கனல்விழி காதல் – 82
9854
10
அத்தியாயம் – 82
மருத்துவமனையிலிருந்து நேராக ஜுஹூவிற்கு அழைத்து வரப்பட்டாள் மதுரா. தாயின் அரவணைப்பும் ஆதரவும் அவளை சற்று ஆசுவாசப்படுத்தியிருந்தாலும், எதையோ தொலைத்துவிட்ட ஒரு உணர்வு அவளுக்குள் மிக ஆழமாக ஊடுருவியிருந்தது. அவளுக்கு பழக்கப்பட்ட அல்லது அவள் விரும்பிய ஏதோ ஒன்று இப்போது அவளிடம் இல்லை… இனி இருக்கப்போவதும் இல்லை… தனிமை… முழுமையின்மை… – இதை எப்படி சொல்வது…! எப்போதும் உள்ளே ஒரு வலி… பாரம்… துக்கம்… இருந்துக் கொண்டே இருந்தது. எதுவும் பேச பிடிக்கவில்லை… யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை… எதையும் கேட்கப் பிடிக்கவில்லை… அம்மா கொடுக்கும் மாத்திரையை போட்டுக் கொண்டால் நன்றாக தூக்கம் வருகிறது. தூங்கிவிட்டால் இந்த வலி… துக்கமெல்லாம் தெரிவதில்லை… அமைதி கிடைக்கிறது… நிம்மதி கிடைக்கிறது…
எந்த நேரம் பார்த்தாலும் உறங்கி கொண்டே இருக்கும் மகளைக் கண்டு அச்சம் கொண்ட நரேந்திரமூர்த்தி, “என்ன பிரபா… மது இப்படி தூங்கிகிட்டே இருக்காளே!” என்றார் கவலையுடன்.
“மருந்து சாப்பிடறால்ல… அதனாலதான்… வேற எதுவும் இல்ல… பயப்படாதீங்க”
“என்ன மருந்தோ ஏதோ… கண்டதையும் கொடுத்து அவ உடம்புக்கு ஏதாவது ஆயிடப்போகுது…”
“அதான் மொத்தமா நொறுக்கி மூட்டை கட்டி கொடுத்தனுப்பீட்டானே! இன்னும் என்ன இருக்கு வீணா போறதுக்கு” – முகம் சிவந்தாள்.
“சரி அதை விடு…” என்று அந்த பேச்சை தவிர்த்தவர், “அபார்ஷன் பத்தி எதுவும் பேசுனியா? நீபாட்டுக்கும் மருந்தை கொடுத்துக்கிட்டு இருக்க. நாளைக்கு அவ முடியாதுன்னு சொன்னா குழந்தைக்கு ஏதாவது ஆயிடும் பார்த்துக்க” என்றார்.
“அவ ஏன் முடியாதுன்னு சொல்லப் போறா… நம்மள மீறி எப்ப நடந்திருக்கா. உங்க பேச்சை கேட்டுகிட்டு அந்த வீணாப்போனவனுக்கே கழுத்தை நீட்டினா… இப்போ அவனையும் அவனோட வாரிசையும் மொத்தமா தலைமுழுகறதுக்கு மாட்டேன்னு சொல்லிடுவாளா” – நம்பிக்கையுடன் பேசினாள்.
“நீயாவே எல்லாத்தையும் முடிவு பண்ணிக்காத. அவகிட்ட பேசிடு” – மனைவியை எச்சரித்தார்.
“சரி சரி… இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்துடுவா… நா பார்த்துக்கறேன்” என்று கணவனுக்கு உறுதிக்கு கொடுத்த பிரபாவதி, சொன்னது போலவே மதுரா எழுந்ததும் அவளிடம் பேசினாள்.
மாலை நேரம்… உறக்கத்திலிருந்து எழுந்த மதுரா மெத்தையைவிட்டு இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். களைந்த கேசமும் சிவந்த விழிகளுமாக உறக்கக் கலக்கத்தோடு அமர்ந்திருக்கும் மகளிடம் நெருங்கி, “ஏன் இப்படியே உட்கார்த்திருக்க? எழுந்து போயி முகம் கழுவிட்டு வா… தலை சீவி நெத்தில பொட்டு வையி… என்ன குடி முழுகி போச்சு இப்போ” என்று மகளிடம் பேச்சு கொடுத்து அவளை இயல்பாக்க முயன்றாள். செவிடன் காதில் சங்கு ஊதுவது போல ஏதோ சிந்தனையிலேயே அமர்ந்திருந்தாள் மதுரா. ஒரு முறைக்கு பத்து முறை சொன்ன பிறகே படுக்கையிலிருந்து எழுந்தாள். தாயின் கட்டாயத்திற்காக முகம் கழுவி தலைவாரினாள்.
“வா… இப்படி வெளிய வந்து உட்க்காரு. எப்பவும் ரூம்லேயே அடைஞ்சு கிடைக்கணுமா?” – மகளை கூடத்திற்கு அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து தானும் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.
“நீ வருத்தப்படற அளவுக்கு எதுவும் கெட்டுப்போயிடல… நானும் டாடியும் இருக்கோம்ல? இதெல்லாம் சரி பண்ணிட மாட்டோம்? எதுக்கு கவலைப்படற நீ?” – மகளிடம் பேசி தைரியம் கொடுத்தாள். உணர்வுகளற்று வெறுமையாய் அமர்ந்திருந்த மதுராவின் செவிகளில் எதுவும் ஏறியதாகத் தெரியவில்லை. ஆனாலும் பிரபாவதி தொடர்ந்து பேசினாள்.
“பாரு மது… அவன் ஒரு காட்டான். தெரியாத்தனமா உங்க டாடி உன்ன அவன்கிட்ட மாட்டிவிட்டுட்டாரு. இப்போ ஒண்ணும் கெட்டுப்போயிடலை… நல்லதுதான் நடந்திருக்கு. அவன்கிட்டேருந்து விடுதலையாகி வர்றதுக்கு இது ஒரு நல்ல சான்ஸ். இதை நாம விட்டுடக் கூடாது”
“எங்க காலத்திலேயே புருஷன் மனைவி மேல கை வைக்க முடியாது. இந்த காலத்துல இவன் இப்படி ஒரு மனுஷன் இருக்கான்! ஹி இஸ் எ சிக் மேன்… அவன்கிட்டேருந்து வெளியே வந்துடறதுதான் நல்லது” என்று கூறி மகளின் முகத்தை சற்று நேரம் ஆழ்ந்து பார்த்தவள், “இந்த கரு… இது வேண்டாம் நமக்கு… மூணு மாசம் தானே… கலச்சுவிட்டுடுவோம்… கொஞ்ச நாள் ஃப்ரீயா இரு. அதுக்கு பிறகு உனக்கு ஒரு நல்ல லைஃபை அமைச்சு கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு” என்றாள்.
மகளுடைய ரியாக்ஷன் என்ன என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் பிரபாவதியின் விழிகள் அவள் முகத்தில் நிலைத்திருந்தது. மதுராவிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே உணர்வுகளற்ற முகம்… ஆனால் அவளுடைய உதடுகள் பிரிந்தன. ஏதோ சொல்ல போகிறாள்… என்ன… சம்மதித்துவிடுவாளா… எதிர்பார்ப்புடன் மூச்சைப் பிடித்துக் கொண்டு மகளை கவனித்தாள் பிரபாவதி. “பசிக்குது… சாப்பிட என்ன இருக்கு?” – முணுமுணுப்பாக வெளிப்பட்டது மதுராவின் குரல்.
சப்பென்று ஆகிவிட்டது அவளுக்கு! இதுதான்… இதை மட்டும்தான் மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்து செய்து கொண்டிருக்கிறாள். சாப்பிடுவது… உறங்குவது… என்னதான் ஆயிற்று இவளுக்கு… செய்வதற்கு… பேசுவதற்கு வேறு எதுவுமே இல்லையா! ஏன் இப்படி ஆகிவிட்டாள்! – நரேந்திரமூர்த்திக்கு இருந்த கவலை இப்போது பிரபாவதிக்கும் வந்தது.
எதேர்ச்சையாக தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்த மாயா, பிரபாவதியின் பேச்சை கேட்டு பேரதிர்ச்சிக்கு ஆளானாள். அதைவிட மதுராவின் ரியாக்ஷன் அவளுடைய விழிகளை வெளியே தள்ளியது. ‘குழந்தையை அழிக்க வேண்டும் என்று ஒருத்தி சொல்லிக் கொண்டிருக்கிறாள்…. இவள் என்னடாவென்றால் பசிக்கிறது என்கிறாளே!’ – அவளுக்கு மயக்கம் வராத குறைதான். கால் கையெல்லாம் வெடவெடத்தது… என்ன செய்வது என்று புரியவில்லை. இப்போதுதான் சமாதானமாகி வந்திருக்கிறோம்… அதற்குள் இவளுடைய பிரச்சனையில் மூக்கை நுழைப்பதா என்கிற பயம் ஒருபக்கம் இருந்தாலும்… குழந்தை அவளுடைய அண்ணன் குழந்தையாயிற்றே! விட்டுவிட முடியுமா! மனம் கேட்கவில்லை.
வீட்டுக்கு வந்ததிலிருந்து கணவனிடம் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவள் இப்போது வலியச் சென்று பேசினாள். “அபார்ஷன்னு பேசிக்கிறாங்களே… நீங்க எதுவும் சொல்லக் கூடாதா?” என்றாள்.
“மதுராவோட டிஸிஷன் தான் இறுதி… அவ என்ன முடிவெடுத்தாலும் நா கூட இருப்பேன். எதிர்க்க மாட்டேன்” – துருவன்.
“எதிர்க்க வேண்டாம். எடுத்து சொல்லலாம்ல… அபார்ஷன் பண்ணறதுன்னா அவ்வளவு ஈஸியா போச்சா உங்களுக்கு?” – கோபப்பட்டாள் மாயா.
“இந்த பிரச்னையை நமக்குள்ள கொண்டு வராம இருக்கறது நம்மளோட லைஃபுக்கு நல்லது” – உறுதியான குரலில் அவன் தன்னுடைய நிலைப்பாட்டை கூறிவிட மாயா வாயடைத்துப்போனாள்.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரபாவதி மதுராவின் மூளையை கழுவிக் கொண்டிருந்தாள். அதைப் பார்க்கப்பார்க்க மாயாவிற்கு வயிற்றை கலக்கியது. வேறு வழியே இல்லாமல் அலைபேசியை கையில் எடுத்தாள்.
*************************
தேவ்ராஜ் வெகு இயல்பாக இருந்தான். மதுரா வீட்டில் இருக்கும் போது எப்படி இருந்தானோ அப்படித்தான் இப்போதும் இருந்தான். நன்றாக உண்டு, உறங்கி, உடுத்தி கட்டுக்குலையாமல் கம்பீரமாகவே இருந்தான். அலுவலகத்திற்கு போவதும் வருவதும், அலைபேசியை கட்டி கொண்டு அழுவதுமாக இருக்கும் மகனைக் நினைத்து வெதும்பினாள் இராஜேஸ்வரி.
மதுராவை இங்கிருந்து அனுப்பியது தவறோ என்று தோன்றியது அவளுக்கு. காரணம்… அவளோடு மருத்துவமனையிலிருக்கும் போது அவன் முகத்தில் இருந்த வாட்டம் இப்போது இல்லை. சிறிதும் இல்லை… எப்படி இப்படி இருக்கிறான்! மனைவியை பிரிந்த வருத்தமே இல்லையா அவன் மனதில்! அவனுடைய தந்தை கூட நம்மை சுற்றிச்சுற்றி வந்தாரே! அவரைவிட மோசமானவனா என் மகன்! – அவள் மனம் வருந்தியது. தாயறியா சூல் உண்டோ என்று கூறுவார்கள்… ஆனால் இங்கே இருந்தது. தேவ்ராஜின் மனம் தாய் கூட அறியமுடியாத சூலாகத்தான் இருந்தது.
மாலை ஆறு மணியிருக்கும். தேவ்ராஜின் கார் வாசலில் வந்து நின்றது. வீட்டுக்குள் நுழையும் போதே கையிலிருந்த கோட்டை வேலையாள் ஒருவனிடம் தூக்கிப் போட்டுவிட்டு, கழுத்தில் சுற்றியிருந்த டையை முரட்டுத்தனமாக உருவி எறிந்தான். முழுக்கை சட்டையின் மணிக்கட்டு பொத்தானை அவிழ்த்து சட்டையை முட்டிக்கை வரை மடித்துவிட்டுக் கொண்டு, “காபி கொண்டுவா…” என்று வேலையாளுக்கு உத்தரவிட்டபடி சோபாவில் பொத்தென்று அமர்ந்தான்.
மகனுடைய குரல் கேட்டு வெளியே வந்தாள் இராஜேஸ்வரி. அதுவரை அவன் அமர்த்தலாக இருக்கிறான்… இயல்பாக இருக்கிறான் என்று கறுவி கொண்டிருந்தவளின் மனம் மகனைக் கண்டதும் நொடி பொழுதில் அந்தர் பல்டி அடித்தது. அவனுடைய இறுக்கமான முகம் அவளை கவலைக்கொள்ள செய்தது.
“என்னப்பா ஆச்சு?”
“காபி கேட்டேன் ம்மா…” – எரிச்சலுடன் சிடுசிடுத்தான். அவ்வளவுதான். அதற்குமேல் எதுவும் பேச முடியாது. வேலைக்காரன் ட்ரேயோடு வந்து நின்றான். அவன் கொடுத்த கசந்த கருப்பு காபியை ருசித்து அருந்திவிட்டு, “பாரதி எங்க?” என்றான்.
“ரூம்ல…” – தாயின் பதிலை தலையாட்டி அங்கீகரித்துவிட்டு படிக்கட்டில் எறியவன், நேராக தங்கையின் அறைக்குள் நுழைந்தான்.
“அப்புறம்… அடுத்து என்ன பிளான்?” – அமர்த்தலாக அமர்ந்துக் கொண்டு அவளிடம் புருவம் உயர்த்தினான்.
“என்ன தேவ் பாய்?” – புரியாமல் விழித்தாள் பாரதி.
“ஏதோ சொன்னியாமே! அம்மாகிட்ட…”
“ஆங்…. எம்பிஏ பண்ணலான்னு…”
“என்ன திடீர்ன்னு… இத்தனை வருஷம் கழிச்சு படிப்பு மேல ஆசை வந்திருக்கு?”
“இல்ல… சும்மாதானே வீட்ல இருக்கேன். ஜஸ்ட் ஒரு டைவர்ஷன்…”
“ஓஹோ…” – என்றபடி தலையை ஆட்டிக் கொண்டே தன்னுடைய அலைபேசியை தட்டினான். உடனே அவளுடைய கையிலிருந்த அலைபேசி பீப் ஒலியெழுப்பியது.
“எடுத்து பாரு…” – அவனுடைய உணர்ச்சிகளற்ற குரல் அவள் புருவங்களை முடிச்சிடச் செய்தது. சிந்தனையுடன் அலைபேசியை திறந்தாள். வாட்ஸ் ஆப் செயலி ஒரு இளைஞனின் புகைப்படத்தை திரையில் காட்டியது. பாரதிக்கு பகீரென்றது. தமையனின் எண்ணத்தை ஊகித்தவளாக, “யார் இது?” என்றாள்.
“ஹி ஐஸ் த ஒன்… ஹூ இஸ் கோண பி யுவர் லைஃப்… பார்ட்னர்…” – அவள் கண்களை பார்த்து அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
“வாட்!” – அதிர்ச்சியில் அவள் விழிகள் விரிந்தன.
“எஸ்… ஆல் பிக்ஸ்ட்” – இலகுவாகக் கூறினான்.
“நோ தேவ் பாய்… நோ…” பதட்டமடைந்தாள் பாரதி.
“ஏன்?” – அவனுடைய புருவம் சுருங்கியது. விழிகள் கூர்மையாகின.
“எனக்கு பிடிக்கல…” – இயலாமையுடன் கூறினாள்.
“ஐ வாண்ட் சாலிட் ரீஸன்….” என்று கண்ணோடு கண் பார்த்து அவளை கடுமையாக முறைத்தவன் “…புரியுதா?” என்று பற்களை நறநறத்தான். உள்ளுக்குள் உதறலெடுத்தது பாரதிக்கு.
“பாய் எனக்கு கல்யாணம் செஞ்சுக்க விருப்பம் இல்ல…” – கலங்கிப்போய் கூறினாள்.
“யார் காரணம்? அந்த மோனிகாவோட தம்பியா?” – கண்கள் இடுங்க கேட்டான்.
“நோ…” – உடனடியாக மறுத்தாள். அவளை நம்பகமில்லாமல் பார்த்தவன், “பின்ன?” என்றான்.
அமைதியான அழுத்தமான அந்த குரலுக்கு பதில் சொல்லாமல் யாராலும் புறக்கணிக்க முடியாது. இதயத்துடிப்பு அதிகமாகி வியர்த்து விறுவிறுத்து வறண்ட நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள, “தி…லீ…ப்…” என்று மெல்ல முணுமுணுத்தாள் பாரதி.
நாணருந்த வில்லாக விறைத்து நிமிர்ந்தான் தேவ்ராஜ். “வாட் யூ மீன்?” உறுமியது அவனது அடி குரல்.
“என்னால, அவனை என்னோட மைண்ட்லிருந்து எடுக்க முடியல தேவ் பாய்… நா ரொம்ப ட்ரை பண்ணறேன்… ஆனா… என்னால… முடியல…” – அவமானத்திலோ தன் மீதே தோன்றிய கோபத்திலோ முகம் சிவந்துவிட்டது அவளுக்கு.
“இல்ல… நா உன்ன நம்ப மாட்டேன்… ரெண்டு நாள் முன்னாடி நீ மோனிகாவை பார்த்திருக்க… ஐ காட் தி நியூஸ்…. அதுக்கு பிறகுதான் நான் இந்த ஏற்பாடு பண்ணினேன். இதை அவாய்ட் பண்ணறதுக்காக நீ பொய் சொல்ற… இதுதான் உண்மை… ஐ நோ ஆல் யுவர் அக்லி லைஸ் யூ டாம் இட்…” – அமைதியாக ஆரம்பித்தவன் போகப் போக குரலை உயர்த்திக் கத்தியபடி சீற்றத்துடன் எழுந்தான்.
“உண்மைதான் தேவ் பாய்… நா மோனிகா வீட்டுக்கு போனேன். ஆனா நா அங்க போனது அவங்களை பார்க்க மட்டும்தான். அவங்க தம்பியோட எனக்கு எந்த சம்மந்தமும் இல்ல… ஹி இஸ் நத்திங் டு மீ…” – உண்மையைத்தான் சொன்னாள். ஆனால் அந்த உண்மை அவனை திருப்திப்படுத்த வேண்டுமே!
“ஹவ் டேர் யூ! மோனிகா வீட்டுக்கு போனேங்கறதை என்கிட்டயே தைரியமா சொல்ற…! சரி இனி மறச்சு பேச எதுவும் இல்ல… எம்பிஏ – கிம்பிஏ ன்னு கதைவிடாம இப்போ சொல்லு. வாட்ஸ் யுவர் ட்ரு பிளான்?”
“எதுவுமே இல்ல தேவ் பாய்… ஜஸ்ட் மைண்ட் டைவர்ஷனுக்கு ஏதாவது படிக்கலாம்னு நினைக்கறேன். அவ்வளவுதான்”
“அப்போ எதுக்கு மோனிகாவோட ரிலேஷன்ஷிப்?”
“ஐ டோன்ட் நோ… அவங்ககிட்ட பேசும் போது எனக்கு.. ஏதோ… ஏதோ ஒரு குட் ஃபீல்… எனக்கு அது தேவைப்படுது…” – வெறுப்புடன் தலையை கோதினான் தேவ்ராஜ். கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டான். கோபத்தை கட்டுப்படுத்திக்கொள்ள முயல்கிறான் என்பதை அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
“இங்க பார்… உனக்கு ரெண்டு ஆப்ஷன் தர்றேன். நம்பர் ஒன்… இந்த நிமிஷத்தோட மோனிகாங்கற கேரக்டரை உன்னோட மைண்ட்லேருந்து எரைஸ் பண்ணிடு… இல்ல… நம்பர் டு… மோனிகாவை இந்த உலகத்தை விட்டு நா எரைஸ் பண்ணறேன்… டெல் மீ… எது உனக்கு விருப்பமான ஆப்ஷன்?” – அவன் கண்களில் தெரிந்த மூர்க்கன் பாரதியின் கருத்தில் பதிய அவள் அடிவயிறு தடதடத்தது. அவன் மீது கோபம் பொங்கியது., அவனை வெறுப்புடன் முறைத்துப் பார்த்தபடி, “ஐ வோண்ட் எய்தார் மீட்… ஆர்… டாக் டு ஹர்… எனி…மோ…ர்” என்று கத்தினாள். உணர்ச்சிப்பிழம்பில் அவள் உடல் நடுங்கியது. முகமெல்லாம் சிவந்து கண்களில் கண்ணீர் வடிந்தது.
அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு தன்னிலை இழந்த தங்கையை கண்டு ஒரு நொடி திகைத்த தேவ்ராஜ் சிந்தனையோடு நெற்றியை நீவியபடி அவளுடைய அறையிலிருந்து வெளியேறினான்.
10 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Yazhvenba M says:
Oh dev pattum thirunthati enna panarathu 🙁
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
noor a says:
பிரச்சனை மேல் பிரச்சனை, தேவ் ஐ சாதாரணமான யோசிக்க விடுவது இல்லை. மனதின் அழுத்தம் மற்றவர்களின் மேல் தன்னுடைய இயலாமையை கோபமாக வெளிபடுதோ??? எதையும் இயல்பாக யோசிக்க முடிவதில்லை.
தேவ் யின் செயல்கள் எதுவுமே சரி இல்லைஏற்று கொள்ளும் படி இல்லை என்றாலும், அவன் தான் மிகவும் பாவும், எல்லாவிதத்திலும் அடிபட்டதால்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Ayyo mathukku enna aachchuppa. Dev mathuva poi paru ava nilaimai rempa mosama pokuthu.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
பாரதி இன்னமும் மோனிகா பின்னாடிதான் சுத்துகின்றாரா,தேவ் இன்னும் மதுராவை போய் பார்க்கவில்லை.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
interesting update. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
தங்கச்சி பின்னால சுத்துற உனக்கு எதுக்குடா….மண்ணாங்கட்டி காதல்,கலயாணம் எல்லாம்.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepa I says:
Phone yaruku devuka ella ,hmm waiting for next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
மதுராக்கு என்ன தான் ஆச்சு….இதுக்கு நடுவுல பாரதி பிரச்சனை வேற….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jansi r says:
Emotional epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Ohhhh God.. Madhu ku Enna Dan achi