Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

kanalvizhi kadhal 83

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 83

அத்தியாயம் – 83

தங்கைகளுக்காக எதையும் செய்வான்… எந்த எல்லைக்கும் இறங்குவான் தேவ்ராஜ். அப்படிப்பட்ட அண்ணனை அவனுடைய அன்புத் தங்கை பார்த்த பார்வையில் ஏன் அத்தனை வெறுப்பு! அவ்வளவு கோபம்! – சிந்தனையோடு பாரதியின் அறையிலிருந்து வெளியேறினான் தேவ்ராஜ். இதே வெறுப்பை பலமுறை அவன் மதுராவின் கண்களிலும் கண்டிருக்கிறான். அப்போதெல்லாம் அவளுடைய வெறுப்பு மட்டும்தான் அவன் மனதில் பதிந்ததே தவிர அதற்கான காரணத்தை ஆராய தோன்றவில்லை. ஆனால் இன்று தோன்றுகிறது. உடன் பிறந்த தங்கையே அவனை அத்தனை துவேஷத்துடன் பார்க்கிறாள் என்றால் என்ன அர்த்தம்! கனத்த மனதுடன் தன் அறைக்கதவை திறந்தான். மதுரமாய் மதுரா நிறைந்திருந்த அறை இன்று வெறுமையாய் அவனை வரவேற்றது. தங்கையைப் பற்றிய நினைவுகள் பின்னோக்கி தள்ளப்பட்டுவிட மனைவியை மட்டும் மனதில் கொண்டு ஒரு பெருமூச்சுடன் உள்ளே நுழைந்தான்.

அந்த அறையில் அவளுடன் கழித்த பல இனிமையான தருணங்கள் அவன் சிந்தனையை சிறை செய்தன. அவளுடைய சிரிப்பு… வெட்கம்… கோபம்… அழுகை அனைத்தும் அவன் நினைவுகளை ஆக்கிரமித்து சிறிது சிறிதாய் அவனை சிதைக்கத் துவங்கின. அதோ அந்த கோச்சில் தான் அவள் மடியில் தலை சாய்த்து படுத்திருந்தான்… அதோ அந்த இடத்தில் தான் அவளை வழி மறித்து வம்பிழுத்தான். இதோ இந்த வார்ட்ராபில் தான் ஆடையை தேடுவது போல் அவளை சீண்டினான். அனைந்து இனிமையான நினைவுகளும் பாரமாய் மாறி அவன் மனதை அழுத்தியது. வெறுப்புடன் தலையை அழுந்த கோதியபடி மெத்தையில் அமர்ந்தான்.

அவளுடைய பிரத்யேக மணம் அந்த அறையில் நிறைந்திருந்த காற்றில் கலந்திருப்பது போல் தோன்ற, கண்கள் செருக ஆழமாக மூச்சை உள்ளிழுத்தான். மனபாரம் குறைவதற்கு பதில் இன்னும் அதிகமானது. அமர்ந்திருந்த நிலையிலேயே படுக்கையில் மல்லார்ந்து சாய்ந்தான். கால்கள் இரண்டும் தரைதட்டி நிற்க உடல் மட்டும் படுக்கையில் கிடந்தது. நினைவுகள் அவளையே சுற்றிக் கொண்டிருந்தன. எங்கு தவறு நடந்தது…? – சிந்தித்தான்.

‘நடந்த பிரச்சினைகளுக்கெல்லாம் நாம்தான் காரணமா! நாம் மட்டும் தான் காரணமா! நம்மிடமிருந்து வெளிப்பட்ட கோபமெல்லாம் ரியாக்ஷன்ஸ் மட்டும் தானே!’ – தெளிவு கிடைக்கவில்லை. எல்லாம் குழப்பமாக இருந்தது. எப்போது திரும்பி வருவாள் என்கிற ஏக்கம் மேலோங்கியது. மனம் சோர்ந்து போய் கண்களை மூடினான். அருகில் கிடந்த அலைபேசி வைப்ரேட் ஆனது. எடுத்து பார்த்தான். மாயா…! – ‘புத்திசாலி… நல்ல காரியம் செய்தாள். கணவன் மனைவி பிரிந்திருப்பது ஒன்றும் அத்தனை எளிதான காரியம் அல்ல…’ – துருவனின் மீது இருக்கும் கோபம் அப்படியே இருந்தாலும் தங்கையை பற்றி பெருமையாக நினைத்தபடி அழைப்பை ஏற்றான்.

“ம்ம்ம்… சொல்லு… குட்டிமா என்ன பண்ணறா?” – தமையனின் சோர்வான குரலில் துணுக்குற்ற மாயா தான் சொல்ல வந்ததை பின்னுக்குத் தள்ளிவிட்டு, “என்ன ஆச்சு தேவ் பாய்? ஏன் வாய்ஸ் என்னவோ போல இருக்கு?” என்றாள் கவலையுடன்.

“வாய்ஸா! என்னவோ போல இருக்கா! ப்ச்… அது அப்படியே இருக்கட்டும்.. நீ சொல்லு… எப்படி இருக்க?”

“நா நல்லாத்தான் இருக்கேன். அங்க என்ன நடந்துச்சு? நீங்க ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க?” – அவள் விடுவதாக இல்லை.

தேவ்ராஜ் சற்று நேரம் அமைதியாக இருந்தான். பிறகு மெல்ல கேட்டான்.

“என்னை பத்தி நீ என்ன நினைக்கிற மாயா?”

“என்ன!” – வியப்பும் குழப்பமுமாக ஒலித்தது அவள் குரல்.

“இல்ல… ஜஸ்ட்… சொல்லு… உன் மனசுல நா… எப்படிப்பட்டவன்?” – தயக்கத்துடன் கேட்டான்.

“மேன் ஆஃப் மில்லினியம்… பவர்ஃபுல் மான்ஸ்டர்… பிசினஸ் டைக்கூன்… மை பிரதர்…” – அவள் அடுக்கிக் கொண்டே போக, “நோ… நோ…” என்று அவளை தடுத்தவன்,

“ஐம் நாட் ஆஸ்கிங் அபௌட் ஆல் தீஸ் புல் ஷிட்…” என்று சிடுசிடுத்தான்.

“வேற என்ன?” – அவளுக்கு புரியவில்லை.

“ஆம் ஐ குட் அட் டீலிங் வித் பீப்பிள்?” – ‘மனிதர்களை கையாள்வதில் நான் சிறந்தவனா?’ – என்றான். மாயா சற்று நேரம் எதுவும் பேசவில்லை. அவன் பதிலுக்காக காத்திருந்தான்.

“தொழில்முறை மனிதர்களை கையாள்வதில் நீங்கள் சிறந்தவர் தான்” என்று பதிலளித்தாள். இப்போது மௌனம் அவன் முறையானது.

“பாய்?”

“வாட் அபௌட் பர்சனல் அண்ட் பேமிலி ரிலேஷன்ஷிப்ஸ்?” – அவனுடைய அந்த கேள்விக்கு அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.

“ஏன் இதெல்லாம் கேட்கறீங்க?” என்றாள். சிறு தயக்கத்துக்கு பிறகு அவன் பாரதியின் விஷயத்தைப் பற்றி முழுவதுமாகக் கூறினான். அனைத்தையும் கேட்டு முடித்த பிறகு, “வெரி சாரி டு சே திஸ் தேவ் பாய். யு ஆர் நாட் ரியலி குட் அட் டீலிங் வித் பீப்பிள். அதுலயும் குறிப்பா எமோஷன்ஸை எக்ஸ்பிரஸ் பண்ணறதையும் தப்பா பண்ணிறீங்க… புரிஞ்சுக்கறதையும் தப்பா புரிஞ்சுக்குறீங்க” என்றாள்.

“ரியலி!” – ‘அது எப்படி!’ அவனுக்கே நம்ப முடியவில்லை.

“சத்தியமா… இது ஒரு சின்ன பிரச்சனை… நா அங்க தங்கியிருந்த கொஞ்ச நாள்ல எனக்கு என்ன புரிஞ்சதுன்னா, பாரதி ரொம்ப லோன்லியா இருக்கா. அவகூட நாம கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணி பேசினாலே ஈஸியா சால்வ் ஆகற பிரச்சனை அது. அதை நீங்க இன்னும் காம்ப்ளிகேட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க”

“ஆம் ஐ…?” – இதையும் அவனால் நம்ப முடியவில்லை. அவ்வளவு அசடாகவா இருக்கிறோம் என்று தோன்றியது. மாயா பாரதியை மனதில் கொண்டு சொன்னதை இவன் மதுராவிற்கு ஒப்பிட்டுப் பார்த்தான். சிந்தனையில் நெற்றி சுருங்கியது.

“தேவ் பாய்… பாரதி கவலையை விடுங்க. அது ஒரு விஷயமே இல்ல… நா பார்த்துக்கறேன். இப்போ இங்க ஒரு பெரிய பிரச்சனை கிளம்புது. அதை நீங்கதான் ஹாண்டில் பண்ணியாகணும்”

“இன்னொரு பிரச்சனையா! காட்…” – என்னவென்று கேட்கவே அச்சமாக இருந்தது. அவன் மனம் அவ்வளவு சோர்ந்திருந்தது. ஆனால் கேட்டுத்தானே ஆக வேண்டும்!

“சொல்லு… இப்ப என்ன புதுசா?” என்றான்.

ஓரிரு நொடிகள் எப்படி சொல்வது என்று யோசித்து வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு, “மதுராவுக்கு அபார்ஷன் பண்ணனும்னு பேசிகிட்டு இருக்காங்க” என்றாள்.

அமிலமென பாய்ந்த வார்த்தைகள் அவன் இதயத்தை பொசுக்க விருட்டென்று எழுந்து அமர்ந்தான். அந்த கணம் அவன் மனதில் ஊற்றெடுத்த உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு முன் இப்படி ஒரு உணர்வை அவன் அனுபவித்ததும் இல்லை. கோபம் துக்கம் பயம் என்று பலவித உணர்வுகளின் கலவை அவனை புரட்டிப்போட்டது. நிலைகுலைந்து போய் அமர்ந்திருந்தவனுக்கு மொழி கூட மறந்து போனது.

அவன் ஏதாவது சொல்லுவான் என்று காத்திருந்த மாயா, ‘புஸ்… புஸ்…’ என்று மூச்சுவிடும் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்காததால், “பாய்…” என்று அழைத்து அவன் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முயன்றாள். ஆனால் பலன் இல்லை. அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

“ஹலோ… தேவ் பாய்…” – குரலை உயர்த்தினாள்.

“ஆங்…”

“என்ன ஆச்சு?”

“நத்திங்…” – குரல் கரகரத்தது.

“ஆர் யூ ஓகே?” – உடனே அவனிடமிருந்து பதில் வரவில்லை. சற்று நேரம் கழித்து,

“ம்ம்ம்… ஐம் ஆல்ரைட்…” என்றான். ஓரிரு நிமிட அவகாசத்தில் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டான்.

“என்ன பண்ணலாம்?”

“மதுரா… மதுரா என்ன சொல்றா?”

“ஷி இஸ் அவுட் ஆஃப் மைண்ட். அபார்ஷன் பண்ணலாம்னு சொல்றாங்க… இவ பசிக்குதுன்னு சொல்றா. அவளை நம்ப முடியாது” – அவன் பதில் சொல்லவில்லை. மாயா சொல்வதை அவன் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

‘அவள் எப்படி இதற்கு சம்மதிப்பாள். நிச்சயம் மாட்டாள்! நிச்சயம்… நிச்சயம்…’ – அவன் மனம் உருப்போட்டது. அவள் இதை நடக்க விடமாட்டாள் என்று அவனுடைய உள்ளுணர்வு கூறியது. அவள் சுயநிலையில் இல்லை… அவள் மனநிலை சரியில்லை என்று மாயா எச்சரித்தும் கண்ணைமூடிக் கொண்டு குருட்டுத்தனமாக அவளை நம்பினான்.

“தேவ் பாய்… நீங்க நாளைக்கே இங்க வாங்க… வந்து சமாதானம் பண்ணுவீங்களோ இல்ல சண்டை போடுவீங்களோ… ஆனா மதுராவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்க. இல்லைன்னா குழந்தைக்கு ஆபத்து…” என்று பதட்டத்துடன் கூறிய தங்கைக்கு,

“இல்ல மாயா… மதுரா என்ன நினைக்கிறான்னு எனக்கு தெரியனும்” என்று நிதானமாக சொன்னான்.

“சீரியஸ்லி! தப்பான முடிவு தேவ் பாய்… ஏதாவது பிரச்சனை ஆயிடப் போகுது” – பயந்தாள். ஆனால் அவன் உறுதியாக இருந்தான்.

மதுரா தன்னோடு விரும்பி மனமொத்து வாழ்கிறாளா அல்லது கடமைக்காக காலத்தை கழிக்கிறாளா என்கிற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே அவனுக்கு இருந்தது. அதற்கான விடை இப்போது கிடைக்கும் என்று தோன்றியது. பல நாட்கள் அவனை அலைக்கழித்து ஆட்டிப்படைத்த மன நிறைவின்மை… அலைபாய்தல்… பாதுகாப்பின்மை… இவற்றிலிருந்தெல்லாம் இப்போது விடுதலை கிடைக்கும் என்று தோன்றியது.

இன்று இருக்கும் சூழ்நிலை அவனுக்கு மிகவும் எதிரானது. அன்பு மனைவியின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறான். உற்றார் உறவினரின் வெறுப்புக்கும் இலக்காகியிருக்கிறான். பிரபாவதி அவனுக்கு எதிராக அவளை மூளை சலவை செய்து கொண்டிருக்கிறாள். அனைத்தையும் மீறி அவனுக்காக அவள் நிற்பாளா? – இந்த கேள்விக்கான விடையில் தான் இப்போது அவனுடைய சுவாசம் அடைபட்டிருக்கிறது.

அவள் மனதில் அவனுக்கு பரிபூரண இடம் இருந்தால், அவன் செய்த குற்றம் குறை அனைத்தையும் ஒதுக்கிவிட்டு அவன் பக்கம் நிற்பாள். அவனுடைய குழந்தையை பாதுகாப்பாள். – முட்டாள்தனம் தான்… மூர்க்கத்தனம் தான்… ஆனால் தேவ்ராஜ் பிடிவாதமாக இருந்தான். மதுரா அவன் மீது கொண்டிருக்கும் அன்பை, காதலை கண்கூடாக காண காத்திருந்தான்… மாத்திரையில் அடைபட்ட பேரரக்கன் கருவிலிருக்கும் தன் குழந்தையை மெல்லமெல்ல நெருங்கி கொண்டிருப்பதை அறியாமல்.

***************************************

திவ்ய பாரதி எழுதும் ப்ரியசகி பதிமூன்று அத்தியாயங்கள் சென்றிருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை குறிப்பிடுங்கள் தோழிகளே…

இணைப்பு

17 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    kumudha devi says:

    Please pa paappaa paavam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Wow akka its so emotional full of feelings out touch… dev was pathetic in this critical situation …I’m waiting for next epi akka

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Baby pavam sis…Dev ipathan yosika start panirukan..madhu dev kita vanthudu…dev kooda illama than nee lonelya feel panra unoda uyirpu dev than pls cum soon to dev

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Chriswin Magi says:

    Ada pavi Dev😈😈😈

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba M says:

    Nice epi sis… vaarththai ubayogangal arumai

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sabeena Begam says:

    Illa nichayam thev paithiyam Illa avan ethirparpathu Nadakum

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Bappom dev ninaikirathuthan nanum ninaikkiren mathura enna mutivu etupal entru

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    குழந்தையை காப்பாற்றினால்தான் மதுராவுக்கு தேவ் மீது காதல் என்று நினைக்கும் அடி முட்டாள் தேவ் இது மதுராவுக்கே தெரியாமல் நடந்தால் அதை என்னவென்று எடுப்பீர்கள்.

    நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    நிதானமாக இருக்க வேண்டிய நேரத்தில் நிதானத்தை இழந்துவிட்டு இப்ப மாதுரா மனம் சரியான நிலையில் இல்லாத இந்த நேரத்தில் நிதானமாக அவள் காதலை சோதிக்கிறான் முட்டாள்….அவள் உன் நம்பிக்கையை காப்பாத்தினாலும் பிள்ளை இருக்காது இல்லை எதாவது ஊனமானால்….இதை யார் புரிய வைப்பது இவனுக்கு😢

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepa I says:

    Madura is not in normal so dev should take hand in this situation . Why dev forget doctor opinion towards madura. So sad on dev i think he is going to betrayed by madu mother again😭

    .

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    சரியான பைத்தியக்காரன்!மனைவியின் மனதை புரிந்து கொள்ள முடியாத மடையன்!

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Pon Mariammal Chelladurai says:

      அவனுக்கு மனைவியே அதிகப்படி…புள்ளை எதுக்குன்னு நித்யா சொல்றாங்க போல

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        admin says:

        ஐயையோ… அக்கா… வொய் திஸ் கொலவெறி… :O

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Pon Mariammal Chelladurai says:

          தினம் எங்களை அலற வைக்கிற….இன்று எங்க டர்ன் ….ஈஈஈஈ

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Hadijha Khaliq says:

        Ha ha….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    தவறுக்கு தண்டனை ….யாருக்கு?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Please save the baby

You cannot copy content of this page