Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 87

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 87

அத்தியாயம் – 87

திடீரென்று அவளுக்கு மூச்சுமுட்டியது. உறக்கக் கலக்கத்திலேயே தலையணையை இருக்கமாகப் பிடித்துக் கொண்டு போராடியவள் விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். உடல் முழுவதும் வியர்வையில் தொப்பலாக நனைந்துவிட்டது. தினமும் அவளுடைய உறக்கத்தை குலைக்கும் இந்த பயங்கர கனவிலிருந்து எப்போது அவளுக்கு விடுதலை கிடைக்கும்! ஓயாத கண்ணீர் அவள் கண்களிலிருந்து வழிந்துக் கொண்டே இருந்தது. மெத்தையிலிருந்து நழுவி தரையில் காலை ஊன்றினாள். பலமிழந்து தளர்ந்த கால்கள் அடியெடுத்து வைக்க முடியாமல் தடுமாறின. கட்டிலை பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து நடந்து குளியலறைக்குள் நுழைந்தாள். குழாயை திறந்து குளிர்ந்த நீரை நடுங்கும் கைகளில் வாங்கி முகத்தில் அடித்துக் கொண்டு நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தாள். மதுராவின் தோற்றத்தில் மனமுடைந்த ஒரு பெண்ணை அங்கே கண்டாள். அவள் மதுரா அல்ல… அவளுடைய சாந்தமான முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பிருக்கும். அதுதான் அவளுடைய அடையாளம். அந்த அடையாளத்தை தொலைத்துவிட்ட இந்த பெண் யார்!

 

கண்ணாடியை ஊன்றிப் பார்த்தாள். உள்ளே இருந்த பெண்ணின் கண்களில் கண்ணீர் நிற்காமல் கசிந்துக் கொண்டே இருந்தது. அந்த துக்கம் கொண்ட முகத்தை பார்க்க பிடிக்காமல் கீழே குனிந்தவள் திடுக்கிட்டாள். தலைசுற்றி கண்களை இருட்டிக் கொண்டு வந்தது! – ‘கடவுளே! எவ்வளவு ரெத்தம்! எப்படி…!’ நன்றாகக் குனிந்துப் பார்த்தாள். அவளுடைய கால்களை சுற்றி… குளம்கட்டி நின்ற குருதிவெள்ளத்தைக் கண்டதும் அவள் இதயம் அதி வேகமாக துடித்தது. மூச்சுக்காற்றின் வேகம் எக்குத்தப்பாக எகிறியது.

 

‘முடிந்துவிட்டதா! கடவுளே! எல்லாம் முடிந்துவிட்டதா! கண்ணே! என் கண்மணியே!’ – கதறியது அவள் உள்ளம். ‘ஆஆஆஆ….’ – முகத்தை மூடிக் கொண்டு வீறிட்டாள். சுக்கல் சுக்கலாக நொருங்கிப் போய் தரையில் சரிந்து விழுந்தாள். என்ன மாயம்! திடீரென்று இரத்த வெள்ளம் அவள் கண்களிலிருந்து மறைந்து போனது. திடுக்கிடலுடன் தரையை தொட்டு தடவி பார்த்தாள். மீண்டும் மீண்டும் பார்த்தாள். எதுவுமே இல்லை! வெறும் தரைதான்… சுத்தமாக பளிங்குத்தரை… மீண்டும் ஹாலுசினேஷன்! மாயத்தோற்றம்! இல்லாததை இருப்பது போலும்… நாடகக்காததை நடந்துவிட்டது போலும் கற்பனை செய்துகொள்ளும் விசித்திரம்!

 

முழங்கால்களை இருக்கமாகக் கட்டிக் கொண்டு தலையை அதில் கவிழ்து கொண்டாள். “யூ ஆர் ஓகே பேபி… யூ ஆர் ஓகே… இது எல்லாமே ஒரு கற்பனைதான்… கனவுதான்… உனக்கு ஒண்ணும் இல்ல பேபி… நீ நல்லா இருக்க… அம்மா உன்ன பத்திரமா வச்சிருக்கேன். பயப்படாத… உனக்கு ஒண்ணும் இல்ல…” – வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையிடம் வாய்விட்டுப் பேசினாள்.

 

அவள் மனம் சற்று அமைதியடைந்த பிறகு மெல்ல எழுந்தாள். குளியலறையிலிருந்து வெளியேறி படுக்கைக்கு அருகே உள்ள டிராயரிலிருந்து மாத்திரையை எடுத்து குளிர்ந்த நீரோடு விழுங்கிவிட்டு மெத்தையில் அமர்ந்தாள். மனம் மெல்லமெல்ல நிதானப்பட்டது. மூச்சு சீரானது. இந்த பயம் அவளுக்குள் முளைத்து மூன்று மாதங்களாகிவிட்டது. இப்போது குழந்தை வயிற்றில் ஆறு மாதம். வயிறு நன்றாக மேடிட்டுவிட்டது. மனநல மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் அது முற்றிலும் அவளுக்கு கைகொடுக்கவில்லை. இந்த பயமும், கற்பனையும், கொடூரமான கனவும் அவளை நிழல் போல் துரத்திக் கொண்டே இருக்கின்றது. விடுபட முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறாள்.

 

மறுநாள் காலை வழக்கம் போல் வெகுதாமதமாக எழுந்தாள். இரவெல்லாம் உறங்குவதில்லை. அப்படியே உறங்கினாலும் கனவும் கற்பனையும் அவளை உறங்கவிடுவதில்லை. காலைநேரத்தில் கண்ணயர்வது மட்டும் தான் அவளுக்கான ஓய்வு… அதுவும் மாத்திரையின் வீரியத்தால் கிடைக்கும் ஓய்வு… தளர்ந்த நடையோடு குளியலறைக்குள் நுழைந்தவள் வெளியே வரும் போது மகளுக்காக அந்த அறையில் காத்திருந்தார் நரேந்திரமூர்த்தி.

 

அவரை பார்த்ததும் மதுராவின் முகம் சுருங்கியது. அவரோடு மட்டும் அல்ல.. வீட்டில் ஒருவரோடும் அவள் முகம் கொடுத்து பேசுவதில்லை. குழந்தை பற்றிய பயம் அவள் மனதை குடைய குடைய, அந்த பயமெல்லாம் குடும்பத்தாரின் மீது கோபமாக மடைமாற்றப்படுகிறது.

 

அதுமட்டுமல்ல… அவர்கள் மீது அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. எதை எடுத்தாலும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும்… பயத்தோடு மீண்டும் மீண்டும் பரிசோதிப்பதும் வழக்கமாகிவிட்டது. இந்த மூன்று மாதத்தின் ஆரம்ப காலங்களிலெல்லாம் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறாள். எந்த உணவில் எதை கலந்தார்களோ என்கிற சந்தேகம் அவர்கள் கையால் பச்சை தண்ணீரைக் கூட அருந்தவிடாமல் தடுத்தது. உணவும் இல்லாமல் உறக்கமும் இல்லாமல் பித்துப்பிடித்தவள் போல் இருந்தாள். அந்த நேரத்தில் மட்டும் அவன் இருந்திருந்தால்! பெருமூச்சுவிட்டாள்! இது என்ன புதிதா! அவளுடைய எந்த தேவைக்கு அவன் அருகில் இருந்திருக்கிறான். அவனுடைய தேவை எப்போது அவளுக்கு அதிகமாக இருந்ததோ அப்போதெல்லாம் நிர்க்கதியாக அவளை தவிக்க விட்டுவிடுவது அவனுக்கு வழக்கம் தானே! இப்போதும் அதைத்தான் செய்திருக்கிறான்.

 

வர வேண்டாம்… போய்விடு என்று சொன்னது அவள் தான்! சொன்னால் போய்விடுவானா! போய்விட்டான்! இந்த மூன்று மாதத்தில் ஒருமுறை கூட அவளை எட்டிப்பார்க்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லையே! – தொண்டடையை அடைத்தது. மௌனமாக தலை குனிந்து நின்றாள்.

 

“எப்படிம்மா இருக்க?” – தந்தையின் கனிவான குரல் அவள் மனதில் பதிந்தது. ஆனால் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.

 

“இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாயிக்கம்மா… தேவ் உன்ன பார்க்க வர்றேன்னு சொல்லியிருக்கான்” – வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

 

‘தேவ்!’ – கையில் பிடிபட்ட பறவையின் சிறகு போல் படபடவென்று அடித்துக் கொண்டது அவள் இதயம்.

 

இத்தனை நாட்களாக இல்லாமல் இப்போது என்ன திடீரென்று! – ‘நான் அவனை பார்க்க விரும்பவில்லை’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஆனால் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்ட நா பிறழ மறுத்தது.

 

‘உங்க ரெண்டு பேருக்குள்ள எப்படி இவ்வளவு பெரிய பிளவு வந்ததுன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு! உங்ககிட்ட கோபப்படக் கூடாதுங்கறதுக்காக ஆங்கர் மேனேஜ்மேண்ட் கோர்ஸ் எடுத்துக்கிட்டார். உங்களுக்கு பிடிக்கலைங்கறதுக்காத அதை பாதியிலேயே நிறுத்தவும் செஞ்சார். உங்க மேல அவ்வளவு பிரியம் அவருக்கு. எப்படி பிரிஞ்சீங்க! உங்களோட பிரிவுக்கு காரணம் அவரோட கோவம்தான்னா நீங்க அதை கொஞ்சம் கன்சிடர் பண்ணனும். கோவம் அவரோட குணம் இல்ல.. வீக்கனஸ்…’ – மனநல சிகிச்சைக்காக தினமும் வீட்டிற்கு வரும் மருத்துவர் மேதா சொன்னது இப்போது அவள் நினைவில் தோன்றியது. அவளுடைய வார்த்தையில் மதுராவின் மனம் கனியத்தான் செய்தது. ஆனால் அவனுடைய வீக்கனஸ் குழந்தையை ஆபத்தின் விளிம்பில் கொண்டு நிறுத்திவிட்டதை நினைக்கும் போது அவளால் அவனை மன்னிக்க முடியவில்லை. வேண்டாம் என்று வெறுக்கவும் முடியாமல், வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இரண்டும் கெட்டானாய் கிடந்து அடித்துக் கொண்டது அவள் மனம்.

 

***************************

அவன் வழக்கமாக செய்யும் வேலைகள் அனைத்தும் அன்று தடைபட்டு போய்விட்டன. காலை நேர ஜாகிங் கூட ஜகா வாங்கிவிட்டது. மனம் பரபரத்தது. இன்று அவளை பார்க்கப் போகிறான். மூன்று மாதங்களுக்குப் பிறகு… நீண்ட நெடிய தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு அவளை சந்திக்கப் போகிறான். அவளுடைய அழகான குரலை கேட்கலாம்… அவளுடைய பளிங்கு கண்களோடு பேசலாம்… அவள் சுவாசித்த மிச்சக்காற்றை சுவாசித்து உயிரை நிறைத்துக்கொள்ளலாம்…! முட்டாள்தனமான உணர்வுகள் அவன் உள்ளத்தை ஆக்கிரமித்து, இதமாய் வருடின.

 

அவள் இல்லாத இந்த வாழ்க்கை வெறுமை… தண்டனை…! தனிமையும் துயரமும் விடாமல் துரத்தும் இந்த மூன்று மாதங்களை எப்படி கழித்தான் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம். பகலெல்லாம் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாலும் இரவில் மூச்சுமுட்டி செத்து செத்து பிழைத்தான். ‘ஆக்டபஸ்’ போல் மூளையை சுருட்டிப் பிடித்துக்கொள்ளும் அவளுடைய நினைவுகளிலிருந்து அவனால் வெளியே வரவே முடிவதில்லை. பழைய தேவ்ராஜாக இருந்திருந்தால் மதுராவை மறக்க மதுவை நாடியிருப்பான். ஆனால் அவனை மூர்க்கனாக்கி அவளை அவனிடமிருந்து பிரித்ததே இந்த சனியன் பிடித்த போதைதானே! இன்னொருமுறை அதை தொடுவதா! – முற்றிலும் அதை விலக்கிவிட்ட இந்த புது மனிதனுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட செக்கு மாடாய் அவள் நினைவுகளிலேயே உழன்றான்.

 

நியாயப்படி அவனை இப்படி புலம்பவிட்டதற்கு… தனிமையில் தவிக்க விட்டதற்கு அவளுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். ஆனால் இப்போது அவனுக்கு அப்படி தோன்றவில்லை… அவள் எதிரில் மண்டியிட்டு என்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்ச வேண்டும் போல் இருந்தது. அவளை சமாதானம் செய்வதற்காக அவளிடம் கெஞ்சுவதென்ன… யாசிக்கக் கூட தயாராகிவிட்டான். அவளுக்கு முன் அவனுடைய கர்வமும் சுயமரியாதையும் கூட மதிப்பிழந்துவிட்டதாகத் தோன்றியது. அதை நினைத்து அவன் வெட்கப்படவில்லை… அவமானப்படவில்லை… மதுரா என்னும் பொக்கிஷத்திற்காக எதையும் இழக்கலாம் என்கிற பெருமிதத்தோடு குளியலறைக்குள் நுழைந்தான்.

 

பூந்தூறல் போல் ஷவரிலிருந்து உதிர்ந்த குளிர்ந்த நீர் அவன் மேனியில் வந்து மோதியது. ‘இனி மிஸ்கேரேஜ் ஆயிடுமேங்கற பயம் தேவை இல்ல… நீங்க தாராளமா மதுராவை பார்க்கலாம். அவளுக்கும் உங்க ஏக்கம் இருக்கு. வெளியே காட்ட மாட்டேங்கிறா… அந்த பிடிவாதத்தை நீங்கதான் உடைக்கணும்’ – மேதா கூறியதை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்ந்தபடி குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தான்.

 

இந்த மூன்று மாதங்களில் அவளை நேரடியாக பார்க்கவில்லையே ஒழிய, மாயா என்னும் கண்ணாடி வழியாக ஒவ்வொரு நாளும் அவளை கண்காணித்துக் கொண்டுதான் இருந்தான். அவள் பட்ட கஷ்டங்களையும் அனுபவித்த துன்பங்களையும் இரு மடங்காக அவன் உள்ளத்தில் உணர்ந்தான். அவளுடைய மேலான சிகிச்சைக்கு ஆனதை செய்தான். அதன்படி அவளுடைய மனோதத்துவ நிபுணரை மாற்றி மேதாவை நியமித்தான். அவள் மூலம் அவளிடம் தெரிந்த ஒவ்வொரு சிறு முன்னேற்றத்தையும் தெரிந்துக் கொண்டான். இப்போது அவள் உடல்நிலையிலும் மனநிலையிலும் நல்ல மாற்றம் வந்துவிட்டது. அதுமட்டுமல்ல… அவனுக்காக அவள் ஏங்குகிறாளாம்! அவன் மனம் இனித்தது.

 

வோர்டராபை திறந்தான்… தன்னுடைய தோற்றத்தைப் பற்றி அவன் எப்போதும் பெரிதாக கவலைப்பட்டதில்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை… தன் மனதிற்கு இனியவளை கவரும் விதத்தில் நன்றாக உடுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணினான். சட்டென்று அவன் முகத்தை வெட்கம் ஆக்கிரமித்தது. ‘காட்!’ – பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. என்ன அசட்டுத்தனம்…!!! – ‘மதூ…! என்னை என்ன பண்ணிட்ட நீ!’ – இனிய உணர்வுடன் அவளை மானசீகமாக கடிந்துகொண்டவன், அவளுக்கு பிடித்த நிறத்தில் ஒரு சூட்டை தேர்வு செய்தான்.

 

மீண்டும் ஒருமுறை கண்ணாடிக்கு எதிரில் சென்று நின்று அதில் தெரிந்த பிம்பத்தை மேலும் கீழும் பார்த்தான். தாடியை தடவி மீசையை முறுக்கிவிட்டான். ஏற்கனவே சரியாக இருந்த கோட்டை மீண்டும் ஒருமுறை சரியாக இழுத்துவிட்டான்.

 

தேவ்ராஜா இவன்! இருக்கவே முடியாது… இந்த பதட்டமும் பரபரப்பும் அவனுக்கு சற்றும் சம்மந்தமில்லாதது. – ‘காட்! மணியாகிவிட்டதா!’ – கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தான். ஒன்பது மணியென்று காட்டியது. ‘எழுந்திருப்பாளா!’ – அலைபேசியை எடுத்து மாயாவிற்கு அழைத்தான்.

 

“நா வர்றேன்னு தெரியுமா? என்னை பார்த்ததும் டென்ஷன் எதுவும் ஆயிட மாட்டாளே!”

 

“அவ நல்லா இருக்கா தேவ் பாய்… அதோட நீங்க வர்றீங்கன்னு மாமா அவகிட்ட சொல்லீட்டாரு. நார்மலாதான் இருக்கா. டென்ஷனாகாம வாங்க”

 

“நா வர்றேன்னு சொன்னதும் என்ன சொன்னா?”

 

“ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டான்னு நினைக்கறேன். அவர் என்கிட்ட எதுவும் சொல்லல…”

 

“அவர் மதுகிட்ட பேசும் போது நீ பக்கத்துல இல்லையா?”

 

“இல்லையே… ஏன்?”

 

“ப்ச்… என்ன இல்லையே! எங்க போன? நீ அங்க இருந்திருந்தா நா வர்றேன்னு தெரிஞ்சதும் சந்தோஷப்பட்டாளா… முகம் மாற்றம் எப்படி இருந்ததுன்னெல்லாம் கவனிச்சிருக்கலாமல்ல…” – எரிச்சலுடன் கேட்டான்.

 

“அட தேவ் பாய்… பேசாம கிளம்பி வாங்க… டீனேஜ் பையன் மாதிரி படுத்தாம…” – கண்டுபிடித்துவிட்டாளே! அவன் முகத்தில் வழிந்த அதிசட்டுத்தனத்தை காண அருகில் ஒருவரும் இல்லாமல் போனது அவன் செய்த பாக்கியம்.

 

ஓரிரு நொடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டவன், “டீனே…ஜ்! பைய…னா! லூசு… என்னை திடீர்ன்னு பார்த்ததும் மது… மது டென்ஷன் ஆயிட கூடாதுல்ல… அப்புறம் முன்னாடி மாதிரி ஏதாவது ஆயிட்டா என்ன பண்ணறது. அதான் கேட்டேன்… உளறாம வேலையைப் பாரு…” என்று தன் மனதை மறைத்து தங்கையிடம் வெடுவெடுக்க முயன்றான். புஷ்வாணமாகிவிட்ட அவனுடைய முயற்சியை ரசித்து சிரித்தபடி அழைப்பை துண்டித்தாள் மாயா.

 

தேவ்ராஜ் மீண்டும் ஒருமுறை கண்ணாடிக்கு முன் வந்து நின்றான். எதுவும் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்தான். அந்த முரட்டு முகத்தில் மீசையையும் தாடியையும் தவிர அதிகமாவதற்கு என்ன இருக்கிறது! சிரித்துக் கொண்டான்.

 

‘இன்னும் கொஞ்ச நேரம் மது. உன் முன்னாடி நான் இருப்பேன். எனக்கு தெரியும். என்னை பார்த்ததும் நீ கோவப்படத்தான் செய்வ… என்னை குற்றம் சொல்லுவ… வெளியே போக சொல்லி விரட்டுவ… ஆனா நா விடமாட்டேன்… உடனே நீ ஃபிரஸ்ட்ரேஷனோட அழுது கத்துவ… என்னைய அடிக்கக் கூட செய்வ… நா அப்படியே உன்ன என்னோட கைல ஏந்திக்குவேன்… உன்ன இறுக்கமா கட்டிக்குவேன்… ஆரம்பத்துல முரண்டு பண்ணினாலும் அப்புறம் உருகி என்னோட நீ ஒட்டிக்குவ… நா உன்கிட்ட மன்னிப்பு கேட்டு கெஞ்சுவேன்… நீ என்னை மன்னிக்க மாட்ட… ஆனா நீ மண்ணிக்கற வரைக்கும் நா உன்ன விடவே மாட்டேன்…’ – அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதை இப்போதே கற்பனை திரையில் கண்டபடி காரில் ஏறினான் தேவ்ராஜ்.

 

 




24 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Nxt epi iruka tdy


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      irukku pa… konjam late aagum… but pottuduven…


      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Subha Mani says:

        Super mam am waiting for nxt epi


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    மதுரா வை அலட்சியம் செய்ததற்கு தேவ்
    தண்டனை அனுபவிக்கனும்னு விரும்பினேன் ஆனால் மதுரா இவ்வளவு கஷ்டப்பட்டு அதைப்பார்த்து தேவ்ராஜ் வேதனை படுவானு எதிர்பார்க்கவில்லை. தேவ்ராஜ் தன்னோட காதலை மதுராவிற்கு உணர்த்த சந்தர்ப்பம் அமைந்தால் ரொம்பவே நல்லா இருக்கும். நான் நினைத்தது போலவே தேவ்க்கு கிடைத்த தண்டனை மாயாவை மாத்தி இருக்கு. தேவ் மதுராவின் சந்தோஷான நிகழ்வுகள் சில எபிசோடாக நீடித்தால் ரொம்ப நன்றாக இருக்கும்


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    இவன் கற்பனைக்கு மாறாக எதுவும் நடக்கக் கூடாது கடவுளே…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vinayagam Subramani says:

    தேவ்வின் வாழ்கையில் நல்ல நேரம் தொடங்கிவிட்டது…தன் தந்தை செய்த தவறுகளை மறந்து இயல்பாகி வருகிறான்.நல்ல முன்னேற்றம்… டீன் ஏஜ்ல் எல்லாம் எப்போது அனுவித்தாய்???என்ஜாய் தேவ் ,
    இது தான் வாழ்க்கை..இந்த மாதரி சின்ன ..சின்ன விஷயங்கள் தான் வாழ்க்கையை அழகாக வைத்துக் கொள்ள உதவும்…
    ஆனால் மதுராவின் ரீஆக்ஷன் எப்படியிருக்குமோ…???


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepashvini Writes says:

    ஹாய் நித்யா மேம்😘😘😘
    வாவ் அழகான அத்தியாயம் மேம் 👏👏👏

    போங்க மேம் நான் கொஞ்ச நேரத்துல நிஜமாவே பயந்துட்டேன்… ஆனா அது நிஜம் இல்ல, மதுராவின் பயத்தால் அவளுக்கு தோன்றிய கற்பனை என்றதும் தான் ஹப்பா குழந்தைகு ஒண்ணும் இல்ல என்று நிம்மதியாச்சு

    பாவம் மதுரா, தேவ்ராஜை விலக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல், அவன் செய்ததை மறக்கவும் முடியாமல் ரொம்பவே தவிக்கிறா, ஆனால் அவள் கணவனின் அருகாமைக்காக ரொம்பவே ஏங்குகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மை.. .

    அடடே இது யாரு நம்ம தேவ் ஆஹ்ஹ்.. ஹா ஹா தேவ் டீன் ஏஜ் பாய்ஸ் எல்லாம் உன்கிட்ட தோத்தானுங்க போ… உன்னை இப்படி பார்க்க ரொம்பவே சந்தோசமா இருக்கு, தேவ்😘😘😘

    இப்போ மதுராவை பார்க்க போறியா போ போ ஆனா அங்க உனக்கு நித்யா மேம் என்ன ஆப்பு வச்சிருக்காங்கன்னு தெரியல, ஆனா என்ன நடந்தாலும் கோபத்தை மட்டும் கட்டு படுத்திக்கோ அவ்ளோ தான்…

    (6 மாத குழந்தை வயிற்றில் நலம் தானே மேம்)

    அடுத்த பதிவுக்காக ஆவலுடன் நான்
    தீபஷ்வினி.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ் நினைப்பது மாதிரிதான் நடக்குமா.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    mathurambaal mathurambaal says:

    மாத்திரை கொடுத்தது ஒன்னும் பண்ணலையா?எப்படி நல்லா இருக்குனு சொன்னன்ங்க


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    இப்படியே சிரிச்சு கிட்டே போடா தேவ்!


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Wow… semma episode sister… i like it … nxt ud waiting suspence romba vaikuringa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    ஓவரா கற்பனை பன்றானே நடக்குமா? பட் நடத்தா நல்லாதான் இருக்கும்😁


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    Wow . Excellent writing. மன உணர்வுகளை அட்டகாசமாக எழுதியிருக்கீங்க. அருமை நித்யா.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    uma manoj says:

    40% பேபியை பாதிக்கும் என்று டாக்டர் சொன்னாரே ஸ்கேனிங்ல குழந்தை எப்படி இருக்கு என்று சொல்லலையே !
    குழந்தையின் உடல்நிலை சரியாக இருக்க வேண்டும் நித்யா பிளீஸ். ..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Wowww…. Lovely epi… Dev semma


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Achchi soch sweet dev po…. Po mathu waiting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vijay Siva says:

    So romantic dev


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Wow sis deva ithu😍😍😍…vekkam,pathatam sema dev romba change agitan… romba ethirparpoda poran madhu epadi react panna poralo pls sis iniyavathu rendu peraiyum sethu vainga pls😭😭😭😭


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    Wow dev sema


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sow Dharani says:

    தேவ் என்ன பா இப்படி ஆகிட்ட….தேவ்யை லவர் பாய் யா பாக்க me waiting


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    என்ன நடக்கும்…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jenni Nila says:

    Iove Dev


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    KARTHIGA SELVI says:

    Dev’s imagination should come true. Pls.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    dev semma karpanaiyoda pore,maduvin reaction…………………..

You cannot copy content of this page