Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 12

அத்தியாயம் – 12

“என்ன தீபக்! வித்தியாசம் தெரியுதா?”

 

“எஸ் ஸார். நமக்கு முதல்ல வந்த லெட்டர்ல பேக்ரௌண்ட்ல மிக மெல்லியதாக ஒரு ஃப்ளைட் படம் ஷேட் இருக்கு பாருங்க. சாதாரணமா, பாரின் லெட்டர்ஸ்லதான் இதுமாதிரி இருக்கும். ஆனா இரண்டாவதா வந்த லெட்டர்… ஐ மீன் உருகுவே அமைச்சரிடம் எடுத்த லெட்டர்ல அது மிஸ்ஸிங்…

‘அயல்தேச அமைச்சரை கொலை செய்யப் போகிறேன்’ என்ற நோக்கத்தில் ஷேட் இருந்த பேப்பர், டிஜிபி.,க்கு அகிலா மூலமா வந்தது. ‘நம்ம அமைச்சரை கை வைக்கப் போறேங்கற’ லெட்டர் உருகுவே மூலமா வந்துருக்கு”

 

டிஐஜி வியந்தபடி சொன்னார்…

“சிம்பிள்… அடுத்து நம்ம நாட்டு அமைச்சரை கொல்லப் போகிறேன்…

என்று தகவல் தந்துருக்கான். வெரி க்ளவர்… ஹஹ உருகுவே பாடிய  போஸ்டு பாக்ஸாவும் யூஸ் பண்ணி இருக்கான்…

தட்ஸால்… ஏம் ஐ கரெக்ட் தீபக்”

 

“எக்ஸாக்ட்லி சார்.. அதோட இன்னொன்னு

அடுத்ததா நம்ம நாட்ல எந்த அமைச்சரைக் கணக்குத் தீர்க்க போறான்னு தெரியல! ஆனா, ஒன் திங் க்ளியர் சார். கொலை செய்யப் போறது நம்ம அமைச்சரை, பட் இன் பாரின் கன்ட்ரி! யார் & எங்கே என்பதுதான் நம் முன் இருக்கும், ஹிமாலையக் கேள்வி?”

 

“எஸ்… அப்ராட் அமைச்சரையே டீல் பண்ணும்போது.. நீங்க சொன்னா மாதிரி எந்த மாநில நபரா இருக்கவும் சான்ஸ் இருக்கு… ஆனா நாம யரையும் தொட விடக்கூடாது”

 

போலீஸ் துறை.. ஒரு சின்ன விஷயத்தைக் கூட அலட்சியமாய் விடாமல், பம்பரமாய் சுழன்றது. விரல் நுனியில் உலகத்தைக் கொடுக்கும் இணையம் பெரிதும் உதவியாய் இருந்தது…

 

ஸ்பெயின்…

பார்சிலோனியா…

மாலை வேளை…

 

கடற்கரையை பார்த்தது போல் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான “பார்சிலோனா ஆர்ட்ஸ் ஹோட்டல்”ன்  போர்டிகோவை நோக்கி வந்த கருநீல போர்சே 911 எஸ் கார் ஹோட்டலின் வாசலில் கச்சிதமாக நின்றது.  கூப்பேவிலிருந்து இறங்கிய அந்த இளைஞனைப் பார்த்ததும் வாசலில் நின்றிருந்த டோர்மேனின் கை, தன்னால் ஹோட்டலின் கதவை திறந்துவிட்டு தலை தாழ்த்தியது.

 

உள்ளே சென்றவன் நேரே ரிசப்ஷன் செல்லாமல்  பார்  பகுதிக்கு சென்று நோட்டமிட்டான். உறுத்தாத இளம் நீலநிற வெளிச்சமும், மெல்லிய இசையும் கலந்து ரம்மியமாய் இருந்த பாரில், நிறைய இடைவெளிவிட்டு ஆங்காங்கே ரசித்து ருசித்துக் கொண்டிருந்தார்கள்.

 

கடற்கரையில் உள்ள அழகிய மங்கையரை ரசித்தபடியே, பொன்நிற திரவத்தைக் கையில் ஏந்தியபடி அமர்ந்திருந்தார் அந்த தமிழகப் பெரும்புள்ளி.

நேராக அவரிடம் வந்து, காலியாய் இருந்த இருக்கையில் அமர்ந்தான் அந்த இளைஞன். இம்மிகூட அவர் பக்கம் திரும்பவில்லை. இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் ஒரு துண்டு சீட்டை அவரிடம் தள்ளினான்.

 

முதலில் அதிர்ந்தவர், பின் என்ன நினைத்தாரோ யாருமறியாமல் அதை இழுத்துக்கொண்டார்.

நான்கே வரி…

 

மஃப்டியில் போலீஸ் உலாவுகிறார்கள். அங்கே வேண்டாம். இந்த இளைஞனை தொடர்ந்து வரவும்.

ராபர்ட்

 

இருபது நொடிகளுக்குப் பிறகு இளைஞன் சொன்னான்…

போர்டிகோ இடதுபுறம் நூறடித் தள்ளி நில்லுங்கள். போர்சே நீலநிற கார் வரும் ஏறிக் கொள்ளுங்கள். மறுவார்த்தை பேச வேண்டாம்.

 

கார் வந்ததும் ஏறினார். “இப்போது பேசலாமா என்றார்”

 

“தாராளமாக”

 

“நீ தமிழனா!”

 

“ஆமாம்! அப்போதுதான் நம்புவீர்கள் என்பதால் ராபர்ட் என்னை அனுப்பினார். உங்களைப் பற்றி கூட எல்லாம் தெரியும்”

 

“என்ன தெரியும்”

 

“தமிழகத்தில் அசைக்க முடியாத பெரும்புள்ளி எனத் தெரியும்….

உங்களது பெயரிலும், உங்களது பினாமி பெயரிலும்

எவ்வளவு சொத்து, எங்கெங்கு உள்ளது என உங்களுக்கே தெரியாது என்பது தெரியும்… எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் உங்கள் ராஜாங்கத்திற்கு ஒரு குறையும் வராது என்பது தெரியும்… வெளிநாட்டு முதலீடுகளுக்கு ராபர்ட்டை நம்பியுள்ளீர்கள் எனத் தெரியும்… முக்கியமாய்”

என்று  நிறுத்தினான்…

 

“முக்கியமாய்!?”

 

“இப்போது அமைச்சர் பதவி ‘வாங்கியுள்ளீர்கள்’ என்று தெரியும்”

 

“பரவாயில்லையே, நம்ம ஊர் பையன் இல்லையா! புத்திசாலியாகத்தான் இருப்பாய்… வேற”

 

“வேற…. கிட்டத்தட்ட பதினாறு வழக்குகளில் ஜாமீன் வாங்கி, பல வருடங்களாய் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள் எனத் தெரியும். என்ன நான் சொன்னது சரியா?”

 

“நூத்துக்கு நூறு சரி”

 

“இப்போதுகூட மிகப் பெரிய வெளிநாட்டு சொத்து ஒன்றை உங்கள் மகன் பெயரில் ராபர்ட்  மூலம் வாங்க வந்துள்ளீர்கள் எனத் தெரியும். அதிலும்…”

 

“அதிலும்”

 

“நீங்கள் இங்க வந்தது இந்தியாவில் முக்கியமாய் தமிழகத்தில் யாருக்கும் தெரியாது என்பதும் தெரியும்”

 

“அட! ஆமாம்பா! வயித்தெரிச்சல் புடிச்ச பசங்க! இப்பதான் அமைச்சராகியிருக்கேன். முதல்லனா எந்த கெடுபுடியும் கிடையாது. இப்ப கண்கொத்தி பாப்பா கவனிக்கிறானுங்க! அதான், கேரளாக்கு ஆயுர்வேத வைத்தியத்துக்காக மலைமேல போறேன். ஒரு வாரத்துக்கு யாரும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்கனு சொல்லிட்டு, காதும் காதும் வச்சாமாதிரி இங்க வந்துட்டேன்”

 

“ஹஹ காதும் காதும் வச்சா மாதிரி போகப்போறீங்க”

 

“ஆமா… வேல முடிஞ்சதும் போக வேண்டியதுதான”

 

“ஆமாமா! வந்த வேல முடிஞ்சுருச்சுனா போக வேண்டியதுதான். ரொம்ப தூரம் வந்துட்டோம். போதும்  பயணம் முடியுற நேரம் வந்துருச்சு உங்களுக்கு”

 

“ஓ… அதுசரி… நீ என்ன செய்ற! ராபர்டுக்கு சொந்தமா! எந்த ஊரு”

 

“ஊரா… ஊரு  உத்தரமேரூர் தாண்டி.,

பட்டாங்குளம் கிராமம்”

 

“என்..ன., எ……ன்ன  என்ன  ஊர் சொன்ன”

 

“ம்… காதும் காதும் வச்ச மாதிரி முடிப்போம்னு சொன்னேன்” சொல்லிக்கொண்டே சைலன்ஸர் துப்பாக்கியால் இரக்கமற்ற அந்த இதயத்தை துளைத்தான்….

 

அடுத்த நொடி சென்னைக்கு ஸ்வைப்பினான்…

“டன்… அங்க விடிஞ்சதும் நியூஸ் பேப்பர்ல வச்சுடு”

 

சென்னை…

காலையில் கையில் காபி கோப்பையுடன்,

செய்தித் தாளினைப் பிரித்த டிஐஜி.,யின் மடியில் அந்த கடிதம் விழுந்தது…

 

நன்றே

நிறைவேறியது

நன்றி

சந்திப்போம்

 

அதிர்ந்த டிஐஜி., தனக்கு வரும் நாலைந்து செய்தித்தாள்களை உதறினார். சொல்லி வைத்தார் போல் எல்லாவற்றிலும் இருந்து தாள்கள் உதிர்ந்தது.




Comments are closed here.

You cannot copy content of this page