கனல்விழி காதல் – 88
10508
22
அத்தியாயம் – 88
தேவ்ராஜின் கார் நரேந்திரமூர்த்தியின் அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் நுழைந்தது. அவள் இங்குதான்… வெகு அருகில் இருக்கிறாள் என்னும் எண்ணம் அவனுக்குள் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆழமூச்செடுத்து தன்னை திடப்படுத்திக் கொண்டு கட்டிடத்திற்குள் நுழைந்தான். அழைப்புமணிக்கு அவசியம் இல்லாமல் வீடு திறந்தே இருந்தது. ஹாலில் அமர்ந்திருந்த நரேந்திரமூர்த்தியும் பிரபாவதியும் அவன் கண்ணில் பட்டார்கள் ஆனால் அவனுடைய பார்வை பசைபோட்டு ஒட்டிக் கொண்டது போல் மதுராவின் மீதே நிலைத்திருந்தது.
சாதாரண நீல நிற உடையில் அமர்ந்திருந்தவள் அவன் கண்களுக்கு தேவதை போல் தோன்றினாள். முழுமதி போல் ஒளிர்ந்த அவள் முகத்திலிருந்து நழுவிய அவன் பார்வை, மேடிட்டிருந்த வயிற்றை அடைந்த போது மூச்சே நின்றுவிட்டது அவனுக்கு. ‘அவளுக்குள் அவனுடைய உயிர் வளர்ந்துக் கொண்டிருக்கிறது!’ – தெரிந்த விஷயம்தான். ஆனால் அதை கண்கூடாக பார்க்கும் போது மனமும் உடலும் சிலிர்த்துப் போகிறது. ‘மது!’ – மென்மையாக அவன் உதடுகள் அவள் பெயரை முணுமுணுத்தன. மாயம் செய்தது போல் அவள் உடல் விரைத்து நிமிர்ந்தது. அவனுடைய அழைப்பு அவள் காதில் விழுந்தது போல் சட்டென்று வாசல் பக்கம் பார்வையை திருப்பினாள். இவருடைய பார்வையும் ஒன்றோடொன்று கலக்க அவன் மூச்சுவிட மறந்துபோனான்.
அவளை தவிர அங்கிருந்த அனைத்தும் அவன் பார்வையில் மங்கிப்போனது. அவனுடைய கால்கள் அவளை நோக்கி முன்னேறின. இடைப்பட்ட இந்த மூன்று மாதங்களில் அவள் இன்னும் அழகாகியிருந்தாள். பொலிவு கூடியிருந்த அவள் முகத்தில் உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்தன. அவள் கண்கள் பேசும் மொழியை அவனால் படிக்க முடியவில்லை. இவன் உள்ளே நுழைய எத்தனித்ததும் அவள் வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டது அவனுக்கு விழுந்த முதல் அடி. அதை அவன் ஜீரணிக்க முயன்று கொண்டிருந்த போது, “தேவ்! வா வா… உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்கிற நரேந்திரமூர்த்தியின் குரல் அவன் கவனத்தை ஈர்த்தது.
‘மழைவிட்டாலும் தூவானம் விடாது… ஒரேடியா ஒழிச்சு கட்டிடலாம்னு பார்த்தா துரத்திக்கிட்டே வருது… ஹும்…’ – பிரபாவதியின் முணுமுணுப்பு அவன் செவியை எட்டவில்லை என்றாலும், அவளுடைய முகபாவமும் இவனை பார்த்ததும் விருட்டென்று அவள் எழுந்து உள்ளே சென்ற விதமும் தனக்கான சிறந்த வரவேற்பு என்பதை புரிந்துக் கொண்டவன், முயன்று அந்த அவமானத்தை சகித்தான்.
“வாப்பா… உள்ள வந்து உட்காரு…” – நரேந்திரமூர்த்தி அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். மதுராவிற்கு எதிரில் அமர்ந்தவனுடைய பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது. அவள் கலங்குவாள் அல்லது கோபம்கொள்வாள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவளோ நேருக்குநேர் அவன் பார்வையை சந்தித்தாள். அந்நியனை பார்ப்பது போல்… யாரென்றே தெரியாதவனை பார்ப்பது போலிருந்தது அந்த பார்வை. உள்ளே தோன்றிய கடுமையான வலியை ஒரு புன்னகையில் மறைத்தான்.
*********************
‘தேவ் உன்ன பார்க்க வர்றேன்னு சொல்லியிருக்கான்’ என்று தந்தை கூறியதும் எதிர்பார்ப்பும் கோபமும் கலந்த ஒரு கலவையான உணர்வு அவள் நெஞ்சில் நிறைந்தது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இயல்பாக இருந்தாள். அவன் வருவதற்காக நாம் எதற்கு ரெடியாக வேண்டும் என்று வீம்போடு அமர்ந்திருந்தாள். மாயா இரண்டுமூன்று முறை வந்து அவளிடம் பேச்சு கொடுத்தாள். நரேந்திரமூர்த்தியும் அவளை விடவில்லை. தனியாக அமர்ந்திருந்தால்தானே இந்த பிரச்சனை என்று எண்ணி ஹாலுக்கு வந்து டீவியை போட்டுக் கொண்டு அமர்ந்தாள். மனம் முழுவதும் அவனையே சுற்றிக் கொண்டிருக்க, திரையில் என்ன படம் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கூட அவள் அறியவில்லை.
சற்று நேரத்தில் நரேந்திரமூர்த்தி அவளுக்கு அருகில் வந்து அமர்ந்து, தேவ்ராஜின் வருத்தங்களையும் மாற்றங்களையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் பிரபாவதியும் அங்கே ஆஜராகிவிட அவர் பேச்சை மாற்றினார்.
திடீரென்று அவளுக்குள் ஏதோ ஒரு விசித்திர உணர்வு… உடல் சிலிர்த்தது… உள்ளம் குறுகுறுத்தது… இயல்பாக அமரமுடியாத நிலை… சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அவன்! அவளுடைய இரவுகளை நரகமாக்கியவன்… உறக்கத்தை களவாடியவன்… உள்ளத்தை பொசுக்கியவன். முகம் சூடானது… இதயத்துடிப்பு எக்குத்தப்பாக எகிறியது… உடல் நடுங்கியது… எதிர்பார்த்துத்தானே அமர்ந்திருந்தோம்! ஏன் இத்தனை பதட்டம்! விளங்கிக்கொள்ள முடியாத தவிப்புடன் அவன் பார்வையை சந்தித்தாள்.
அவளுடைய கண்களிலிருந்து விலகிய அவன் பார்வை மேடிட்டிருந்த அவள் வயிற்றை தழுவிய போது அவன் முகத்தில் ஓர் அதிர்வு தெரிந்தது. பின் முகத்தில் ஒரு கனிவு…! கண்களில் காதல்…! எரிச்சலுடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“தேவ்! வா வா… உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” – மகளுடைய வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கியவனை தந்தை மகிழ்ச்சியோடு உபசரித்தார்.
“மழைவிட்டாலும் தூவானம் விடாது… ஒரேடியா ஒழிச்சு கட்டிடலாம்னு பார்த்தா துரத்திக்கிட்டே வருது… ஹும்…” – வெறுப்புடன் தூற்றினாள் தாய். இதயத்திற்குள் சுருக்கென்று குத்தியது அவளுடைய வார்த்தை. தந்தையின் உபசரிப்பையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தாயின் தூற்றுதலையும் தாங்க முடியவில்லை. அசைவற்று இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.
‘என்னதான் ஆயிற்று நமக்கு! நம்மை உடைத்து நொறுக்கிவிட்டு அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். அவனிடம் எந்த வருத்தமும் தெரியவில்லை. கோட்டும் சூட்டுமாக கம்பீரமாக நம் எதிரில் வந்து நின்றான். நாம் மட்டும் இப்படி நலிந்த ஆடையுடன் களையிழந்து போய் அமர்ந்திருக்கிறோமே!’ என்று வருந்தினாள். அவனுக்கு முன் தன்னுடைய பலவீனம் வெளிப்படுவது அவமானமாகத் தோன்றியது. சிரமப்பட்டு தன்னுடைய உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு அவன் பார்வையை நேருக்கு நேர் சந்தித்தாள். வழக்கமான அவனுடைய வசீகரப் புன்னகை அடர்ந்த அவன் மீசைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்தது. தன்னையும் தன் கோலத்தையும் எல்லி நகையாடும் அவன் புன்னகையை முயன்று புறந்தள்ளிவிட்டு அவனை இயல்பாக நோக்கினாள் மதுரா.
“நீங்க பேசிட்டு இருங்க… எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கு. அப்புறம் பார்க்கலாம்…” அவர்களுக்கு தனிமையைக் கொடுத்துவிட்டு விலகிச் சென்றார் நரேந்திரமூர்த்தி.
சற்று நேரம் அவள் முகத்தை பார்வையால் பருகிய தேவ்ராஜ், “எப்படி இருக்க?” என்றான் கரகரத்த குரலை செருமி சரிசெய்தபடி.
“நன் ஆஃப் யுவர் பிசினஸ்… எதுக்கு என்னை பார்க்க வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க” – அவள் நினைத்தைதைவிட இருமடங்கு அதிக கடுமையோடு வெளிப்பட்டது அவள் குரல்.
நம்பமுடியாமல் அவளை பார்த்தான் தேவ்ராஜ். அவன் அறிந்த மென்மையான மதுராவிற்குள் இப்படி ஒரு பரிமாணம் இருக்கக் கூடும் என்பதை அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை.
அவனுடைய தேவதை மிகவும் மென்மையானவள்… அதிர்ந்து பேச தெரியாத சிறு பெண். ஆனால் இப்போது அவன் எதிரில் அமர்ந்திருப்பவள் ஒரு பக்குவப்பட்ட பெண். உணர்வுகளை மறைக்காத தெரிந்தவள். கடுமையை காட்ட தெரிந்தவள்! மூன்றே மாதத்தில் எப்படி இந்தனை பெரிய மாற்றம்! – தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“எதுக்கு வந்தீங்கன்னு கேட்டேன்” – திகைத்துப்போய் அமர்ந்துவிட்டவனிடம் மீண்டும் ஒருமுறை கேட்டாள்.
“உன்னை பார்க்க வர்றதுக்கு எனக்கு எந்த ரீசனும் தேவையில்லை” – கட்டுப்பாட்டை மீறி சிறு கோபம் வெளிப்பட்டுவிட்டது அவனுடைய குரலில்.
உதட்டைக் கடித்துக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தாள் மதுரா. தலைகுனிந்து அவள் அமர்ந்திருந்த தோற்றம் அவன் மனதை பிசைந்தது. “ஐம் சாரி…” – பெருமூச்சு விட்டான்.
“மது… மது ப்ளீஸ் லீசன் டு மி. நா இந்த குழப்பத்தையெல்லாம் சரி பண்ணனும்னு நினைக்கறேன். உன்ன நல்லா பார்த்துக்கணும்னு விரும்பறேன். என்னை கொஞ்சம் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு” – தழைத்த குரலில் கெஞ்சினான்.
அவனை நிமிர்ந்து நிதானமாக பார்த்த மதுரா, “என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். நீங்க சிரமப்பட வேண்டாம்” என்றாள். கல்லடி பட்டது போல் இருந்தது அவனுக்கு.
“எங்கிட்ட இது மாதிரி பேசாத மது…” என்றான் பரிதாபமாக.
“எனக்கு உன்னோட கோபம் புரியாது. நா செஞ்சது எல்லாம் தப்புதான். அதுக்காக உன்கிட்ட எத்தனை தரம் வேணுன்னாலும் மன்னிப்பு கேட்கறேன். அப்படியும் உனக்கு கோவம் குறையலன்னா என்னைய திட்டு… அடி… என்ன வேணுன்னாலும் பண்ணு… ஆனா இப்படி யாருன்னே தெரியாதவங்ககிட்ட பேசற மாதிரி பேசாத… என்னால… இதை… அக்ஸப்ட் பண்ண முடியல…. ப்ளீஸ்…” – அவன் கண்களில் தெரிந்த வலியை கண்டவளின் மனம் கனிந்தது. அதை உணர்ந்தது போல்,
“எனக்கு தெரியும் மது… நீ என் மனசுல எந்த அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கியோ அதே அளவுக்கு நானும் உன் மனசுல இருக்கேன். ஆனா ஒத்துக்கத்தான் மாட்டேங்கிற” என்றான். உடனே அவள் முகத்தில் கடுமை குடியேறியது.
“சரி… சொல்லு… உன்னோட கோபம் குறைய நா என்ன செய்யணும்? என்ன வேணுன்னாலும் சொல்லு… செய்யறேன். பதிலுக்கு நீ என்கூட வீட்டுக்கு வரணும். பழசையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா இருக்கணும்… அதுதான் உனக்கு… எனக்கு… நம்ம குழந்தைக்கு… எல்லாருக்குமே நல்லது. எல்லாருக்குமே நல்லதுன்னா அதை செய்றதுதானே புத்திசாலித்தனம். இப்படி பிடிவாதமா இருக்கறதுனால யாருக்கு என்ன லாபம் சொல்லு… எல்லாருக்குமே நஷ்ட்டம் தான்…” – அவன் பேசப் பேச மதுராவின் முகம் உக்கிரமாக மாறியது.
“பிசினஸ் பேசுறீங்களா?” – ‘பிசினஸா! நா எப்ப..!’ – புரியாமல் விழித்தான்.
“லாப நஷ்ட்டம் பார்க்கறதுக்கும்… கொடுக்கல் வாங்கல் பேசறதுக்கும் வாழ்க்கை ஒண்ணும் பிசினஸ் இல்ல மிஸ்டர்… லைஃப் இஸ் சம்திங் டிஃபரென்ட்… அதுல மனுஷங்களோட எமோஷன்ஸுக்கும் பீலிங்க்ஸுக்கும் முக்கியத்துவம் இருக்கணும். அதெல்லாம் என்னன்னே தெரியாத நீங்க எதுக்காக இந்த ரிலேஷன்ஷிப்பை இன்னும் காம்ப்ளிகேட் பண்ணிகிட்டே போறீங்க?” – கடுப்படித்தாள்.
“மது நா அந்த மாதிரி எதுவும்…” – “போதும்…” கையை உயர்த்தி தடுத்தாள்.
தான், வாழ்க்கையைப் பற்றி பேசியதே, பிசினஸ் டோனில் வெளிப்பட்டுவிட்டது என்பது புரியாமல் குழம்பி அவளை மலங்கமலங்க பார்த்தான்.
“என்னோட குழந்தைக்கு நீங்க அப்பா… உங்க குழந்தைக்கு நா அம்மா.. அவ்வளவுதான். இதுக்கு மேல நமக்குள்ள எந்த உறவுக்கும் வழியில்லை…” – பிசிறற்ற குரலில் அவள் கூற அவன் பதறிப்போனான். முகத்தில் கலவரம் சூழ்ந்துக் கொண்டது. சட்டென்று எழுந்து அவள் காலடியில் மண்டியிட்டு அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.
“என்ன பண்றீங்க… எழுந்திரிங்க… எழுந்திரிங்கன்னு சொல்றேன்ல…” – அவளுடைய பார்வை சுற்றும் முற்றும் பாய்ந்தது. நல்லவேளை யாரும் இல்லை. ஆனால் அதை பற்றிய கவலை எதுவும் அவனுக்கு இல்லை. மனைவியின் கைகளை இருக்கமாகப் பிடித்துக் கொண்டு அவளை ஏக்கத்துடன் பார்த்தான்.
“என்கிட்டேருந்து விலகிப் போகாத மது. என்னால உன்ன வீட்டுக் கொடுக்க முடியாது… நீ இல்லாம நா ரொம்ப வெறுமையா ஃபீல் பண்ணறேன். நீ என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் நா ஏத்துக்கறேன். ஆனா இது வேண்டாம்… ஐ காண்ட் டேக் திஸ்…” – நடுங்கும் அவன் கைகளில் வெளிப்பட்டது அவனுடைய பதட்டம்.
‘வரன் பேசப்போன உங்க டாடியை மீட்டிங் ஹால்ல உட்காரா வச்சு பிசினஸ் டீல் பேசினானாம். இந்த கல்யாணத்துல அவனுக்கு என்ன லாபம்னு கேட்டானாம். திலீப்பை விலை பேசினானாம்…’ – பிரபாவதியின் ஓதல் மதுராவின் செவியில் எதிரொலித்தது.
வலிக்கும் இதயத்தை கையை வைத்து அழுத்தியபடி, “இந்த கல்யாணமே உங்களுக்கு ஒரு பிசினஸ்தானே தேவ்! எந்த லாபமும் இல்லாத இந்த பிசினஸ் இனி எதுக்கு உங்களுக்கு?” என்றாள்.
அதிர்ச்சியோடு அவளை பார்த்தான். “அதெல்லாம் என்னோட முட்டாள்தனம். நா செஞ்ச தப்பு… மது… நா மாறிட்டேன்… பழசையெல்லாம் காரணம் காட்டி என்னை ஒதுக்கிடாத…” – கண்ணீரில் பளபளத்தன அவன் கண்கள்.
உண்மைதான்… அவன் மாறிவிட்டான்… அவனுடைய மாற்றத்தை அவள் கண்கூடாக காண்கிறாளே! இந்நேரம் பழைய தேவ்ராஜாக இருந்திருந்தால் அவளை கட்டி இழுத்துக் கொண்டு போயிருப்பான். இப்படி மண்டியிட்டு கெஞ்சிக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் மாற்றம் அவனுக்கு மட்டும் சொந்தமானதா? அவளும் தானே மாறியிருக்கிறாள்! மற்றவர்களுக்காக மண்டையை ஆட்டும் மக்கு மதுரா அல்லவே இவள்… உறங்காத இரவுகள் கற்றுக் கொடுத்த பாடத்தை அவள் எப்படி மறப்பாள்! “ஐம் சாரி தேவ்…” – அவன் பிடியில் சிக்கியிருந்த தன் கையை உருவிக் கொண்டு எழுந்தவள், தன்னுடைய அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டாள்.
22 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Yazhvenba M says:
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
admin says:
வணக்கம் தோழமைகளே,
பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி. சொந்த வேலை காரணமாக இன்று கதை பதிவிட இயலாது. நாளை சந்திப்போம்.
நன்றி…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Subha Mani says:
So sad mam tom 2 epi post panunga plz
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
vijaya muthukrishnan says:
nice ud. eagerly waiting for your next ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dhivya Bharathi says:
Madhu pls give him one chance… he prove himself how much love he had upon u…. try to undrstnd him
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
No mathu ipati pannaatha thirunthi vantha dev palaiya maathiri mara vaippu athikam . amma.apps evalavu thappu panninaalum mannikka mutiumaa .apuram enn deva mannikka kutathu. Un amma pannunathi nayama athukku mattum pesama iruka dev mel ulla kovatthil than un amma appati panninaganu naikkira athuka avanga istathukku pannittu than seitha thappai thirutthikka kuta maattanga avangala mannikkira thirunthi vantha deva mannikka maatta appitithane .
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
Super ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Radha Karthik says:
Lot of changes in Dev… Happy to see that…. Luv can make even a strongest man to cry…. Yeah it is happening now…. Madhu is naturally soft so she can’t keep anger for too long… Let them start their happy life mam… Unite them soon….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Suganya Samidoss says:
Super இப்படி ஒரு சூழ்நிலை வர வேண்டும் என எதிர்பார்த்தேன் அதே போல வந்திருச்சு. தேவ்ராஜூக்கு மதுரா மீது அளவு கடந்த காதல் தான் ஆனால் மனைவியை அலட்சியம் செய்யும் ஆண்களுக்கு இது போன்ற பாடம் கண்டிப்பாக தேவை. மனசுக்குஉள்ளேயே காதலையும் அன்பையும் மறைக்கிறதால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பது தேவ் இப்போ நன்றாகவே உணர்ந்திருப்பான். அருமையான கதை அமைப்பு நித்யா. இது தான் வாழ்க்கையின் எதார்த்தம். மனிதர்கள் மனம் இப்படித்தான் இருக்கும். சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பான வாழ்க்கையோடு ஒன்றிப்போகின்றது. வாழ்த்துக்கள் நித்யா. ( தினமும் எபிசோட் அப்டேட் பண்ணுங்க)
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
So sad
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kani Ramesh says:
Intha prabhavathy adanga maatale athu epadi sis abort panna tablet avaluke theriyama kodutha ava solratha madhu kekapala cha Dev romba pavam sis sikarama sethu vainga
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sow Dharani says:
மது நீ காயப்பட்டு இருக்கு….அதே போல் தேவ் யும் காயப்பட்டு இருக்கான்……தப்பை உணர்ந்து மன்னிப்பு கேக்குறார்…..அப்ப அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டியா நீ…..பிள்ளைக்கு அம்மா அப்பா அது மட்டும் தான் இனி…… அப்படினு சொல்லுரியே…… அது மட்டும் எப்படி முடியும்…..நீ யும் தேவும் சேந்து உங்க பிள்ளையோட வளர்ச்சியை பாக்க வேண்டாமா..
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vinayagam Subramani says:
Newton’s third law of motion..every action. … there is equal and opposite reaction..it’s your time, receive it.Deva..!!!. I can understand Madhuras’s feelings..sad part is still she is believing her mother….
ok…… Nithya Mam…will wait for the right time.. that is their reunion..
Really emotional update…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
Madhu innum un amma pechai kaathil vaangalaamaa,unnai neeye paarthu kolvaayaa eppadi.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jansi r says:
இப்போ பூனையோட காலமா? இதுவும் நல்லாருக்கு
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆகணும்…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
சரித்திரம் திரும்புகின்றதா,முன்பு தேவ் மதுராவை புரிந்துகொள்ளவில்லை,இப்போதுமதுரா தேவை புரிந்துகொள்ளவில்லை அவ்வளவுதான் .
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
தேவ் அவன் செய்த தப்பு இப்ப boombarang மாதிரி திரும்பி அவனை தாக்குது….மது இரன்டு மனசுக்கும் நடுவில் மாட்டி தவிக்கிறா…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Subha Mani says:
Dev romba pavam plz romba kastama iruku
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Suji Anbu says:
Nice update sissy
But Dev suffer lot hereafter want to see his happy & sweetness life.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sriranjana Niranjan says:
Nice ud..
Thank you mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Gayathri sankar says:
super madhu