் படபடவென்று பேசிக் கொண்டிருந்தவள் அண்ணனின் கோபத்தைக் கண்டு திகைத்தாள்.
“நீ பாரதி இல்ல… நீ என் தங்கச்சியே இல்ல… மொத்தமா மாறி வந்து நிக்கிற… யார் உன்ன மாத்தினது? அவளா? அந்த மோனிகாவா சொல்லு…” – கர்ஜித்தான்.
அவன் பாரதியின் அறையில் கத்துவது பக்கத்து அறையிலிருந்த மதுராவிற்கு கேட்டதும் அவள் கதிகலங்கிப் போய் வெளியே ஓடி வந்து கீழே எட்டிப் பார்த்தாள். நல்லவேளை… ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. அனைவரும் உறங்க சென்றுவிட்டார்கள். அவசரப்பட்டு எதையாவது பேசி அவளை இன்னும் மூர்க்கமாக்கிவிடப் போகிறானோ என்கிற அச்சம் மேலெழுந்தது அவளுக்குள்.
“அம்மாவையே குற்றம் சொல்ற அளவுக்கு தைரியம்… ம்ம்ம்? என்ன தெரியும் உனக்கு? அந்த ஆள் செஞ்ச துரோகம் தெரியுமா? இல்ல… நாங்கபட்ட கஷ்ட்டம்தான் தெரியுமா? பிச்சை மட்டும்தான் எடுக்கல… என் அம்மா அதுக்கு விடல… உன்ன ஒண்ணுமே தெரியாம வளர்த்துட்டோம்ல… அதான்… இவ்வளவு பேசுற…” – வெறுப்புடன் கூறினான்.
“தேவ் பாய்… நா அம்மாவை ஒண்ணும் சொல்லல…” – அழுகுரலில் விளக்கம் கொடுக்க முற்பட்டாள்.
“பேசாதன்னு சொன்னேன்” – சீறினான் தேவ்ராஜ். சட்டென்று வாயை மூடிவிட்டாள் பாரதி.
“கடைசியா உன்ன எச்சரிக்கிறேன்… இன்னொருத்தரம் நீ அந்த வீட்டுப்பக்கம் போன… அதுங்கள பார்த்தேன்னு தெரிஞ்சுது…” – என்று கடுமையான குரலில் எச்சரித்தவனின் கண்களில் தீயின் ஜுவாலை தெரிந்தது.
6 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sow Dharani says:
ஹாய் அக்கா
எபி சூப்பர்…… கண்டிப்பா பாரதிக்கு பிரோப்ளேம் பண்ண மோனிகா விட மாட்டாங்க…… மோனிகா தம்பி பத்தி ஒன்னும் புரிய மாட்டுது
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
HAYO BARATHI PATTAATHAN PUTHI VARUMOOOOO
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
பாரதி தன்னையறியாமலே மோனிகாவின் தந்தை மீதான பாசம் பார்த்து அவர் பக்கம் சாய்கின்றார்,தேவ் தடுக்க தடுக்க பாரதி மீறுவாரென்றே தோன்றுகின்றது ,மோனிகாவின் தம்பி பாரதி பின்னால் சுற்றுகின்றார் அது காதல் என்றால் சந்தோசம் ,ஆனால் ஒருவேளை தன் தமக்கைக்கு நடந்த அநியாயத்திற்கு அந்தக்குடும்பத்தை வருத்த செய்ய வேண்டுமென்பதற்காக பாரதியை பகடையாக பயன்படுத்தினால் என்னாகும்,இது எதுவும் தெரியாமல் பெரிய பிரச்சனை ஒன்றிற்கு பாரதி அடிபோட்டுவிட்டார், இனி என்னவாகுமோ.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kavi Nathi says:
Nalla pathivu mam. Bharathi panrathu muttalthanam. Enga poi mudiyumo.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepa I says:
Control dev . This not time to show ur feelings. Behave like devraj.nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை.
துரோக புருசனுக்கு பத்தியம் காக்கலன்னு நினைக்கிறா போல…உலகமே அப்படித்தான்…பாவம் இராஜேஸ்வரி. மறுபடியும் வாரிசு உருவாகிறதோ..?