கனல்விழி காதல் – 74
10274
13
அத்தியாயம் – 74
இவ்வளவு பெரிய அநியாயத்தை அவளுக்கு செய்துவிட்டு எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்கிறான்! மனதில் சிறு உறுத்தல் கூட இல்லையா! மன்னிப்பு கேட்க வேண்டாம்… வருத்தம் கூட தெரிவிக்க வேண்டாம்… இயல்பாக ஒரு வார்த்தை… அதை கூட அவன் பேசவில்லை. அவ்வளவு மட்டரகமாகவா அவளை எண்ணிக் கொண்டிருக்கிறான்! – பொங்கிப் பொங்கி அடங்கியது அவள் மனம். அடிவயிறெல்லாம் எரிந்தது. என்ன அலட்சியம்! என்ன தோரணை! – அவளால் சகிக்க முடியவில்லை. கொடும் பாதகத்தை அவளுக்கு செய்துவிட்டு, ஏதோ அவள்தான் தவறு செய்தவள் போல அவளை புறக்கணிக்கவும் செய்தான். மனம் நொந்து போன மதுரா இரவெல்லாம் உறக்கமின்றி தவித்தாள். காலையில் தாமதமாக எழுந்தாள்… எழும் போதே காலை நேர உபாதைகளால் பெரும்பாடுபட்டாள். அவளை தாங்கிப் பிடித்து அந்த துன்பத்தையெல்லாம் பகிர்ந்துக்கொள்ள வேண்டியவனோ தன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தான். அவனை பார்ப்பது கூட அரிதாகிப் போனது. வலியையும் வேதனையையும் பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் தனக்குள்ளேயே புழுங்கி மரத்துப்போன மனதுடன், உணர்வுகளற்ற இயந்திரம் போல் நடமாடிக் கொண்டிருந்தாள் மதுரா.
மாயாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் சிக்கலால் மனஉளைச்சலுக்கு ஆளான இராஜேஸ்வரியின் இரத்த அழுத்தம் எக்குத்தப்பாக எகிறியது. மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகள் எதிர்பார்த்தபடி பலனளிக்கவில்லை. ஒரு பக்கம் தாயின் ஆரோக்கியம்… இன்னொரு பக்கம் மாயாவின் வாழ்க்கை… அதோடு பாரதியின் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இவ்வளவு பிரச்சனைகளையும் தலையில் சுமந்துக் கொண்டிருந்த தேவ்ராஜ் மதுராவைப் பற்றி பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை.
அவனை பொறுத்தவரை, நின்று போன திருமணத்தை பற்றி அவள் பெரிதாக கண்டுகொண்டிருக்கக் கூடாது. பழைய கதை எதுவாக இருந்தாலும் இப்போது அவள் தேவ்ராஜின் மனைவி. அவனுடைய உறவை போற்றி பாதுகாத்துக்கொள்ளத்தான் நினைத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி ஆர்ப்பாட்டம் செய்து மாயாவின் வாழ்க்கையை சிக்கலாக்கியிருக்கக் கூடாது என்று நினைத்தான்.
அதுமட்டுமல்ல… அந்த பிஞ்சு குழந்தை தந்தையைக் கேட்டு தினமும் அழுகிறதே! அந்த குழந்தையின் துன்பத்திற்கு நாம் தானே காரணம் என்கிற குற்ற உணர்ச்சி சிறிதாவது இருக்கிறதா! ஏதோ ரோபோ போல் போவதும் வருவதுமாக எதிலும் ஈடுபட்டுக்கொள்ளாமல் இருக்கிறாளே! அப்படி என்ன கோபம்? அந்த கிஷோர் அவ்வளவு முக்கியமானவனாகிவிட்டானா! – இதைத்தான் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
எத்தனை நாட்களுக்கு இப்படி இருப்பாள்? இருக்கட்டும்… பார்த்துக்கொள்ளலாம் என்கிற பிடிவாதத்துடன் அவனும் அவளிடம் நெருங்கவில்லை. அதோடு ‘நம் மனைவி… நம் பாதுகாப்பில்… நம் வீட்டில் தானே இருக்கிறாள். எங்கு போய்விட போகிறாள்… பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற தைரியமும் கூட அவனுடைய அலட்சியத்திற்குக் காரணமாக இருந்தது.
இப்போதெல்லாம் இராஜேஸ்வரி முன்பு போல் மதுராவை தங்குவதில்லை. உடல்நிலை சரியில்லாததுதான் காரணமா அல்லது மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டாளே என்கிற கோபம் உள்ளுக்குள் இருந்ததோ தெரியவில்லை. மொத்தத்தில் அவளுக்கு அந்த வீட்டில் இருந்த ஒரே உண்மையான ஆதரவும் இப்போது இல்லாமல்போய்விட்டது. ஒரு பக்கம் தேவ்ராஜின் அலட்சியம்… இன்னொரு பக்கம் மாயா மற்றும் பாரதியின் அக்கினிப்பார்வை… இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு நெருப்பில் நிற்பது போல் வாழ்ந்துக் கொண்டிருந்தாள் மதுரா. ஒரு நொடி போதும் அந்த வீட்டைவிட்டு வெளியேற. அவளை போற்றி பாதுகாக்க பெற்றோரும்… உடன் பிறந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவளால் போக முடியாது. காரணம் ஆதிரா…
அந்த குட்டிக் தேவதையின் அழுகையும் ஏக்கமும் மதுராவின் மனதை வதைத்தது. எதற்கெடுத்தாலும் அடம் செய்து ஆர்ப்பாட்டம் பண்ணி அடிவாங்கிக்கொள்ளும் ஆதிராவின் மனதில் இருக்கும் சோகத்தை தனதாக உணர்ந்தாள் மதுரா. துருவன் கோபம் தணிந்து மனைவியை ஏற்றுக் கொண்டால் தான் அந்த குழந்தையின் முகத்தில் சிரிப்பை காண முடியும். இங்கு பிரச்சனை என்று மதுரா மூட்டையை கட்டிவிட்டால் துருவன் இன்னும் உச்சானிக் கொம்பில் சென்று அமர்ந்துகொள்வான். அவனுடைய குடும்பம் சிதறிவிடும். அந்த பாவத்தை அவள் செய்யலாமா? – மனதை கல்லாக்கிக் கொண்டாள்.
மாயாவின் மீது அவளுக்கு தீராத கோபம் இருக்கத்தான் செய்தது. அந்த கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தாயிடம் அவளுக்கு ஆதரவாக பேசினாள். ஆதிராவின் மனநிலையை விலக்கினாள். நடந்த பிரச்சனைக்கெல்லாம் மூலக்காரணம் தேவராஜ் தான் என்பதை எடுத்துக் கூறி துருவனை சமாதானம் செய்யும்படி கேட்டுக்கொண்டாள்.
தேவ்ராஜ் சொல்லித்தான் மாயா அந்த காரியத்தை செய்தால் என்று தெரிந்ததும் மருமகன் என்கிற பாசமே அற்றுப் போய்விட்டது பிரபாவதிக்கு. பெண்ணை கொடுத்துவிட்டோம் என்று அமைதியாக இருந்தாளே ஒழிய, அவன் மீது எல்லையில்லா வெறுப்பு அவள் மனதில் மண்டியது.
மருமகள் மீது கோபம்தான்… ஆனால் பேத்தி ஏங்குகிறாள் என்று தெரிந்தால் மனம் கேட்குமா? பிரபாவதியின் மனம் தாளவில்லை. மகனிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றாள். அதோடு எய்தவனிருக்க அம்பை குற்றம் சொல்லி என்ன செய்வது என்று எடுத்துக் கூறினாள்.
இராஜேஸ்வரியின் உடல்நிலை குன்றிவிட்டதை அறிந்த நரேந்திரமூர்த்தி பதறிக் கொண்டு தங்கையை பார்க்க ஓடிவந்தார். அப்போது அண்ணனும் தங்கையும் ஒன்று கூடி பேசி, மாயாவை துருவனோடு சேர்த்து வைத்துவிட வேண்டும் என்கிற முடிவை எடுத்தார்கள். அதன்படி நரேந்திரமூர்த்தியும் மகனிடம் சமாதானம் பேசினார்.
“இந்த சமாச்சாரமெல்லாம் எனக்கு முன்னாடியே தெரியும் ப்பா… இதையெல்லாம் பெருசாக்கக் கூடாது. நம்ம வீட்டுக்குள்ள இருக்க வேண்டிய பிரச்னையை நாமளே தெருவுக்கு கொண்டு வர கூடாது. அதோட இதுக்கெல்லாம் காரணம் தேவ் தானாம். இப்போ மதுராவும் தேவும் ஒண்ணா வாழாமலா போய்ட்டாங்க? நீ எதுக்குடா இவ்வளவு ரியாக்ட் பண்ணற?” என்று மகனுக்கு அறிவுரை கூறினார்.
யார் சொல்லியும் துருவன் கேட்கவில்லை. “தேவ்ராஜ் சொல்லுவான்… இவளுக்கு எங்க போச்சு அறிவு?” என்று குறையா கோபத்துடன் எதிர்வாதம் பேசினான்.
என்னதான் பேசினாலும் குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற ஆசை அவனுக்கும் இருந்தது. எனவே தந்தையிடம் சொல்லி குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு வர சொன்னான். விடுவானா தேவ்ராஜ்!
‘குழந்தையை பார்க்கணும்னா அவன் இங்க வரணும்” என்றான் பிடிவாதமாக.
இராஜேஸ்வரி எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தாள். நரேந்திரமூர்த்தியும் எடுத்துக் கூறினார். செவிடன் காதில் ஊதிய சங்கு போல அவன் எதையுமே எடுத்துக் கொள்ளவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதமாகக் கூறி அவரை திருப்பி அனுப்பிவிட்டான். எந்த பிரச்சனையும் முடிவுக்கு வராமல் ஒரு வாரம் கழிந்துவிட்டது.
நாட்கள் செல்லச் செல்ல மாயாவிற்குள் பயம் தலை தூக்கியது. குழந்தை மெல்லமெல்ல இந்த வீட்டு சூழ்நிலைக்கு பழகிக்கொள்ள ஆரம்பித்தாள். தந்தையை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் அவளுடைய அடம் வெகுவாய் குறைந்துவிட்டது. பெரியவர்களின் பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்துவிட்டது. இனி அவர்களை ஒன்று சேர்க்கும் காரணி எது? அவளுக்கு புரியவில்லை. தேவ்ராஜின் பிடிவாதமும் துருவனின் கோபமும் தன்னுடைய வாழ்க்கை அழித்துவிடுமோ என்கிற பயம் அவளுடைய நிம்மதியை குலைத்தது.
அன்று மாலை ஒரு ஐந்து மணியிருக்கும். யாருக்கும் கட்டுப்படாத தமையனை தானே நேரில் சந்தித்துப் பேசி சமாதானம் செய்யலாம் என்று எண்ணி தாய் வீட்டுக்கு வந்திருந்தாள் மதுரா. துருவன் அலுவலகத்திலிருந்து வரும் வரை காத்திருந்து, மாணிக் கணக்காகப் பேசி அவனை கரைத்தாள். தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்… சின்ன விஷயத்தை பெரிதாக்காதே… குழந்தையைப் பார் என்று பலவிதமாகப் பேசி அவன் மனதை இளக செய்துவிட்டு வீட்டிற்கு வந்த போது, அவளை கொத்திக் குடிக்கக் காத்திருந்தான் தேவ்ராஜ்.
மதுராவின் மீது கோபமாக இருந்தாலும்… அவளை அவமதித்தாலும்… புறக்கணித்தாலும்… அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது, அவள் உர்ரென்று தூக்கி வைத்திருக்கும் முகத்தையாவது பார்த்தாக வேண்டும் தேவ்ராஜுக்கு. இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும். அன்றும் அப்படித்தான் பைத்தியம் பிடித்துப் போய் சுற்றிக் கொண்டிருந்தான். சாதாரணமாக அங்கும் இங்கும் போவது போல் வீட்டை பத்து முறை சுற்றி வந்துவிட்டான். ஆளையே காணவில்லை. பிறகு தோட்டத்தில் நடை பழகுவது போல் நைசாக கேரேஜில் எட்டிப் பார்த்தான். அவளுடைய கார் இல்லை. ‘எங்கே சென்றிருப்பாள்!’ – சிந்தனை மேலிட்டது. போன் செய்து கேட்கவும் ஈகோ இடம் கொடுக்கவில்லை. செக்யூரிட்டியிடம் பேச்சுக்கு கொடுத்து, சாதாரணமாக கேட்பது போல் எத்தனை மணிக்கு வெளியே போனாள் என்று கேட்டு தெரிந்துக் கொண்டான். பிறகு தாயிடம் வந்து உடல் நலத்தையெல்லாம் விசாரித்துவிட்டு, “எங்க அவ?” என்று அலட்சியமாக கேட்பது போல் கேட்டான்.
“யாரை கேட்கற?” – இராஜேஸ்வரிக்கு புரியவில்லை.
“மதுரா…”
“மதுராவா! வீட்ல இல்ல?”
“இல்லையே. உங்ககிட்ட எதுவும் சொல்லிட்டு போகலையா?”
“இல்லையப்பா… போன் பண்ணி பாரேன்…”
“ஆங்… கேட்டுக்கறேன்… நீங்க ரெஸ்ட் எடுங்க” – தாயின் அறையிலிருந்து நழுவி வந்து ஹாலில் அமர்ந்தான். டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதிராவை கொஞ்சுவதற்குக் கூட மனமில்லை. மாடிக்கு வந்து கணினியை உயிர்ப்பித்து அவனுடைய ஷேர்ஸை கண்காணித்தான். அதில் மூழ்கிய பிறகு அவனுக்கு நேரம் சற்று இலகுவாக கழிந்தது. கதவு திறக்கும் ஓசைகேட்டது. சட்டென்று அவனுடைய விரல்கள் வேலை நிறுத்தம் செய்தன. அவள்தான்… நிமிர்ந்து பார்க்காமலேயே அவனால் உணர முடிந்தது. மணியை பார்த்தான். எட்டு முப்பது என்று காட்டியது கணினி. கோபம் பொங்கியது… வாய் துடித்தது. அவள் ஏதாவது சொல்கிறாளா என்று பார்க்க வேண்டும் என்று அமைதியாக இருந்தான். அவள் இவனை கண்டுகொள்ளவே இல்லை. மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைத்தாள். சட்டென்று கணினியை மூடிவிட்டு, மூடியிருந்த குளியலறை கதவை வெறித்துப் பார்த்தான்.
வெகு நேரம் கழித்து வெளியே வந்த மதுரா, வழக்கம் போல ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு அவனிடமிருந்து விலகிப் போனாள். அவனுடைய எரிச்சல் எல்லை மீறியது. “உன் இஷ்டத்துக்கு வர்றதுக்கும் போறதுக்கும் இது மடம் இல்ல… வீடு…” – சீற்றத்துடன் வெளிப்பட்ட குரலில், நின்று அவனை திரும்பிப் பார்த்தாள். அவள் முகத்தில் தெரிந்த சோர்வும் களைப்பும் அவன் புருவ மத்தியில் முடிச்சிடச் செய்தது.
“என்ன வேணும்?” – உள்ளடங்கிய குரலில் கேட்டாள்.
“எங்க போயிட்டு வர்ற?” – சற்று இளகியது அவன் குரல்.
சற்று நேரம் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மதுரா பதட்டமில்லாமல் மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக, “நிச்சயமா கிஷோரை பார்க்க போகல…” என்றாள். அவ்வளவுதான்… இடி விழுந்தால் எப்படி இருக்கும்… அப்படி இருந்தது தேவ்ராஜுக்கு.
‘என்ன தைரியம்!’ – உஸு… புஸு… என்று வெப்ப பெருமூச்சை வெளியேற்றியபடி உக்கிரமாக அவளை பார்த்தான்.
“வேற என்ன?” – இலகுவாக கேட்டாள்.
“எங்க… போனேன்னு… கேட்டேன்…” – பற்கள் நறநறக்க ஒவ்வொரு வார்த்தையையும் கடித்துத் துப்பினான்.
“சொன்னனே” – ஒடிந்து விழுவது போல் நின்றுக் கொண்டு குரலில் அவள் கொடுத்த அழுத்தம் அவனை மலைக்க வைத்தது. இதற்கு மேல் ஏதாவது கேட்டால் நிச்சயம் ஏறுக்கு மாறாகத்தான் பதில் சொல்வாள்… நமக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஏற்கனவே பஞ்சத்தில் அடிபட்டவள் போல் நின்றுக் கொண்டிருக்கிறாள். விட்டுத் தொலைக்க வேண்டியதுதான்… என்று நினைத்து போனை எடுத்துக் கொண்டு அறையிலிருந்து வெளியேறினான்.
13 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sow Dharani says:
டேய் தேவ் நல்லவனே கொஞ்சம் மதுராவுக்கும் ஒரு மனசு இருக்கு அப்படினு யோசி….உன் வீடு உன் பிரோப்ளேம் அப்படினி குதிரை க்கு கடிவாளம் கட்டின மாதிரி இருந்தா எப்படி……. தப்பான கண்ணோட்டத்தில் தான் மதுராவை எல்லரும் பாக்குறீங்க…..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
super ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
seline seline says:
wow super nice ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
தேவ்விற்கு அம்மா தெரிகின்றார் ,தன் சகோதரிமார்கள் தெரிகின்றனர், ஏன் குட்டிப்பெண் ஆதிரா கூட தெரிகின்றார்,ஆனால் மதுரா மட்டும் தெரியவில்லை ,இவள் எங்கே போய்விடுவாள் என்ற அலட்சியம்,தேவ் மதுரா மென்மையான பெண்தான் ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் பார்த்து இருங்க,இந்த சகோதர்ர்கள் மூவரும் எதில் ஒற்றுமை இருக்கோ இல்லையோ தங்களின் பிழையை அடுத்தவன் தலையில் கட்டுவதில் நல்ல ஒற்றுமை,என்ன அதியசமாய் துர்வாசர் இன்று புத்தபகவான் அவதாரம் எடுத்துவிட்டார்.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepa I says:
Madhura attam arambam👏👏👏👏
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Well done madhura….ippadi pesu avankitta appadhaan avan thimir adangum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Suganya Samidoss says:
நல்ல முன்னேற்றம் மதுராவிடம். ஆனால் தேவ்கிட்ட மதுரா மேல இருக்கும் அலட்சியம் இன்றைக்கு தெளிவாக சொல்லியிருக்காங்க. தேவராஜின் அலட்சியத்திற்கு மதுராவின் பதில் நடவடிக்கை பத்தாது. We need more.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Good மது. அப்பா தேவா மதுராவ புரிந்து நடந்துக்கொள்ளப்பா
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ambika V says:
Super madhu super
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
முதுகெலும்பு பதில். வெல்டன் மது
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sriranjana Niranjan says:
பதிவு அருமை…. மதுவிடம் மாற்றம் வருகிறதோ..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kani Ramesh says:
Sshhh pa mudiyala dev madhu epo than normal life ku varuvanga…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma Deepak says:
Hmm.. intha dev paiyanukku nalla venum.. madhura ithai nee munname seithu irukalaam..
Ini thuruvan maaya sernthaalum , maaya vaal nimmathiya irukka mudiyuma ..
Yaar madhura vai purinthu kolla villai endraalum , dev avalai purinthu kondu irukka vendum..
Intha idathil dev yai ninaiththaal , vandi vandiyaaga kobam varukirathu