Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 17

அத்தியாயம் – 17

“அருமை! அருமை! சோ… சொல்லிவச்சு சொல்லிவச்சு நம்மை எள்ளி நகையாடறமாதிரி வரிசையா கொலை பண்ணிட்டே போகட்டும்.

முதல்ல உருகுவே அமைச்சர், அடுத்து வேலமெனக்கெட்டு ஸ்பெயின்ல போய் அங்க ஒரு அமைச்சர், சிட்டியவே கலக்கிட்ருந்த ஜானி, கொசுரா அவன் வகையறா மூணு… க்ளோஸ்…  நாம இப்படியே பேசிப் பேசி காலந் தள்ளுவோம்”

இயலாமையின் வெளிபாடாய் ஒலித்தது டிஐஜியின் குரல்.

 

கொஞ்சம் கோபமாகவே எழுந்தான் தீபக்!!! “மன்னிக்கனும் சார், ஸ்பெயின்ல நடந்த அமைச்சரோட கொலைக்கு போலீஸ் டிப்பார்ட்மெண்ட் எந்த விதத்திலையும் பொறுப்பேத்துக்க முடியாது. நாட்ல நடக்கிற நிலமை கூட தெரியாம சொத்து வாங்கறதுக்கு ( டிஐஜியின் முறைப்பைக் கண்டதும்)  சாரி சார்… சொந்த வேலைக்கு போயிருக்கார். அவர் எந்த வேலைக்கு வேணா போகட்டும். அது நமக்கு தேவையுமில்லை. தெரிஞ்சு… ஒன்னும் பண்ணவும் முடியாது…”

 

“தீபக் மைண்ட் யுவர் வேர்ட்ஸ். தி இஸ் நாட் எ பொலிடிகல் மீட்டிங்”

 

“எகெய்ன் சாரி சார், ஆனா, ஸ்பெயின்கு  போகப் போறதை யாருக்கும் தெரியப் படுத்தாம போனது தப்பு. அதைவிட நம்மகிட்ட கூட மறைச்சுட்டு போனதுதான் தப்பு.  இத்தனைக்கும் எல்லா அமைச்சர்களோட இருப்பையும் நான் உறுதி செய்ய ஸ்டெப் எடுத்தேன்.  அப்பகூட அவங்க வீட்ல என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா! ‘அவரு கேரளா மலைமேல ஆயுர்வேத சிகிச்சைக்கு போய்ருக்காரு. மீடியாக்குத் தெரிஞ்சா கண்ணு காது மூக்குனு வச்சு பேசுவாங்க! பாவம் (!) இப்பதான் அமைச்சரா ஆய்ருக்காரு! அத கெடுத்துப்புடாதீக’னு என்னவோ நாம அவர் போஸ்டை பிடுங்கப் போறா மாதிரி பேசியிருக்காங்க. அவரோட இரண்டு மனைவிகளிடம் மட்டுமில்ல, வெளிய தெரிஞ்சா அசிங்கம் சார், அவரோட இல்லீகல் கான்டக்ட்ஸ் இரண்டு பேர்கிட்ட கூட, இன்ஸ்பெக்டர்ஸ் வச்சு விசாரிச்சேன்.  இதையேதான் சொன்னாங்களாம்.

( மீட்டிங் ஹாலில் சன்னமான சிரிப்பொலி) இந்த நிலைல நாம என்ன செய்ய முடியும்”

 

நாட்டி பாய், என உள்ளுக்குள்ளேயே தீபக்கை சிரித்த டிஐஜி கேட்டார்….

“எனி பேவரபுல் நியூஸ் ப்ரம் ஸ்பெயின்”

 

“நாட் யெட் சார். ஸ்பெயின் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்கிட்ட,   இருந்து, நமக்கு வந்த தகவல்படி, அமைச்சர் தங்கியிருந்த இடத்துல யாரையும் சந்தேகப்படும்படியா அடையாளம் கண்டுபிடிக்க முடியல. அவர் சுடப்படுகிற ஒரு மணி நேரத்திற்கு முன்னால சந்தேகப் படற மாதிரி ஒருத்தன் வந்துருக்கான். ஆனா, ஹோட்டலுக்குள்ள நுழைஞ்சதுல இருந்து மூஞ்சியவே காமிராவிற்கு காட்டாம  அஞ்சே நிமிஷத்ல  கிளம்பியிருக்கான். அவன் போஸ்சே கார்ல வந்ததாதான் டோர்மேன் சொல்றாரே ஒழிய வேறு எதுவும் தெரியலை…. கார் பார்க்கிங் டீடெய்ல்ஸ் வச்சு பார்த்ததுல அந்த காரின் ஓனரை அடித்து போட்டுவிட்டு, கார் திருடப்பட்டதாக தெரிகிறது.  டோர்மேனால் அவன் எந்த நாட்டுக்காரன் என்றுகூட யூகிக்க இயலாத அளவிற்கு ட்ரெஸ் கோட்ஸ் இருந்திருக்கு., பட் இன் வெரி ஸ்டைலிஷ்”

 

“இதுதான் இப்படி உருகுவே அமைச்சர் விஷயம் என்னாச்சு”

 

“சார்… உருகுவே நாட்டு அமைச்சர் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும்.  அடிக்கடி இந்தியாவிற்கு வருபவர்தான். அப்கோர்ஸ் அவர் டிகிரி முடித்ததே இங்க இருக்கிற லோகல் காலேஜ்லதான்.

இப்ப வந்தது கூட அன்னபிஷியல் ட்ரிப்புலதான். அதனால செக்யூரிட்டி டைட்னஸ் வேண்டாம்னு அவரே  சொல்லியிருக்கார். அவர்தான் ப்ரைவஸி வாண்டட் பர்சனாச்சே, அதனால பார்மாலிட்டிஸ்க்கு கூட கான்ஸ்டபிள்ஸ்  வேண்டாம்னு சொல்லிட்டார். மதியம் சாப்ட்டுட்டு ரெஸ்ட் எடுக்கற நேரத்துல கொலையாளி வந்திருக்கான். வந்தவன் எந்த ரூபத்ல வந்தான்னு இன்னும் தெளிவா தெரியல. சத்தமில்லாமல் சைலன்ஸர் துப்பாக்கி யூஸ் பண்ணி காரியத்த முடிச்சுட்டான்”

 

“பொலிடிகல் இஷ்யூஸ், பொலிடிகல் மினிஸ்டர்ஸ் மேல கவனமா இருக்கறத யூஸ் பண்ணி, ஜான் வகையறாக்களை முடிச்சுருக்கான்”

 

“மினிஸ்ட்டரைக் கொன்னவன்தான் இதையும் பண்ணியிருப்பான்னு எதை வச்சு சொல்றீங்க”

 

“இதை வச்சு சார்” என ஒரு துண்டு சீட்டை டிஐஜியிடம் காட்டினான்.

 

“வாட் இஸ் திஸ்”

 

“சார் உங்களுக்கு வந்த மாதிரியே, என் வீட்டுக்கு வர்ற மூணு பேப்பர்ல இது இருந்தது”

 

டிஐஜி வாங்கிப் பார்த்தார்.

 

உருகுவே

ஸ்பெயின்

மறைநகர்

 

இனி

சிறு

இடைவேளை

கொலைகளுக்கு

 

“என்ன இது தீபக்”

 

“சார், இதுவரைக்கும் செஞ்ச விசாரனை மூலம் எனக்கு சில பாய்ண்ட்ஸ் கிடைச்சிருக்கு. நம்பர்

  1. இதையெல்லாம் பன்றவங்க, நல்லா படிச்ச, அறிவுள்ள, டெக்னாலஜி தெரிஞ்ச, எங்கையும் வியாபித்திருக்கிற லஞ்சத்தை யூஸ் பன்னிக்கிற ஒரு க்ரூப். ஒரு தடயம் கூட விடாம, நிதானமா, தேவையானவர்களோட ரொட்டீன் வேலையை மோப்பம் பிடிச்சு, டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களுக்கு வர்ற பேப்பர்ல கூட நியூஸ் பாஸ் பன்ற அளவிற்கு தைரியம் மட்டும் இல்ல, பெர்பெக்‌ஷனும் கொண்ட க்ரூப்.
  2. அவங்க குறி வச்சவங்க எல்லாரும் சட்டத்தை ஏமாத்தி, சமூகத்துக்கு கெடுதல் செய்றவங்கதான்.
  3. கொலையானவங்க ஒவ்வொருத்தர் மேலையும் ஏகப்பட்ட கேஸ் பெண்டிங்ல இருக்கு.
  4. ஏதோ ஒரு லிங்க் இவங்களை இணைக்குது.
  5. ‘இடைவெளி’ங்கறத வச்சுப் பார்த்தா, இப்போதைக்கு கொலைகள் நிச்சயமா இருக்காதுன்னும், தோணுது சார்”

 

“டிஐஜி., வேதனையுடன் சொன்னார், “எது  எப்படியோ, டிஜிபி கூப்ட்டுருக்கார். காச்சு எடுக்கப் போறார்” அவரைக் கவலைப் பிடித்துக் கொண்டது.




Comments are closed here.

You cannot copy content of this page