Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 21

அத்தியாயம் – 21

உஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்கிறது இங்கே!

தான் அழுது அழுது மயங்கியதும், தெளிவித்தார்கள். முகத்தை ஒரு பெண் வலிக்காமல் மென்மையாக தன் துப்பட்டாவினாலேயே துடைத்து விடுகிறாள்.   இன்னொருவள்  அழகாக வாயைப் பிரித்து தண்ணீர் புகட்டுகிறாள். அதோடு விடாமல், தன் அம்மா போட்டுத் தரும் ஸ்ட்ராங் காபி மாதிரியே போட்டு எடுத்து வந்ததோடு,  குழந்தைக்கு ஊட்டுவது போல் பொறுமையாக ஆத்தி ஆத்தி புகட்டுகிறாள். என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள்.

 

‘எழில், நீ போ… உஷாவை நாங்க பாத்துக்கறோம்’ என்றவன் அதன் பிறகு உஷாவைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. கைகால்கள் கட்டப்படாமல் இருந்தால், உஷாவும் அவர்களில் ஒருத்தியாகத் தான் தெரிவாள். கடத்தியவர்கள் இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள்.

 

எழிலன் போகும் போது செல்லில் தன்னை இதே கோலத்துடன் ஒரு போட்டோ எடுத்துப் போனது ஞாபகம் வந்தது. எதற்காக அது? அப்பாவை பார்ப்பதாக சொன்னார்களே? பணத்திற்காகவா? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே! இவளை விட வசதியானவள் போல் தெரிந்தாள், கதவைத்திறந்த துப்பட்டா பெண்!  பின் எதற்காக எழில் போட்டோ எடுத்தான்? அடச்சே! நம்மை இந்த கோலத்திலா முதன்முதலாக அவன் போட்டோ எடுக்க வேண்டும். எழில்… என்ன ஒரு வித்தியாசமான, அழகான பெயர். அய்யோ ஏன் என் புத்தி இப்படி போகிறது….

உஷாவின் யோசனையைக் கலைக்கவே அந்த குரல் கேட்டது…

 

“வாங்கப்பா சாப்பிடலாம். சமைச்சாச்சு. சூடா இருக்கும் போதே சாப்பிடுங்க எல்லாரும்”

என்றபடியே வயதான அம்மாள் ஒருவர் உள்ளிருந்து வந்தார். ஐம்பது ஐம்பைத்தந்து வயதிருக்கலாம். களையான முகம். சாந்தம் முகத்தில் மொத்த குத்தகைக்கு எடுத்துவிட்டது போல, அப்படி ஒரு கடாட்சம்.

 

உஷாவிற்கு அதிர்வாய் இருந்தது. என்ன இது இன்னும் எத்தனை பேர் இந்த வீட்ல இருக்காங்க

ஒன்னும் புரியலையே.,

 

“அத்தை நான் இவங்கள பாத்துக்கறேன்., நீங்க மத்தவங்களுக்கு போடுங்க”

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.  பாத்தா பச்ச மண்ணு மாதிரி இருக்கு புள்ள! எங்கையும் ஓடாது! அந்த புள்ள கட்ட அவுத்து விடுங்க! அதுவும் வந்து சாப்பிடட்டும். ஒன்னும் சத்தம் போடாது., எனக்கு அந்த ஆண்டவன் மேல நம்பிக்கை இருக்கு”

 

அந்த அம்மாள் சொன்னதும், மந்திரத்துற்கு கட்டுப் பட்டது போல அவளை முழுதுமாக கட்டுக்களில் இருந்து விடுதலை செய்தார்கள். உண்மையிலேயே உஷாவிற்கு கத்தவே தோன்றவில்லை. அழுகைதான் வந்தது.

ஏன் என்றும் தெரியவில்லை. இத்தனை நேரம் உக்காந்து இருந்ததுல, கை காலெல்லாம் மரத்து போனது மாதிரி இருந்தது. முகம் கழுவினால் தேவலாம் போல இருந்தது! கேக்கலாமா! எப்படி கேட்பது! கேட்டாலும் விடுவார்களா!

 

“என்னங்க ரெஸ்ட்ரூம் போகனுமா”… தூக்கிவாரி போட்டது உஷாவிற்கு. தான் நினைத்த வினாடி பட்டென்று கேட்டாள் துப்பட்டா பெண்…

 

தலையை ஆட்டியவளின் கை பிடித்து அழைத்துப் போனாள். ” மூஞ்சி கழுவிட்டு சாப்பிட வாங்க! வெய்ட் பன்றோம்”

 

அவள் வெளி வருகையில், ஹாலில் ஒருவரும் இல்லை. இப்படியே கதவைத்திறந்து ஓடிவிடலாமா? ச்சே என்ன ஒரு நீசத்தனம். எந்த அளவு நம்பிக்கை இருந்தா அப்படியே விட்டுப் போவார்கள்! ஒரு வேளை எழிலன் வெளியே, அதுவும் தன் அப்பாவின் அருகில் இருக்கிறான் என்ற தைரியமோ? எது எப்படியோ! நாம் ஓடக்கூடாது! இதுவரை இவர்களால் தனக்கு ஒரு ஆபத்தும் வரவில்லை. இப்போது உஷாவிற்கே, ஒரு ஆவல் வந்தது.  யார் இவர்கள்? ஏன் இதெல்லாம்? என்ன காரணம்? எனத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று ஆர்வம்… ஏன் வெறியே வந்துவிட்டது. அமைதியாக கிச்சனை அடைந்தவள் அதிர்ந்தாள். அங்கே எழிலன் உக்காந்து அப்பளத்தைக் கடித்துக் கொண்டிருந்தான்…

 

“வா உஷா! வா வந்து உக்காரு. நல்லா டைட்டா சாப்பிடு! எங்க அம்மா சமையல் அட்டகாசமா இருக்கும்”

 

உஷா அதிர்ந்தே போனாள். எப்படி இவனால் எதுவுமே நடக்காத மாதிரி பேச முடிகிறது.

 

“என்ன உஷா தயக்கம். ஓ… நீ அய்யர் வீட்டு பொண்ணுல்ல…

 

அவன் பேச்சை இடைமறித்து காபி புகட்டியவள் சொன்னாள், ” அய்யர் வீடு இல்ல, அய்யர் ஆத்து பொண்ணு”

 

உஷாவிற்கு கொஞ்சம் எரிச்சலாக கூட வந்தது.

ஒரு வேளை ‘தன்’ எழிலன் என நினைத்திருந்தவன் இப்படி செய்து விட்டானே என்ற எரிச்சலோ! அந்தக் கோபத்தைக் காட்டவே திமு திமுவென்று நடந்தவள், எழிலனுக்கு அருகில் இடமிருந்தும் துப்பட்டாவின் அருகில் அமர்ந்தாள்… தான் இருந்த நிலைக்கு, ஒரு வாய் சாப்பாடு கூட இறங்காது என நினைத்தவள் எப்படி, அவ்வளவு தின்றாள் என அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

 

“உஷா உங்களுக்கு ப்ளேயிங் கார்ட்ஸ் ஆடத்   தெரியுமா?” துப்பட்டாதான் வாயைத் திறந்தாள்…

 

“இப்ப எதுக்கு இந்த கேள்வி” – காபி தந்தவள்

 

“இல்ல… அவங்களுக்கு போர் அடிக்குமே… துப்பட்டாவை முடிக்க விடாமல் எழிலன் சொன்னான்…

 

“அவங்க நிறைய அழுதுருக்காங்க! சாப்ட்டு நல்லா தூங்கட்டும். அப்பதான் நான் காலைல கூட்டிட்டு வந்த மாதிரியே ப்ரஷா அவங்க வீட்ல… சாரி… அவங்காத்ல கொண்டு போய் விட முடியும்”

அடேங்கப்பா என்ன ஒரு அக்கரை!

தன்னை வைத்து அவர்கள் கலாட்டா பண்ணியதற்கு கூட உஷா ஒன்றும் நினைக்கவில்லை. தன்மீதே ஒரு திகைப்பு! மாலை கண்டிப்பாக வீடு திரும்புவோம் என்றதும் அவளுக்கு நிம்மதியல்லவா வர வேண்டும்! அந்த சந்தோஷத்தையே முகத்தில் காணோமே!

இன்னொரு ஆச்சர்யம், இத்தனை பேச்சுக்களிலும் கொஞ்சம் கூட தலையிடாதது மட்டுமில்லாம, அமைதியா உக்காந்து “கருமமே கண்ணாயினார்” மாதிரி சாப்ட்டுட்டு இருக்கானே! அந்த ‘நாங்க பாத்துக்கறோம்’

இளைஞன் இவன் யார்?

 

தெரிஞ்சுக்கலைனா தலையே வெடிச்சுரும் போல் இருந்தது உஷாவிற்கு…




Comments are closed here.

You cannot copy content of this page