Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kanalvizhi kadhal - 69

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 78

அத்தியாயம் – 78

பாறையை தூக்கி வைத்தது போல் பாரமாக இருந்த தலையை தாங்கிப் பிடித்தபடி எழுந்து அமர்ந்தான் தேவ்ராஜ். படுக்கையில் இருந்த வித்தியாசம் கருத்தில் பதிய அறையை சுற்றி பார்வையால் வட்டமிட்டான். நேற்று இரவு நடந்ததெல்லாம் காலங்கள் காட்சியாய் நினைவில் வந்தன. சட்டென்று எழுந்தான்.மதுரா..! – பதறியது அவன் மனம். அவசரமாக அறையிலிருந்து வெளியேறினான். நேற்று மதுராவை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு வந்த போது அவனும் அவர்களை பின்தொடர்ந்து வந்துவிட்டான். வந்தவன் சும்மா இருக்காமல் ஒரே அலம்பல்… ஒருவருக்கும் சமாளிக்க முடியவில்லை. வேறு வழியின்றி இராஜேஸ்வரியின் வேண்டுதலுக்கு இணங்க ஊசிமூலம் அவனை அமைதிப்படுத்த மருந்து கொடுத்து, அதே மருத்துவமனையில் வேறு ஒரு அறையில் படுக்க வைக்கப்பட்டான். மருந்து வேகத்தில் இரவெல்லாம் நன்கு உறங்கியவன் இப்போது விழிப்பு வந்ததும் பதறினான். ரத்தவெள்ளத்தில் அவள் புரண்டது நினைவிற்கு வந்ததும் தலைபாரமெல்லாம் போன இடம் தெரியாமல் பறந்து போய்விட அவசரமாக அவளைத் தேடி விரைந்தான்.

அந்த ஸ்பெஷல் வார்டின் வெளியே இராஜேஸ்வரியோடு சேர்ந்து மதுராவின் குடும்பமும் காத்திருப்பதைக் கண்டவன், சற்றும் கலங்காமல் அழுத்தமாகவே அவர்களிடம் நெருங்கினான். இவனைக் கண்டதும் அவனைவரின் முகமும் கடுகடுத்தது. முகத்தை திருப்பிக் கொண்டார்கள். யாரையும் கண்டுகொள்ளாமல் அவன் உள்ளே செல்ல எத்தனித்த போது, “அங்க எங்க போற? டாக்டர் உள்ள இருக்காங்க” என்று எரிந்து விழுந்தாள் இராஜேஸ்வரி.

சட்டென்று நின்ற தேவ்ராஜ் தாயிடம் திரும்பி, “எப்படி இருக்கா?” என்றான் இறங்கிய குரலில்.

“உயிரோடுதான் இருக்கா…” – ஆத்திரத்துடன் இடையிட்டாள் பிரபாவதி. அக்கினிப் பிழம்பாய் தகித்தது அவள் முகம். பார்வையாலேயே எரித்துவிடுவது போல் அவனை முறைத்தாள். அவளை வெறித்துப் பார்த்த தேவ்ராஜ் பதில் ஏதும் சொல்லாமல் அங்கு கிடந்த நாற்காலியில் அமர்ந்தான்.

தலையை குடைந்தது அவனுக்கு… அந்த ரெத்தம்… அவளுடைய அழுகை… தன்னுடைய வெறிச்செயல்… அனைத்தும் அவன் மனதை புழுங்கச் செய்தது. எப்படி அடிபட்டது! சோபாவில் தானே விழுந்தாள்! என்ன ஆயிற்று! எப்படி இருக்கிறாள்! – சிந்தனைகள் நிலைகொள்ளாமல் அலைபாய சட்டென்று எழுந்து தாயிடம் நெருங்கி, “இஸ் ஷி அல்ரைட்?” என்றான். இராஜேஸ்வரியின் அனல் பார்வை அவனை மேலே பேசவிடவில்லை. மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் நரேந்திரமூர்த்தியிடம், “ஷி இஸ் ஓகே… ரெஸ்ட் எடுக்கட்டும். டிஸ்டர்ப் பண்ணாதீங்க” என்றார். சட்டென்று நிமிர்ந்த தேவ்ராஜ் மருத்துவரைப் பார்த்துவிட்டு அவரிடம் நெருங்கினான்.

“எப்படி இருக்கா? இஸ் ஷி ஆல்ரைட்?” என்றான் பதற்றத்துடன். அவனை ஏறுறாங்க பார்த்த மருத்துவர், “யார் நீங்க?” என்றான்.

“தேவ்ராஜ்… மதுரா என்னோட மனைவி”

“ஓ!” – ‘நீதானா அது!’ – என்பது போல் இருந்தது அவருடைய பார்வை.

“என்னை ரூம்ல வந்து பாருங்க” ஒரே வரியில் பதிலளித்துவிட்டு நகர்ந்தார். ஓரிரு நொடிகள் அவர் முதுகையே வெறித்துக் கொண்டு நின்றவன் பிறகு மனைவியை பார்க்கும் உத்தேசத்துடன் அறைக்குள் செல்ல எத்தனித்தான்.

“தேவ்…” – நரேந்திரமூர்த்தியின் குரல் கடுமையாக ஒலித்தது. கதவில் வைத்த கையை எடுக்காமல் அவரை திரும்பிப் பார்த்தான்.

“எம்பொண்ண தொந்தரவு பண்ணாத” – எச்சரிக்கும் தொனியில் கூறினார்.

“ஷி இஸ் மை வைஃப்” – அழுத்தமாக உரைத்தவனின் முகத்தில் எரிச்சல் மண்டியிருந்தது.

“வைஃப்? வைஃபை ட்ரீட் பண்ணற மாதிரியா நீ ட்ரீட் பண்ணியிருக்க? எவ்வளவு தைரியம் உனக்கு எம் பொண்ணு மேல கைவைக்க?” – ஆவேசப்பட்டார்.

தவறு தன் மீது இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ தேவ்ராஜ் நிதானமாக பதில் சொன்னான்.

“எனக்கு புரியாது… ஆனா தப்பு என்மேல மட்டும் இல்ல. நா மதுராவை பார்க்கணும்… பேசணும்… எல்லாம் சரியாயிடும். ஷி வில் பி ஆல்ரைட்”

மகாராணி போல் வாழ்வாள் என்று எதிர்பார்த்தவருக்கு அவனுக்கு திருமணம் கொடுத்தவர், தன் மகளை கிழிந்த நாராக பார்த்த போது முற்றிலும் உடைத்துப் போய்விட்டார். தன்னுடைய ஒரே செல்ல மக்களைவிட தேவ்ராஜ் எத்தனை பெரிய கொம்பனாக இருந்தால்தான் அவருக்கு என்ன? கடுப்புடன் எடுத்தெறிந்து பேசினார்.

“நோ… நீ உள்ள போகக் கூடாது. என் பொண்ண பார்க்கக் கூடாது. நா உன்ன அனுமதிக்க மாட்டேன்”

“எக்ஸ்…கி…யூஸ் மீ….???” – கடுமையாக மாறியது தேவ்ராஜின் முகம். “ஹூ த ஹெல் ஆர் யூ டு ஸ்டாப் மீ?” – அவரிடம் சீறினான்.

“ஐம் ஹர் ப்ளடி டாட் யூ டாமிட்…” – அவரும் பதிலுக்கு கத்தினார்.

“டாட்-ஆ இருந்தாலும்… டாஷ்-ஆ இருந்தாலும் எனக்கு அப்புறம் தான். எங்களுக்கு இடையில வர்றதுக்கு உங்களுக்கு எந்த ரைட்டும் இல்ல. ஸ்டே அவே…” – எச்சரித்தது அவன் குரல்.

“எவ்வளவு தைரியம்டா உனக்கு. ஒரு பொண்ண அடிச்சு காயப்படுத்தினதும் இல்லாம திமிரா பேசுறியா? கொன்னுடுவேன்டா உன்ன” – திலீப் பாய்ந்தான். அவனை தடுத்த துருவன், “இது ஹாஸ்ப்பிட்டல்… பிரச்சனை பண்ணாத…” என்றான். அவன் அண்ணனின் பிடியிலிருந்து திமிரிக் கொண்டிருக்கும் போதே,

“ஒண்ணுக்கும் உதவாத முட்டாள் பயலே… நீதாண்டா என்னோட ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணம். இப்ப கூட உன்னாலதான் எங்களுக்குள்ள சண்டை வந்தது. நீ என்னடா என்னை கொல்லறது… உன்ன நா கொன்னுடுவேன்டா…” – பல்கலைக் கடித்துக் கொண்டு எகிறினான் தேவ்ராஜ்.

“அப்போவே சொன்னேன்… இந்த காட்டுமிராண்டிக்கு பொண்ணு கொடுக்காதீங்கன்னு… கேட்டாதானே? இவனை ஒரு ஆளுன்னு நம்பி, கண்ணுக்குள்ள வச்சு வளர்த்த பொண்ண கொடுத்தீங்கள்ல.. இப்போ அனுபவிங்க… குடும்பத்தையே அழிச்சிடுவான்… அந்த புத்தி மாறுமா?” – பிரபாவதியின் தூற்றுதல் தேவ்ராஜை மேலும் மூர்க்கனாக்கியது. உடல் நடுங்க உக்கிரமாக முறைக்கும் மகனை பதட்டத்துடன் பார்த்த இராஜேஸ்வரி, “தேவ்… நீ கிளம்பு… ப்ளீஸ் கிளம்புடா…” என்றாள் அவன் கையைப் பிடித்துக் கொண்டு.

தாயின் கையை உதறிவிட்டு அவளை முறைத்த தேவ்ராஜ், “ஏன்? ஏன் நா கிளம்பனும்? உள்ள இருக்காது என்னோட மனைவி. நா அவளை பார்க்கக் கூடாதுன்னு தடுக்கறதுக்கு இங்க எந்த …………க்கும் ரைட்ஸ் இல்ல” – அகம்பாவத்துடன் பேசியவனிடம் பாய முயன்ற திலீப்பை கட்டிப்பிடித்து துருவன் தடுக்க, “திலீப்…” என்று பெருங்குரலில் அதட்டினார் நரேந்திரமூர்த்தி. அலட்சியமாக அவனைப் பார்த்தபடி, அறையின் கதவை தள்ளி திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தேவ்ராஜ்.

கோபத்தோடு உள்ளே வந்த தேவ்ராஜின் ஆவேசம் மதுராவை பார்த்த நொடியிலேயே வடிந்து முற்றிலும் காணாமல் போனது. மெத்தையில் தளர்ந்து போய் கிடந்தாள் மதுரா. வலது கையில் சின்னதாய் ஒரு கட்டு… இடது கையில் செலைன் பாட்டிலோடு இணைந்த ஊசி… வெளியிற முகம்… மூடிய கண்கள்… மூக்கின் நுனியில் காய்ந்திருந்த துளி ரெத்தம்… பிடிங்கி எறிந்த கொடி என்பார்களே…! அப்படித்தான் கிடந்தாள். உள்ளே வலித்தது… மனதை பிசைவது போன்றதொரு உணர்வு… இதயத்திற்குள் எதையோ தூக்கி வைத்தது போல் கனத்தது. அவளிடம் மெல்ல நெருங்கினான்.

“மது” – மெல்ல அழைத்தான். அவளிடம் அசைவில்லை. லேசாக நாசி விடைப்பது தெறிந்தது. அதுவரை சீராக இருந்த அவளுடைய மூச்சில் இப்போது சிறு மாற்றம் தெரிந்தது. அவள் உறங்கவில்லை என்பதை புரிந்துக் கொண்டான்.

“மது” – மீண்டும் ஒருமுறை சற்று குரலை உயர்த்தி அழைத்தான். மூடியிருந்த கண்களின் ஓரம் இரு துளி கண்ணீர் மணிகள் உருண்டோடின. உதட்டைக் கடித்துக் கொண்ட தேவ்ராஜின் நெஞ்சுக்குழிக்குள் ஆழமாய் ஓர் உணர்வு பாய்ந்தது.

சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “கண்ண திற…” என்றான். அவளிடம் எந்த அசைவும் இல்லை. கண்ணோரம் வடியும் கண்ணீர் அதிகமானது. மின்னல் போன்றதொரு உணர்வு உள்ளே பாய, கண்களை இறுக்கமாக மூடித்திறந்தான். அவளுடைய கண்ணீரை துடைக்க வேண்டும் என்று கை துடித்தது. ஆனால் ஏதோ ஒரு தயக்கம்… பயம்… “மது…” – மீண்டும் அழைத்தான். “ப்ளீஸ்… என்னை பாரு…” – அவன் குரல் தளர்ந்தது.

“எக்ஸ்கியூஸ் மீ சார்…” – குரல் கேட்டுது திரும்பிப் பார்த்தான். சீருடை அணிந்த செவிலியர் நின்றுக் கொண்டிருந்தாள்.

“பேஷண்ட் ரெஸ்ட் எடுக்கணும். டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ளீஸ்” – ‘ப்ளீஸ்’ என்கிற வார்த்தையை இறுதியில் தொடுக்காக சேர்த்துக் கொண்டாலும் அவள் கராறாகவே பேசினாள்.

வெளியே நிற்கும் குரூப்தான் இவளிடம் சொல்லி அனுப்பியிருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுந்தது அவனுக்கு. “பைவ் மினிட்ஸ்…” என்றான் இறுகிய முகத்தோடு.

“சீக்கிரம்…” என்று கூறி அவனை பார்த்தபடி நின்றாள்.

“கொஞ்ச நேரம் வெளியே இருங்க…” – அழுத்தமாகக் கூறினான். ஒரு நொடி தயங்கிய நர்ஸ் வேறு வழியில்லாமல் வெளியேறினாள்.

“ஹேய்… மது… ஸ்டராபி… லுக் அட் மீ… ப்ளீஸ்… இங்க பாரு…” – பெட்டில் அவள் ஓரமாக அமர்ந்துவிட்டான். அவள் கண்ணீரை துடைத்தான். முடியை கோதினான். கையை வருடினான். மதுராவின் உடல் இறுகியது. முகத்தில் ஒருவித இறுக்கம்… இல்லை கோபம்… இல்லையில்லை வெறுப்பு… என்ன இது! ஏன் இப்படி மாறுகிறது அவள் முகம்! – திகைத்தான் தேவ்ராஜ்.

“மது ஐம் சாரி… நான்… நான் பண்ணினது தப்புதான்… ஐம் வெரி சாரி… ஆனா நீயும்… சரி அதை விடு… ஐம் சாரி… நா பண்ணினதுதான் தப்பு… ஓகே…? என்னை பாரு… ப்ளீஸ் லுக் அட் மீ ஹனி…” – சட்டென்று முகத்தை சுளித்துக் கொண்டு அவன் தொடுதலில் இருந்த கையை பிடுங்கினாள். கையேடு மாட்டியிருந்த டியூப் ஆடி, செலைன் பாட்டில் குலுங்கியது. “ஏய்ய்ய்… என்ன பண்ணற?” – பதறினான் தேவ்ராஜ். இன்று இந்த சின்ன ஊசிக்கு அவன் பதறும் இந்த பதட்டம் நேற்று அவள் கையை ஒடிக்கும் போது எங்கு போனது என்று அவனுக்கே தெரியவில்லை. நேற்று இருந்த கோபமும் உண்மை… இப்போது அவன் காட்டும் கரிசனமும் உண்மை… இந்த மூட் ஸ்விங்கிற்கு காரணமான மனஅழுத்தத்தை வெல்லத் தெரியாமல் வாழ்க்கையை பெரிதும் சிக்கலாக்கிக் கொண்டான்.

அவளுடைய திடீர் ரியாக்ஷனில் திகைத்துப் போய் நின்றான் தேவ்ராஜ். அவனுக்கு முதுகுக்காட்டி ஒருக்கணித்துப் படுத்த மதுரா கூட்டுக்குள் ஒடுங்கும் நத்தை போல சுருண்டுக் கொண்டாள்.

அவளுடைய புறக்கணிப்பை மென்று விழுங்கி ஜீரணித்துக் கொண்டவன், “தட்ஸ் இட்? அவ்வளவுதானா? என்னை இக்னோர் பண்ணுறியா நீ?” என்றான் ஆற்றாமையுடன்.

அவள் எந்த விதத்திலும் அவனுக்கு பதிலளிக்கவில்லை. உடனே கட்டிலை சுற்றிக் கொண்டு மறுபுறம் வந்தவன், “சரி நீ கோபமாவே இரு… ஆனா நீ என்னை இங்கோர் பண்ண முடியாது… கூடாது… விடமாட்டேன்…” என்றான் பிடிவாதக் குரலில். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே மதுராவின் மூக்கிலிருந்து லேசாக இரத்தம் கசிந்தது.

பகீரென்றது தேவ்ராஜுக்கு. திகில் விழுந்தது போல் அவளை பார்த்தான். இதயம் தாறுமாறாக எகிறியது. ‘என்ன இது!’ – அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நேற்று அந்த இரத்தம்! அவன் உள்ளே நுழையும் போது கூட மூக்கில் ஒரு துளி காய்ந்து போய் இருந்ததே! என்ன ஆயிற்று இவளுக்கு! – பயந்துவிட்டான். மதூ! – மனம் அலறியது.

பதட்டத்தை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் இரண்டே எட்டில் விருட்டென்று சென்று கதவைத் திறந்தவன், வராண்டாவில் நின்றுக் கொண்டிருந்த நர்ஸிடம், “எக்ஸ்கியூஸ் மீ… கொஞ்சம் வாங்க” என்றான். அவன் குரலிலிருந்த பதட்டம் அனைவரையும் தொற்றிக்கொள்ள, “என்ன… என்ன ஆச்சு?” என்று பல குரல்கள் ஒருங்கே ஒலித்தன. சட்டென்று அறைக்குள் நுழைந்த நர்ஸ் மதுராவை பார்த்துவிட்டு சற்று ஆசுவாசமடைந்தாள். இரவு வந்தது போல் பிட்ஸ் ஏதும் வந்திருக்குமோ என்று பயந்துவிட்டாள்.

“எதுக்கு கூப்பிடுங்க?”

“ரெத்தம்… நோஸ்ல…” – கையால் தன் மூக்கை தொட்டுக்காட்டி குழந்தை போல் மலங்க விழித்தான்.

அவனை வெறித்துப் பார்த்த நர்ஸ், “ரெஸ்ட் கொடுங்கன்னு சொன்னனே! அப்போ கேட்கல…” என்றவள், ‘இப்போ மட்டும் பதர்றீங்களே!’ என்ற கேள்வியை நிலுவையில் விட்டாள்.

தேவ்ராஜின் பதட்டம் குறையவில்லை. இதயம் திக் திக் கென்று அடித்துக் கொண்டது. “என்ன ஆச்சு? ஏன் இப்படி?” என்றான் மிரட்சியுடன்.

“டாக்டரை போயி பாருங்க சார்” – நர்ஸின் உணர்ச்சியற்ற குரல் அவனை கலவரப்படுத்தியது.

37 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mary G says:

    10.23

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    Dear Readers,
    Next episode will be posted by 10pm tonight. My sincere apologies for the inconvenience.
    Thank you

    Nithya Karthigan…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      kongu jey says:

      eagerly waiting

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Pon Mariammal Chelladurai says:

      நன்றி நித்யா.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    மதுவுக்கு என்ன ஆச்சுன்னு மண்டையே வெடிக்குதே?!

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ganga Narayanan says:

    Pls Let us know when you will be posting UD next so we dont have to wait.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mary G says:

    Kutty kutty Uds thaan varum. Ipo athukum long leave ah😭

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jaya Bharathi says:

    Waiting for update

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    sree saran says:

    waiting ur update mam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    இன்னிக்கு அப்டேட் இருக்கா?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    மன்னிக்கணும் ஃபிரண்ட்ஸ்,
    மூணு நாள் வெளியே போய்ட்டேன். எபிஸோட் டைப் பண்ண நேரம் இல்லாம போயிடிச்சு. சைட் உள்ள வந்து இன்போர்ம் பண்ணவும் முடியல… இன்னிக்கு தான் வீட்டுக்கு ரிட்டன் வந்தேன். நாளையிலிருந்து எப்பவும் போல தொடர்ந்து பதிவு வரும்…

    முந்தைய அத்தியாயத்திற்கு கமெண்ட் கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Mary G says:

      நாளைக்கா… இன்றைக்கு இல்லையா 😥

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Saranya Rajan says:

      Waiting for d episode mam…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Ud kanom epo sis varuvinga…wat happen sis

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      மன்னிக்கணும் ஃபிரண்ட்ஸ்,
      மூணு நாள் வெளியே போய்ட்டேன். எபிஸோட் டைப் பண்ண நேரம் இல்லாம போயிடிச்சு. சைட் உள்ள வந்து இன்போர்ம் பண்ணவும் முடியல… இன்னிக்கு தான் வீட்டுக்கு ரிட்டன் வந்தேன். நாளையிலிருந்து எப்பவும் போல தொடர்ந்து பதிவு வரும்… நன்றி ஃபிரண்ட்ஸ்…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Radha Karthik says:

    Next ud podalaya mam????? Eagerly waiting for it

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gayathri sankar says:

    next ud yeppo

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mary G says:

    😭

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mary G says:

    Last week only 2 ud thaan potinga😅

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba M says:

    Doctor solaratha ketu dev reaction enna… eagerly waiting 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Hi mam plz upload nxt ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba M says:

    Antha ponnu ivala thakku pidichathe perusu

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sow Dharani says:

    டேய் தேவ் உன்னோட லவ் யை மது கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணவும் மாட்ட மனது விட்டு பேசவும் மாட்ட அவ சொல்ல வருவதை கேட்கவும் மாட்ட ….ஆனா அவ உன்கூடவே இருக்கனும்….முடியல பா சாமி உன்கூட….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mary G says:

    UD kanum😡

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kayalvizhi Ravi says:

    Interesting ud!

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    super ud. eagerly waiting for your next ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    dev… over kobam udambuku aagathu sonna ketuuriyaa…. ippo paaru… un naala evvalo peruku kastam….. madhura.. ku enna aachu yen nose bleeding….

    hai sis..kuties health ippo ok va… …

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    hooooooo yenna aachuuuupaaaa

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவராஜிற்கு மட்டுமல்ல பதட்டம் எங்களுக்கும்தான் மதுராவுக்கு என்னவாச்சுது.

    நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Super sis dev ivlo porumaiya pesurathu sema… madhu ku enachu ipadi twistla finish panitingale…dev madhu va pirichidathinga sis rendu perum iniyavathu happya life start panatum

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Adada yena akka ipadi suspence vachitinga pavum madhu y he done lik dis…what doctor will say….semma twist nxt epi yeppo

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Niceppa dev inimel thirunthinal nalla irukkum mathuvm devum sernthe irukkattum pls piriyaventam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    மதுவோட புறக்கணிப்பு அவனுக்கு எவ்வளவு வலியாக இருக்கும் but மனுசனா மாற அவனுக்கு இது தேவை தான்

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    Over tension anathu eppadi blood varuthu polo dev pavam than avan appa pannina thappu evana thoradhuthu

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    seline seline says:

    THANK YOU mam…. nice

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya Karthigan says:

    அவசரமாக எழுதி பதிவேற்றம் செய்தேன். திரும்ப படித்துக் கூட பார்க்கவில்லை. பிழைகளை பொறுத்துக்கொள்ளவும்… நன்றி தோழிகளே,

    நட்புடன்,
    நித்யா கார்த்திகன்.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Vatsala Mohandass says:

      பிழைகள் எதுவுமே இல்லை.. அருமையான பதிவு…

You cannot copy content of this page