Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 40

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 80

அத்தியாயம் – 80

மகளின் கன்றி சிவந்திருந்த கன்னம்… புசுபுசுவென்று வீங்கியிருந்த கை… மூக்கிலிருந்து தொடர்ந்து கசிந்துக் கொண்டிருந்த ரெத்தம்… அனைத்தையும் பார்த்து துடித்துப் போயிருந்த நரேந்திரமூர்த்தியை தனியாக அழைத்து வேப்பிலை அடித்தாள் பிரபாவதி. தன் மகளின் உயிருக்கு ஆபத்து… அவன் மதுராவை கொன்று விடுவான் என்று அச்சுறுத்தினாள்… அவனிடமிருந்து மதுராவை விடுவிக்க வேண்டும் என்று வேண்டினாள். அவனோடு தொடர்புரைய எதுவும் நம் மகளுக்கு வேண்டாம் என்றாள். அவளுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துத்தர வேண்டும்… அதற்கு தடையாக இந்த குழந்தை இருக்கக் கூடாது என்றாள். கருதானே… கலைத்துவிட்டால் போகிறது… என்று அலட்சியமாக பேசி அவருக்கு தைரியம் கொடுத்தாள்.

 

ஆரம்பத்தில் சற்று பதட்டமடைந்தாலும் மனைவியின் கடுமையான ‘பிரைன் வாஷ்’ நரேந்திரமூர்த்தியை மாற்றி யோசிக்க வைத்தது. பிரபாவதி சொல்வதெல்லாம் சரிதான் என்று தோன்றியது. அன்றே தேவ்ராஜை வேண்டாம் என்று எச்சரித்தாள். அப்போது அவளுடைய பேச்சை கேட்கவில்லை. இப்போதும் அதே தவறை செய்யக் கூடாது என்று எண்ணினார். மகளின் நலனுக்காக செய்யும் எதுவும் நியாயம் என்று நினைத்தார். அதோடு கருவை கலைப்பது ஒன்றும் கொலைக்குற்றமல்ல… மகளின் எதிர்காலத்திற்கு தடை என்றால் கலைத்தெறிந்துவிட்டு போகவேண்டியதுதான் என்கிற மனைவியின் கூற்றை ஏற்றுக் கொண்டு மருத்துவரை சந்திக்கச் சென்றார்.

 

“ஆர் யூ ஷுர்? இதை செஞ்சுதான் ஆகணுமா?” – மருத்துவரின் புருவம் மேலேறியது.

 

“நிச்சயமா… இந்த குழந்தை எங்களுக்கு வேண்டாம்”

 

“கொஞ்சம் யோசனை பண்ணுங்கம்மா. அவசரப்படாதீங்க”

 

“நல்லா யோசிச்சிட்டோம் டாக்டர். எங்க பொண்ணோட நிலைமையை பார்த்தீங்கள்ல? அவனை நம்பி இனி எப்படி எங்க பொண்ணை அங்க அனுப்ப முடியும். அவளோட வாழ்க்கைக்கு இதுதான் நல்லது. ப்ளீஸ்… முடியாதுன்னு சொல்லிடாதீங்க”

 

“தேவ்ராஜை பார்த்தா கொஞ்சம் ஒரு மாதிரியான ஆளாத்தான் தெரியுதும்மா… ஆனா உண்மையிலேயே அவர் அப்படி இல்ல. அவருக்குள்ளேயும் சாஃப்ட் பீலிங்ஸ் இருக்கு. நா பார்த்தேன். கொஞ்சம் யோசிங்க… ஒரு குழந்தையை அபார்ட் பண்ணறது சாதாரண விஷயம் இல்லம்மா…”

 

“இல்ல டாக்டர்… உங்களுக்கு தெரியாது. அவன் ஒரு கொலைகாரன். என் பொண்ண கொன்னுடுவான். வேண்டாம்… அவனோட அப்பனுக்கு குடும்பத்துமேல சாஃப்ட் பீலிங் இருந்துல்ல இவனுக்கு இருக்கணும். ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைங்க. எம் பொண்ணுக்கு அந்த நரகம் வேண்டாம். ப்ளீஸ் டாக்டர்… ப்ளீஸ்…”

 

“சரி… அந்த பையன் வேண்டாம்னா டைவர்ஸ் பண்ணிட்டு போகலாமேம்மா… எதுக்கு அபார்ஷன்?” – தயங்கினார்.

 

“அவனே வேண்டாம்னு ஆனா பிறகு அவனோட பிள்ளை மட்டும் எதுக்கு?” – வெறுப்புடன் முகத்தை சுளித்தாள்.

 

‘பிறக்காத குழந்தை மீது இத்தனை வெறுப்பா!’ – மருத்துவர் ஆச்சரியப்பட்டார்.

 

“சார்… அவங்க எமோஷனலா பேசறாங்க… நீங்களாவது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க… யோசிச்சுப்பாருங்க… அந்த குழந்தை உங்க பொண்ணுக்கும் குழந்தை தானே?” – அதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் சிலைபோல் அமர்ந்திருந்த நரேந்திரமூர்த்தி கடைசியாக வாயைத் திறந்தார்.

 

“இதை கிளீயர் பண்ணறதுக்கு என்ன ப்ரொஸிஜரோ அதை செய்ங்க”

 

“ஹௌ அபௌட் மிஸ்டர் தேவ்ராஜ்? அவர் இதுக்கு ஒத்துப்பாரா?”

 

“அவன் ஏன் ஒத்துக்கணும்? இது என்னோட முடிவு”

 

“லீகலா பிரச்சனை வரும் சார்”

 

“எந்த டாகுமெண்ட்ல வேணுன்னாலும் நான் சைன் பண்ணறேன். பினிஷ் இட் ஆஃப்” – உறுதியாக கூறினார். மருத்துவருக்கு வேறு வழியில்லை.

 

“மதுராவுக்கு நிறைய பிளட் லாஸ் ஆகியிருக்கு. வீக்கா இருக்காங்க. ஒரு வாரம் போகட்டும்… பார்த்துக்கலாம்… அதுவரைக்கும் இந்த மாத்திரையை கொடுங்க…” என்று கூறி கருக்கலைப்பு மாத்திரையை எழுதிக் கொடுத்தார்.

 

************************

 

மனைவியின் கையை பிடித்தபடியே அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த தேவ்ராஜ், அவளிடம் அசைவு தெரிந்ததும் சட்டென்று பதட்டமானான். ஆவலோடு அவள் முகத்தைப் பார்த்தான். இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. எப்படி ரியாக்ட் செய்வாளோ என்கிற பயம் ஆட்டி வைத்தது. அவள் மெல்ல கண்விழித்தாள். இவன் அமைதியாக அமர்ந்திருந்தான். இவருடைய பார்வையும் ஓரிரு நொடிகள் கூடி கலந்தன. தேவ்ராஜின் பதட்டம் பலமடங்கு அதிகமானது. அவளிடம் என்ன பேசுவதென்று அவனுக்கு புரியவில்லை.

 

அவள் சோர்வுடன் மீண்டும் கண்களை மூடிக் கொண்ட போது இவன் அவளுடைய மென்கரத்தில் இதழ் பதித்தான். மூடிய இமைகளை சட்டென்று விரித்த மதுரா அவனை வெற்றுப்பார்வை பார்த்தாள். அன்பு… நேசம்… காதல்… கோபம்… வெறுப்பு… எதுவுமே இல்லை அந்த பார்வையில். யார் நீ என்று கேட்டு எட்டி நிறுத்திய அவள் பார்வை அவனை கூறு போட்டது. மெளனமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “ப்ளீஸ் டோன்ட் ஹேட் மீ மது” என்றான் கரகரத்த குரலில் முணுமுணுப்பாக. அவள் பதில் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டாள். மீண்டும் அவளிடம் வழக்கடித்து அவளுடைய பிரஷரை அதிகமாக்க விரும்பாமல் அமைதியாகிவிட்டான் தேவ்ராஜ்.

 

சற்று நேரத்தில் உள்ளே வந்த இராஜேஸ்வரி, “தேவ்… ஒரு நிமிஷம் இங்க வா…” என்று மகனை தனியாக அழைத்து “வீட்டுக்கு போயி குளிச்சுட்டு டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கிட்டு வா” என்றாள்.

 

“இல்ல வேண்டாம்…”

 

“காலையிலிருந்து நீ எதுவும் சாப்பிடலைப்பா… வீட்டுக்கு போயிட்டு கொஞ்சம் பிரெஷ் ஆயிட்டு வா…” – அப்போதுதான் அவனுக்கு நினைவே வந்தது.

 

“ம்மா… நைட்லேருந்து இங்க இருக்கீங்களே! ஏதாவது சாப்பிட்டீங்களா?” என்றான்.

 

“என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீ கிளம்பு”

 

“சாப்பிட்டீங்களா இல்லையா?”

 

“கேன்டீன் இருக்குப்பா… நா பார்த்துக்கறேன் நீதான் பேயடைஞ்ச மாதிரி இருக்க” – நேற்று இரவு கடுமையான போதை… அதன் பிறகு ஊசி மருந்து… இப்போது வரை எதுவும் உண்ணவில்லை… உண்மையில் பேயடைந்த மாதிரிதான் இருந்தான். தாய் மனம் கேட்காமல் போராடியது.

 

தேவ்ராஜ் ட்ரைவரை வர சொல்லி அன்னையிடம் சமாதானம் சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் மதுராவின் அறைக்கு சென்ற போது, அவள் எழுந்து கட்டிலில் அமர்ந்திருந்தாள். கண்கள் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தன. அதே அறையில் இருந்த பிரபாவதி அலமாரியில் எதையோ குடைந்துக் கொண்டிருந்தாள்.

 

“சாப்பிட ஏதாவது கொடுத்தீங்களா?” – நர்ஸிடம் கேட்டான் தேவ்ராஜ்.

 

“சாப்பிட்டாங்க சார்… மெடிசன்ஸ் கொடுக்கணும்…”

 

“ம்ம்ம்… கொடுத்துடுங்க…” – தேவ்ராஜ். நர்ஸ் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து வந்த போது, “இந்தாம்மா… மத்த மருந்தோட இதையும் சேர்த்து கொடு…” – பிரபாவதி ஒரு மாத்திரை டப்பாவை நீட்டினாள்.

 

“இது என்ன டேப்லெட்?” – டப்பாவை வாங்கிப் பார்த்த நர்ஸ் அதிர்ச்சியோடு பிரபாவதியை ஏறிட்டாள். மனைவியின் முகத்திலேயே பார்வையை பதித்திருந்த தேவ்ராஜ் தன் முதுகுக்கு பின்னால் நடக்கும் நாடகத்தை கவனிக்கவில்லை.

 

“டாக்டர் எழுதிக் கொடுத்ததுதான்…” – பிரபாவதி.

 

“எனக்கு பிரிஸ்கிரிப்ஷன் வரலையே!”

 

“வேணுன்னா போயி கேட்டுட்டு வாயேன்… என் பொண்ணுக்கு கெடுதலானதை நானே கொடுப்பேனா என்ன?” – நொடித்துக் கொண்டாள்.

 

“ஓகே மேடம்… டாக்டரை கலந்துக்காம நான் எதையும் கொடுக்க முடியாது. செக் பண்ணிட்டு வந்துடறேன்” – மாத்திரை டப்பாவுடன் வெளியேச் சென்றாள்.

 

சற்று நேரத்தில் மீண்டும் அந்த அறைக்கு வந்த நர்ஸின் முகம் வாடியிருந்தது. மனம் ஒப்பாமல் அந்த மருந்துகளை அவளுக்கு வழங்கினாள். தேவ்ராஜின் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒவ்வொரு மாத்திரையாக விழுங்கினாள் மதுரா.

 

இராஜேஸ்வரி மீண்டும் மருத்துவமனைக்கு வந்த போது அவளோடு பாரதியும் மாயாவும் உடன் வந்தார்கள். மாயாவின் கையை பிடித்துக் கொண்டு வந்த ஆதிரா தூரத்தில் நின்ற தந்தையைப் பார்த்ததும் தாயின் கையை உதறிவிட்டு, “டா…டி…” என்று ஓடி அவனிடம் தாவி ஏறினாள். மயிர்கூச்செரிய மகளை அள்ளி அனைத்து முத்தத்தில் குளிப்பாட்டினான் துருவன். மகளை கொஞ்சி கலையாரிய பிறகு, “யாரோட வந்த?” என்று விசாரித்தான். அவள் தாயின் பக்கம் கைகாட்டினாள்.

 

அதுவரை கணவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மாயா, அவன் தன் பக்கம் திரும்பிய போது சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். அவனுடைய பார்வையை சந்திக்க மனமில்லை அவளுக்கு. குனிந்த தலை நிமிராமல் மதுராவின் அறைக்குள் நுழைந்தாள். தாயின் வற்புறுத்தலுக்கு இணங்கி உடன் வந்த பாரதியும் கடமைக்காக மதுராவை சென்று சந்தித்தாள்.

 

மனித மனம் எப்போது எப்படி மாறும் என்று யாராலும் கூற முடியாது. தன்னை போல் எந்த துன்பத்தையும் அனுபவிக்காமல் பெற்றோரின் அரவணைப்பில் ராஜகுமாரியாக வளம் வந்த மதுராவின் மீது மாயாவிற்கு பொறாமை இருந்தது உண்மைதான். ஆனால் அந்த பொறாமைக்கு வித்திட்டது பிரபாவதியின் அதிகப்படியான அலட்டல் என்பது மாயாவின் மனதிற்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

 

குடும்பமே ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி கலந்தாலோசிக்கும் போது மருமகளை மட்டும் நாசுக்காக ஒதுக்கிவிடுவது பிரபாவதியின் வழக்கம். மகளுக்கு ஏதேனும் நல்லது நடக்கும் போது கண் பட்டுவிடுமோ என்று அவளுடைய வெற்றிகளை மாயாவிடமிருந்து மறைப்பது அவளுடைய மனப்பாங்கு. மருமகளின் காதுப்படவே அவளுடைய குடும்பத்தை ஜாடையாக பழிப்பதும் இகழ்ந்து பேசுவதும் அவளுடைய துர்குணம். பிரபாவதியின் சின்னச்சின்ன செயல்கள் நாளடைவில் மாயாவின் மனதை முழுக்க முழுக்க நஞ்சாக மாற்றியது. கணவனைத் தவிர ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெறுத்தாள்.

 

அப்போதுதான் மதுராவின் திருமணப் பேச்சு ஆரம்பமானது. அவளுக்கு வரும் மாப்பிள்ளைகள் மாயாவிடமிருந்து மறைத்து வைக்கப்படுவதை அறிந்த போது அவள் மனம் கல்லாக மாறியது. அதோடு நிற்கவில்லை… நரேந்திரமூர்த்தி மதுராவை தேவ்ராஜிற்கு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அவ்வளவுதான்… வெறும் வாய்க்கு கிடைத்தது அவல் என்று அவன் பெயரை ஆளாளுக்கு மென்று துப்பினார்கள். மாயாவின் காதுப்படவே அவள் அண்ணனுடைய குணத்தையும் தொழிலையும் கழிவென இகழ்ந்து, மதுராவை புண்ணியாத்மா என்று கூறி அவளை கோபுரத்தில் கொண்டுச் சென்று அமரவைப்பது போல் பீற்றி கொண்டார்கள். அனைத்தையும் அதே வீட்டிலிருந்தபடி சகித்துக் கொண்ட மாயா, மதுராவை வெறுத்தாள். அது தவறென்று அவளுக்கு தோன்றவில்லை. அந்த வீட்டிலிருக்கும் யாரையும் அவள் மனதிற்கு பிடிக்கவில்லை. அவர்களுடைய மகிழ்ச்சி அவளுக்கு வயிற்றெரிச்சலாகத்தான் இருந்தது.

 

மதுராவின் கண்ணீரில் அந்த வீடே கதறும் என்றால் அவள் அழட்டும் என்று எண்ணினாள். அவள் எண்ணியது ஈடேறுவதற்குள் தன் அண்ணனின் விருப்பம் அவள் மீது இருப்பதை தெரிந்துக் கொண்டாள். மனதிற்குள் இருக்கும் வெறுப்பை அப்படியே ஓரம் கட்டிவிட்டு அந்த காரியத்தை செய்தாள். மதுராவிற்கு நடக்க இருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு அவளை தன் அண்ணனோடு சேர்த்து வைத்தாள்.

 

சுயநலம் தான்… சதி வேலைதான்… ஆனால் அதற்காக அவள் அன்று வருத்தப்படவில்லை. தேவ்ராஜை போல் ஒரு மாப்பிள்ளைக் கிடைக்க மதுரா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று தான் நினைத்தாள். அந்த எண்ணம் தவறோ என்று இன்று தோன்றியது. கையில் கட்டோடு கண்மூடி படுத்திருக்கும் மதுராவைக் கண்டு அவள் மனம் பரிதாபப்பட்டது.

 

மதுரா மாயாவிற்கு பிடிக்காதவள் தான்… வெறுப்பிற்கு உள்ளானவள் தான்… ஆனால் அவள் இவ்வளவு தூரம் உயிர்வதை படவேண்டும் என்று மாயா எண்ணியதில்லை. தேவ்ராஜின் செய்த காரியத்தை அவள் மனம் ஏக்கவில்லை. தமையனை தனியாக அழைத்து பேசினாள்.

 

“என்ன தேவ் பாய் இதெல்லாம்? அவ மேல இன்ட்ரெஸ்ட் இருந்ததாலதானே கல்யாணம் பண்ணுனீங்க! அப்புறம் ஏன் இப்படி?”

 

“ப்ச்… எதையும் கேட்காத மாயா. என்கிட்ட எந்த பதிலும் இல்ல. நீ வீட்டுக்கு கிளம்பு” – பேச்சை தவிர்க்க முயன்றான் தேவ்ராஜ்.

 

“ஒரே அறை… என்னால இப்பவும் அந்த அவமானத்துலேருந்து வெளியே வர முடியல தேவ் பாய்… துருவனோட முகத்தைக் கூட என்னால பார்க்க முடியல… நீங்க ஏன் இப்படி பண்ணுனீங்க? நாளைக்கு உங்க லைஃப் எப்படி ஸ்மூத்தா போகும்?” – பதில் சொல்ல முடியாமல் எங்கோ வெறித்தான் தேவ்ராஜ்.

 

“நீங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் அவ்வளவு பெரிய ரிஸ்க்கை எடுத்தேன்… ஆனா நா செஞ்ச காரியத்துக்கு இப்போ அர்த்தமே இல்லாம போயிடிச்சு” – வருத்தத்துடன் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றாள்.

 

 




20 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Priya Doss says:

    Please sister don’t kill that child madura Ku therinchi ava amma va verukanum


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ananthykarthik AK says:

    super


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya Karthigan says:

    கனல்விழி காதல் அடுத்த அத்தியாயம் பதிவேற்றம் செய்ய இன்றைக்கு தாமதமாகும் ஃபிரண்ட்ஸ்… நேரம் குறிப்பிட இயலாது… காத்திருக்க வேண்டாம்…. நன்றி…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ponrasu Paramasivam says:

    Super story next update I am waiting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Dev sirupillaiyaka irukkum pothu phirabavathia atittharkku ippo devukku thantanai kotukkira phirabavathikku thimir athikam ana kannitippa mathu atharkku pathilati kotuppa kotukka ventum. Devukku intha visayam therinthu pirachchani panninal vera our pirachchanai varum so mathu nee than intha pirachchanaikku mutivu kattaventum.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepa I says:

    When will Madura realise dev love.prabavathi not a mother. How dare she do this to devs wife.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ்வை எனக்கு பிடிக்காதுதான் அதைவிட இந்த பிரபாவதி அம்மையாரை இன்னும் பிடிக்கவில்லை ,ஆயிரம் பிரச்சனை இருக்கட்டும் குழந்தையை அழிப்பது என்பது என்க்கு உடன்பாடில்லாத விடயம் அதற்கு அந்த மருத்துவப்பெண் சம்மதித்து அதை விட அதிற்சியாக இருக்கின்றது,இப்போ தன்புருசனை சமாதானம் பண்ணி சம்மதிக்க வைத்தமாதிரி அன்று தேவ்வை மதுரா திருமணம் செய்யவிடாமல் தடுத்திருக்கலாமே பிரபாவதி.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Chriswin Magi says:

    wow super ethirparthen Intha reaction from Maya.. Soon Dev change aiduvaru nu thonuthu 👍👌


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    very very super update. eagerly waiting for your next ud.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    போச்சு,மாத்திரை முழுங்கிட்டாளே?


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Pon Mariammal Chelladurai says:

      தேவ் பிள்ளை ஸ்டராங்…கருவிலேயே பாட்டியை தோற்கடித்து வருவான்.


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Daisy Mary says:

        ☺️👍


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    No nithya … paappaku ethuvum aaga koodathu…. dev ku intha punishment rumba athigam. .. plzz nithya. ..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Hmmmuuuuu mummmy😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 nanae aluthuten pavum madhu and dev andha prabavathi mattum yenkaiyula kudunga thani naa sapesthanu…mmmmm


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    மாயா மனசுல வெறுப்பு வரதுக்கும் இந்த பிரபாவதி தான் காரணமா….அய்யோ Tablets குடுக்க ஆரம்பிச்சுட்டாங்களே….தேவ் அது abortion tablet னு தெரிந்து நிறுத்த வைத்தாலும் குடுத்த மாத்திரைகள் குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்குமோ….அய்யோ


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Ada pavi Prabavathi


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    kumudha devi says:

    Podhum pa… Idhukku mela kadhaila stress thaanga mudiyaadhu… Konjam happy moments kondu vaanga pa…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    அசிங்கமா இருக்கு பிரபாவதி பண்ணியது.. மதுராவுக்கும் தேவ்க்கும் உள்ள பிரச்சனையை அவங்களே தீர்த்துக்கணும் , நடுல இப்படி இவர்களே குடும்பத்தை சிதைக்க விடுவது தவறு..
    மகள் மீது பாசம் இருக்க வேண்டியது தான், அதுக்கு இப்படியா , அவ கிட்டயும் கேட்காம அவன் கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லாம இப்படி செய்தது தவறு.. சீக்கிரம் அடுத்த எபி கொடுங்க அக்கா..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    hayoooooo brabaaaamaaaaa niyaayamaaaa ipdi marunthu kudutheeteengalayyyyyy DEV KKU THERINTHAALL YENNAA AAGUM…MAYAAAAA UNAKU IPPA SANTHOSAMAAAAAAAA


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Ena sis ipadi panitinga…baby abort agiduma…chi prabhavathi ena charactr ava enake avala kolla thonuthu…madhu yen ipadi iruka dev epadi itha thanguvan…

You cannot copy content of this page