Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 68

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 76

அத்தியாயம் – 76

தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருப்பவன் என்றாவது ஒருநாள் செய்யாத தவறுக்கு மாட்டிக்கொள்வான். அப்படித்தான் இன்று தேவ்ராஜும் மதுராவிடம் மாட்டிக் கொண்டு விழித்தான். வியர்வையும் பதட்டமுமாக அலங்க மலங்க தன் முன் வந்து நிற்கும் மனைவியை கண்டு திகைத்த தேவ்ராஜ், “ஹே… என்ன ஆச்சு! எனிதிங் சீரியஸ்?” என்றான்.

 

மேல்மூச்சு வாங்க அவன் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த மதுரா, “கிஷோரை வெளியே கொண்டுவாங்க” என்றாள்.

 

“கிஷோரை… வெளியே கொண்டுவரணுமா! எங்கிருந்து?” – உண்மையில் அவனுக்கு புரியவில்லை.

 

வழக்கமாக அவன் கண்களில் இருக்கும் கனல் இப்போது மதுராவின் கண்களுக்கு இடம்மாறியது. அவளுடைய உக்கிர பார்வையைக் கண்டு புருவம் சுருக்கியவன், “வா…ட்?” என்று இழுத்தான்.

 

“ஹௌ க்ரூயல் யூ ஆர்!” – முகம் சுளித்தாள். சட்டென்று கடுமை பரவியது அவன் முகத்தில். “வாட் யூ மீன்?”

 

“இதுவரைக்கும் செஞ்ச பாவமே போதும். இதோட நிறுத்திக்கோங்க… இனி வேண்டாம்…”

 

“ப்ச்…” – மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான். “முக்கியமான மீட்டிங்கிலேருந்து வந்திருக்கேன். சொல்லவந்த விஷயத்தை க்ளீயரா சொல்லு. இல்லன்னா வீட்டுக்கு கிளம்பு” – அழுத்தமாக ஒலித்தது அவனுடைய கண்டிக்கும் குரல்.

 

“உங்களை சுத்தி நடக்கறது எல்லாமே நீங்க நினைக்கற மாதிரி நடக்கணும். இல்லன்னா இப்படித்தான்… இராட்சஸன் மாதிரி நடந்துக்குவீங்க. கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லையா? இதமாதிரி எத்தனை குடும்பத்தை அழிச்சிருக்கீங்க? எத்தனை பேரை காவு வாங்கியிருக்கீங்க? இந்த வெறி அடங்காதா?” –

 

“வெயிட்…”

 

“யாரோட அழிவுல அடங்கும்?”

 

“வெ…யி…ட்…”

 

“நா அழியணுமா?”

 

“என்ன பேசுற நீ?”

 

“என்னோட அழிவுலதான் உங்க வெறி அடங்குமா”

 

“குட் யூ ப்ளீ….ஸ்… ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்?” – உச்சஸ்தாதியில் உயர்ந்த அவன் குரலில் தடைபட்டது அவளுடைய படபடத்த பேச்சு. கண்களில் தொடுக்கி நின்ற கண்ணீர் மணிகள் ஒருமுறை சிமிட்டினால் கணங்களில் உருண்டுவிடும் நிலையில் இருந்தது. ஓரிரு நிமிடங்கள் அவளை முறைத்துப் பார்த்தவன், “பிரச்சனையை மட்டும் சொல்லு” என்றான்.

 

அவள் முகத்தில் ஒரு கசந்த புன்னகை தோன்றியது. “புரியாதவங்களுக்கு விளக்கம் கொடுக்கலாம்… புதிரியாதது மாதிரி நடிக்கிறவங்களுக்கு எப்படி விளக்கம் கொடுக்கறது?” – வறண்ட குரலில் கேட்டாள்.

 

“காட்…!” – தலையை அழுந்தக் கோதி… ஆழ மூச்செடுத்து… சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “நிஜமாவே நீ என்ன சொல்றேன்னு எனக்கு புரியல மதுரா. என்ன தான் ஆச்சு அவனுக்கு? வெளியே கொண்டுவா…. வெளியே கொண்டுவான்னா… அவன் என்ன ஜெயில்லையா இருக்கான் வெளியே கொண்டு வர்றதுக்கு?” என்றான் கடுப்பாக. அதுதான் உண்மை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

 

“ஏன்? கேஸை ஜோடிச்ச உங்களுக்கு தெரியாதா… அரெஸ்ட் ஆயிட்டானா இல்லையான்னு?”

 

“என்ன!” என்று அதிர்ந்தவன் பிறகு, “அரஸ்ட்டா!” என்று வியந்து… உடனே, “ஏய்… என்ன? அவனை நாந்தான் உள்ள அனுப்பினேன்னு சொல்றியா?” என்றான் அதட்டலாக.

 

“அதுல என்ன சந்தேகம்? நேத்து சொன்னீங்க… அதை இன்னைக்கு செஞ்சுட்டீங்க”

 

“அது நா ஏதோ கோவத்துல… ஒரு டென்ஷன்ல பேசினது. அதை பெருசா எடுத்துக்கிட்டு என்னோட நேரத்தை வீணாக்கிகிட்டு இருக்க! அவன் என்ன பண்ணிட்டு உள்ள போனானோ… எனக்கு என்ன தெரியும்? நீ முதல்ல வீட்டுக்கு கிளம்பு…” என்று கடுப்படித்தான். அலுவலகம் என்பதால் இந்த பொறுமை… இதுவே வீடாக இருந்திருந்தால் நடப்பதே வேறு. அவன் ஏதாவது பிராடுத்தனம் செய்துவிட்டு உள்ளே போவானாம்.. அவனை இவன் போய் காப்பாற்ற வேண்டுமாம். இன்னொரு முறை அவன் பெயரை சொல்லட்டும்… – பற்களை நறநறத்தான்.

 

“வேண்டாம் தேவ்… நீங்க எத்தனையோ தப்பு பண்ணியிருக்கீங்க. எல்லா தப்புக்கும் உங்க பக்கத்துலேருந்து ஏதாவது ஒரு நியாயத்தை உங்களால சொல்ல முடியும். ஆனா இந்த தப்புக்கு உங்ககிட்ட எந்த நியாயமும் இல்ல… சோனி பாவம்… இப்போதான் கல்யாணம் ஆயிருக்கு. அவ சந்தோஷமா இருக்கவேண்டிய பீரியட் இது. அதை நீங்க நரமாக்கிக்கிட்டு இருக்கிறீங்க. அவங்கள விட்டுடுங்க… உங்களை கெஞ்சிக் கேட்டகன்றேன்… ப்ளீஸ்…” – அவள் பேசப் பேச அவன் முகம் இறுகி பயங்கரமாக மாறியது.

 

“ஒருத்தரோட வாழ்க்கையில் விளையாடறது பெரிய பாவம் தேவ்… அந்த பாவத்தை நீங்க செய்யாதீங்க. அந்த கிஷோர் என்ன தப்பு பண்ணீட்டான். நடந்த விஷயத்துல எது அவனோட தப்பு? நீங்கதான் அவனுக்கு நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்தீங்க. நீங்கதான் அவனை நயவஞ்சகமான ஏமாத்தினீங்க? அதுக்குப் பிறகும் அவன் உங்களுக்கு எந்த பிரச்சனையும் கொடுக்கலையே! அப்புறம் ஏன்?” – அழுதாள்.

 

“அவனுக்காக நீ இப்படி என்கிட்ட வந்து அழும் போதுதான்… உண்மையாவே அவனை அழிக்கணும்னு எனக்கு தோணுது மதுரா…” – பளபளக்கும் கண்களுடன் தீவிரமாக அவன் கூறியபோது, உடல் சில்லிட்டு நாவறண்டது மதுராவிற்கு.

 

தன் வழியில் குறுக்கே நின்ற கிஷோரை அகற்ற வேண்டும் என்பது மட்டும் தான் தேவ்ராஜின் குறிக்கோள். எப்படியோ அது நடந்துவிட்டது… இவனும் மதுராவை திருமணம் செய்து கொண்டான். எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது தேவையில்லாமல் எங்கோ இருப்பவனைத் தேடிப்பிடித்து போய் அவனுக்கு குடைச்சல் கொடுப்பதற்கும்… அதன் மூலம் தன்னுடைய வாழ்க்கையில் பிரச்னையை உண்டாக்கிக்கொள்வதற்கும் அவன் என்ன முட்டாளா! அறிவுகெட்டவள்… யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிட வேண்டியது.

 

உண்மையில் கிஷோர் கைது செய்யப்பட்டதற்கும் தேவ்ராஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவன் வேலை செய்த பழைய நிறுவனத்திற்கும் இப்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் பனிப்போரில் இவன் பலியாடாக ஆக்கப்பட்டுவிட்டான். அந்த உண்மை கிஷோருக்கே தெரியவில்லை. முதல்நாள் தேவ்ராஜை பார்ட்டியில் பார்க்கிறான்… அவனுடைய முதலாளியும் தேவ்ராஜும் நீண்ட நேரம் தனியாக பேசுகிறார்கள். மறுநாள் இவனுடைய முதலாளி இவனுக்கு எதிராக ஒரு புகாரை எழுப்புகிறார். உடனடியாக கைது சம்பவம் நடக்கிறது என்றால் அவன் யாரை சந்தேகப்படுவான். தன்னுடைய சந்தேகத்தை மனைவியிடமும் குடும்பத்தாரிடமும் தெரிவித்த போது அவர்களும் அதை உண்மை என்றுதான் நம்பினார்கள். அதற்கு தகுந்தாற் போல் வாய் ஜம்பமாக அவனும் மதுராவிடம் ஏதேதோ உளறிவிட்டான். இத்தனைக்கும் மேல் அவன் சதி செய்யவில்லை என்று மைக் செட் போட்டு அலறினாலும் யார் நம்புவார்கள். நிழல் போல் கூட இருக்கும் ரஹீம் கூட நம்ப மாட்டான். மதுரா நம்பிவிடுவாளா?

 

அன்று மாலை தேவ்ராஜின் கார் உள்ளே நுழைந்த போது தோட்டத்தில் நின்ற மதுரா அலைபேசியில் ஏதோ சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தாள். இவன் வந்ததைக் கூட அவள் கவனிக்கவில்லை.

 

அவன் ரெஃப்ரெஷ்… செய்து உடைமாற்றி… காபி அருந்தி… அம்மாவிடம் நலன் விசாரித்து… தங்கைகளிடம் பேசி… ஆதிராவை கொஞ்சி… மேகசீன்ஸ் புரட்டி… லேப்டாப்பை தட்டி… அலைபேசியை உருட்டி… அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டான். அவள் இன்னும் உள்ளே வரவில்லை. டெரஸிற்கு சென்று நோட்டம்விட்டான். இப்போதும் அதே சீரியஸ்னஸோடு யாரிடமோ வாதாடிக் கொண்டிருந்தாள்.

 

“இவ்வளவு நேரமா யார்கிட்ட பேசிகிட்டு இருக்கா!” – அவன் புருவம் சுருங்கியது. இரவு உணவு வேளையும் வந்துவிட்டது. இப்போதான் அந்த போனை வச்சுட்டு உள்ள வர்றான்னு பார்க்கலாம் என்று அவன் எரிச்சலோடு காத்திருந்த போது அவள் அறைக்குள் நுழைந்தாள். கண்கள் சிவந்திருந்தன. முகத்தில் பதட்டம் தெரிந்தது. இவனிடம் எதுவும் கேட்காமல் குளியலறைக்குள் நுழைந்தாள். சற்று நேரத்தில் ஈர முகத்தோடு வெளியே வந்தாள்.

 

அவளை கண்களால் தொடர்ந்துக் கொண்டே இருந்தவன் பொறுமையிழந்து, “போனெல்லாம் பேசி முடிச்சாச்சா?” என்றான். அவனை திரும்பிப் பார்த்தாள் மதுரா. முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை.

 

“அதென்ன… நா வந்ததை கூட கவனிக்காம இவ்வளவு நேரம் பேச்சு? யார் போன்ல?” – விசாரித்தான்.

 

“ஃபிரண்ட்…”

 

“யாரு? அந்த கிஷோரோட வைஃபா?” – மூக்கை விடைத்தான்.

 

அவள் மிகவும் கலைத்துப் போயிருந்தாள். அவனோடு வாதாடவோ… வம்பிழுத்துக்கொள்ளவோ அவளிடம் தெம்பில்லை. “நா டயர்டா இருக்கேன்… ப்ளீஸ்…” – கட்டிலை சுற்றி வந்து படுத்து கொண்டாள். அவளை சற்று நேரம் பார்த்துக் கொண்டே நின்ற தேவ்ராஜ் கண்களை மூடி… ஆழ மூச்செடுத்து வெளியேற்றி அங்கிருந்து நகர்ந்தான்.

 

‘நீ அவனுக்காக என்கிட்ட வந்து பேசும் போதுதான் அவனை அழிக்கணும்னு தோணுது’ என்று தேவ்ராஜ் சொன்ன கணமே அவனிடம் இதைப் பற்றி இனி பேசிக் கூடாது என்கிற முடிவிற்கு வந்துவிட்டாள் மதுரா. மீறிப் பேசினால் விளைவு எதிர்மறையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. அதற்காக சோனியாவை அப்படியே விட்டுவிட முடியாது. அவள் விடும் கண்ணீரும் சாபமும் அவளுடைய குழந்தையின் தலையிலல்லவா விடிந்துவிடும். அதோடு ஒருவருக்கு தீங்கு செய்துவிட்டு எப்படி நிம்மதியாக உறங்க முடியும்… இவன் எப்படி உறங்குகிறான்! – பாதி இரவில் உறக்கம் களைந்து எழுந்துவிட்ட மதுரா, கும்பகர்ணனைப் போல் குறட்டைவிடும் தேவ்ராஜை வியப்புடன் பார்த்தாள். இவனுக்கு தெரியாமல் எப்படியாது சோனியாவிற்கு உதவ வேண்டும்… கிஷோரை வெளியே கொண்டுவர வேண்டும்… யாரிடம் உதவி கேட்கலாம் என்று யோசித்தாள். அப்பா தேவ்ராஜுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ள மாட்டார். அவரிடம் பேசிப் பயனில்லை. துருவன் ஏற்கனவே மனைவியையும் குழந்தையையும் பிரிந்து இருக்கிறான். இப்போது இந்த பிரச்னையை அவனிடம் கொண்டுச் சென்றால் இன்னும் மோசமாக அவனுடைய வாழ்க்கையை பாதிக்கக் கூடும். மீதமிருப்பது திலீப் மட்டும் தான். அவனால் தான் தனக்கு உதவ முடியும் என்று எண்ணி மறுநாளே அவனை தொடர்பு கொண்டாள்.

 

திலீப்பிற்கு ஏற்கனவே தேவ்ராஜை பிடிக்காது. அதிலும் இப்போது கைகலப்பு வேறு செய்துவிட்டான். அவனுக்கு எதிராக செயல்படச் சொன்னால் மாட்டேன்ட் என்றா சொல்வான். அதிலும் கிஷோர் மீது தவறு இல்லை என்று வெட்டவெளிச்சமாகிவிட்டது. அதற்கு மேல் அவனுக்கு என்ன தடை… உடனடியாக தங்கையை அழைத்துக் கொண்டு கிஷோரின் வீட்டுக்குச் சென்றான். அங்கு யாரும் இவர்களை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்கவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டுதான் போனார்கள். அவர்களிடம் சமாதானமாக பேசி, உதவி செய்யத்தான் வந்திருக்கிறோம் என்று எடுத்துக் கூறி அவன் எந்த வழக்கில் சிக்கியிருக்கிறான் என்று விபரம் சேகரித்தார்கள். நல்ல வழக்கறிஞரிடம் பேசினார்கள். நிறைய பணம் செலவு செய்தார்கள். அவனை வெளியே கொண்டுவர அத்தனை ஏற்பாடுகளையும் ரகசியமாகவே செய்தார்கள்.

 




13 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jayashree swaminathan says:

    thanks.super.Heroine is behaving like a normal person now to fight Dev


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    super ud. eagerly waiting for your next ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sow Dharani says:

    ஓவர் லவ் உடம்புக்கும் மனசுக்கு ஆகாது தேவ் ……


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UDSIS


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    நன்றாக வேணும் தேவ்விற்கு,தப்பு செய்யாமல் பழி சுமத்தப்படும்போது எவ்வளவு வலி என்று தேவ் அறியவேண்டாமா.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepa I says:

    Ethu dev or diliph who did this. I believ dev
    He wont do this type.he is a manly man.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sriranjana Niranjan says:

    Nice epi


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Ada kadavule ithan namakita irukura oru thappu oruthan oru thappu senja aduthu ena nadanthalum avangalaiye thappu solluvom… athan ipa Dev ku nadakuthu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Super. Dev ithukkum mathurakkitta santa pota poran ithunal periya pirachchanai varappokuthupa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    Wow super twist. Unexpected.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    தேவ் நீ வேஸ்ட் டா…போ


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Senja paavam summa viduma adhaan seiyadha paavathuku per vaanguran


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    seline seline says:

    very nice ud mam

You cannot copy content of this page