கனல்விழி காதல் – 64
8999
6
அத்தியாயம் – 64
நான்கைந்து முறை சந்தித்ததிலேயே அவள் ஒரு முட்டாள் பெண் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டான் முகேஷ். தன் வீட்டுப்பெண்ணை அசிங்கப்படுத்தியவர்களை பழிதீர்த்துக்கொள்ள, நல்ல வாய்ப்பு என்று எண்ணி அவளுடைய மனதை கலைக்க திட்டமிட்டு அவளோடு பழகினான். அந்த கிறுக்குப் பெண்ணும் வெள்ளந்தியாக அவன் சொல்வதையெல்லாம் நம்பினாள். எல்லாம் நன்றாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. இப்போது திடீரென்று என்னவாயிற்று. ஏன் அவளிடமிருந்து எந்த தொடர்பும் இல்லாமல் போனது! – சிந்தனையோடு அமர்ந்திருந்தவனின் தலையை கோதினாள் மோனிகா.
“இது ஒரு சிக்கலான உறவு முகேஷ்… இதை அடுத்த லெவலுக்கு கொண்டு போகணும்னு நினைக்கறது முட்டாள்தனம் விட்டுடு” – தம்பிக்கு அறிவுரை கூறினாள்.
“எனக்கு பாரதியை பிடிச்சிருக்கு. என்னால அவளை வீட்டுக் கொடுக்க முடியாது” – பிடிவாதமாகக் கூறினான். தன் மனதிலிருக்கும் கபட எண்ணத்தை உடன் பிறந்தவளிடம் கூட கூறவில்லை அவன். உண்மையாக காதலில் உருகி கறைபவன் போல் அட்சரசுத்தமாக நடித்தான். அதை அப்படியே நம்பிய மோனிகாவும் தம்பிக்காக இரக்கப்பட்டாள்.
“எனக்கு உன்னோட ஃபீலிங்ஸ் நல்லா புரியிது முகேஷ்… ஆனா நம்ம சூழ்நிலை சரியில்ல. அவங்ககிட்ட போயி நாம பொண்ணு கேட்க முடியாது. விட்டுட்டு உன்னோட கெரியர்ல கவனம் செலுத்து…” என்றாள். அதெல்லாம் அவன் காதில் ஏறவே இல்லை. அவனுடைய சிந்தனைகள் முழுவதும் பாரதியையே சுற்றிக் கொண்டிருந்தன.
அன்று தேவ்ராஜ் திட்டிவிட்டு சென்றதிலிருந்து வீட்டில் யாரோடும் அதிகம் பேசுவதில்லை பாரதி. அவளுக்குள் இருந்த குற்றவுணர்வு அவளை தனிமைப்படுத்தியிருந்தது. உணவருந்தும் நேரத்தை தவிர மற்ற நேரங்களிலெல்லாம் அறையிலேயே அடைந்துக் கிடந்தாள். அதை கவனித்துக் கொண்டே இருந்த இராஜேஸ்வரி மகளிடம் பேச்சு கொடுத்தாள். கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு மௌனமாகிவிடும் மகளை எரிச்சலுடன் பார்த்த தாய், “என்னடி ரொம்ப ஓவரா பண்ணிக்கிட்டு இருக்க? பிறந்ததிலிருந்து உங்க அப்பாவோடதான் ஒட்டி உறவாடிக்கிட்டு இருந்தியா?” என்று வெடித்தாள். தந்தையை எண்ணித்தான் அவள் இப்படி நடந்துகொள்கிறான் என்பது அவளது ஊகம். தாயின் கோபம் பாரதியை இன்னும் குடும்பத்திலிருந்து விலக்கியது.
எல்லோரும் நம்மை தவறாக புரிந்துகொகிறார்கள்.. நம்முடைய கோணத்திலிருந்து யாருமே சிந்திப்பதில்லை. தந்தையை நமக்கு பிடிக்கிறது என்பதற்காக நம்மை எல்லோரும் வெறுக்கிறார்கள் என்று ஏதேதோ நினைத்துக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொண்டாள். அவளுடைய மனநிலையை ஓரளவுக்கு ஊகித்துவிட்ட மதுரா அவளுடைய தனிமை உணர்வை போக்கும் எண்ணத்தில் அவளிடம் நெருங்க முயன்று பலமுறை அவளிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டாள். திலீப்பின் தங்கை என்பதை தாண்டி, தன்னை வெறுக்கும் அண்ணன் இவளிடம் மட்டும் சந்தோஷமாக பேசுகிறானே என்கிற தவறான புரிதலால் மதுராவின் மீது துவேஷம் கொண்டாள்.
பாரதியின் மனநிலை பற்றி மதுரா பலமுறை தன் கணவனிடம் எடுத்து சொன்னாள். அவளிடம் சென்று ஒருமுறை பேசிப்பார்க்கும்படி கூறினாள். அவன் எதையும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவளிடம் கொஞ்சம் கெடுபிடுயாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் குளிர்விட்டுப் போய்விடும் என்று ஒரேடியாக சொல்லிவிட்டான்.
அடுத்த இரண்டு நாட்களில் சோனியாவின் திருமணம் வந்தது. வீட்டில் நடந்து கொண்டிருக்கும் சச்சரவுகளால் அதைப் பற்றி கணவனிடம் பேசவே மறந்துவிட்டாள் மதுரா. இன்று சோனியாவின் அலைபேசி அழைப்பு வந்த பிறகுதான் அந்த நினைவே வந்தது. பத்திரிக்கையை கூட எங்கு வைத்தோம் என்று நினைவில்லை அவளுக்கு. எந்த மண்டபம்… எத்தனை மணிக்கு திருமணம் என்று அனைத்தையும் கேட்டுக் கொண்டு அழைப்பை துண்டித்தவள், உடனே அதைப்பற்றி கணவனிடம் பேசினாள்.
“அந்த மண்டபம் சிட்டிலேருந்து வெளியே இருக்கே… தனியா எப்படி போவ?” என்றான் கணினியிலிருந்து பார்வையை விலக்காமல்.
“நல்ல ட்ரைவரா அனுப்புங்க தேவ்… நா போயிட்டு வந்துடறேன்… பத்திரிகை கொடுக்க வந்த அன்னைக்கே அவளை ஒருமாதிரி இன்சல்ட் பண்ணிட்டோம். கல்யாணத்துக்கும் போகலைன்னா தப்பா நினைப்பா…” என்றாள் மதுரா.
ஓரிரு நிமிடங்கள் யோசித்தவன், “ம்ஹும்… ட்ரைவர் மட்டும் போதாது. பாரதி வீட்லதானே இருக்கா. ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வந்துடுங்க…” என்றான்.
‘பாரதியோட!’ – திகைத்தாள் மதுரா. பூனையை மடியில் கட்டிக்கொள் என்பது போல் என்ன இப்படி சொல்கிறான் என்றிருந்தது அவளுக்கு.
“என்ன முழிக்கிற?”
“இல்ல… பாரதிக்கு.. என்கூட வர… பிடிக்குமோ பிடிக்காதோ…” – தயங்கித் தயங்கி சொன்னாள்.
“அதை பத்தியெல்லாம் யோசிக்காத. பாரதிகிட்ட நா பேசறேன். ரெண்டு பேரும் எப்பவும் சண்டை கோழி மாதிரி ஒருத்தருக்கொருத்தர் மொறச்சுகிட்டே இருக்கீங்க. சேர்ந்து போயிட்டு வாங்க… வரும் போது ஃபிரண்ட்ஸா வாங்க” என்றான்.
“நா மொறைக்கிறேனா… அதுவும் உங்க தங்கச்சியை… அநியாயமா பேசாதீங்க…” என்றாள் செல்ல கோபத்துடன். முறுக்கிவிட்ட மீசைக்கிடையில் எட்டிப்பார்த்தது அவனுடைய அழகிய பல்வரிசை.
*****************
கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத ஒன்று இப்போது அவள் கண் எதிரே நடந்து கொண்டிருந்தது. ஆம்… கிஷோருடைய திருமணத்தில் முதல் வரிசையில் வந்து அமர்ந்திருப்போம் என்று நினைத்துப்பார்த்தாளா என்ன! அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள் மதுரா. இதற்கா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தோம்! கடவுளே! – இதயத்துடிப்பு எக்குத்தப்பாக எகிறிவிட்டது. நா வறண்டது… இயல்பாக மூச்சுவிட கூட முடியவில்லை.
“பா… பாரதி…” – அருகில் அமர்ந்திருப்பவளின் கையை பிடித்தாள்.
“என்ன?”
“கிளம்புவோமா?” – மெல்ல கேட்டாள்.
பாரதியின் புருவம் சுருங்கியது. வெளிறிப் போயிருந்த மதுராவின் முகத்தை வியப்புடன் பார்த்து, “இப்போதானே வந்தோம்…” என்றாள்.
“ஆ…ஆமாம்… இப்போதான் வந்தோம்… ஆனா லாங் டிராவலாச்சே. இப்போ கிளம்பினா தானே சரியா இருக்கும்” – தட்டுத்தடுமாறி சமாளித்தாள். அவளால் ஒரு நொடி கூட இங்கு இருக்க முடியாது. நிச்சயம் முடியாது… இங்கிருந்து ஓடிவிட வேண்டும். அந்த கிஷோர்… அவனுடைய நிழல் இருக்கும் இடத்தில் கூட அவள் இருக்கக் கூடாது. ஐயோ! இதெல்லாம் தேவ்ராஜிற்கு தெரிந்தால் என்ன ஆகும்! கடவுளே! – அந்த பயம்தான் அவளை பேய் போல் துரத்தியது.
“கல்யாணம் இன்னும் முடியலையே!” – மதுராவின் முகத்தை படித்தபடி நிதானமாகக் கேட்டாள் பாரதி.
“அதனால ஒண்ணும் இல்ல… மேரேஜ் அட்டென்ட் பண்ணினா போதும்… கடைசிவரைக்கும் இருக்கணும்னு அவசியம் இல்ல…”
“அப்போ இதை என்ன பண்ணறது?” – கையிலிருக்கும் பரிசை சுட்டிக்காட்டி, “வாங்கிட்டு வந்த கிஃப்ட திரும்ப கொண்டு போயிடலாமா?” என்று நக்கலாகக் கேட்டாள்.
மதுராவிற்கு பதில் சொல்ல முடியவில்லை. பயத்தில் உயிர் போனது. அவளுக்கு மட்டும் ஏன் இப்படி மாற்றி மாற்றி சோதனையாக வந்து தொலைக்கிறது. ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறதே! இப்போதுதான் தேவ்ராஜ் அவளோடு சற்று இணக்கமாக இருக்கிறான். அதற்குள் இந்த தொல்லை வந்துவிட்டதே! – அவளுக்கு தொண்டையை அடைத்தது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நெருஞ்சி முள்ளின் உறுத்தலோடு அமர்ந்திருந்தாள்.
என்ன காரணம் என்று புரியவில்லை என்றாலும் இங்கு அவளுக்கு ஏதோ சங்கடம் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்துக் கொண்ட பாரதி முடிந்த அளவு அவளுக்கு எதிராக செயல்பட்டாள். அதனால் திருமணம் முடிகிறவைக்கும் அங்கு இருந்ததோடு மட்டும் அல்லாமல் கையிலிருக்கும் பரிசோடு மேடையில் ஏறும்படியும் ஆயிற்று..
சோனியாவோடு நன்றாக பேசி சிரித்தபடி மேடைக்கு வாழ்த்த வரும் உறவினர்களை புன்னகை மாறா முகத்துடன் எதிர்கொண்ட கிஷோர், மதுராவை பார்த்ததும் நாணருந்த வில்லாக விறைத்து நிமிர்ந்தான். நொடியில் அவன் முகம் பாறை போல் இறுகியது. அவனை ஏறிட்டு பார்க்கும் தைரியம் கூட இல்லை அவளுக்கு.
எந்த காரணமும் இல்லாமல் நிச்சயம் செய்த திருமணத்தை முறித்துக் கொண்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடிய அவனே அஞ்சாமல் அவளை முறைக்கிறான். ஆனால் அவளால் அவனை எதிர்கொள்ள முடியவில்லை. அவளுடைய மென்மையான சுபாவம் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
“வாழ்த்துக்கள் சோனி…” என்று முணுமுணுத்துவிட்டு, கையிலிருந்த பரிசை அவளிடம் நீட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட எத்தனித்தாள். தோழியை கையைப் பிடித்து தடுத்து நிறுத்தி, கணவனுக்கு அறிமுகம் வேறு செய்துவைத்தாள் சோனியா.
அடிக்கிற அடியில் இதயம் வெடிக்காமல் இருந்ததே பெரிய விஷயம் என்று தோன்றியது அவளுக்கு. முகமெல்லாம் சூடாகி எரிந்தது. அவனுடைய துளைக்கும் பார்வை அவளை உறுத்தியது. ஒரு நொடிதான்… ஒரே நொடியில் அவனிடம் தலையசைத்துவிட்டு விறுவிறுவென்று கீழே இறங்கியவள் கார் பார்க்கிங்கில் வந்துதான் நின்றாள். பாரதி வருகிறாளா இல்லையா என்பதை பற்றியெல்லாம் அவளால் நினைக்கவே முடியவில்லை.
“மூணு மணிநேரம் ட்ராவல் பண்ணி வந்தது இதுக்குத்தானா? அப்படி என்ன அவசரம்? என்ன பிரச்சனை அங்க?” – காரில் வரும் பொழுதே குறுக்கு கேள்வி கேட்டாள் பாரதி.
இவளை ஏன் தன்னோடு கோர்த்துவிட்டான் என்று கணவனை நொந்துக் கொண்டவள், “ஒரு பிரச்சனையும் இலை… லாங் ட்ராவல்ங்கறதுனால தான் சீக்கிரம் கிளம்பினேன்” என்று சமாளித்தாள் மதுரா. அதை துளியும் நம்பவில்லை என்றாலும் ‘சரி’ என்று தலையை ஆட்டிக் கொண்டாள் பாரதி.
கார் சிட்டிக்குள் நுழைந்ததுமே, “தலை வலிக்குது.. காபி சாப்பிடணும்” என்றாள் பாரதி. எப்போதடா வீட்டிற்கு போய் சேர்வோம் என்று துடித்துக் கொண்டிருந்த மதுரா வேறு வழியில்லாமல் அவளோடு சேர்ந்து ஒரு காபி ஷாப்பிற்குள் நுழைந்தாள்.
6 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
INTERESTING UD SIS
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Nice epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Dev ku ippadi oru loosu thangachi….Mukesh plan Dev irukum varaikum palikadhu….
Aiyo poyum poyum Kishor kalyanathuka iva poganum….idhunaala ivalukum Dev kum yedhavadhu pirachanai varuma😕
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இப்போ பாரதி என்ன பிரச்சனையை மதுராவுக்கு கொடுப்பதற்கு coffe Shop கூட்டிக்கொண்டு போகின்றார்,மதுரா போனது கிஷோர் திருமணம் என்று தேவ்விற்கு தெரிந்தால் வேதாளம் திருப்பியும் முருங்கை மரம் ஏறிவிடுமா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
VERY SUPER UD. EAGERLY WAITING FOR YOUR NEXT UD
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
ஏதோ வில்லங்கம் பண்ண போறாளோ பாரதி.
மதுவின் துயரம் ஒரு தொடர் கதை…என்னத்த சொல்ல.