Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 16

அத்தியாயம் – 16

ப்ரியா…

உண்மையிலேயே அந்த பெயரைச் சொன்ன பிறகுதான் அவளை பெண் எனும் பாவனையிலேயே பார்த்தான், அருண்.

இத்தனை அழகா!

 

அருண் தன்னை புதிதாகப் பார்ப்பவன் போல் பார்த்தது ப்ரியாவை என்னமோ செய்தது. என்னது இது. இப்படி அடிச்சுப் பாக்றாரு. காலையிலிருந்து கூடவேதானே இருந்தோம். ஆஸ்பிடலுக்கு வந்தது.. முதலில் மறுத்த டாக்டர்ஸ் காலேஜ் பெயரைச் சொன்னதும் மருத்துவம் பார்க்க தொடங்கியது… காலேஜ் அதிகாரிகள் வந்தது… உடன் படிக்கும்  நண்பர்கள் வந்தது… என எல்லாவற்றிலும் அருணுடனேதானே இருந்தோம்.  ஓ… அது வேறு அருண் போல. அப்போ இது….

 

“ம்க்கும்”… கனைத்தாள்

 

சுய நினைவுக்கு வந்தவன்… சற்றும் யோசிக்காமல்…

“ஹோட்டல் போலாமா!”

என்றான்.

 

ஒரு வினாடி மூச்சே நின்றுவிடும் போல் இருந்தது ப்ரியாவிற்கு!

“எ…என்…என்ன கேட்டீங்க”

 

“ஹோட்டலுக்கு போலாமானு கேட்டேங்க. காலைலருந்து இதே சூழ்நிலைல இருந்து மனசுக்கு சங்கடமா இருக்கு. பசி வேற வயித்த கிள்ளுது. அதான் இஃப் யூ டோண்ட் மைண்ட், வெளில போய் எதாவது சாப்ட்டு வரலாமானு கேட்டேன். உங்களுக்கு சங்கடமா இருந்தா வேண்டாம் ப்ரியா”

 

அருண் படக் படக்கென பேசுவது ப்ரியாவிற்கு மிகவும் பிடித்தது. ரொம்ப நாள பழகியது போல் சட்டென்று உரிமையாக பெயர் சொல்லி அழைத்தது, ஒரு நெருக்க உணர்வை தந்தது…. அவளும் சட்டென தயங்காமல் சொன்னாள்…

 

“வொய் நாட் அருண்! போகலாமே!”என தோள்களை குலுக்கிய படியே நடந்தாள். வசந்தியை அருணும் கூப்பிடவில்லை! ப்ரியாவிற்கும் அகஸ்மாத்தாக தோன்றவில்லை! ( உண்மையிலேயே அகஸ்மாத்தா)

எப்பவுமே பெண்கள் தன் மனசுக்கு நெருக்கமாக… அதுவும் ஆன்பிள்ளையாக… அதுவும் பழகும் தொடக்கத்தில் மூன்றாவது நபர் உள் நுழைவதை விரும்புவதில்லை. அது இயற்கை. காலையிலிருந்து அருணுடனே இருந்ததால்தானோ என்னவோ, அதுவும் அவன் பம்பரமாய் சுழன்றதை பார்த்ததாலோ, அடுத்தவர் மீதுள்ள அக்கரையை பார்த்து வியந்ததாலோ என்னவோ

அருணுடன் ஒரு ஈர்ப்பு வந்திருந்தது ப்ரியாவிற்கு…

 

ரோடைக் க்ராஸ் பேசினார்கள், ஹோட்டலில் பேசினார்கள், டிபன் பேசினார்கள், காபி பேசினார்கள்,  பில் பேசினார்கள். பேசினார்கள்… பேசினார்கள்… திரும்பி ஆஸ்பத்ரி நுழைவு வரும் வரையில் நிறுத்திய பாடில்லை…

 

“எங்கடி போனீங்க…”

வசந்தி கேட்டபடியே எதிரில் வந்தாள்…

 

“ஏண்டி கத்தற (!) இங்கதான் போனோம். ஒரு பத்து நிமிஷம் அவுட்டர்ல போய் காபி சாப்ட்டு வரலாம்னு”

 

“பத்து நிமிஷமா! நீ போய் ஒண்ணேகால் மணிநேரமாச்சு”

 

“ஏம்மா எதாவது ப்ராப்ளமா? டாக்டர் எதாவது சொன்னாரா?

எதுவேணா என்னைக் கேளுனு சொல்லிருக்கேனேமா! ஒரு கால் பண்ணிருக்கலாம்ல”

 

“இல்லண்ணா எந்த பிரச்சனையும் இல்ல. அண்ணா எழுந்தான்.  உங்களைத்தான் தேடினான்” சொல்ல சொல்லவே அருண் சுடலையின் வார்ட் நோக்கி விரைந்தான்… பின்னாலேயே இருவரும் ஓடினார்கள்.

 

சுடலை அருணைப் பார்த்ததும், உதட்டினை ஒரு கடி. அவனின் மொத்த அழுகையையும் அந்த ஒரு கடியில் நிறுத்தினான். மருந்துக்கு கூட, அவன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுகூட கண்ணீர் வரவில்லை…

 

“வலிக்குதுங்க அருண்”

 

“ஆப்ரேஷ… சொல்ல வந்த அருணின் வாயை தன் ஒரு கையால் சுடலை பொத்தினான்…

“நா அந்த வலிய சொல்லலை அருண்.

அதெல்லாம் நான் எவ்வளவு வேணும்னாலும் தாங்கிப்பேன். இந்த வலியை சொல்றேன்” என்று நெஞ்சைத் தட்டிக் கொண்டான்.

“இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த மாதிரி அராஜகங்களை பார்த்துட்டு இருக்கறது.

அவனை சும்மா விடக்கூடாது”

 

“இத பார் சுடலை, தங்கை இருக்கா., அவளை கரை சேர்க்க வேணாமா!  இவனை பழிவாங்குறத விட, வசந்தி வாழ்க்கை முக்கியமில்லையா!

எதையும் போட்டு மனச குழப்பிக்காத. எப்பவோ நீ என் உயிர் நண்பனாய்ட்ட., அந்த உரிமைல சொல்றேன்”

 

ஹஹ! சிரித்தபடியே சுடலை சொன்னான் “நீ சொன்னாலும் சொல்லாட்டியும், உயிர் நண்பன்தான். இந்த உயிரே நீ காப்பாத்துனதுதான்”

 

“அறைஞ்சேன்னா! இது மாதிரி பேசறத இனிமே எல்லாரும் விடுங்க! ஒரு மனுஷனோட கடமையத்தான் நான் செஞ்சேன்!”

 

“சரி காலேஜ் என்ன ஆச்சு” கொஞ்சம் கூட வலியின் அறிகுறியை முகத்தில் காட்டாமல் அவன் பேசுவதை, ப்ரியா ஆச்சர்யமுடன் பார்த்தாள். ஒரு சின்ன முள்ளு குத்தினாலே வீட்டைத்  தான் ரெண்டாக்குவது நினைவுக்கு வந்தது.

அப்பா! என்ன ஒரு நெஞ்சுறுதி…

 

அருணின் பதில் அவளைக் கலைத்தது…

“அது ஒன்னும் ஆகல., படிப்புக்கு எந்த ப்ராப்ளமும் வராது. அதை நான் பாத்துக்கறேன். நீ முதல்ல நல்லா ரெஸ்ட் எடு. ஒரு வாரம் ஆகும் டிஸ்சார்ஜ் ஆக… ம்மா வசந்தி நாங்க கிளம்பறோம். ஆஸ்பத்ரி செலவு பத்திலாம் கவலைப் பட வேண்டாம். பிரண்ட்சுங்க நாங்க பாத்துக்கறோம்… எந்த உதவி, எந்த நேரத்ல வேணும்னாலும் ஒரு ‘கால்’ அடி, அடுத்த செகண்ட் நா இங்க இருப்பேன்” என தானும் விடைபெற்று, ஆஸ்பத்திரியிலேயே முடங்கி இருந்த பத்து பதினைந்து பேரையும் சுடலையிடம் விடைபெற சொல்லி,  அனைவரும் கிளம்பினார்கள்.

 

இரவு படுக்கையில் படுத்தபடியே, அருண் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தை பற்றியும் நினைத்துக் கொண்டான். கூடவே ப்ரியாவும் நினைக்காமலே நினைவுகளில் கலந்தால்… ப்ரியா!!!




Comments are closed here.

You cannot copy content of this page