Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் 85

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 85

அத்தியாயம் – 85

“நோ… நல்லா இல்ல… மதுரா இங்க நல்லா இல்ல… உங்க குழந்தையும் நல்லா இல்ல…” – கோபத்துடன் படபடத்த மாயாவின் குரலில் அழுகையின் சாயலும் தென்பட தேவ்ராஜை பரபரப்பு தொற்றிக் கொண்டது. அமர்ந்திருந்த நாற்காலியை விருட்டென்று பின்னால் தள்ளிவிட்டு எழுந்து வேகமாக அறையைவிட்டு வெளியேறினான். “என்ன ஆச்சு சார்?” என்று எதிரே வந்த ரஹீமை மதிக்காமல் அவசரமாக லிஃப்டை அடைந்து கீழே இறங்கினான்.

“அபார்ஷன் பண்ணறதுக்கான மாத்திரையை ஒரு வாரமா சாப்பிட்டுட்டு இருந்திருக்கா… அவளுக்கே தெரியாம… என்ன செய்ய போறீங்க?” – திடுக்கிட்டான். ‘வாட் த… ஹெ…ல்…!’ – அவனுக்குள் இருந்த கொடூரன் பயங்கரமாக உறுமினான்.

“கெட் மீ மை கார் கீ…” – லிஃப்ட்டிலிருந்து வெளியேறும்போதே ரிஷப்ஷனிஸ்ட்டை நோக்கி சத்தம் போட்டான். அவனுடைய ஆவேசத்தைக்கண்டு அதிர்ந்துபோனவள் அவசரமாக சாவியை எடுத்து நீட்ட, அதை அவளிடமிருந்து பிடுங்காதக் குறையாக பெற்றுக் கொண்டு, டிரைவருக்கு காத்திராமல் தானே வண்டியை ஸ்டார்ட் செய்து கிளப்பினான்.

“அவளோட முடிவை தெரிஞ்சுக்க ஆசைபட்டிங்களே… இதுதான் அவளோட முடிவு… அவளுக்கே தெரியாத முடிவு.. போதுமா… இன்னும் ஏதாவது தெரியனுமா?” – மாயாவின் வார்த்தை அவனை கூறுபோட்டது. சல்லடையாக இதயம் துளைப்பட்டது. வலி… பயங்கரமான வலி அவனை கொன்றது. “இஸ் ஷி ஓகே?” – அது மட்டும்தான் அவனுக்கு தேவையானதாக இருந்தது.

“இருக்கா… பைத்தியக்காரி மாதிரி கத்திக்கத்தி மயங்கிக்கிடக்கறா…” – அவளுடைய பதில் அவனை மேலும் மூர்க்கனாக்கியது. கோபமும் ஆத்திரமுமாக ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்து, அசுரவேகத்தில் பறந்தான்.

காதில் பொருத்தியிருந்த புளூடூத்தில் மாயாவின் குரல் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தது. எதுவும் அவன் செவியில் ஏறவில்லை. ‘மது… மது…’ என்று மனம் உருப்போட அழைப்பை துண்டித்துவிட்டு காரின் வேகத்தை மேலும் கூட்டினான். சாலையின் வலது பக்கம் ஏறி ஓட்டி, எல்லா வாகனங்களையும் ஓவர்டேக் செய்து பறந்தான். சிக்னலில் எறிந்த சிவப்பு விளக்கை மதிக்காமல், சீறிக்கொண்டு சென்றான். அசுர வேகத்திலும் லாவகமாக ஓட்டி விபத்தை தவிர்த்து, நரேந்திரமூர்த்தியின் வீட்டுவாசலில் வந்து பிரேக் அடித்தான்.

தடதடதடவென்று கதவு உடைபடும் சத்தம் கேட்டு வீடே அதிர்ந்தது. வந்திருப்பது யார் என்பதை ஊகிக்க அதிக நேரம் தேவைப்படவில்லை. அடுத்தடுத்து அலறிய அழைப்பொலியும்… படுபயங்கரமாக உடைபடும் கதவும் வெளியே நின்றுக் கொண்டிருக்கும் அசுரனை அடையாளம் காட்ட, உள்ளே இருந்த அனைவரும் தவிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு நரேந்திரமூர்த்தி எழுந்துச் சென்று கதவைத் திறந்தார். கனலை கக்கும் விழிகளோடு உக்கிரமாக நின்றுக் கொண்டிருந்தான் தேவ்ராஜ்.

நரேந்திரமூர்த்தியை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவனின் வேகத்தைக் கண்டு, “தேவ்.. நில்லு… நா சொல்றதை கேளு…” என்று பதறினார் மூத்தவர்.

“வாட் த ஹெல் யு வாண்ட் மீ டு லீசன்?” – ஆக்ரோஷமாக சீறினான் அவரிடம். அவனுடைய ஆவேசத்தில் திடுக்கிட்டு சற்று பின்னடைந்தவர் அடுத்து பேசுவதற்குள் திலீப் அவர்களுக்கு நடுவில் வந்தான்.

“ஸீ… ஐ அன்ட்ரஸ்டண்ட் யுவர்…” – ” ஷ்…ஷ…ட்…அப்…!!! ஷட்….!!! அப்…!!! வழிய விடு…!!! விலகிப் போ…!!! ” – கடுமையான கத்தலுடன் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளினான்.

பதறிப்போன பிரபாவதி “ஏய்…ஏய்…” என்று அவனை சுட்டெரிப்பது போல் முறைக்க, “தேவ்..! என்ன இது?” என்று அதட்டினார் நரேந்திரமூர்த்தி. தேஜா கலவரத்துடன் ஒதுங்கி நிற்க மாயா தமையனை தடுக்க முன் வந்தாள்.

“தேவ் பாய்…” – மாயா.

“நா என்ன வைஃபை பார்க்க வந்திருக்கேன். என்னை தடுக்கற அதிகாரம் இங்க யாருக்கும் இல்ல…” – தங்கையை ஒதுக்கிவிட்டு அதிகாரமாக முழங்கினான்.

“என் பொண்ணு மேல உனக்கு எந்த உரிமையும் இல்ல” – கோபத்தில் வார்த்தையை விட்டார் நரேந்திரமூர்த்தி.

“என் குழந்தை மேல உரிமை இருக்குல்ல? நகருங்க…” – துச்சமாக அவரை ஒதுக்கினான். ‘என்ன திமிர்!’ – பிரபாவதியின் அகம்பாவம் அடிவாங்கியது.

“பிறக்காத குழந்தை மேல என்ன பெரிய உரிமை… அதெல்லாம் பிறந்தா பார்த்துக்கலாம்… நீ இப்ப வெளியே போ…” – கொதிப்புடன் வார்த்தையைக் கொட்டினாள். நொடி பொழுதில் அவன் கையில் முளைத்த பிஸ்ட்டல் நரேந்திரமூர்த்தியின் நெற்றியை குறிபார்த்தது.

பிஸ்டலை அவர் நெற்றியில் வைத்து பார்வையை பிரபாவதியின் முகத்தில் பதித்திருந்த தேவ்ராஜ், “என் குழந்தையை அழிக்கணும்னு நெனச்ச… உன் குடும்பத்தை அழிச்சிடுவேன்…” என்றான் அடங்கிய குரலில். அவன் கண்களில் தெரிந்த தீவிரம் சொன்னதை செய்து முடிப்பேன் என்று உறக்கக் கூவியது. மொத்த குடும்பமும் உறைந்து போய்விட்டது. பிஸ்ட்டலை எடுக்கும் அளவிற்கு… கொலை மிரட்டல் விடும் அளவிற்கு அவன் போவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாயா உட்பட…

“தேவ் பாய்… ரிலாக்ஸ்… ப்ளீஸ்…” – மாயா கெஞ்சினாள்.

“மது எங்க?” – இறுகிய குரலில் கேட்டான்.

“ரூம்ல… டாக்டர் வந்து பார்த்தாங்க. ஷி இஸ் ஓகே நௌ… நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க பாய்…” – தங்கையின் சமாதானம் அவன் செவியில் ஏறவில்லை. அங்கிருந்த அனைவருடைய கோபப்பெருமூச்சையும், எரிக்கும் பார்வையையும் புறக்கணித்துவிட்டு மனைவியின் அறையை நோக்கிச் சென்றான்.

“அவளுக்கு ரெஸ்ட் வேணும்… பார்த்து…” – தமையனின் பின்னால் ஓடிவந்தபடி மாயா பதட்டத்துடன் எச்சரித்தாள்.

“ஸ்டே அவே…” – சட்டென்று நின்று தங்கையை அதட்டி அடக்கிவிட்டு மனைவியின் அறைக்குள் நுழைந்தான்.

கண்மூடி கட்டிலில் துவண்டுக் கிடந்தாள் மதுரா. அதுவரை அவனுக்கிருந்த உட்சபட்ச கோபம் ஆத்திரமெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளியாய் உருகிக் கரைந்தது. அவளை பார்த்தபடியே அறைவாசலிலேயே நின்றுவிட்டவன் ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே நுழைந்தான். வெளிறிப்போயிருந்த அவள் முகத்தை வேதனையுடன் நோக்கியபடி அவள் அருகில் மெல்ல அமர்ந்தான். மனதில் ஏதேதோ உணர்வுகள்… போராட்டங்கள்… இன்னெதென்று வரையறுக்க முடியவில்லை.

அவன் கை தானாக எழுந்து அவள் கையை தொட்டு தடவியது. அவன் இரு வலிய கரங்கள், தளர்ந்துக் கிடந்த அவள் மென்கரத்தை தனக்குள் பொத்திப் பாதுகாத்துக் கொண்டன. நெஞ்சாங்கூட்டிற்குள் ஏதோ அழுத்தியது. தொண்டைக்குழிக்குள் ஏதோ அடைத்தது. அலறி அழ வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டான். மூச்சின் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது. தன் கைகளுக்குள் சிக்கியிருந்த அவள் கையில் அழுத்தமாக இதழ்பதித்தான். அடிவயிற்றிலிருந்து எழுந்துவந்த துக்கம் அவன் நெஞ்சை முழுவதுமாக ஆக்கிரமித்தது. கோவைப்பழம் போல் சிவந்துவிட்ட விழிகள் கசிந்தன. அவள் கையை தன் கண்களுக்குள் வைத்து அழுத்திக் கொண்டான். ஓரிரு நொடிகள் அவனிடம் எந்த அசைவும் இல்லை. அவளுடைய அருகாமை… அவளுடைய ஸ்பரிசம்… அவளுடைய வலி… துக்கம்… அனைத்தும் அவனை பெரிதும் பாதித்தது. அதிலிருந்து விடுபட்டு வெளியேறி அவன் நிமிர்ந்த போது, மதுராவின் சோர்ந்த பார்வையை சந்தித்தான். அந்த பார்வை அவனை கேள்வி கேட்டது… குற்றம்சாட்டியது… கனத்த மனதோடு அவள் கண்களை சந்தித்தவன், “ஆர் யூ ஓகே?” என்றான் முணுமுணுப்பாக.

அவள் கண்களில் இப்போது கோபம் குடியேறியது. “சாகல…” – வெறுப்புடன் கூறினாள். அவன் உடல் விறைத்தது. உதடுகள் அழுந்தமூடின. சற்று நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். பிறகு, “இட்ஸ் கோயிங் டு பி ஆல்ரைட் மது… இட்ஸ் கோயிங் டு பி ஆல்ரைட்…” என்றான் அவள் கைகளில் அழுத்தம் கொடுத்து.

“ஆல்ரைட்…!!! ஹா…” – வியந்து பார்த்து கசந்த புன்னகை புரிந்தாள். இயலாமையுடன் அவளை பார்த்தான் தேவ்ராஜ்.

“ஏன் இங்க வந்திங்க தேவ்? எதுக்காக வந்திங்க? என்னோட கஷ்ட்டத்தை பார்க்கவா… இல்ல… என் குழந்தையோட அழிவை பார்க்கவா!” – அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.

“நோ… நோ மது… நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகாது. நீ பயப்படாத…” – அவரசமாக மறுத்து அவளுக்கு தைரியம் கொடுக்க முயன்றான்.

“ஆனாதான் என்ன…! பிடிக்காத மனைவி… வேண்டாத குழந்தை போகட்டுமே!” – விரக்தியுடன் வெளிப்பட்ட வார்த்தைகள் அவன் இதயத்தை கசக்கிப் பிழிந்தன.

மறுப்பாக தலையசைத்து, “நோ… டோண்ட் சே தட்…” என்றான் வலி மிகுந்த குரலில். அவள் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளியே வர முடியாமல் கண்களை மூடியபடி மூச்சை ஆழமாக உள்ளிழுத்தான்.

“இங்க பாருங்க… என்னை பாருங்க தேவ்… பதில் சொல்லுங்க… நாளைக்கு குழந்தை குருடா… செவிடா… இல்ல வேற ஏதாவது ஊனமா பிறந்திட்டா என்ன செய்வீங்க? எப்படி அந்த பிள்ளையை பார்ப்பீங்க? எப்படி அவன்கிட்ட சொல்லுவீங்க…? உன் அப்பாவோட கோவம்தான் உன்னை ஊனமாக்கிடுச்சுன்னு அவன்கிட்ட எப்படி சொல்லுவீங்க தேவ்…? சொல்லுங்க… எனக்கு பதில் சொல்…லு…ங்க…” – அழுகையும் ஆத்திரமுமாக கத்தினாள். அவன் கையை பிடித்து இழுத்து அவனை உலுக்கினாள்.

தேவ்ராஜ் உறைந்து போய்விட்டான். அவள் சொல்வது எதையும் அவனால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. மனதை பயமெனும் பெரும் பேய் ஆக்கிரமித்தது. உடல் நடுங்கியது. கண்கள் கசிந்தன.

“காம் டௌன்… காம் டௌன் மது… கா…ம் டௌன்… நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகாது ஓகே… எதுவும் ஆகாது…” – அவளுக்கு சொல்வதோடு சேர்த்து தனக்குமே தைரியம் சொல்லிக் கொண்டான்.

“பொ…ய்… இது பெரிய பொய்… ஒரு வாரமா… ஒரு வாரமா விஷத்தை சாப்பிட்டுட்டு இருக்கேனே… எப்படி ஒண்ணும் ஆகாது தேவ்! எ…ப்…படி…ஆஆஆ…!!! ம்மா…! எங்…கு..ழ..ந்தை…!!!” – கன்றை இழந்த தாய் பசுவாக அலறினாள். அவளை இழுத்து தூக்கி தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் தேவ்ராஜ். அவன் உள்ளம் துடித்தது. உடம்பின் ஒவ்வொரு அணுவும் அதிர்ந்தது. அவளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் தவித்தான்.

“ஐம் சாரி… ஐம் சாரி மது… ஐம் சாரி…” – அவன் அடர்ந்த மீசைக்குள் ஒளிந்திருந்த மொத்த ஈகோவையும் தகர்த்து நொறுக்கிவிட்டு, அந்த வார்த்தைகள் வெளியே வந்து குதித்தன.

“ப்ளீஸ்… ப்ளீஸ் ஸ்டே ஸ்டராங்… என்னால உன்ன இப்படி பார்க்க முடியல… ப்ளீஸ்…” – கலங்கி கண்ணீர்விட்டான்.

“பெரிய தப்பு பண்ணிட்டேன்… என்னை மன்னிச்சுடு… ஐம் சாரி… ஐம் சாரி மது…” – மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டிருந்தவனின் கண்களிலிருந்து கசிந்த கண்ணீர் அவள் தோள்பட்டையை நனைத்தது. தன்னிலையிழந்து அவன் அணைப்பில் சற்று நேரம் அடங்கியிருந்தவள் திடீரென்று அவனை உதறிவிட்டு விலகினாள். அவள் பார்வை அவன் கண்களுக்குள் ஊடுருவியது.

“எனக்கு தெரியும் தேவ்… உங்களுக்கு என்னை பிடிக்கும்… எம்மேல உங்களுக்கு நிறைய அன்பு இருக்கு… அது எனக்கு நல்லா தெரியும்… ஆனா எம்மேல அன்பை வச்ச நீங்க ஏன் நம்பிக்கையை வைக்காம போனீங்க?” – சற்று திடப்பட்டிருந்த குரல் மீண்டும் உடைந்தது… “ஏன் என்ன பத்தி நல்ல விதமா யோசிக்காம போனீங்க தேவ்.. ஏ…ன்…? உங்களோட கோபத்துக்கும் வெறுப்புக்கும் என் குழந்தையை பலியாக்கிடீங்களே! இதை நா எப்படி மறப்பேன்! இதை நா எப்படி மன்னிப்பேன்…” – கோபத்தில் குரல் உயர்ந்தது. “ஐ ஹேட் யூ… ஐ ஹேட் யூ டு த கோர்… போயிடுங்க…. இங்…கிரு…ந்…து போ…யி…டு…ங்க…” – உச்சஸ்தாதியில் கத்தினாள். “போ…யி…டு…ங்…க…” – முழங்கால்களைக் கட்டிக்கொண்டு முகம் புதைத்துக் குலுக்கினாள்.

திகைப்புடன் மனைவியைப் பார்த்த தேவ்ராஜ், “ம…ம…தூ…” – மெல்ல அவள் தோள் மீது கைவைத்தான். “கோ….. கோ அ…வே…!!” – சட்டென்று நிமிர்ந்து அலறினாள்.

மதுராவின் அதிகப்படியான சத்தம் மாயாவை அந்த அறைக்குள் இழுத்துக்கொண்டு வந்தது. மனைவியின் மீது பதித்தப் பார்வையை விலக்காமல் சிலை போல் நின்றுக் கொண்டிருந்த தமையனை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துக் கொண்டு வந்தாள். பித்துப்பிடித்தவன் போல் தங்கையின் இழுப்புக்கு கட்டுப்பட்டு ஹாலுக்கு வந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டு சோபாவில் பொத்தென்று அமர்ந்தான். அவளுடைய அலறலும் கண்ணீரும் அவன் மூளையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டது. குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தவனின் கண்களிலிருந்து முத்து முத்தாக உதிர்ந்த கண்ணீர் தரையில் விழுந்து தெறித்தது. சற்று நேரம் அப்படி அமர்ந்திருந்தவன் பிறகு நரேந்திரமூர்த்தியை நிமிர்ந்து பார்த்து, “இப்படி ஒரு காரியத்தை ஏன் செஞ்சீங்க” என்றான் நொறுங்கிப்போனவனாக. அவன் மனம் வெகுவாய் புண்பட்டிருப்பதை அந்த குரலில் உணர்ந்தவன் உடனே அவன் அருகில் அமர்ந்து, “சாரி பேட்டா… வெரி சாரி… தெரியாம நடந்துடுச்சு… ப்ளீஸ் டோண்ட் லூஸ் யுவர் ஹோப்… எதுவும் ஆகாது…” என்று அவனுக்கு தைரியம் சொன்னார்.

நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியவனோடு கண்ணிமைக்கும் நேரத்தில் சமாதானமாகிவிட்டாரே இந்த மனிதன் என்கிற திகைப்புடன் கணவனை வெறித்துப் பார்த்தாள் பிரபாவதி.

40 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Poonkodi Mohan says:

    Today no update ah

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    இன்னிக்கும் அப்டேட் இல்லியா?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Ths kani

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    intha dev poster hero yaar?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Kani Ramesh says:

      Pakistani serial artist Faysal qureshi😍😍

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Semma ud akka… semma feeling….😢😢😢 konjam emotional agiten

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    இன்னிக்கு அப்டேட் இல்லியா?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shri lakshana Sakthivel says:

    Sema ud sis …..super dev feelings expressed ……atlast monster said sorry ….

    But pavam mathu …..baby ll b safe thane ssis……

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gayathri sankar says:

    today ud iruka?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Daisy Mary says:

    when is next epi? tdy unda?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jaya Bharathi says:

    Ovvorutharoda mananilayai eduthu sollum vidham arummai….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    இப்ப தான் பார்த்தேன்…
    போடா…அழ வைக்காத…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      //போடா…அழ வைக்காத…// யாரைக்கா சொல்லறீங்க? 😀

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Indra Selvam says:

        வேறு யாரு ? நம்ம தேவைத்தான் சொல்றாங்க, அவன் அழுது நம்மையும் அழவெக்கறான், இல்லக்கா! ம்…ம்..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    பெரியவர்களின் மமதை அகங்காரத்தினால் ஒரு குழந்தை தண்டனை அனுபவிக்கப்போகின்றதா?.

    நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rexi Anto says:

    Nice when next epi

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    Excellent story. இதுவரை நான் படித்த கதைகளில் this is the best. Waiting for your next update . ரொம்பவே காத்திருக்க வைக்காதீர்கள்

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தும் மனதை மகிழ்வித்தது தோழிகளே… நேற்றைய அத்தியாயம் திருப்த்திகரமாக அமைய வெகுநேரம் பிடித்துவிட்டது. இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் பதிவிட முடிந்தது. அடுத்த அத்தியாயம் இன்னும் துவங்கவே இல்லை… இன்று ஒரு நாள் இடைவெளி விட்டு நாளை பதிவிட முயற்சிக்கிறேன். கனல்விழி காதலின் வாசிப்பு அனுபவத்தை அழகாக பகிர்ந்துக் கொண்ட தோழிகளுக்கும், கதையை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி…

    நட்புடன்,
    நித்யா கார்த்திகன்.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gayathri sankar says:

    next ud yeppo

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gayathri sankar says:

    super

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    super ud sis

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Meena Vighneswar says:

    u have delivery the story in such a way that each scene is telecasted in real.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Kan kalangi utkanthuten kka a Dev madhu serthu engalukum valiye koduthutinga…. Painful epi

    Dev ethavuthu seithu ellam sari pannitu dev..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Wow super epi sis…wat a words u r used…dev was cried i cant control my feelings wen i read madhu n dev convo my eyes fell tears am nt in my control…wat happen to baby….prabha i hate my core she was nt a woman…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    madhu mudal mudalaa nera kettutaa en en melnambikai vaikalai …………devin mudal mannippu…………..praba mam avan unga marumagan athu en ungalukku siridum ninaivillai…………….dr enna sonnanga,

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepa I says:

    Nice going mam. Dev tears coming very late madura now only she open her mouth. Nice

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Ayyo enna maathiri epic no chance ‘ya Nithya kan munnati natantha maathiri irukkuppa

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    thev manam ilahittaan…aanal mathura, kuzanthai??

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    சாதுப் பெண் மிரண்டு விட்டாள்..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lashmiravi VIJAYALAKSHMI says:

    Unarvupoorvamana epi nithya….full ud a 1timela padika mudila….paathi udla anta feelings la nenju adachiduchu…konja neram gap vituthan meti padichen… excellent writing nithya…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba M says:

    Wowww… what a writing mam… chanceless… great job… i can imagine each nd every scene ..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jansi r says:

    ரொம்ப கோபமா வருது

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      யார் மேல்? பிரபாவதி/ நரேந்ரமூர்த்தி /தேவ் /நித்யா?

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        jansi r says:

        மது பேமிலி மேலத்தான்…என்ன ஒரு ஆணவம்? அவசரம்

        ஆனால், டாக்டர் வேண்டாத மாத்திரை கொடுத்திருக்க மாட்டார்னு மனசுக்கு தோணுது

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Indra Selvam says:

          You r correct, doctor mathiraiyai mathi koduthiruntha nalla than irukum, papoom

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Pon Mariammal Chelladurai says:

        நித்யாவை ஏன் கோர்த்து விடுற இந்திரா….டூ பேட்

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          Indra Selvam says:

          ஏதோ என்னால முடிஞ்சதுக்கா, பின்ன என்னக்கா, எதுக்கும் அசராம எல்தலாருக்கும் தண்ணி காட்டிக்கிட்டு இருந்த தேவ்வயே அழவச்சுட்டாங்களே, மதுராவும் தேவ்வும் கஷ்டப்படரதை பாக்க முடியலையே, பாப்பா! பாப்பா வேற பாவம், அதான்

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    அவன் செய்த தப்புக்கு மூன்று பேருக்கு தண்டனை….காலம் கடந்த மன்னிப்பு வேண்டுதலில் என்ன லாபம்☹️என்றாவது மது இவனை மன்னிப்பாளா🙁

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Meena Kumari says:

    அழுத்தமான பதிவு..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vinayagam Subramani says:

    No chance..என்ன மாதிரியான எழுத்துக்கள். ..சாத்தியமே இல்லை இப்படி எழுதுவதற்க்கு..தேவ் உணர்ந்து அழுவது அத்தனை உருக்கமாய்..காவியம்..
    .மது உனக்கு பேச தெரியும் என்று எனக்கு இப்போது தான் தெரியும்..அழுத்தமான அற்புதமான பதிவு.. worth waiting since yesterday night.. thanks Maam

You cannot copy content of this page