Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 75

அத்தியாயம் – 75

தேவ்ராஜ் பரவலாக பல நிறுவனங்களில் ஷேர்ஸ் வைத்திருந்தான். அதில் ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்துகொள்வதற்கு மதுராவை அழைத்தான். அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அதை வைத்து இன்னொரு பிரச்சனை உருவாக வேண்டாம் என்று எண்ணி அவனோடு சேர்ந்து புறப்பட்டாள். பார்ட்டி ஹாலில் குடிகொண்டிருந்த சனி, டப்பாங்குத்து டான்ஸ் ஆடி அவளை உள்ளே வரவேற்றது என்று கூறினால் அது மிகையாகாது. காரணம் உள்ளே கிஷோர் இருந்தான். அவனை பார்த்த மாத்திரத்திலேயே உயிரில் பாதி ஒடுங்கிவிட்டது அவளுக்கு. அழுத்தமான காலடிகளுடன் காலடிகளுடன் தன்னோடு சேர்ந்து நடக்கும் இரும்பு மனிதனை திரும்பிப் பார்க்கவே பயமாக இருந்தது. ஆம் பயமாகத்தான் இருந்தது… ‘மரத்துப்போன உணர்வுகள்… கல்லான மனம்…’ இதெல்லாம் எத்தனை பெரிய பொய் என்பதை அப்போதுதான் அவளே உணர்ந்தாள்.

 

தேவ்ராஜ் வெகு இயல்பாக இருந்தான். அவன் கிஷோரை பார்க்கவே இல்லை என்று தோன்றியது அவளுக்கு. அதற்கு வாய்ப்பும் இல்லை… காரணம் அது ஒன்றும் அவ்வளவு பெரிய ஹால் இல்லை… யார் யார் உள்ளே இருக்கிறார்கள் என்று தெரியாமல் போவதற்கு. அப்படியானால் அவனை மறந்துவிட்டானா. அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடியவனும் அல்ல… அதிலும் கிஷோரை நிச்சயம் மறந்திருக்க மாட்டான். அப்படியென்றால் அவளை சோதிக்கத்தான் இங்கே அழைத்து வந்தானா! – மதுராவின் மனம் எரிந்தது.

 

உண்மையில் கிஷோரை அங்கு பார்த்தது தேவ்ராஜுக்கும் அதிர்ச்சிதான். அவன் இங்கு இருப்பான் என்று தெரிந்திருந்தால் இந்த திசை பக்கம் கூட மதுராவை தலைவைத்துப் படுக்க அனுமதித்திருக்க மாட்டான். அப்படி இருக்க அவனே அவளை இங்கு அழைத்துக் கொண்டு வருவதா! முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டிக்கொள்ளாமல் அனைவரோடும் பேசிக் கொண்டிருந்தான். பேச்சோடு பேச்சாக கிஷோரைப் பற்றியும் விசாரிக்கத் தவறவில்லை அவன். எந்த நிறுவனம் அந்த பார்ட்டியை அரேஞ் செய்திருந்ததோ அந்த நிறுவனத்தில் ஒரு முக்கியமான ஆடிட்டர் என்பதை தெரிந்துக் கொண்டான். மதுராவிற்கு வயிறு கலங்கியது. இதையெல்லாம் எதற்காக விசாரிக்கிறான் என்று அஞ்சினாள்.

 

கையில் ட்ரேயுடன் சுற்றிக் கொண்டிருந்த சீருடையணிந்த பணியாளன் அவர்களை உபசரித்த போது, தேவ்ராஜ் மதுக்கோப்பையை தேர்ந்தெடுத்தான். கண்ணெதிரில் கிஷோர்… கையில் மதுக்கோப்பை… பக்கத்தில் மதுரா… சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். கரும்பித்தம் பிடித்தவன்… மது ஏறினாள் மனிதனாகவே இருக்கமாட்டான். மதுராவின் மூளை எச்சரித்தது. அவன் முதல் கோப்பையை முடித்துவிட்டு அடுத்த கோப்பையை எடுத்த போது, “போதும்….” – என்று அவன் காதோரம் மெல்ல முணுமுணுத்தாள்.

 

“என்ன போதும்?” – அவனுக்கு புரியவில்லை. அவளுடைய பார்வை அவன் கையிலிருக்கும் கோப்பையில் பதிந்தது. இப்போது அவனுக்கு நன்றாகக் புரிந்தது.

 

“ஏன்?” – சிறு எரிச்சல் தெறிந்தது அவன் முகத்தில். வீம்பாக பேசி வம்பை இழுத்துக்கொள்ள அவள் தயாராக இல்லை… “ப்ளீஸ்…” – பணிந்துப் போனாள். அவள் கண்களில் தெரிந்த கலவரத்தை கவனித்தவன், எடுத்த கோப்பையை திருப்பி வைத்துவிட்டான்.

 

பார்ட்டியில் சமத்துப்பிள்ளையாக அவள் சொல்வதைக் கேட்டவன் வீட்டுக்கு வந்து தன் வேலையைக் காட்டினான். பிரிட்ஜில் ஸ்டார்க் வைத்திருந்த சரக்கை தாராளமாக குடித்து முடித்தவன் மதுராவிடம் வம்பிழுத்தான்.

 

கிஷோரின் கண்கள் சரியில்லையாம்… அவனுடைய பார்வை தவறானதாம்… அவனை மும்பையில் விட்டு வைத்திருப்பதே குற்றமாம்… அதுமட்டும் அல்ல… அவளுக்கு கட்டிய கணவன் மீது அக்கறையில்லையாம். அந்த கிஷோரைப் பற்றித்தான் கவலையாம்… அதனால்தான் அவனை பாதுகாப்பதற்காக இவனை மது அருந்த வேண்டாம் என்று தடுத்தாளாம். “நீ தடுத்தால் விட்டுவிடுவேனா! அவனை என்ன செய்கிறேன் பார்…” என்று சவால் விட்டான்.

 

***********************

 

வெளியில் வீம்பாக பேசினாலும் தனிமையில் நிறைய அழுதாள் மாயா. துருவனின் கோபத்தில் நியாயம் இருப்பதை அவள் உள் மனம் மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தது. அவள் செய்த அதே காரியத்தை அவன் பாரதிக்கு செய்திருந்தால் அவளும் கொந்தளிக்கத்தான் செய்திருப்பாள். என்ன ஒன்று… அனைவருக்கும் முன்பாக அசிங்கப்படுத்திவிட்டான். அதைத்தான் அவளால் தாங்க முடியவில்லை.

 

“ம்மி… ம்மி… டாடிட்ட எப்ப போவோம்?” – சோகமாக அமர்ந்திருக்கும் தாயின் துப்பட்டாவை பிடித்து இழுத்து பாவமாகக் கேட்டாள் ஆதிரா. முன்பெல்லாம் அழுது அடம்பிடிப்பவள் இப்போது இப்படி அமைதியாக கேட்கத் துவங்கியிருந்தாள்.

 

அந்த குழந்தையின் ஏக்கத்திற்கு சற்றும் குறையாத ஏக்கம் அவள் மனத்திலும் இருந்தது. “டாடிகிட்ட பேசுறியா?” என்றாள்.

 

“ஆங்… பேசுறேன்…” – கண்களை விரித்து வேகமாக தலையை ஆட்டினாள்.

 

நடுங்கும் விரல்களோடு கணவனின் அலைபேசி எண்ணை அழுத்திவிட்டு குழந்தையிடம் கொடுத்தாள். முழுவதுமாக ரிங் சென்று ஓய்ந்தது. அவன் எடுக்கவில்லை. ‘முற்றிலும் வெறுத்துவிட்டானா!’ – மாயாவின் மனம் வேதனைக் கொண்டது. கன்னங்களில் வழியும் கண்ணீரை துடைக்கக் கூடாது தோன்றவில்லை அவளுக்கு.

 

“அழாத ம்மி… நீயும் நானும் டாடிகிட்ட ஓடிடுவோம்… வா…” – கையை பிடித்து இழுத்தது.

 

“இல்லடா… நாம ஓடல்லாம் வேண்டாம். டாடியே வந்து நம்மள கூட்டிட்டு போவாங்க. இப்போ நீ டாடிக்கு வாய்ஸ் மெசேஜ் பண்ணுறியா?”

 

“ம்ம்ம்ம்” – தலையை ஆட்டினாள்.

 

ரெக்காடிங் பட்டனை அழுத்திக் கொண்டு, “ம்ம்ம்… பேசு…” என்றாள்.

 

“டாடி… டாடி… ஹலோ… ம்மி டாடி பேசல…” – மறுபக்கத்தில் தந்தையின் குரல் கேட்கவில்லை என்றதும் குழம்பிய குழந்தை பேச தடுமாறினாள். மாயா கையால் சைகைக் காட்டி ‘பேசு பேசு’ என்றாள். குழந்தை தொடர்ந்தது… “மிஸ் யூ டாடி… என்கிட்ட வாங்க டாடி… ஹார்ஸ் வெளாடலாம்… பிஷ் வெளாடலாம்… ஜாலியா இருக்கும்… பை டாடி…. ம்ம்ம் பேசிட்டேன்…” – ஒற்றை கிளிக்கில் குழந்தையின் குரல் தந்தையின் அலைபேசிக்கு சென்று சேர்ந்தது.

 

வலியா இன்பமா என்று புரியாத ஓர் ஊடல் உணர்வு துருவனின் மனதை ஆக்கிரமித்திருந்தது. கண்களில் நிறைந்த கண்ணீரோடு மகளின் குரலை பத்து முறை கேட்டான். ஆவல் அடங்கவில்லை … மீண்டும் மீண்டும் கேட்டான். நூறு முறை கேட்டான்… அதைவிட அதிகமாக ஒருமுறை, “ம்ம்ம்… பேசு” என்ற மனைவியின் குரலை கேட்டான்.

 

உள்ளே வலித்தது. அவள் செய்த தவறு ஒரு பக்கம் வலித்தது… அவளை அடித்துத் துரத்தியது இன்னொரு பக்கம் வலித்தது. உணர்வுகள் சமன்படும்வரை அமைதியாக அமர்ந்திருந்தவர் பிறகு அலைபேசியை எடுத்து மனைவியின் எண்ணை அழுத்தினான். சற்று நிறத்தில் ஆதிராவின் குரல் கேட்டது. ஆசை தீரும்வரை அவளோடு பேசினான். அழைப்பை துண்டிக்கும் நேரத்தில் மனைவியை பற்றி கேட்க வேண்டும் போல் மனம் துடித்தது. ஆனால அவன் கேட்கவில்லை.

 

அன்று இரவு ஒரு பொட்டு தூக்கமில்லை துருவனுக்கு. மனைவியோடும் மகளோடும் கொஞ்சி… குழைந்து… உருண்டு புரண்ட மெத்தை இன்று முள்ளாய் குத்தியது. ஆதிராவின் மணிமணியான பேச்சு அவன் செவியில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. மகளோடு பேசும் போது மனைவியின் குரலை ஒருமுறையாவது பின்னணியில் கேட்டுவிடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தவன் ஏமாற்றத்துடன் அழைப்பை துண்டித்தான்.

 

**********************

 

திடீரென்று ஒருநாள் மதுராவின் அலைபேசிக்கு அழைத்த சோனியா கதறிக் கதறி அழுதாள். பயந்து போன மதுரா, “சோனி! ஏய்… என்ன… என்னன்னு சொல்லு… என்னடி ஆச்சு?” என்று பதறினாள்.

 

அவளால் பேசவே முடியவில்லை. பிறகு அவளுடைய அலைபேசியில் வேறு ஒரு குரல் கேட்டது. “ஏம்மா… என்னதாம்மா உம்புருஷனுக்கு வேணும்? நாங்கபாட்டுக்கும் நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு இருக்கோம். எங்க மருமகனை இப்படி சிக்கல்ல இழுத்துவிட்டுட்டாரே உம்புருஷன்… நியாயமா இதெல்லாம்? உங்களுக்கு புடிக்கலன்னா…. அபாண்டமான பழி சொமத்தி பொய் கேஸுல உள்ள பிடிச்சு குடுத்துடுவீங்களா?” – ஆங்காரமாகப் பேசினாள் சோனியாவின் தாய்.

 

தேவ்ராஜ் தன்னுடைய பழி உணர்ச்சிக்கு தீனி போட்டுக் கொண்டான் என்று புரிந்தது கொண்ட மதுரா மிகவும் வேதனைக்கு ஆளானாள். “அம்மா… என்ன நடந்தது? கிஷோருக்கு என்ன ஆச்சு? ப்ளீஸ் கொஞ்சம் க்ளீயரா சொல்லுங்க” – இவள் நிதானமாகக் கேட்க அந்த அம்மாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. “நிதானமா சொல்லனுமா? உன் வீட்ல இப்படியொரு அநியாயம் நடனதா நீ நிதானமாத்தான் இருப்பியா? அமைதியா இருங்க பொறுமையா இருங்கன்னு ஈஸியா சொல்ற! ஒரு தப்பும் பண்ணாம உள்ள இருக்கது எங்க மருமகன். நீ அமைதியாவும் பொறுமையாவும் இருப்ப… நாங்க எப்படி இருக்கறது?” என்று மதுராவை பிடித்து ஏறு ஏறு என்று ஏறிவிட்டாள்.

 

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அலைபேசியை பிடிங்கி சோனியா பேசினாள். “மதுரா… உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன். உங்களோட விளையாட்டை எங்க வாழ்க்கையில விளையாடாதீங்க. அவர் ஒரு பாவமும் அறியாதவர். அவரை போயி இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே! தயவு செஞ்சு அவரை வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்யி. இல்ல… சத்தியமா சொல்றேன்… நா உயிரோடவே இருக்க மாட்டேன். என்னோட பாவம் உன் பரம்பரையையே சும்மா விடாது சொல்லிட்டேன்…” – வயிறெரிந்து கண்ணீரும் கம்பலையுமாக அவள் விடும் சாபம் மதுராவை உலுக்கியது.

 

“சோனி… அவசரப்படாத… எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்… கிஷோருக்கு ஒண்ணும் ஆகாது. ப்ளீஸ் நீ கொஞ்சம் பொறுமையா இரு சோனி… நா… நா தேவ்கிட்ட… தேவ்கிட்ட… கேட்கறேன். எப்படியாவது… சரி பண்ணிடலாம்…” – பதட்டத்தில் நடுங்கியது அவள் குரல். தன்னால் ஒரு உயிர் போய்விடுமோ என்கிற பயத்தில் இதயம் தாறுமாறாக துடித்தது.

 

தோழியிடம் சமாதானம் சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டு உடனே கணவனுக்கு தொடர்புகொண்டாள். அழைப்பை ஏற்ற ரஹீம், “சார் மீட்டிங்ல இருக்காங்க மேம்” என்றான்.

 

அவளுக்கு காத்திருக்கும் பொறுமையில்லை. சோனியாவின் அழுகையும் ஆவேசமும் அச்சுறுத்த உடனடியாக கார் சாவியை எடுத்தாள். அரைமணி நேர பயணத்தை பதினைந்து நிமிடமாக சுருக்கி அவள் தேவ்ராஜின் அலுவலகத்தை அடைந்த போது முகம் கலவரத்தை பூசி கொண்டிருக்க… உடல் வியர்வையில் குளித்திருந்தது.

 

ரஹீம் சொன்னது போலவே அவன் மீட்டிங்கில் தான் இருந்தான். ஆனால் அந்த மதித்து காத்திருக்கும் பொறுமை அவளுக்கு இல்லை. ரஹீமை வற்புறுத்தி அவனிடம் தான் வந்திருப்பதை தெரிவிக்கும் படி கூறினாள். அவளுடைய பதட்டத்தை கண்கூடாகப் பார்த்த ரஹீம் ஏதோ சீரியஸான விஷயம் என்று புரிந்துக் கொண்டு சந்திப்பு அறைக்குள் நுழைந்தான்.

 

இடையூருக்கு மன்னிப்பை வேண்டியபடி தேவ்ராஜிடம் நெருங்கிய ரஹீம் அவன் காதில் விஷயத்தை முணுமுணுக்க, “எக்ஸ்கியூஸ் மீ” என்றபடி சட்டென்று எழுந்தான் தேவ்ராஜ்.

 

 




12 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vinayagam Subramani says:

    அழகான கதை வடிவம்.. மதுராவின் பேச்சில் உள்ள நியாயம்..தேவ்வின் காதல்…..எல்லாமே மிக அழகு…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sindu R says:

    Doesn’t he trust Madhura??

    Releationshipla santhegaputhi vazhkkaiyai azhichidum
    Madhura better divorce him that will give you peace


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Bharathi Viswanathan says:

    Why mathura is still keeping quiet. When will she announce her pregnancy. This good news may change Dev’s attitude.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    அடேய் தேவ் ஏன்டா இப்படி பன்னிற பாவம் மதுப் பொண்ணு


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sriranjana Niranjan says:

    Interesting chapter….eagerly awaiting to see dev’s reaction….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    இப்போ சரியாக விசுவாமித்ரர் மதுரா சொல்லவந்ததை மிகச்சரியாக புரிந்துகொள்ளாமல் ருத்ரதாண்டவம் ஆடுவார் பாருங்கள்.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Adei unaku confirm ah pei kei pidichiruku😡


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    super update, eaerly waiting for your next ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Nice epi sis.. madhu pavam bt dev character ithu its ovr possesive rendu perum inum manasa vitu pesikala athan ipadi aguthu so sikaram avanga life sari panidunga sis… deva romba kastapaduthudathinga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Ohh my God! Inda Dev thirundave matana….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    அடுத்த எபிசோட்ல இருந்து மாற்றம்னு சொல்லிருக்கீங்க கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. ஆனால் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் 75 எபிசோடாக தேவ் ரொம்பவே ஆடிட்டான் குறைந்தது ஒரு 20 எபிசோடாவது அவன் உடைஞ்சு போய் என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கவிடுங்க. அப்பதான் எங்க மனசும் ஆறும்.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    ஹாய் ஃபிரண்ட்ஸ்,
    கதை தொடர்ந்து படிச்சு கமெண்ட்ஸ்ல தேவ்ராஜையும் என்னையும் திட்டற அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி… இந்த எபிசோடுலேயும் பிரச்சனை தான்… கதையை கிளைமாக்ஸை நோக்கி நகர்த்தறதுக்கு இந்த பிரச்சனை மிகவும் அவசியமாகிறது. மதுரா பயந்த மென்மையான பெண். சட்டென்று அவள் பொங்குவது போல் காட்டினால் கேரக்டர் கதையோடு ஒட்டாது. அவளுடைய மாற்றம் இயல்பாக இருக்க வேண்டும். அடுத்த பகுதியிலிருந்து மாற்றத்தை காணலாம்…

    நன்றி…

    நட்புடன்,
    நித்யா கார்த்திகன்.

You cannot copy content of this page