கனல்விழி காதல் – 70
9790
51
அத்தியாயம் – 70
அந்த திருமணம் நின்ற வேகத்திலேயே மதுராவிற்கு தேவ்ராஜுடன் திருமணம் கூடிவிட்டது. அதன்பிறகு ஆக்டொபஸ் போல அவளுடைய மொத்த சிந்தனையையும் தேவ்ராஜ் ஆக்கிரமித்துக் கொண்டான். அவளுடைய ஒவ்வொரு அசைவையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள பெரிதும் பிரயத்தனப்பட்டான். ஆனால் அதையும் மீறி அவளுடைய சிந்தனையில் அந்த கேள்வி எழுந்து கொண்டே தான் இருந்தது.
‘ஏன் இப்படி பண்ணின கிஷோர்?’
எத்தனை வலி…! எத்தனை அழுகை…! எத்தனை குமுறல்…! அதிலும் தேவ்ராஜ் அவளை கிஷோரோடு சம்மந்தப்படுத்தி குத்திக்காட்டும் போதெல்லாம் எத்தனையோ முறை செத்து செத்து பிழைத்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவள் மனம் கிஷோரைத்தான் குற்றம் சொல்லும். சம்மந்தப்பட்ட இருவரில் இவள் தவறு செய்யவில்லை என்றால் அவன்தான் தவறு செய்திருக்க வேண்டும் என்று கணக்குப்போட்டு பலமுறை அவனை சபித்திருக்கிறாள். இப்படி ஒரு கொடும் துரோகம் தன் குடும்பத்திலிருந்தே தனக்கு இழைக்கப்பட்டிருக்கும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை!
‘உன்னோட மாயா அண்ணி… கிஷோர் வீட்டுக்கு வந்து உன்னை பத்தின உண்மையெல்லாம் புட்டுப்புட்டு வச்சிட்டு போயிருக்காங்க… அதுக்கு பிறகும், எந்த அப்பாம்மா தன்னோட பையனுக்கு இப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிவைப்பாங்க?’ என்று சோனியா கேட்ட போது, ‘மாயாவா! அண்ணியா! என்னோட அண்ணியா!’ என்று அவள் மனம் தவித்த தவிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.
இதே வேலையை பாரதி செய்திருந்தால் கூட இந்த அளவிற்கு அவள் மனம் புண்பட்டிருக்காது. ஆனால் மாயா செய்யலாமா? துருவனுக்காகவாவது பார்த்திருக்க வேண்டாமா! ஏன் இப்படி செய்தாள்? என்ன பாவம் செய்தோம் அவளுக்கு? – அவள் உள்ளம் கொதித்தது. நேருக்கு நேர் அவளிடம் இதைப்பற்றி கேட்கவில்லை என்றால் நெஞ்சு வெடித்து செத்துவிடுவோம் போலிருக்க உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
மேல்மூச்சு வாங்க பெருங்கோபத்துடன் வீட்டிற்குள் நுழைந்த மகளைக் கண்டதும் பதறிய பிரபாவதி, “என்ன… என்னடா… ஏன் இப்படி வந்து நிக்கிற?” என்றாள். அவ்வளவுதான், அதுவரை உள்ளே பொங்கிப் பொங்கி அடங்கிய ஆத்திரமெல்லாம் கரைபுரண்டது. தாயை கட்டிப்பிடுத்துக் கொண்டு அழுதபடி அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
மாயாவை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் என்று வந்தவள் தாயைக் கண்டதும் உடைந்துவிட்டாள். மகளின் கண்ணீரை கண்ட தாய் பெண் புலியாக மாறி ஊரை கூட்டுவதற்கு பதில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கூட்டி மருமகளை குற்றவாளியாக நிற்க வைத்துவிட்டாள்.
துருவன் எதையும் நம்பவில்லை. மனைவிக்கு ஆதரவாகத்தான் பேசினான். உலகம் தெரியாத தங்கையை இல்லாததை சொல்லி யாரோ குழப்பிவிட்டுவிட்டார்கள் என்று நினைத்து, “யாரோ ஏதோ சொல்றாங்கன்னு உலராத மதுரா. மாயா உன்னோட அண்ணி… உன்னோட லைஃபை கெடுக்கணும்னு அவளுக்கு என்ன அவசியம். யார் அந்த பொண்ணு… போன் நம்பர் கொடு நா பேசறேன்” என்று தங்கையைத்தான் கண்டித்தான்.
“நீ எதுக்கு அடுத்த வீட்டு பொண்ணுகிட்ட விசாரிக்க போற? உன்னோட மனைவி இங்கதானே இருக்கா? அவகிட்ட முதல்ல கேளு…” என்று மகனை முறைத்தாள் பிரபாவதி.
துருவன் மனைவியை பார்த்தான். சிலை போல் நின்று கொண்டிருந்தவளிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. அவனுடைய முகத்தில் கடுமை குடியேறியது. “சொல்லு மாயா? அந்த பொண்ணு சொன்னதெல்லாம் உண்மையா? நீதான் அதெல்லாம் செஞ்சியா?” என்றான் அழுத்தமாக.
அவனுடைய உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அவள் பயப்படவில்லை. ‘ஆமாம்… நான்தான் செஞ்சேன். அதுக்கு என்ன இப்போ?’ என்பது போல் திமிராக பதில் சொன்னவள், அதன் பிறகு துருவனின் இன்னொரு அவதாரத்தை முதல் முறையாக பார்த்தாள். அவள் மட்டும் அல்ல மதுராவும் அப்போதுதான் தன் அண்ணனுடைய கோபத்தை அதிர்ச்சியோடு பார்த்தாள். அவனை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆக்ரோஷத்தின் உச்சத்திலிருந்தான்.
சற்று நேரத்தில் புயலடித்து ஓய்ந்தது போல் வீட்டில் மயான அமைதி நிலவியது. தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார் நரேந்திரமூர்த்தி. மற்றவர்களெல்லாம் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருக்க துருவன் மட்டும் தன்னுடைய அறைக்குள் சென்று அடைந்துக் கொண்டான். மதுராவின் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது.
“என்னம்மா இது?” என்றாள் நடுக்கத்துடன் தாயை பார்த்து. தன்னால்தான் வீட்டில் இவ்வளவு பெரிய கலவரம் ஏற்பட்டுவிட்டது என்று அவள் மனம் உறுத்தியது.
“நீ எதுக்கு பயப்படற? அவ பண்ணின வேலைக்கு அவளுக்கு இது தேவைதான்” என்று மகளுக்கு ஆறுதல் கூறி அரவணைத்துக் கொண்டாள் தாய். ஆனால் மதுராவின் மனம் சமாதானம் ஆகவில்லை. ‘மாயா செய்தது தவறுதான்… துரோகம்தான்… அதற்காக இப்படி அனைவருக்கும் முன்பாக அவளை அவமானப்படுத்த வேண்டுமா! துருவன் பாய் ஏன் இப்படி செய்துவிட்டார்!’ – அவள் மனம் சங்கடப்பட்டது. தன்னால் தன்னுடைய சகோதரனின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிவிட்டதே என்று வேதனைப்பட்டாள். அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.
“ஐம் சாரி பாய்… எல்லாம் என்னாலதான்” என்று வருந்திய தங்கையை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தான் துருவன்.
“உம்மேல என்ன மது தப்பு? நீ எதுக்கு வருத்தப்படற?” – கனிவுடன் கேட்டான்.
“நா கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். அவசரப்பட்டு இங்க வந்துட்டேன். நீங்களாவது கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாமே பாய்” என்று அழுகுரலில் கூறிய தங்கையை ஆதுரத்துடன் பார்த்தவன், அவள் கைகளை பிடித்து கண்களில் வைத்துக் கொண்டு குலுக்கினான்.
“சாரிடா… வெரி சாரி… நீ ரொம்ப இன்னொசென்ட்… உனக்கு புரியல… ஐம் வெரி சாரி” என்று புலம்பினான்.
“பாய்… ப்ளீஸ்…. நீங்க அழாதீங்க… எனக்கு ஒண்ணும் இல்ல… பாருங்க… ஐம் ஆல்ரைட்… ப்ளீஸ் பாய்… அழாதீங்க” – அண்ணனின் கண்ணீரைக் கண்டு பதறினாள் மதுரா. மகளின் சத்தம் கேட்டு உள்ளே ஓடி வந்த பிரபாவதி மகனுக்கும் ஆறுதல் சொல்லி, மகளையும் சமாதானம் செய்தாள்.
“துருவா… நீ கொஞ்சம் நேரம் படு… எதையும் யோசிக்காத” என்று மகனை படுக்க வைத்துவிட்டு மகளையும் அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்தாள்.
வீட்டில் சச்சரவுகள் ஓய்ந்து அனைவரும் சற்று ஆசுவாசப்பட்ட நேரத்தில், அசாதாரணமாக தொடர்ந்து ஒலித்த காலிங்பெல் அனைவரையும் உலுக்கியது. கதவைத் திறந்த திலீப் ரௌத்திரமாக நின்றுக் கொண்டிருந்த தேவ்ராஜை பார்த்து திகைக்க, அவனோ திலீப்பை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
“தேவ் நில்லு… சொல்றதை கேளு…” – அவனிடம் தெரிந்த வேகத்தைக் கண்டு துணுக்குற்ற திலீப் அவனை தடுக்க முயன்றான். அதற்குள் சத்தம் கேட்டு எல்லோரும் ஹாலுக்கு வந்துவிட மதுராவை மட்டும் அங்கே காணவில்லை.
“எவ்வளவு தைரியம்டா உனக்கு!” – துருவனிடம் நெருங்கி அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்து உறுமினான். அவன் பதில் சொல்லவில்லை. பின்னணியில் கலவையாக ஒலித்துக் கொண்டிருந்த பல குரல்கள் அவன் செவியை எட்டவில்லை.
மனைவியை தேடி அவன் கண்கள் அலைய, “மதுரா!” என்று வீடே அதிரும்படி ஒரு சத்தம் போட்டவன், ஒவ்வொரு அறையாக உள்ளே நுழைந்து வெளியே வந்தான். இந்த நிலையில் மதுரா இவன் கையில் சிக்கினால் என்ன ஆகுமோ என்று பயந்து அனைவரும் அவனை தடுக்க முயன்றார்கள். ஆனால் பலனில்லை… சூறாவளியை தடுக்க சுவரெழுப்பி மாலுமா?
கூடத்தில் ஓங்கி ஒலிக்கும் சத்தம் கடைசி அறையிலிருந்த மதுராவிற்கு கேட்டு அவள் வெளியே வருவதற்குள் இவன் உள்ளே நுழைந்துவிட்டான். அவனுடைய முகத்திலிருந்த கடும்கோபம் அவளை அச்சுறுத்தியது.
“தேவ்!” – ‘மாயாவை சந்தித்துவிட்டான்’ – ஒரே நொடியில் அவளுக்கு அனைத்தும் புரிந்துவிட்டது.
“இங்க என்ன பண்ணற? எதுக்கு வந்த இங்க?” – பெருங்குரலில் அதட்டினான்.
நடுநடுங்கிப்போன மதுரா, “தேவ் நா..” ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.
“கிளம்பு… கிளம்பு இங்கிருந்து முதல்ல…” – அவளை இடைவெட்டி மடைபோட்டவன், அவள் கையை உடும்பு பிடியாகப் பிடித்தான். ஒட்டுமொத்த குடும்பமும் அலறியது. எதுவும் அவன் காதில் விழவில்லை. “எதுக்கு வந்த இங்க? ஏன் வந்த?” – கண்களில் வெறி… குரலில் ஆவேசம்… அவள் கையை பிடித்திருந்த பிடியில் எஃகின் உறுதி…
மதுரா பயந்துவிட்டாள். “தேவ் விடுங்க… என்னை விடுங்கன்னு சொல்றேன்ல…” அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். யானையோடு எலிக்குஞ்சு மோதுவது போல, அவனிடம் அவளுடைய போராட்டம் எம்மாத்திரம்? ரோலர் பேகை இழுப்பது போல அவளை தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அந்த அசுரனை பிடித்து… இழுத்து… மதுராவை அவனிடமிருந்து விடுவிக்க போராடிய குடும்பத்தாரின் முயற்சி விழலுக்கு இறைத்த நீராய் வீணாகப் போனது.
அதுவரை எல்லை மீறாமல் மைத்துனனை தடுக்கமுயன்ற திலீப்பிற்கு, கோபம் எல்லை மீறியது. “தேவ் விடு…. விடுன்னு சொல்றேன்ல…” என்று கடுமையாக முறைத்தபடி அவன் கையைப் பிடித்தான்.
“கையை எடு…” – அதட்டினான் தேவ்ராஜ்.
“நீ மதுவ விடு முதல்ல…” என்று அவன் எச்சரிக்க, “என்னோட வைஃப்கிட்ட நா பேசிகிட்டு இருக்கேன். நீ யாருடா இடையில…” என்று இவன் அவனுடைய சட்டையைப் பிடித்தான். கண் இமைக்கும் நேரத்தில் தள்ளுமுள்ளாகிவிட்டது. எல்லோரும் கத்தினார்கள். வீடே அலறியது. தங்கையின் கணவனாயிற்றே என்கிற தயக்கம் திலீப்பிடம் இருந்தது. ஆனால் வெறிபிடித்த மிருகமாக மாறியிருந்த தேவ்ராஜ் வைத்துப் பார்க்கவில்லை.
பிரபாவதி வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டாள். கணவன் அடிவாங்குவதை கண்டு திலீப்பின் மனைவி பதறி துடித்தாள். தன்னை பிடிக்க முயன்ற துருவன் மற்றும் நரேந்திரமூர்த்தியிடம் அடங்காமல் எகிறி, திலீப்பை சரமாரியாகத் தாக்கினான் தேவ்ராஜ். திலீப்பின் நாசி உடைந்து இரத்தம் வழிந்தது. “ஐயையோ… நா வந்துடறேன்… வீட்டுக்கு வந்துடறேன்… விட்டுடுங்க… ப்ளீஸ் விட்டுடுங்க… திலீப் பாய்.. போயிடுங்க… போயிடுங்க பாய்… தே…வ்… நா வந்துடறேன்… வந்…து.டறே….ன்” – கத்திக் கதரிய மதுராவின் சத்தத்தில் வீடே அதிர்ந்த போது அவன் தானாக அடங்கினான்.
அவனுடைய பார்வை மீண்டும் வீட்டை அலசியது . நடப்பதையெல்லாம் பார்த்து பயந்து நடுங்கி ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் நின்றுக் கொண்டிருந்தாள் குழந்தை ஆதிரா. அவளை பார்த்ததும் திலீப்பை விட்டுவிட்டு, தன்னுடைய ஆடையை சரி செய்தான் தேவ்ராஜ். முகத்திலிருந்த கடுமையை மறைக்க முயன்றான். அதற்குள் அவனுடைய எண்ணத்தை புரிந்துக் கொண்டு சுதாரித்த துருவன் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டான். அவனை அலட்சியமாக பார்த்த தேவ்ராஜ், மனைவியின் பக்கம் திரும்பி, “போயி வண்டில ஏறு” என்று உத்தரவிட்டான். பிறகு துருவனிடம் நெருங்கி, “குழந்தை அம்மாகிட்டத்தான் இருக்கனும்” என்று கூறி வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து ஆதிராவை பிடுங்கினான். குழந்தையின் மனம் பாதிக்கப்படுவதை விரும்பாத துருவனும் அதிகம் முரண்டு பிடிக்கவில்லை.
“உனக்கு குழந்தை வேணுன்னா என் வீட்டுக்கு வா…” என்றான். – ‘வந்துப்பாருடா…’ என்கிற சவால் இருந்தது அவன் தொனியில்.
51 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Suganya Samidoss says:
Story super padikumpodu BP ekiruthu. Episode konjam perisa podunga romba kammiya iruku.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Chitra Chitra says:
தேவ் அடங்க மாட்டானா அவனுடைய செயலுக்கு வருத்தபடவே மாட்டானா எதையுமே விசாரிக்க மாட்டானா எல்லாம் தெரியும் போது என்ன ஆகும் மதுராவின் மனகஷ்டங்களை மறந்து அடிகளையும் அவமானங்களை மறந்து அவனை மன்னிக்க வேண்டுமா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
உங்க கோபம் புரியாது… ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட குணம் இருக்கும்… இதெல்லாம் நமக்கு மன்னிக்க முடியாம இருக்கலாம்.. ஆனா இந்த கதையில மதுராவோட குணம்… தேவ்ராஜ் குணம்… அவங்களுக்குள்ள இருக்கற உணர்வுபூர்வமான நெருக்கம்… இதெல்லாம் தான் மதுரா எல்லாத்தையும் மறப்பாளா மன்னிப்பாளான்னு முடிவு பண்ணும்… 🙂
நன்றி தோழி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Bharathi Viswanathan says:
When mathura is going to tell Dev about her pregnancy .He may change his attitude I think after that But one thing I don’t understand why they all behave like this Kai Neeti adikarathuthan. They all seem to be well educated and well off
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Do you really think well educated people will not outburst or harm others?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
very interesting ud. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Muthukrishnan
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
தேவ் சொல்வது போல் குழந்தை அம்மாவிடம்தான் இருக்கணும், அது எல்லாவற்றிலும் நியாயம் தெரிந்து வைத்திருக்கும் தேவ்விற்கு ஒரு பெண்ணின் பெயரை தன் தங்கை களங்கப்படுத்தியிருக்கின்றார் அதற்காக தன் தங்கை சார்பாக குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பாவது கேட்கணும் என்று தெரியாத,தன் கூடப் பிறந்ததுகள் செய்வது எல்லாம் அநியாயம் என்றாலும் அதனை கண்டிக்காமல் ஏற்றுக்கொள்வது தேவ்வை இன்னும் தரம் தாழ்த்துகின்றது,தேவ் முரடன் அல்ல முட்டாள் முரடன்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
அப்டியா சொல்லறீங்க!!! 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
uma manoj says:
இந்த அடாவடி தேவ்வ எதிர்பார்த்தேன்…இதுக் கூட இல்லைனா கெத்து என்னாகிறது. ..
அட்டகாசமான தேவ்..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
அட கெத்துக்கெல்லாம் இல்லப்பா… அவனுக்கு அப்படித்தான் ரியாக்ட் பண்ண வரும்… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jayashree swaminathan says:
what a character!Looks like antihero who does not value a woman’s feelings and family values
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
palapazham maadhiri pa…ulla inipputhaan… veliye mattum thaan mul… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
Very bad.
முதுகெலும்பு இல்லா …மது இங்கே ஏன் வரணும்?
ரவுடித்தனம்……ஹீரோயிசமில்லை.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Semma pons ….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
You too Lakshmi… 😛
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
அட அக்கா… என்ன தேவ் வ இப்படி திட்டுறீங்க???
தங்களை நல்லவனாகக் காட்டிக்கொள்ள சாயத்தை அப்பிக்கொள்ளும் ஆண்களைவிட… உள்ளே உண்மையாய் தோன்றும் உணர்வுகளை அப்படியே வெளியே கொட்டி தான்தோன்றி என பெயர் வாங்கிக்கொள்ளும் ஆண்கள் தான் ரசிக்கப்படுகிறார்கள்… உண்மைதானே??? 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Unmai than nithya
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
கிஷோரோடு இணைச்சு நேற்று வரை திட்டிட்டு தானே இருந்தான்..அவன் தங்கைன்னதும் வலிக்கிதோ…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
இனியும் கூட திட்டினாலும் திட்டுவான்… கோவம் வந்தா திட்டிட்டு போக வேண்டியதுதான்… 😛
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mary G says:
I have decided to stop reading on regular basis. Cannot take ‘tension’ anymore. Ll continue once u complete😡
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
What!!! No… This is not fair my lord…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepa I says:
Chance illa. What a character sis. A manly man super
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Deepa…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
superrrrrrrrrr
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Ugina…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kani Ramesh says:
Wow sis super… ithan nan ethirpathen tis is ” Dev”yarukum adangatha Aalumaiyana charactr so avan ipadithan nadanthupan 😍😍😍 super dev
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Kani… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Madhura avan veetla irukanum nu ninaikiran but adhukaga ivvalavu kobam koodathu ivanuku
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
உங்க ஃபஸ்ட் பாயிண்ட் கரெக்ட்… 😛
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Geethanjali Rajan says:
இந்த அளவு கோபமும் அகங்காரமும் அண்ணனுக்கும் தங்கைக்கும் நல்லதல்ல தேவ். இதற்கு நீ பட போகிறாய்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
கண்டிப்பா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kavi Nathi says:
Dev is very much irritating.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Really…!
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Dev seirathu enna niyayam … Arakkana avan … Konjam kooda yosikkama panren .. Ivan thangachiya adikka koodathu .. Ivan mattum madhu va adikkalam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Avan enganga madhura va adichan? Thaduka vandha Dilip ah le adichan
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
True… True… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Nithya nengaluma … Naan ippo adichannu sollala pa … Ellam therinjum rnnai en kalyanam panniganu madhu kekkum bothu adichannu LA athai sonnen … Eppo adicha enna adichathu thappu thane ..Maya va adichathu thane kovapaduran .. Ivan mattum adichanr nu krtten
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Idhuvum True… True… 😀
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
😱🤔
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Ippo adichannu sollala … Maya va dhuruv adikka koodathunu ninaikuren LA Ivan madhu va adichathu illaiya … Ivan seitha sari … Dhuruv seitha thappa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Idhu nyayamana kelvi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
KARTHIGA SELVI says:
Madu pavaam pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Yes… u r rite… pavam thaan… 🙂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reena thayan says:
hmm so dev… is always dev madura enna padupada poralo
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Thank you Reena..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reena thayan says:
plz neenka upload panra photo yarodathunnu sollidunkalen niyapagame varuthilla i swa him somewhere
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
அவன் பேரு ஃபைசல் ப்பா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reena thayan says:
Thx dear
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Geethanjali Rajan says:
He is Faysal Qureshi. Pakistani actor.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Reena thayan says:
Thx dear