Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 67

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 79

அத்தியாயம் – 79

“ஆன்க்ஸைட்டி… இதை சிம்பிளா பதட்டம் படபடப்புன்னு முடிச்சிட்டு முடியாது… டிப்ரஷனுக்கு முன்னாடி ஸ்டேஜ்… கவனிக்காம விட்டா அவங்க உயிருக்கே ஆபத்து மிஸ்டர் தேவ்ராஜ்” – மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி கூறும் மருத்துவரை வெறித்துப் பார்த்த தேவ்ராஜின் முகத்தில் வியர்வை துளிர்த்தது. கண்களில் கலக்கம் சூழ்ந்தது.

 

“வெளியே சொல்லாத அதிகப்படியான கவலை… பயம்… அதனால ஏற்படற ஹைபர்டென்ஷன்… இதெல்லாம்தான் ஆன்க்ஸைட்டிக்கு காரணம்” – கண்களை இறுக்கமாக மூடினான். அவனுடைய போராட்டத்தை ஆழ்ந்து பார்த்தபடி சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் மருத்துவர்.

 

ஓரிரு நிமிடங்கள் எடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவன், “அந்த நோஸ் ப்ளீடிங்?” – கரகரத்த குரலில் இழுத்தான்.

 

“ஆன்க்ஸைட்டி அட்டாக் வரும் போது, அதிகப்படியான திடீர் ரெத்த அழுத்தத்தால ரத்த நாளங்கள் வீக் ஆகி… அந்த மாதிரி ரெத்தக் கசிவு ஏற்படறது உண்டு…”

 

“இதை சரி பண்ண…”

 

“கட்டுப்படுத்தலாம்”

 

“வாட்! கட்டுப்படுத்தலாம்ன்னா?” – கலவரமானான்.

 

“ஐ மீன் இட் மிஸ்டர் தேவ்ராஜ்… ஆன்க்ஸைட்டியை கட்டுப்படுத்த முடியும். ஆனா குணப்படுத்த இன்னைக்கு வரைக்கும் எந்த மருந்தும் இல்ல”

 

“டாக்டர்….”

 

“ஐம் சாரி…”

 

“நோ!”

 

“நீங்க கவனமா இருக்கணும் சார். அவங்களுக்கு இன்னொரு முறை ஆன்க்ஸைட்டி அட்டாக் வர கூடாது. அவங்க டிப்ரஷனுக்கு போயிடக் கூடாது… அடிக்கடி அவங்க மனசுல ஒருவித வெற்றுணர்வு, பயம், பிரமை, படபடப்பு ஏன்… தற்கொலை எண்ணம் கூட எழும்… இது எதுவும் அவங்க வயித்துல இருக்க குழந்தையை பாதிச்சுடக் கூடாது” – மருத்துவரின் அமைதியான குரல் அவனுக்குள் ஆழமாக இறங்கியது. பொறிகலங்கிப் போனது போல் ஒரு உணர்வு… அவர் சொன்னதெல்லாம் பிரமையா அல்லது உண்மைதானா என்று புரிந்துகொள்ள முடியாத கலக்கம் திரை போல் அவன் சிந்தனையில் குறுக்கிட்டது.

 

ஓரிரு நிமிடங்கள் அப்படியே திகைத்துப் போய் அமர்ந்துவிட்டவன், “கு…ழந்…தை…யா!” என்று முணுமுணுத்தான். குரலே எழும்பவில்லை.

 

அவனை விசித்திரமாகப் பார்த்த மருத்துவர், “ஷி இஸ் கேரியிங்… பன்னிரண்டு வார கரு” என்றார். அவன் கண்களிருந்து உதிர்ந்த இரு துளி வைர மணிகள் அவரை ஆச்சரியப்படுத்தியது.

 

“ஐம் சாரி… இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியா இருக்கும்னு நம்பினேன்” என்றார்.

 

“அஃப் கோர்ஸ்… இட்ஸ்… இட்ஸ் எ கிரேட் நியூஸ்… ஃபார் மீ…” – உதட்டை கடித்துக் கொண்டான்.

 

முகத்தில் பெருமிதமும் கண்களில் கண்ணீருமாக அமர்ந்திருக்கும் அந்த முறுக்கு மீசைக்காரனை சுவாரஸ்யமாக பார்த்த மருத்துவர், “உங்க வைஃபோட இந்த பிரச்னைக்கு நீங்கதான் காரணம்ங்கறதை என்னால நம்ப முடியல…” என்றார்.

 

அவனிடமிருந்து நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. மனதிலிருக்கும் புழுக்கம் பெருமூச்சிலெல்லாம் கரைந்துவிடுமா என்ன! மனம் பாறையாக கனத்தது. மூன்று மாதங்கள்… ஒருமுறை கூட நம்மிடம் சொல்லவில்லை… சொல்லும் வாய்ப்பை நாம் கொடுக்கவில்லை…’ – மனசாட்சி குத்தியது. அவளுக்கு பிரஷர் கொடுத்துக் கொடுத்து கார்னர் செய்து இந்த நிலைக்கு தள்ளிவிட்டோம் என்கிற குற்றஉணர்ச்சியில் மனசாட்சி மரத்தின் மீது ஏறி நின்று ஆடும் பயங்கர பேயாக மாறியது.

 

“நேத்து மதுராவை எக்ஸமைன் பண்ணின சைக்கியார்ட்டிஸ்ட் ஈவினிங் டியூட்டிக்கு வருவாங்க. நீங்க அவங்களை ஒருதரம் மீட் பண்ணி பேசுங்க. உங்க லைஃப்பை திரும்ப சரியான பாதைக்கு திருப்ப அவங்களால உதவ முடியலாம்…” – அக்கறையோடு கூறினார்.

 

அவரிடம் ஆமோதிப்பாக தலையசைத்து நன்றி கூறிவிட்டு மதுரா அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை நோக்கி வந்தான். சற்று நேரத்திற்கு முன்பு அடாவடித்தனமாக அந்த அறைக்குள் நுழைந்தவனுக்கு இப்போது கால் கூசியது. உள்ளே ஏதோ ஒருவித பயம் கவ்வியது. வராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் வந்து அமர்ந்தான்.

 

குனிந்த தலை நிமிராமல் இறுகிப்போய் அமர்ந்திருக்கும் மகனிடம் நெருங்கி, “என்ன ஆச்சு? டாக்டரை பார்த்தியா? என்ன சொன்னாரு?” என்றாள் இராஜேஸ்வரி. அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை. தவறு செய்தவன்தான்… ஆனால் மகனாயிற்றே! எதையோ இழந்துவிட்டது போல் அவன் அமர்ந்திருக்கும் நிலை அவள் அடிவயிற்றை பிசைந்தது. பக்கத்தில் அமர்ந்து, “என்னப்பா?” என்றபடி தோளில் கை வைத்தாள். சட்டென்று அந்த கையில் முகத்தை சாய்த்துக் கொண்டான். அவன் கண்கள் மூடியிருந்தன.

 

“ஒண்ணும் இல்லப்பா… சரியாயிடும். கவலைப்படாத” – தாயின் ஆறுதல் மொழி அவன் மனதை எட்டவில்லை. சற்றுநேரம் அசையாமல் அமர்ந்திருந்தவன் பின் அன்னையின் முகத்தை திரும்பிப் பார்த்தான்.

 

“ஐம் கோன பி எ ஃபாதர்…” – அவனுடைய உதடுகள் முணுமுணுத்தன. இராஜேஸ்வரி ஆமோதிப்பாக தலையசைத்தாள். அவள் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது.

 

“இனி உன்னோட கோவம்… பிடிவாதம் எல்லாம் கொறஞ்சிடும்…” – தாயின் கூற்றைக் கேட்டு கண்ணீருடன் புன்னகைத்தான் தேவ்ராஜ். மனதிற்குள் ஆனந்த மழை பொழிவது போல் இருந்தது. இன்னொருபக்கம் இதயத்தை யாரோ பொசுக்குவது போல் உணர்ந்தான்.

 

‘மதுராவை இந்த பாதிப்பிலிருந்து எப்படி மீட்டுக் கொண்டுவர போகிறோம்’ என்கிற கவலை அவனை வருத்தியது.

 

“மதுரா மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்ராங்களேப்பா… என்ன செய்ய போற?” – தாயின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கீழே குனிந்துக் கொண்டவன், சற்று நேரத்திற்கு பிறகு “எனக்கு தெரியிலம்மா… ஐ டோன்ட் நோ…” என்றான் உடைந்து போய்.

 

ஏற்கனவே வருந்திக் கொண்டிருப்பவனை மேலும் காயப்படுத்த விரும்பாமல், “எல்லாம் சரியாயிடும். கவலைப்படாத… குழந்தை பிறந்தா எல்லாத்தையும் மறந்துடுவா…’ என்றாள் மகனுக்கு ஆறுதல் கூறும்விதமாக. இந்த குழந்தை அனைத்து காயங்களையும் ஆற்றிவிடும் என்கிற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

 

“இந்த… இந்த விஷயம் மதுவுக்கு தெரியுமா?” – தயக்கத்துடன் கேட்டான்.

 

மகனை ஆழ்ந்து பார்த்த தாய், “மூணு மாசம்ப்பா… தெரியாம இருக்க வாய்ப்பு இல்லையே!” என்றாள்.

 

“ஹும்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டவன், “இடையில எவ்வளவோ பிரச்சனை… மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ்… ரொம்ப அலோனா பீல் பண்ணியிருப்பா…” என்றான் இறங்கிய குரலில்.

 

“இனி நீ கூட இரு தேவ்… மத்தவங்களுக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை உன்னோட மனைவிக்கும் கொடு…” – எவ்வளவு மறைக்க முயன்றும் இராஜேஸ்வரின் குரலில் கடுமை எட்டிப்பார்த்துவிட்டது.

 

தயை வியப்புடன் பார்த்த தேவ்ராஜ், “ஷி இஸ் எ பார்ட் ஆப் மீ ம்மா… நா அவளை வேற ஒரு பெர்சனா பார்க்கல” என்றான்.

 

“ஆனா அவ ஒரு தனி மனுஷிப்பா… அவளோட விருப்பங்கள்… ஆசைகள்… எல்லாம் வேறையாத்தான் இருக்கும். நீ புரிஞ்சுக்கணும். அவளுக்கான ஸ்பேஸை நீ கொடுக்கணும். அதே சமயம் அவளை கேர் பண்ணிக்கணும். அவளுக்கு தேவையானதை செய்யணும்… ரெண்டையும் பேலன்ஸ் பண்ணினாதான் வாழ்க்கை நல்லா இருக்கும் ப்பா… ” – தாய் கூறும் அறிவுரையை அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.

 

“உங்ககிட்ட எதுவும் பேசினாளா?” – மெல்ல கேட்டான்.

 

“ம்ஹும்… யார்கிட்டேயும் எதுவும் பேசல… நேத்து நைட் கண்டிஷன் ரொம்ப சீரியஸ்… காலையில ரெண்டுதரம் கண்ணு முழிச்சா… யாரையும் பார்க்கல… பேசல…” – நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான். எதிர் பக்கம் கிடந்த நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மாமனாரையும் மைத்துனர்களையும் கண்டுகொள்ளாமல் மனைவியின் அறைக்குள் நுழைந்தான். உள்ளே மகளுக்கு அருகில் சேர் போட்டு அமர்ந்திருந்தாள் பிரபாவதி. அவளை பார்த்ததும் அவனுக்குள் ஒரு தயக்கம் வந்தது. ஏதாவது பேசிவிடுவாளோ என்று பயந்தான். ஆனால் பயத்தையும் மீறிய ஆவல் அவனை மனைவியிடம் இழுத்துச் சென்றது. நன்றாக உறங்கி கொண்டிருந்தாள். அந்த அறையின் கார்னரில் அமர்ந்திருந்த நர்ஸிடம், “எப்போ முழிப்பா?” என்றான்.

 

“ஸ்லீப்பிங் டோஸ் போட்டிருக்கு சார்… ரெண்டு மணிநேரம் ஆகும்”

 

“ஓ!” – மதுராவின் தலைமாட்டில் வந்து நின்று அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். பிரபாவதியின் இரத்த அழுத்தம் கூடியது. அவனுடைய முகத்தையும்… நடிப்பையும் பார்க்கப்பார்க்க அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. சட்டென்று எழுந்து வேகமாக வெளியேறினாள்.

 

பீடையை விரட்டிவிட்டது போல் ஆசுவாசமடைந்த தேவ்ராஜ் நிம்மதியாக மனைவிக்கு அருகில் அமர்ந்து அவளுடைய கையை பிடித்துக் கொண்டான். ஊசி ஏறியிருந்த அவள் கரத்தை மெல்ல வருடிக் கொடுத்தான். உறங்கி கொண்டிருக்கும் அவள் முகத்தை பார்வையால் வருடியவனின் கண்கள் அடிக்கடி கலங்கின.

 

புயல் வேகத்தில் வெளியே வந்த பிரபாவதி கணவனை அழைத்துக் கொண்டு தனியாக வந்தாள்.

 

“அவனுக்கு இன்னும் இங்க என்ன வேலை? எதுக்கு அவனை விரட்டாம இருக்கீங்க?” – கடுப்படித்தாள்.

 

“என்ன பேசற நீ? இது ஹாஸ்ப்பிட்டல்… சண்டை போட்டுக்கிட்டு இருக்க சொல்றியா?”

 

“சரி சண்டை போட வேண்டாம்? அடுத்து என்ன செய்ய போறீங்க? என்ன முடிவு எடுத்திருக்கீங்க?”

 

“முதல்ல மதுரா சரியாகி வரட்டும்”

 

“நேத்து எம்பொண்ணு செத்திருந்தான்னா இன்னைக்கு ஒரு பிடி சாம்பலாயிருப்பா… இன்னமும் உங்க தங்கச்சி மேலையும்… தங்கச்சி பையன் மேலையும் ஆசை விட்டுப்போகலையா உங்களுக்கு?”

 

“இது மதுரவரோட வாழ்க்கை. அவளோட ஒப்பீனியன் தெரியாம நாமளா எந்த முடிவையும் எடுக்க முடியாது பிரபா”

 

“கல்யாணம் செய்யும் போது அவளோட ஒப்பீனியன் கேட்டுத்தான் செஞ்சீங்களா? பார்த்துப்பார்த்து வளர்த்த எம் பொண்ண அடிச்சு கொடுமை படுத்தியிருக்கான். கையை ஒடச்சிருக்கான்… என் வயிறு எரியுது… நீங்க எப்படி பொறுமையா இருக்கீங்க?”

 

“பொறுமையா இல்ல பிரபா… நிதானமா இருக்கேன்”

 

“உங்க நிதானத்தை கொண்டு போயி குப்பையிலே போடுங்க”

 

“என்ன செய்ய சொல்ற நீ?”

 

“எம் பொண்ணுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது. விடுதலை வாங்கி கொடுங்க… எம் பொண்ண காப்பாத்திவிடுங்க ப்ளீஸ்…” – கையெடுத்துக் கும்பிட்டாள்.

 

“சரி… லீகலா அப்ரோச் பண்ணலாம்…”

 

“அதுக்கெல்லாம் நேரம் இல்ல… இப்பவே… இப்பவே அவனுக்கும் எம் பொண்ணுக்கும் ஒண்ணும் இல்லைன்னு ஆகணும். அவனோட நிழல் கூட எம் பொண்ணுமேல இனி படக் கூடாது”

 

“அது எப்படி முடியும்…?”

 

“களைச்சு விட்டுட சொல்லுங்க… அவனோட குழந்தை எம் பொண்ணு வயித்துல இருக்கு… அது வேண்டாம்… அந்த அசிங்கம் எம் பொண்ணுக்கு வேண்டவே வேண்டாம்… அந்த குழந்தையை சாக்கா வச்சுக்கிட்டு அவன் எம் பொண்ண நெருங்க கூடாது… வாங்க… வந்து டாக்டர்கிட்ட பேசுங்க. உடனே கிளியர் பண்ண சொல்லுங்க” – ஆவேசப்பட்டாள்.

 

 




14 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepa I says:

    Prabavathi dev kitta adivangedatha.nice ud sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    loossaamaa neeeeee
    nice ud sis
    kutty yepdi irukkaa sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Adipavi nee lam oru amma va mosta avangalukula vantha prblmku neethan reasone Deva pathi thappave purinjikitu avanga appa pannatha solli kamichiye avana ipadi iron mana akitu ipa deva korai solra…nee en kaila kidacha mavale setha nee…madhu sikaram ezhunthuko un amma n dilipa thaiyavu senji nambatha…dev nee azhara so sweet of u deftnly dev take care of madhu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Idiot prabavathi sariyana lusu pola… babya poi kalaika solra cha …. dev pavummm


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    தேவ் காட்டுமிராண்டி தனமா நடவடிக்கைக்கு பிரபாவதி நீ சொன்ன வார்த்தை தான் காரணம் .திரும்பவும் ஆரம்பித்து விட்டாயா .


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Depression eh romba mosam idhula pregnancy time la innum mosama irukum….idhula irundhu madhura va eppadi meeteduka porano Dev….adi paavi prabavathi nee dhaan ella pirachanai kum kaaranum idhula baby ah abort panna solran….Dev ah thaandi ungalala onnum seiya mudiyadhu😡


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    பிரபாவதியின் தாய்பாசம் தன் பெண்ணிற்காக பார்க்கின்றது ,அது சரியானதுதான் ,ஆனால் குழந்தையை அழிக்கச்சொல்வது எந்த விதத்தில் நியாயமானது,பிரபாத் இக்கு இவ்வளவு கொடூரமான மனதா?

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Chi chi ponna ithu… Kuzhanthaiya kalaikanuma nee pisasu than … Konne poduven odi poidu … Madhu eppo kannai thirappa sathi nadakkuthu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    அடி மடியிலேயே கை வைக்கிறாளே…பாவி.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mary G says:

    First


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    பிரபாவதி உனக்கு மண்டையில் கூறு இருக்கா? உன்னால தான் இத்தனை பிரச்னையும், நீ மூடிகிட்டு போயேன் , வாயில் எனக்கு அசிங்க அசிங்கமா வருது.. பீடை ஒழிந்தது போல் ஆசுவாசமானான் தேவராஜ் சரியான வார்த்தை … சீக்கிரம் அடுத்த எபி தாங்க..


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Lakshmi Narayanan says:

      Haha … Relax da ..


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Uma Deepak says:

        எங்க அக்கா ரிலாக்ஸ் ஆகுறது, இந்த மதுரா பாவம் .. அவங்க அம்மா இப்படி பேசலாமா, மகள் மனதில் என்ன இருக்கிறது என்று கூட தெரியாமல் இருக்கலாமா.. தேவ் மேலையும் டன் டன் டனா கோபம் இருக்கு, அடுத்து என்ன செய்ய போறான் பார்த்துட்டு தான் அடுத்த வேலை.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    Prabhavathi eppadi pesi pesi than avan ippadi agitan

You cannot copy content of this page