கனல்விழி காதல் – 69
8914
15
அத்தியாயம் – 69
மொத்த குடும்பமும் கூடத்தில் கூடியிருந்தது. சோபாவில் நடுநயமாக அமர்ந்திருந்த நரேந்திரமூர்த்தி சிலையாக சமைந்துவிட்டவர் போல் அசையாமல் காணப்பட்டார். திலீப்பின் முகத்தில் தீயின் ஜுவாலை தெறித்தது. கையில் ஆதிராவோடு நின்றுக் கொண்டிருந்த அவனுடைய மனைவியின் முகத்தில், அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற கலவரம் தெரிந்தது. தன் மடியில் தலைசாய்த்து விசும்பும் மகளின் தலையை ஆதரவாக வருடியபடி மகன் துருவனை முரைத்துக் கொண்டிருந்தாள் பிரபாவதி. தாயின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல், செக்கச்சிவந்த விழிகளுடன் மனைவியை உறுத்து விழித்துக் கொண்டிருந்த துருவனுடைய பார்வை அவளுடைய பதிலுக்காகக் காத்திருந்தது.
அந்த இறுக்கமான சூழ்நிலை மாயாவை அச்சுறுத்தவில்லை. கோபமும் ஆங்காரமும் பொங்கிப் பெறுக, “ஆமாம்… நான்தான் அப்படி சொன்னேன். அதனால இவ என்ன கெட்டுப்போய்ட்டா இப்போ? தேவ் பாயை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கா?” என்றாள் திமிராக. அடுத்த நொடி படீரென்று சத்தத்தைத் தொடர்ந்து அவள் கன்னம் தீப்பிடித்தது போல் எரிந்தது. கண்களில் பூச்சி பறந்தது… காதுக்குள் ‘ஓ’ என்ற சத்தம் ஓங்கி ஒலித்தது. ஒரே நொடிதான்… ஒரே நொடியில் இத்தனையையும் அவள் உணர்ந்து, என்ன நடந்தது என்று புரிந்துகொள்வதற்குள், துருவனின் இரும்புக்கரம் அவள் கையை உறுதியாகப் பற்றியிருந்தது. யார்யாரோ ஏதேதோ கத்தினார்கள்… அவள் காதில் எதுவும் விழவில்லை…. “எவ்வளவு தைரியம் உனக்கு! சுயநலம் பிடிச்ச பிசாசே… வெளியே போடி…” என்று தன் கையை பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்லும் கணவனின் முகத்தையே பார்த்தபடி, அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள். அடுத்து அவன் என்ன செய்ய போகிறான் என்பதை உணர்வதற்கு முன் வெளியே இழுத்துத் தள்ளப்பட்டாள். அவள் முகத்திற்கு நேராக கதவு ஓங்கி அடித்து சாத்தப்பட்டது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே… அந்த பழமொழி இப்போது துருவனுக்கு கனகச்சிதமாய் பொருந்தியது. அத்தனை ஆக்ரோஷமாக அதுவரை அவனை யாரும் பார்த்ததில்லை. போரில் எதிரியை சந்திக்கும் படைவீரன் எவ்வளவு வெறியோடு இருப்பானோ அவ்வளவு வெறியோடு மனைவியை வெளியேத்தள்ளி கதவை சாத்தினான்.
‘எவ்வளவு பெரிய அவமானம்… சொந்த மாமன் மகள்… கணவனின் உடன் பிறந்த தங்கை… அவளை தவறாக சித்தரித்து… கொச்சைப்படுத்தி… அவளுக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை வீட்டிற்கே போய் சொல்லியிருக்கிறாள் என்றால் எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்! இப்படியும் ஒரு பெண் செய்வாளா!’ – நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவனுக்கு.
மனமெல்லாம் எரிந்தது. தாய், தந்தை, தங்கை யார் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. ‘எப்படி செய்தாள் இந்த காரியத்தை! சொந்த வீட்டிற்கே சூனியம் வைப்பது போல் தன்னுடைய குடும்பத்து பெண்ணுக்கே இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டாளே!’ – தாங்கவே முடியவில்லை. உணர்ச்சிப்பெருக்கில் உடம்பெல்லாம் நடுங்கியது.
“இனி அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல…” – இடி போல் முழங்கினான். அவனுடைய முழக்கம் வெளியே நின்றுக் கொண்டிருந்த மாயாவின் செவியையும் எட்டியது.
நிலைகுலைந்து போனவள் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் மரம் போல் நின்றாள். அவமானம்… வலி எதையும் அவள் உணரவில்லை… அடுத்து என்ன என்று யோசிக்கவும், மரத்துப்போன மூளை ஒத்துழைக்கவில்லை.
“கண்ட்ரோல் யுவர் ஸெல்ஃப் துருவா… ஷி இஸ் யுவர் வைஃப். அவசரப்பட்டு எதையும் பேசாத. கதவை திற…” – நரேந்திரமூர்த்தியின் கடுமையான குரல் அவள் செவியை எட்டியபோது… அவமானமும் அவளை தீண்டியது. ‘அனைவருக்கும் முன்பாக… எப்படி…!’ – அவள் உள்ளம் குன்றியது. கண்களில் கண்ணீர் மடைதிறந்தது.
“ஷி ஐஸ் நாட் மை வைஃப் எனிமோர். அவ முகத்தை பார்க்க கூட நா விரும்பல…” – அவனுடைய கர்ஜனையில் இடிந்து போனாள் மாயா.
‘எல்லாம் முடிந்துவிட்டதா! அவ்வளவுதானா!’ – கோர்வையாக சிந்திக்க முடியவில்லை. தன் அன்பு கணவனிடமிருந்து இவ்வளவு கடுமையை அவள் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
“ம்மா… ம்மா… ஊ ஊ… ” – ஆதிரா ஓங்கி அழுதாள். அந்த பிஞ்சுக்குரல் அவளை உலுக்கியது. ‘குட்டிமா…’ – கதவை தட்ட கையெடுத்தாள்.
“அவ பண்ணின வேலைக்கு இதோட விட்டானேன்னு சந்தோஷப்படுங்க. தங்கச்சி மக மேல பாசம் பொங்குதோ!” – பிரபாவதியின் ஆங்காரம் அவளை தடுத்தது. அந்த கதவை தொடுவதற்கு கூட கை கூச, உயர்த்திய கையை மடக்கிக் கொண்டாள்.
“குழந்தைக்காக பாருப்பா..” – நரேந்திரமூர்த்தி.
“எனக்கு மதுராவும் குட்டிமாவும் ஒண்ணுதான் டாடி… அவளை என்னால மன்னிக்க முடியாது… இனி அவளுக்கும் எனக்கும் ஒண்ணுமே இல்ல” – வாள்வீச்சு போல் வந்து விழுந்த வார்த்தை அவளை சுக்கு நூறாக நொறுக்கியது.
‘துருவன்!’ – அவள் மனம் அலறியது. ‘சற்று நேரத்தில் புயல் போல் வீட்டிற்குள் நுழைந்தவள் குருவிக்கூடு போல் இருந்த அவளுடைய குடும்பத்தை கலைத்து, அவளை வெளியே தள்ளிவிட்டாளே பாவி!’ – மதுராவை நினைத்து அவள் மனம் கொதித்தது.
பக்கத்து பிளாட்டிலிருந்து யாரோ எட்டிப் பார்த்தார்கள். உடம்பெல்லாம் கூசியது அவளுக்கு. அந்த பக்கம்… இந்த பக்கம் திரும்ப முடியவில்லை. அந்த இடத்திலிருந்து அப்படியே மாயமாக மறைந்துவிடமாட்டோமா…. அல்லது காற்றில் கரைத்துவிடமாட்டோமா என்றிருந்தது. யார் முகத்தையும் பார்க்காமல் அங்கிருந்து ஓடிவிட வேண்டும் போல் இருந்தது.
ஆனால் கார் சாவி, கைபேசி எல்லாம் உள்ளே இருக்கிறது. அணிந்திருந்த ஆடையோடு அவள் மட்டும் வெளியே நிற்கிறாள். இப்படியே எங்கு போவது! எப்படி போவது! ஒன்றும் புரியவில்லை. குனிந்தபடியே சரட்டென்று ஓடிச் சென்று லிஃப்டிற்குள் நுழைந்து வெடித்து அழுதாள். லிஃப்ட் தரைதளத்தை தொட்ட போது, கண்களில் வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டு வெளியே வந்து வாட்ச்மேனிடம் சொல்லி ஆட்டோ பிடித்தாள்.
***********************
கோலம் குலைந்து… கண்ணீரும் கம்பலையுமாக தன் எதிரில் வந்து நிற்கும் தங்கையை கண்டு தேவ்ராஜின் ரெத்தம் கொதித்தது. வீட்டில் அணியும் ஆடையோடு… காலில் காலனி கூட இல்லாமல் அவனுடைய அலுவலகம் வரை வந்திருப்பதையும்… வெண்பஞ்சு போன்ற அவள் கன்னம் ரெத்த நிறத்தில் கன்றி சிவந்திருப்பதையும் கண்டு அவன் கண்கள் சிவந்தன. தங்கை அடித்து வெளியே துரத்தப்பட்டுவிட்டாள்.. அவமானப் படுத்தப்பட்டுவிட்டாள் என்று தெரிந்ததும் அவனுடைய ஒவ்வொரு அணுவும் துடித்தது. அத்தனை உணர்வுகளையும் உள்ளே அடக்கிக் கொண்டு அமைதியாக அவளுக்கு ஆறுதல் சொன்னான். “இட்ஸ் ஓகே… ரிலாக்ஸ்… எல்லாம் சரியாயிடும்… சரி பண்ணிடலாம்… ரிலாக்ஸ்…” – புயலை உள்ளடக்கிய அமைதி இருந்தது அவன் குரலில்.
“இல்ல தேவ் பாய்… முடியாது… உங்களால எதுவும் செய்ய முடியாது… எல்லாம் முடிஞ்சு போச்சு… அவ்வளவுதான்… எல்லாமே முடிஞ்சு போச்சு” – உடைந்து அழுதாள்.
“இல்ல… எதுவும் முடியல… நா இருக்கேன்ல… காம் டௌன்…” – தங்கையின் தலையை வருடி ஆறுதல் படுத்த முயன்றான். அவளுடைய கண்ணீர் மட்டுப்பட மறுத்தது. தண்ணீர் நிறைந்த கண்ணாடி டம்ளரை எடுத்து அவளிடம் நீட்டி, “குடி” என்றான். மறுக்காமல் வாங்கி மடமடவென்று குடித்தாள்.
“சரி எழுந்திரு…”
“எங்க… அந்த வீட்டுக்கு நா வரமாட்டேன்… அவங்க யாரு முகத்துலேயும் முழிக்க மாட்டேன்… ஐ ஹேட் தெம்… ஐ ஹேட் ஆல் ஆஃப் தெம்…” – கத்தினாள்.
“இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே… ரிலாக்ஸ்… நாம அங்க போகல…” – வெகு அமைதியாக அவளை கையாண்டான்.
“வேற எங்க?”
“வீட்டுக்கு… நம்ம வீட்டுக்கு…”
“குட்டிமா…? எனக்கு குட்டிமா வேணும். அவ அங்க இருக்கா… அழுதா தேவ் பாய்… துருவன் என்னை வெளியே தள்ளி கதவை சாத்தினதும் எம்பொண்ணு கத்தினா… ரொம்ப பயந்து போயிருப்பா… அவளை மட்டும் எப்படியாவது கூட்டிட்டு வந்துடுங்க தேவ் பாய்… ப்ளீஸ்…” என்று அழுதாள்.
“மாயா… நீ இவ்வளவு பதட்டப்படணும்னு எந்த அவசியமும் இல்ல. குட்டிமா இன்னும் ஒரு மணிநேரத்துல உன்கிட்ட இருப்பா… ஓகே? இப்போ கிளம்பு” என்று தங்கைக்கு தைரியம் சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான்.
மகளின் அலங்கோல நிலையைக் கண்டு பதறிய இராஜேஸ்வரியிடம், “பயப்படறதுக்கு எதுவும் இல்லம்மா… நீங்க தேவையில்லாம டென்ஷனாகாதீங்க” என்று கூறி சமாளித்தான்.
தாய் மனம் அந்த சமாதானத்தை ஏற்கவில்லை. “மதுரா எங்க? கோவமா காரை எடுத்துக்கிட்டு போனாளாம்? என்னப்பா ஆச்சு?” என்று கவலையோடு கேட்டாள்.
“சொல்றேன். இப்போ கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. வந்து விளக்கமா சொல்றேன். இப்போ நீங்க மாயாவை உள்ள கூட்டிட்டு போயி சாப்பிட ஏதாவது கொடுத்து படுக்க வைங்க. என்ன என்னன்னு கேட்டு அவளை தொல்லை பண்ணாதீங்க” – என்று கண்டிப்புடன் கூறிவிட்டு காரை கிளப்பினான்.
15 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
NICE UD SIS
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jayashree swaminathan says:
Very interesting and superb update.thanks.simply awesome
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
ஆண்களை சில சமயம் புரிந்துகொள்ளமுடியாது ,தன்தங்கையை அல்லது மகளை அவங்க கணவன் அடித்தால் இவர்களுக்கு தாங்கமுடியாது,ஆனால் தாங்கள் தங்கள் பெண்டாட்டியை அடிக்கலாம் கண்டமேனிக்கு பேசலாம் ,இது எந்தவூர் நியாயம்,தங்களுக்கு வந்தால் வலி அடுத்தவனுக்கு வந்தால் இன்பமோ,மாயா ஆரம்பத்திலிருந்தே சரியில்லை,ஒரு குணக்கேடான பெண்,மதுராவின் பெயரை தான் அசிங்கப்படுத்தியது தெரியவில்லை,அதை மதுரா தன் தந்தை சகோதரனிடம் முறையிட்டதுதான் பிழையா,என்ன பெண்ணோ தெரியவில்லை ,இப்போ எங்கே கிளம்பி விட்டார் தேவ் மாமனாரை மிரட்டவா அல்லது மதுராவை கொத்திகுதறவா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Radha Karthik says:
Cha dev ah poiyu thappa ninachutome….. Edhuvume thangachi pannuna thapillai….. Parkkalam dev yarukku support pandronu….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
very nice ud. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
ஓ..தங்கச்சி பண்ணினா தப்பில்லையோ?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kavi Nathi says:
These ladies are more cruel than others.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Maya dhaan karanama ratchashi…..aarambathila sabadham yeduthale eppadi maranthom adhai😳….but Dev ku maya seidha velai theriyuma? Therindhuma acvaluku support pandran?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
அவ அப்படி பண்ணுனதுனால தானே இவன் கல்யாணம் பண்ணினான்… 😛
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Ada kadaisila Maya velaya,,,,, aCho madhuvum devum pirinjiduvangala,,,,, please Nala vidama kondu pongalen please
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
கண்டிப்பா நல்லா தான் போகும்… கவலை படாதீங்க… முடிவு சுபம் தான். ஆனா அதுக்கு முன்னாடி… 😉
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Athane athukku munnadi dev ku kutty ஆப்பு confirmed 😜😜😜
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Aamathane nithya..😳😳
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
நிச்சயமா… அது இல்லாம எப்படி… 😛
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Happa ippo than happy ya irukku 😂😂😂