கனல்விழி காதல் – 68
8888
14
அத்தியாயம் – 68
மதுராவின் மனம் ஆறவே இல்லை. நங்கூரமிட்டது போல் பாரதி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதை அறுத்தது. கிஷோரை அவளுடைய அவமானச் சின்னமாக அவள் குத்திக்காட்டியதில் உடைந்து போனாள். இது புதிதல்ல… கோபம் வரும் பொழுதெல்லாம் அவளை நோகடிக்க அவளுடைய கணவனே அந்த ஆயுதத்தைத் தானே கையிலெடுப்பான். இப்போது அந்த வரிசையில் இப்போது அவனுடைய தங்கையும் சேர்ந்திருக்கிறாள்… பேசட்டும்… எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும்…. அனைத்தையும் கேட்டுக்கொள்ளத்தானே நாம் இருக்கிறோம்! – முழங்காலில் முகம் புதைத்துக் குலுக்கினாள். ‘அவன்மட்டும் நம்மை சரியாக நடத்தியிருந்தால் இவளெல்லாம் இப்படி பேசிவிட முடியுமா! எல்லாம் விதி… சிறிதும் அன்பில்லாத கணவன்… உரிமையில்லாத வீடு… அகதி போன்ற வாழ்க்கை…! இதுதான் நம் தலையெழுத்தா…!’ – துக்கம் பொங்கியது. கண்ணீரில் கரைந்தாள்.
அன்று மாலை தேவ்ராஜ் வீட்டிற்கு வந்த போது மதுரா டெரஸில் அமர்ந்திருந்தாள். ரெஃப்ரெஷ் செய்துவிட்டு மனைவியை தேடி வந்தவன், அவளுடைய சிவந்து வீங்கியிருந்த விழிகளை கண்டு திகைத்தான்.
“என்ன ஆச்சு?” – அவள் அவன் பக்கம் திரும்பவும் இல்லை… அவனுக்கு பதில் சொல்லவும் இல்லை.
“மது… ஏன் ஒரு மாதிரி இருக்க? உடம்பு ஏதும் சரியில்லையா?” – அருகில் வந்து நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். நேற்றைய கோபம் நேற்றோடு போய்விட்டது அவனுக்கு. அவள் செய்தது தவறுதான்… ஆனால் பயத்தில்தானே செய்துவிட்டாள்… போகட்டும் என்று விட்டுவிட்டான். மதுராவும் மறந்திருப்பாள்… ஒருவேளை இன்று பாரதி வந்து குட்டையை குழப்பாமல் இருந்திருந்தால்…
“காய்ச்சல் எதுவும் இல்லையே… வேற என்ன ப்ராப்லம்?” – எதிரில் வந்து அமர்ந்தபடி கேட்டான்.
“முகேஷ் காபி ஷாப்க்கு வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?” – அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து கூர்மையாகக் கேட்டாள். தேவ்ராஜின் புருவம் சுருங்கியது.
“பாரதி ஏதாவது சொன்னாளா?” – அவளுடைய முகபாவமும் கேட்ட கேள்வியும் அவனுக்கு சொன்ன செய்தி ‘பாரதி’.
“நானும் பாரதியும் மட்டும்தான் அன்னைக்கு காபி ஷாப் போனோம். அங்க என்ன நடந்ததுன்னு நான் சொல்லல… பாரதியும் சொல்லியிருக்க மாட்டா… அப்புறம் வேற யார் உங்ககிட்ட சொன்னது?”
“பாரதி என்ன சொன்னான்னு கேட்டேன்”
“அவ என்ன சொன்னா உங்களுக்கு என்ன? உங்ககிட்ட யார் சொன்னதுன்னு முதல்ல சொல்லுங்க” – படபடத்த மதுராவின் கண்கள் கலங்கின.
“அது ஒரு காபி ஷாப்… எத்தனையோ பேர் வருவாங்க… போவாங்க… யார் வேணுன்னாலும் சொல்லியிருக்கலாம்” என்றான்.
அழுத்தம் திருத்தமாக அவன் பேசுவதைக் கேட்ட மதுரா மனம் நொந்து கைகளில் முகம் புதைத்து விசும்பினாள். ‘கல்லை கூட கரைத்துவிடலாம் இவனை கரைக்க முடியாது… ஒரு வார்த்தை சொல்ல மாட்டான்… எல்லா பழியும் அவள் தலையில்தான் வந்து விழும்’ – அவள் மனம் புண்பட்டுப்போனது. தேம்பித்தேம்பி அழும் மனைவியை ஓரிரு நொடிகள் வெறித்துப் பார்த்த தேவ்ராஜ் விருட்டென்று எழுந்து அலைபேசியை எடுத்து தங்கைக்கு அழைத்து, “ரூம்க்கு வா… உடனே…” என்றான்.
பதட்டத்துடன் நிமிர்ந்த மதுரா, “என்ன பண்ணறீங்க? யாரை கூப்பிட்டீங்க?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே பாரதி வந்துவிட்டாள். பக்கத்து அறையிலிருந்து வருவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்.
“சொல்லுங்க பாய்…” என்று தமையனுக்கு எதிரில் வந்து நின்றவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“ஏதோ கேட்டியாமே மதுராகிட்ட… என்ன கேட்ட?” என்றான். அவ்வளவுதான்… வெறுப்பும் ஆக்ரோஷமுமாக அவள் மதுராவை முறைத்த முறையில் மதுரா பயந்து போனாள்.
“தேவ்… என்ன நீங்க… நா…” – “பேசாம இரு…” – மனைவியை அதட்டி அடக்கிவிட்டு தங்கையை கூர்மையாகப் பார்த்தான்.
“என்ன தெரிஞ்சுக்கணும் நீ?” அழுத்தமாகக் கேட்டான். பாரதி பதில் சொல்லவில்லை.
“சாரி… எனக்கு எதுவும் கேட்கல…” – அவள் பேசாமல் நிற்பதை குறிப்பிட்டுக் குத்தினான்.
“முகேஷ் கூட நா தப்பா பழங்கால தேவ் பாய்… ஹி இஸ் ஜஸ்ட் ஒன் ஆஃப் மை ஃபிரண்ட்ஸ்”
“ஃபிரண்ட்? யாருக்கு யார் ஃபிரண்ட்… அவன் உனக்கு ஃபிரண்டா…” – கடுப்புடன் கேட்டான்.
“தேவ் பாய்… நீங்க நினைக்கற அளவுக்கெல்லாம் ரொம்ப க்ளோஸ் ஃபிரண்ட் இல்ல… ஜஸ்ட்… அன்னைக்கு எதேர்ச்சையா பார்த்தோம்… பேசினோம்… அவ்வளவுதான். அதை போயி உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க. நீங்களும் அவனை அடிச்சு போட்டுட்டீங்க…”
“அது எப்படி உனக்கு தெரியும்?” – குறுக்கு கேள்வி கேட்டதும் திருட்டு முழி முழித்தாள். “ஆங்…! அது… வந்து…”
“ஹௌ டூ யூ நோ தட்?” – அதட்டினான்.
“போன்… போன்ல”
“சோ… அவனுக்கு இன்னும் பயம் வரல… உன்கிட்ட பேசிக்கிட்டுதான் இருக்கான்… இல்ல…”
“இல்ல தேவ் பாய்… இல்ல… நான்தான் போன் பண்ணினேன்… அதுவும் அவங்களுக்கு…”
“மோனிகாவுக்கு?” – ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.
“உன்ன நினச்சு நா வெட்கப்படறேன்… நீ என் தங்கச்சிதானான்னு சந்தேகப்படறேன்… உன்னால அம்மாவுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயப்படறேன்…” – “தேவ் பாய்!!”
“ஷ…ட் அ…ப்… ஜஸ்ட் ஷட் அப்…” – சுட்டெரிக்கும் அவன் பார்வையில் தகித்தாள் பாரதி.
“இது…தா…ன் உனக்கு கடை…சி வார்னிங். இதுக்கு மேல உனக்கும் அந்த மோனிக்கா ஃபேமிலிக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததுன்னு நா கேள்விப்பட்டேன்… அதுக்கு பிறகு என்னை நீ உன்னோட அண்ணனா பார்க்க முடியாது. புரிஞ்சிருக்கும்னு நம்பறேன்…” – அவன் குரலிலிருந்த அதிகாரம் பாரதியை மட்டுமல்ல… மதுராவையும் வாயடைக்கச் செய்தது. பாரதி எந்த பதிலும் சொல்லாமல் திரும்பி நடந்தாள்.
“வெயிட் எ மினிட்..” – தமையனின் குரல் கேட்டதும் அவள் நடை தடைபட்டது.
“இன்னொரு விஷயமும் தெரிஞ்சுக்கோ… அன்னைக்கு காபி ஷாப்ல நடந்த உங்க மீட்டிங்கை எனக்கு சொன்னது மதுரா இல்ல… மாயா…” – சட்டென்று இரு பெண்களின் பார்வையும் அதிர்ச்சியோடு அவன் முகத்தில் பதிந்தது.
****************
“உனக்குள்ள இப்படி ஒரு சுயநலம் இருக்கும்னு நான் நினச்சு பார்க்கவே இல்ல மதுரா. உன்னால எப்படி முடிஞ்சுது” – ஆற்றாமையுடன் ஒலித்தது சோனியாவின் குரல். அலைபேசியை பிடித்திருந்த மதுராவின் கரம் நடுங்கியது.
“அவசரப்பட்டு எதுவும் பேசாத சோனி… அந்த கல்யாணத்த நிறுத்தினது கிஷோர் தான். என்ன காரணம்னு இப்போ வரைக்கும் எனக்கு தெரியாது. ஊரை கூட்டி கிராண்டா நிச்சயம் பண்ணிட்டு… கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை ஓடி ஒளிஞ்சுக்கிட்டா அந்த பொண்ணோட மனசு எவ்வளவு கஷ்ட்டப்படும்னு உனக்கு கூட புரியலையா? கிஷோர் பண்ணின தப்பால இன்னைக்கு வரைக்கும் நா அவஸ்த்தை பட்டுக்கிட்டு இருக்கேன் தெரியுமா… எல்லா தப்பையும் பண்ணிட்டு, ரொம்ப நல்லவர் மாதிரி உன்கிட்ட கதையை மாத்தி சொல்லீட்டாரா?”
“கதையை மாத்தினது கிஷோர் இல்ல மதுரா… நீதான்… உனக்கு உன்னோட அத்தை பையன் மேல விருப்பம்னா அதை வீட்ல சொல்லி சுமூகமான முடிச்சுக்க வேண்டியதுதானே? எதுக்கு அடுத்தவங்க லைஃபை ஸ்பாயில் பண்ணனும்?”
“என்ன! யாரை பத்தி நீ பேசிட்டு இருக்க?”
“ஏய்… ஏண்டி இன்னும் நடிக்கிற? நாங்கல்லாம் மிடில் கிளாஸ்… உன்னோட பணக்கார திமிரை ஏன் எங்ககிட்ட காமிக்கிற? உன்னால என்னோட ஹஸ்பண்ட் ரொம்ப கஷ்ட்டப்பட்டுட்டாரு. உன்னோட அண்ணன் திலீப் இவரை ஓட ஓட விரட்டிட்டான். இந்த எட்டு மாசத்துல எத்தனை வேலை… எத்தனை கம்பெனி மாறியிருக்கார்னு தெரியுமா? எல்லாம் யாரால… உன்னால… உன்னோட பொய்யால. உன் ஹஸ்பண்ட் தான் பெரிய டாப் டக்கராச்சே. அவராவது உங்களோட காதல் மேட்டரை வீட்டுல அவுத்துவிட வேண்டியதுதானே? எதுக்கு இன்னொரு மாப்பிள்ளைக்கு நிச்சயம் பண்ணி கல்யாண தேதி குறிக்கிற வரைக்கும் அமைதியா இருந்தாரு? கிஷோர் கழுத்தை அறுக்கறதுக்கா?” – மலையிலிருந்து உருண்டு வரும் பாறாங்கல்லின் ஓசையைப் போல பயங்கரமாய் மாறி இருந்தது அவளுடைய குரல். அவளுக்குள் இருந்த ஆவேசத்தைக் கண்டு வாயடைத்துப் போனாள் மதுரா.
“எவ்வளவு பெரிய கம்பெனில… எவ்வளவு பெரிய பொசிஷன்ல இருந்தவர்… இன்னைக்கு ஒரு சாதாரண கம்பெனில குப்பை கொட்டிக்கிட்டு இருக்காரு. நல்லா இருடி… சந்தோஷமா இரு…” – வயிறெரிந்து வாழ்த்தினாள்.
மதுராவை பார்த்ததுமே பதட்டமாகிவிட்ட கிஷோருக்கு அவ்வளவு எளிதாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. புது மனைவி என்றாலும் திருமணத்திற்கு முன் பழகிய இரண்டு மாத பழக்கத்தில் கிஷோரின் அசைவுகளைக் கூட அளவெடுத்து வைத்திருந்த சோனியா அவனுடைய முக மாற்றத்தை துல்லியமாக கணக்கிட்டு தனிமையில் கேட்டாள். முதலில் மறுத்தவன் அடுத்த சில நாட்களில் அனைத்தையும் அவளிடம் ஒப்புவித்தான். அவனுக்கும் மனம் ஆற வேண்டுமல்லவா!
நடந்ததையெல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்ட சோனியா கொதித்துப் போய்விட்டாள். பூனைக்குட்டி போல் பம்மிக் கொண்டிருக்கும் மதுராவிற்குள் இத்தனை விஷமமா! – அவளால் நம்பமுடியவில்லை. ஆனால் நம்பாமல் இருக்கவும் வழியில்லை. அவளுடைய கணவன் படும் துன்பத்தையெல்லாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறாளே! அதுமட்டும் அல்ல… இத்தனை துன்பத்தையும் தந்தவள் அந்த மதுரா… ஆனால் அவளை இழந்துவிட்ட வலியை வெகு சில சமயங்களில் அவன் கண்களில் பார்த்தாள் சோனியா. அதைத்தான் அவளால் சகிக்க முடியவில்லை. மதுராவின் மீது வெறுப்பு மண்டியது. அந்த வெறுப்பை அவள் மீதே கொட்டிக் கவிழ்க்க வேண்டும் என்கிற பேராவல் எழுந்தது. உடனே அவளுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நினைத்ததை ஆசைதீர செய்து முடித்தாள்.
ஏற்கனவே மதுராவின் உடலும் மனமும் சோர்ந்திருந்தது. பாரதியும் மாயாவும் அடிமேல் அடி கொடுத்ததில் கலங்கிப் போயிருந்தாள். போதாததற்கு இப்போது சோனியா வேறு அவளை நிலைகுலைய செய்துவிட்டாள். நல்லது… அனுபவப்பாடம் அவளுக்கும் தேவைதானே! மனிதர்களை கையாள கற்றுக்கொள்ளட்டும்… கற்றுக்கொள்ள துவங்கினாள். தன்னுடைய பலவீனமான மனநிலையை தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டு தெளிவாகக் கேட்டாள்.
“அந்த கல்யாணம் ஏன் நின்னுச்சு?”
14 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
நான் முன்பே சந்தேகப்பட்டது சரியாய் போச்சுது ,தேவ்தான் கிஷோரை திருமணத்திலிருந்து விலக வைத்திருக்கணும்,கிஷோரிடம் தானும் மதுராவும் காதலிப்பதாக புழுகியிருக்கின்றாரா,அதனால்தான் கிஷோர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்ததா,இப்போ சோனி மூலம் மதுராவுக்கு எல்லாமே தெரியப்போகின்றது,விதி வலியது தேவ் .
நன்றி
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reena thayan says:
Nice update
Iyo deve nee love pnna atha madhudda solli kalyanam pannanum eppadi mappilaiya ellam viraddi vida kudathu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jayashree swaminathan says:
Thanks for the super update.That is your style.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Dev nee evalo pannittu madhuva summa thitierukka
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Radha Karthik says:
Dev dhana reason????? Avane stop pannittu pavam madhu VA pottu padupaduthuron……. Nalla punishment kudunga…… Edhu madhu appava palivanga dhana????
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
SUPER UD SIS
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
சிக்கிட்டானா தேவ் ?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Madhu enna ethaiyum thangum ithaiyama …. Ellarum avalai kutram solla … Ithai eppadi sari aagum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Wowww … Adappavi ippadi solli than kalyanathai nitithinana …ithukku kandippa dev Ku thandanai venum … Enna panna poriga nithya … Dev vittu madhu konjam thalli itukkanum ..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Priya Priya says:
தேவ் வசமா மாட்டப்போரான்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Adhutha gundu enna varumo
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Yarukita keta??!!
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Soniya kitta thaan… avakitta thaane pesikittu irukkaa… 🙁
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mary G says:
First