கனல்விழி காதல் – 81
10642
18
அத்தியாயம் – 81
வீட்டுக்கு புறப்படும் நேரம் நெருங்கிவிட்டது. ஆதிராவைத் தேடி அலைந்த மாயாவின் கண்கள் ஏமாற்றத்துடன் தாயின் பக்கம் திரும்பியது.
“குட்டிமா துருவனோட கேன்டீன்ல இருக்கா… இப்ப தான் பார்த்துட்டு வந்தேன்” – மகளின் முகத்தை பார்த்தே அவளுக்கு தேவைப்பட்ட விபரத்தை அளித்தாள் இராஜேஸ்வரி.
யாரை அனுப்பி குழந்தையை அழைத்து வர சொல்வது என்று புரியாமல் சற்று நேரம் காத்திருந்தாள் மாயா. நேரம் கடந்துக் கொண்டே சென்றது. குழந்தை தானாக நம்மை தேடி வருவாள் என்கிற மாயாவின் நம்பிக்கை நீர்த்துப் போனது. இப்போது இருக்கும் சூழ்நிலையில், குழந்தையை அழைத்துவர யாரை அனுப்பினாலும் பிரச்சனை பெரிதாகும் வாய்ப்பு இருப்பதாக தோன்ற, வேறு வழியின்றி அவளே கேன்டீனுக்கு சென்றாள்.
குழந்தை அவள் தந்தையின் மடியில் அமர்ந்திருந்தாள். அவன் அவளிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தான். தூரத்திலிருந்தபடி அவர்களை பார்த்த மாயா சற்று தயங்கி நின்றாள். பிறகு மனதை திடப்படுத்திக் கொண்டு அவர்களிடம் நெருங்கினாள்.
“குட்டிமா… டைம் ஆச்சுடா… கிளம்பு…” – அவன் முகத்தை ஏறிட்டு பார்க்காமல் கூறினாள்.
ஆதிரா தாயை நிமிர்ந்து பார்க்காமல் தந்தையின் வயிற்றை இன்னும் இறுக்கமாக கட்டி கொண்டாள். அவளுடைய செய்கை மாயாவை வருத்தியது.
“குட்டிமா… கிளம்புடா…” என்றாள் அமைதியாக.
“டாடியும் வரணும்…” – பிடிவாதத்துடன் ஒலித்தது குழந்தையின் குரல்.
“நா போறேன். நீ வரியா இல்லையா?” – கண்டிப்புடன் கேட்டாள்.
“வரல…” – மகளின் வெடுக்கென்ற பேச்சில் புண்பட்டுப்போன மாயா, “அம்மா வேண்டாமா உனக்கு?” என்றாள் மனதிலிருக்கும் வேதனையை மறைத்தபடி.
“டாடி வேணும்” – தாயை திரும்பிப் பார்க்காமலேயே பேசினாள் ஆதிரா. துருவனுக்கு சங்கடமாக இருந்தது. மனைவியின் வருத்தத்தை அவன் ரசிக்கவில்லை.
“அதி குட்டி… இப்போ அம்மா கூட கிளம்புங்க. நாளைக்கு வந்து டாடியை பார்க்கலாம்…” என்று கூறி மகளை சமாதானம் செய்து அவளோடு அனுப்ப முயன்றான். ஆனால் அவள் கேட்கவில்லை. அடம் செய்து அழ துவங்கிவிட்டாள்.
மாயாவின் முகம் செத்துப் போய்விட்டது. ஆதிரா எதுவும் அறியா குழந்தை என்று மாயாவிற்கு புரிந்தாலும் அவள் தன்னை புறக்கணிப்பதாகவே தோன்றியது அவளுக்கு. அதுவும் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிய கணவனுக்கு முன்னிலையில் அவள் இப்படி செய்வது உயிர் போவது போல் இருந்தது. அவமானத்தில் முகம் சிவந்தது. ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது.
“குட்டிமா… நீ இப்போ வர போறியா இல்லையா?” – கோபத்துடன் அதட்டினாள்.
“ப்ச்… அவ குழந்தை. ஏன் அவகிட்ட சத்தம் போடற… உட்காரு இப்படி…” – சமாதானத்திற்கு முதல் அடியை எடுத்து வைத்தான் துருவன்.
கேண்டீனிலிருந்து வரும் பொழுது மூவரும் ஒன்றாக வந்தார்கள். மாயாவின் கண் இமைகள் தடித்திருந்தன. விழிகளும் முகமும் சிவந்திருந்தன. குடும்பத்தில் அனைவருடைய பார்வையும் அவர்கள் மீதே பதிந்திருந்தது. தன் கையிலிருந்த குழந்தையை மனைவியிடம் கொடுத்து,”பார்த்து போ…” என்றான். அவள் பதில் சொல்லாமல் குழந்தையை வாங்கி கொண்டு பாரதியை பார்த்தாள். சகோதரியின் பார்வையை புரிந்துக் கொண்டு, தாயிடம் விடைபெற்று உடன் கிளம்பினாள் தங்கை.
***********************
இரண்டாவது நாள் மதுரா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். பிரபாவதி மகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் முடிவில் இருந்தாள். கடைசி நேரத்தில் இது ஒரு பிரச்சனையாகக் கூடாது என்று நினைத்த நரேந்திரமூர்த்தி, தங்கையை தனியே அழைத்து தங்களுடைய முடிவை சொன்னார். இராஜேஸ்வரிக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. சில நாட்கள் அவள் தாய் வீட்டில் இருந்துவிட்டு வரட்டும். அப்போதுதான் தன் மகனுக்கும் மனைவியின் அருமை புரியும் என்று எண்ணி சம்மதித்தாள்.
விஷயத்தை கேள்விப்பட்ட தேவ்ராஜ் தாயிடம் கடுப்படித்தான். “எதுக்கு சரின்னு சொன்னீங்க? அவ எங்கேயும் போகமாட்டா… நம்ம வீட்டுக்குத்தான் வருவா. அவருகிட்ட போயி அனுப்ப முடியாதுன்னு சொல்லுங்க” என்றான் எரிச்சலுடன்.
“நாம என்னப்பா அனுப்பறது. முடிவை அவங்க எடுத்திருக்காங்க”
“அவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்னோட விஷயத்துல முடிவெடுக்க?”
“அவங்க பொண்ணு சம்மந்தப்பட்ட முடிவை அவங்க எடுக்கறாங்க. நீ எப்படி அதை தடுப்ப உனக்கு என்ன அதிகாரம் இருக்கு? பேசாம போ…” – கோபப்பட்டாள். தேவ்ராஜ் டென்ஷனுடன் உதட்டை கடித்தான். சற்றுநேரம் தீவிர யோசனையுடன் நின்றவன் பிறகு மதுராவிடம் சென்று, அவளிடம் பேச முயன்றான்.
ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்த மதுராவின் முகம் தேவ்ராஜை கண்டதும் இறுகியது. அவனுடைய பார்வையை சந்திக்க விரும்பாமல் தலை குனிந்துக் கொண்டாள். அழுத்தமான காலடிகளுடன் அவளிடம் நெருங்கி… கட்டிலுக்கு அருகே சேரை இழுத்துப்போட்டு அமர்ந்தான். ஓரிரு நிமிடங்கள் மெளனமாக அமர்ந்திருந்தவன் பிறகு ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு,
“மது… வீட்டுக்கு வா…” என்றான் அவளுடைய கையை பிடித்தபடி. அவனுடைய குரலிலும் முகத்திலும் தெரிந்த வருத்தம் மதுராவின் மனதை தொடவில்லை. உதடுகளை அழுந்த மூடியபடி இறுக்கமாக அமர்ந்திருந்த மனைவியின் மனம் கண்ணாடி போல் தேவ்ராஜின் கண்களுக்கு புலப்பட்டது.
“ப்ளீஸ்… டோன்ட் கோ அவே ஃப்ரம் மீ” – யாசித்தான். என்ன சொல்ல போகிறாளோ என்று மனம் பரிதவித்தது. புண்பட்டு போயிருந்த மதுராவின் மனம் அவனுடைய யாசிப்பையும் பரிதவிப்பையும் உள்வாங்கிக்கொள்ளவில்லை. உணர்வுகளை உள்ளே தள்ளி இரும்பு கதவுபோட்டு பூட்டிக் கொண்டவள் போல் இறுக்கமாக அமர்ந்திருந்தாள். தேவ்ராஜின் மனம் தவித்தது.அவளுடைய இந்த விலகலும் இறுக்கமும் அவனை அச்சுறுத்தியது.
“மது… ஐ ப்ராமிஸ் யூ… இனி… இனி இப்படி நடக்காது… ப்ளீஸ்…” – எடுத்துக்கூறி அவளை சமாதானம் செய்ய முயன்றான். அவள் எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை.
“ஐ காண்ட் லீவ் யூ மது… என்னால உன்ன… விட முடியாது… நிச்சயமா முடியாது…” – இயலாமையுடன் கூறினான். மதுராவின் பார்வை தன் கையில் சுற்றப்பட்டிருந்த சப்போர்ட் பெல்ட்டில் பதிந்தது. அவன் பிடியில் சிக்கியிருந்த இன்னொரு கையை நாசுக்காக உருவி, அந்த பெல்ட்டை வருடியபடி, “லீவ் மீ அலோன்” என்றாள் மெல்ல.
அவள் குரலில் இருந்த அந்நியத்தன்மை நெருஞ்சி முள்ளாக அவன் உள்ளத்தை தைத்தது. அவள் முகத்தையே சற்று நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “ஐம் சா…ரி… ” என்று முணுமுணுத்தான்.
அன்று மதுராவை பார்ப்பதற்காக மாயா குழந்தையோடு மருத்துவமனைக்கு வந்தாள். அவள் வரவேண்டுமே என்று ஆவலாக காத்திருந்த துருவன் மனைவியைக் கண்டதும் ஆசுவாசமடைந்தான். அவள் காரிலிருந்து இறங்கும் போதே அவளிடம் நெருங்கி மகளை கையில் ஏந்தி கொண்டான். மனைவியோடு சேர்ந்து நடந்து தங்கையின் அறைக்கு சென்றான். பூனைக்குட்டி போல் அவள் செல்லுமிடமெல்லாம் பின்னால் சென்றுக் கொண்டே இருந்தான். வெளியே அனுப்பும் போது சுலபமாக அனுப்பிவிட்டான். இப்போது ‘வீட்டுக்கு வா…’ என்று ஒரு வார்த்தை சொல்வது அவ்வளவு சுலபமாக இல்லை.
மிகுந்த பதட்டத்துடன் மகளை கையில் சுமந்தபடியே சுற்றிக் கொண்டிருந்தவன் மதுராவின் டிஸ்சார்ஜ் ப்ரொஸிஜெரெல்லாம் முடிந்த பிறகு மீண்டும் மனைவியிடம் நெருங்கினான்.
குடும்பத்தினர் அனைவரும் அவர்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். அவன் யாருடைய ஆலோசனைக்காகவும் சம்மதத்திற்காகவும் காத்திருக்கவில்லை. தன்னுடைய மனைவியும் குழந்தையும் தனக்கு வேண்டும் என்று தோன்றியது… தானே முன்வந்து அவளை, “வீட்டுக்கு வா” என்று அழைத்தான்.
கணவனை நிமிர்ந்து பார்க்காமல் குனிந்து கைவிரல்களை ஆராய்ச்சி செய்தபடியே, “யார் வீட்டுக்கு?” என்று வினவினாள் மாயா.
அவள் வில்லங்கமாக எதையோ சொல்லப்போகிறாள் என்று ஊகித்தபடி, “நம்ம வீட்டுக்குத்தான்” என்றான்.
“நம்ம வீட்டுக்கா! ஹா…” – கசப்பாக புன்னகைத்தாள். துருவன் பதில் சொல்லாமல் மனைவியின் முகத்தை கூர்மையாகப் பார்த்தான்.
“உங்க வீட்டுக்குன்னு சொல்லுங்க. அந்த வீட்ல எனக்கு என்ன உரிமை இருக்கு?”
“நீ செஞ்சது தப்புன்னு இன்னமும் உணரலையா?” – அவன் முகத்தில் கடுமை வந்தது.
சட்டென்று அவனை திரும்பிப் பார்த்த மாயா, “நீங்க செஞ்சது? அது சரியா?” என்றாள்.
“நடந்தது நடந்து முடிஞ்சிடிச்சு. அதை பத்தி பேசறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல… இன்னைக்கு மதுரா இருக்கற நிலைமைக்கு முக்கியமான காரணம் நீதான்… அதையும் மீறி நா உன்கிட்ட வந்து நிக்கிறேன்… இதுக்கு மேலையும் விவாதம் பண்ணி பிரச்னையை பெருசாக்கணும்னு நீ நினச்சா அப்புறம் உன்னோட இஷ்ட்டம்…” – கண்டிப்புடன் கூறினான்.
ஒரு காலத்தில் காதல் பொங்கி வழிந்த அவன் கண்களில் இப்போது கடுமையை காண்பது அவளுக்கு வேதனையாக இருந்தது. ஆனால் இதுதான் வாழ்க்கை… இதுதான் நிதர்சனம்… எல்லா நேரத்திலும் நம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிடாது. தன்னை அவமதித்ததற்காக கணவன் கடுமையாக வருந்த வேண்டும்… உருகி கரைய வேண்டும் என்றெல்லாம் மாயாவின் மனம் எதிர்பார்க்கத்தான் செய்தது. ஆனால் துருவனின் எல்லை மாயாவின் எதிர்பார்ப்பை எட்டித் தொடவில்லை. இருவருக்கும் இடையே பெரிய பள்ளம் இருந்தது. அதை அப்படியே விட்டுவிட்டால் பள்ளம் அதல பாதாளமாக மாறி அவர்களுடைய வாழ்க்கையை விழுங்கிவிடும் என்கிற அச்சம் அவளுக்குள் எழுந்தது. விட்டுப்பிடிப்பதுதான் வாழ்க்கை… வீம்புப்பிடித்தால் வெறுமைதான் மிஞ்சும் என்பதை அறிந்து, மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் கணவனோடு சேர்ந்து அவனுடைய வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தாள் மாயா.
18 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sriranjana Niranjan says:
Nice epi…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mary G says:
Not only photo but story also similar to Bashar momin.. Started seeing all episodes of it. So will bharathi betray dev for Monica’s brother
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
Yes… Similar but not Same… Thats why I’m updating episodes with relevant pictures from day one with out any hesitation.
I got inspired with Bashar… But I had some dislikes in him. So I imagined him the way I like him to be and I presented it.
So far 81 episodes of Kanalvizhi kadhal updated… which means around 100 scenes… You know better how long the scenes are similar…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Saranya Venkat says:
yes this story entirely differnt from bashar momin
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Chriswin Magi says:
Wowww kadaisila Sonnathu Semma vitupidipathu vazhkai👍 awsome ji Maya dhruv kuda poga othukitathu Semma👍☺
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dhivya Bharathi says:
Akka semma episode …but dev pavum avan avanoda mistakea realise panitanla then y madhu was so stubborn towards him…maya also so pavum at finally duruvan called to continue there relationship
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepa I says:
Madhu ammavettuku pokatha its very bad. Stay in ur house and fight with dev
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Nice ud mathu amma veettukku pona mathu va devkkita irunthu prabhavathi pirychchuruvanga
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
nice ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
அவ ரொம்ப காயப்பட்டு இருக்கா…,கொஞ்ச நாள் பிறிவு காயத்துக்கு மருந்தா ஆகும்….போகட்டும்….இனி மதுராவை வீட்டுக்கு கூட்டிட்டு வரது தேவோட சாமர்த்தியம்…மாயா திருந்தாத case…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Jayashree Swaminathan says:
Very interesting update. Human feelings described at its best. Thanks
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இன்னும் கூட மதுராவிடம் தன் அன்பை ஆதரவை மன்னிப்பை கொடுக்கணும் என்று தோன்றவில்லையா தேவ் .
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jansi r says:
நல்லப் பதிவு
துயரமா போயிட்டு இருக்கு
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Yazhvenba M says:
Antha tablets saptala 🙁 so sad sis 🙁
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kani Ramesh says:
Ena sis dev madhu va pirichi vaika poringala….dev pavam😭😭😭
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
சுயநல மாயா, தேவ்.
தனக்கு வேண்டுங்கிறப்ப….ஏற்றுக்கிட்டாள்.
ஒன்றுமில்லாமல் போறவன் தேவ்…வேண்டும்டா உனக்கு
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
selvipandiyan pandiyan says:
மாயா இன்னும் தன் தப்பை உணரவேஇல்ல,துருவன் இவ்ளோ இறங்கி வரதே பெரிய விஷயம்,மதுரா இப்போதைக்கு தேவை மன்னிக்க மாட்டா,குழந்தை விஷயம் என்னான்னு சொல்லவே இல்லியே?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
குழந்தை ….முடிந்ததோ…கா.
மாயா ..சுயநல மொத்த உருவம்..தேவ், மாயா இருவரும் மது தாயார் மீது எப்படி மனசாட்சியே இல்லாமல் பழி போட்டு தப்பிக்கிறாங்க..