Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 40

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 89

அத்தியாயம் – 89

உறக்கம் வராமல் கொட்டக்கொட்ட விழித்தபடி மொத்த இரவையும் கழிப்பதென்பது பெரும் கொடுமை. அந்த கொடுமையைத்தான் இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தாள் மதுரா. நேரம் நள்ளிரவைத்த தாண்டிவிட்டது. ஆனாலும் அவளுடைய கண்கள் மேல்கூரையை வெறித்தபடி விழித்துக் கிடந்தன. சிந்தனைகள் அவனையே சுற்றிக் கொண்டிருந்தன. அவனுடைய சோகமான முகம் அவளுடைய மனத்திரையிலிருந்து அகல மறுத்தது. அவனுடைய யாசிக்கும் கண்கள் ஏதோ மாயம் செய்து அவள் இதயத்தை வேலைசெய்யவிடாமல் தடுத்தது. பழைய நினைவுகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஓடிச் சென்று அவனைக் கட்டி கொள்ள வேண்டும் போல்… அவனுடைய துன்பத்தையெல்லாம் கலைத்துவிட வேண்டும் போல் தோன்றுகிறது! – ‘காட்! இந்த சித்திரவதையிலிருந்து அவளுக்கு விடுதலையே கிடையாதா! அவனைப் பற்றிய நினைவுகள் அவளை விட்டு அகலாதா! உறக்கம் அவள் கண்களை தழுவாதா!’ – ஏக்கப் பெருமூச்சுடன் எழுந்து அமர்ந்தாள். டிராயரில் இருந்த மாத்திரையில் ஒன்றை கூடுதலாக எடுத்து விழுங்கினாள்.

 

அப்போதும் உறக்கம் வரவில்லை. அன்று காலை அவனுடனான சந்திப்பு அவள் மனதிலிருந்து அகலவே இல்லை. அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதில் ஆழப்பதிந்ததோடு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவளை துன்புறுத்திய. இது மூன்றாவது முறை… அவன் அவளிடம் மன்னிப்பை வேண்டுவது… நிச்சயமாக அவனிடம் மாற்றம் இருக்கிறது. அதை அவன் கண்களில் அவள் கண்டாள். அவனுடைய தவறுகளையெல்லாம் சரி செய்ய நினைக்கிறான். அவர்களுடைய உறவை சீர் செய்ய போராடுகிறான். ஆனால் அது எதுவும் இப்போது இருக்கும் நிலைமையை மாற்றிவிடாது. மகிழ்ச்சியோடு துள்ளி திரிந்து கொண்டிருந்த சிறு பெண் இப்போது வலிகளை சுமந்துக் கொண்டு நடமாடும் பெண்மணியாக மாறிவிட்டாள். குழந்தை என்ன குறையோடு பிறக்குமோ என்கிற பயம் அவளுக்குள் ஆழமாக ஊடுருவி அவளுடைய வலியை பலமடங்கு அதிகமாக்கும் போது இயல்பான வாழ்க்கையைப் பற்றி எப்படி அவளால் சிந்திக்க முடியும்.

 

தொடர்ச்சியான சிந்தனைகளில் அவள் மூழ்கியிருந்த போது அலைபேசியின் பீப் ஒளி அவள் கவனத்தை ஈர்த்தது. எடுத்துக் பார்த்தாள். தேவ்ராஜிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. அவனுடைய பெயரை திரையில் பார்த்ததுமே சுருக்கென்ற வலி அவளுக்குள் பாய்ந்தது. ஓரிரு நிமிட யோசனைக்குப் பிறகு மெசேஜை திறந்தாள்.

 

‘ஹாய் மது.. இன்னும் தூங்கிருக்க மாட்டேன்னு நினைக்கறேன். என்னை பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கியா?’ – பட்டாம்பூச்சிகள் பல வயிற்றுக்குள் பறப்பது போன்றதொரு உணர்வு. மீண்டும் ஒரு பீப் ஒலி… அடுத்த மெசேஜ்… அதையும் திறந்தாள்.

 

‘உனக்குள்ள இப்படி ஒரு ஸ்ட்ராங் உமனா! ஆச்சரியமா இருக்கு! எவ்வளவு உறுதியா என்னை அவாய்ட் பண்ணற! ஆனா மது… இதெல்லாம் எவ்வளவு நாளைக்கு கன்டினியூ ஆகும். யூ ஆர் கில்லிங் மீ வித் யுவர் சைலன்ஸ்… பட் திஸ் வோண்ட் ஸ்டாப் மீ. எனிவே… நீ எதை பத்தியும் கவலைப்படாத… நா உன்கூட எப்பவுமே இருப்பேன். டேக் ரெஸ்ட் மை லவ்…’ – மதுராவிற்கு தொண்டையை அடைத்தது. கண்களில் கண்ணீர் திரண்டது. அந்த கடைசி வரியை படிக்கும் போது அவளுடைய இதயம் நழுவியதை அவள் உணர்ந்தாள்.

 

“டேக் ரெஸ்ட் மை லவ்” – அவள் இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன. அவனைப் பொறுத்தவரை வெறும் வார்த்தைகள். சாதாரண வார்த்தைகள்! ஆனால் அவளுக்கு! ஏன் இப்படி செய்கிறான்! ஏன் அவளை நிம்மதியாக விடமாட்டேன் என்கிறான்! இயலாமை தந்த கோபத்துடன் அலைபேசி திரையை வெறித்தாள்.

 

‘நா உன்கூட எப்பவுமே இருப்பேன்’ – இந்த வார்த்தையை எந்த அளவுக்கு அவன் மனதார கூறினான் என்பதை அடுத்து வந்த நாட்களில் மதுரா அறிந்துக் கொண்டாள். மதுரா கெஞ்சிக்கெஞ்சி அழைத்த போது அந்த வீட்டுப்பக்கம் தலைக்கூட வைத்துப் படுக்காத தேவராஜ் இப்போது தினமும் அழையா விருந்தாளி போல் அங்கு வந்து கொண்டிருந்தான்.

 

தினமும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது மதுராவை ஒரு முறை சந்தித்துவிட்டு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஆண்கள் அலுவல் காரணமாக வெளியே சென்றுவிட பெண்கள் மட்டுமே வீட்டிலிருந்தார்கள். இவனை பார்த்தததும் எதையாவது ஜாடையாக சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ளும் பிரபாவதியை சகித்துக் கொண்டு மதுராவை பார்க்கச் சென்றால் அவளும் அறையில் அடைந்துகொள்வாள். மாயாதான் அவனுக்கு அந்த வீட்டில் இருந்த ஒரே பிடிப்பு. அவள் துணையோடுதான் அவன் தினமும் மனைவியை சந்தித்துக் கொண்டிருந்தான். அவள் விலகிச் சென்றாலும் விடாமல் துரத்துச் சென்று பிடிவாதமாக அவளுடைய தனிமையை துரத்தினான்.

 

அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தினமும் அவளுக்கு எதிரில் தோன்றி பிரசன்னம் கொடுத்துக் கொண்டிருந்தவன் திடீரென்றி இரண்டு நாட்கள் காணாமல் போனான். அவனிடமிருந்து வழக்கமாக வரும் குறுஞ்செதிகள் கூட மிஸ்ஸிங். மதுராவின் மனம் அவளுடைய கட்டுப்பாட்டையும் மீறி அவனைத் தேடியது. யாரிடமும் கேட்கவும் முடியாமல், அவனுக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளவும் முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருந்த போதுதான் திலீப் அந்த செய்தியோடு தங்கையை தேடி வந்தான். கிஷோர் கேஸில் தேவராஜ் எந்தவிதத்திலும் ஈடுபடவில்லை என்று கூறினான்.

 

“என்ன!” – நம்பமுடியாத ஆச்சர்யத்துடன் மீண்டும் ஒருமுறை கேட்டாள். அவன் ‘ஆமாம்’ என்றான் அழுத்தமாக. தேவ்ராஜுக்கும் அந்த சம்பவத்திற்கு யாதொரு தொடர்பும் இல்லை என்று அடித்துக் கூறினான்.

 

திலீப்பை பொறுத்தவரை தேவ்ராஜிக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டான். அதனால் அவனுக்கு உதவி செய்யும் விதத்தில் இவன் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் ஒரு சந்தேகத்துடன், “உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள்.

 

“தெரிஞ்சுதான் சொல்றேன். பிரச்சனை என்னங்கறதை நல்லா விசாரிச்ச பிறகுதான் உன்கிட்ட சொல்றேன். எனக்கு தேவ்ராஜை சுத்தமா பிடிக்காதுங்கறது உண்மைதான். ஆனா இந்த விஷயத்துல அவன் மேல தப்பு இல்ல….” – முடித்துவிட்டு எழுந்துவிட்டான்.

 

அந்த பிரச்சனைதான் அவள் அவனிடமிருந்து பிரிந்து வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது. இப்போது அது ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டதே என்கிற எண்ணத்தில் அப்படியே அமர்ந்துவிட்டாள் மதுரா. அவள் மனம் அன்று நடந்த நிகழ்வுகளை அசைபோட துவங்கியது.

 

அவன் கிஷோரின் கைதுக்கு காரணமாக இல்லை என்றாலும்… அவள் தேவையில்லாமல் கிஷோருக்கு வலிய சென்று உதவி செய்திருந்தாலும்… அன்று அவன் நடந்துகொண்ட முறை… அவளை நடத்திய விதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே தோன்றியது அவளுக்கு.

 

அவன் மீது தணிந்திருந்த கோபத்தை கிளறிவிட்டது போல் அமைந்துவிட்டது திலீப் அன்று கொண்டுவந்த அந்த செய்தி. அன்று முழுவதும் இறுகிய முகத்தோடு நடமாடிக் கொண்டிருந்தாள்.

 

இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பிறகு அன்று மீண்டும் பாலிஹில் வந்தான் தேவராஜ். அவன் பக்கம் பார்வையைக் கூட திருப்பாமல் தன் போக்கில் இங்கும் அங்கும் சென்றுக் கொண்டிருந்தாள் மதுரா.

 

“என்ன… ரெண்டு நாளா எப்படி இருந்தாங்க மேடம்?” – மீசையை முறுக்கிக் கொண்டே மனைவியை பார்வையால் தொடர்ந்தபடி தங்கையிடம் கேட்டான்.

 

“ம்ஹும்… மலையைக் கூட ஒடச்சிடலாம்… இவை மனசுல என்ன இருக்குங்கறதை கண்டு பிடிக்க முடியாது….” – உதட்டை பிதுக்கினாள் மாயா.

 

“மிஸ் பண்ணியிருப்பா…”

 

“எப்படி சொல்லறீங்க?”

 

“மூஞ்ச பார்த்தா தான் தெரியுதே!” – அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தன.

 

“நல்லது நடந்தா சரி” – முணுமுணுத்தாள் மாயா.

 

“அதுசரி… நீங்க ஏன் ரெண்டு நாளா வரல… டெஸ்ட் பண்ணறதுக்குத்தானா?”

 

“ப்ச்… இல்ல…”

 

“பின்ன?”

 

“பாரதி திரும்ப ட்ரபுள் பண்ணறா… நீ பேசுனியா இல்லையா அவகிட்ட…”

 

“என்ன… திரும்ப அந்த மோனிகாகூட பேச ஆரம்பிச்சசுட்டாளா?”

 

“அவ எப்போ நிறுத்தினா திரும்ப ஸ்டார்ட் பண்ணறதுக்கு… அவ தான் நாம சொல்லரதையே கேட்க மாட்டேங்கிறாளே! என்னதான் பண்ணறதுன்னே தெரியல எனக்கு” – புலம்பினான்.

 

“அவசரப்படாதீங்க…”

 

“அம்மாவுக்கு தெரியிற வரைக்கும் அமைதியா இருக்க சொல்றியா?”

 

“இல்ல… அதுக்கு முன்னாடியே ஏதாவது பண்ணிடலாம்”

 

“என்ன பண்ணறது?

 

“ஏதாவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையா பாருங்க. நாடு கடத்திடுவோம்”

 

“ஒத்துக்குவாளா?”

 

“நா பேசி சம்மதிக்க வைக்கிறேன்”

 

“அங்க போனா மட்டும் திருந்திடுவாளா? போன்ல பேசினா?”

 

“அதெல்லாம் மாறிடுவா தேவ் பாய்… ஃபேமிலி… குடும்பம் குழந்தைன்னு வந்துட்டா எல்லாம் மறந்துடும்… நம்மளையே மறந்துடுவா… கவலைப்படாதீங்க” – அண்ணனுக்கு நம்பிக்கை கொடுத்தாள். அவன் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். பிறகு, “நம்ம கூடத்தானே மாயா அவளும் பிறந்தா… அப்புறம் ஏன் இப்படி இருக்கா!” – ஆற்றாமையுடன் கேட்டான்.

 

“ஓவரா செல்லம் கொடுத்தா இப்படித்தான். சொல் பேச்சையே கேட்கணும்னு தோணாது” – மாயா சொல்லிக் கொண்டிருக்கும் போது மதுரா அவளுடைய அறையிலிருந்து வெளிப்பட்டு சமையலறை நோக்கி சென்றாள். அவளை பார்வையால் விழுங்கிய தேவ்ராஜ், “கடைசியா பிறக்குறதுங்களே இப்படித்தான் இருக்குங்க போல… உயிரை எடுக்குதுங்க…” என்றான் அலுப்புடன்.

 

தமையனின் பார்வையை கவனித்துவிட்ட மாயாவின் முகத்தில் நமுட்டு புன்னகை தோன்றியது. “நாம பாரதியை பற்றித்தானே பேசிகிட்டு இருக்கோம்?” என்றாள்.

 

சட்டென்று தங்கையின் பக்கம் திரும்பியவன், “ஆங்…! ஆமாம்… பாரதியை பத்திதான்…!” என்றான் அவசரமாக.

 

மகள் வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இப்போது பிரபாவதிக்கு இல்லை… அதுதான் முடியாமல் போய்விட்டதே! இப்போது அவளுடைய கவலையெல்லாம் பிறக்கும் குழந்தை நல்ல குழந்தையாக பிறக்க வேண்டுமே என்பதுதான். தெரியாத்தனமாக மாத்திரையை கொடுத்து தொலைத்துவிட்டோம். அது எந்தவிதமான பாதிப்பையும் குழந்தைக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடாதே என்பகிற பயம்தான் அவளை ஆட்டிப்படைத்தது. கோவில் கோவிலாக ஏறி இறங்கினாள். வேண்டுதல் வைத்தாள்… விரதங்கள் இருந்தாள்… அனைத்திற்கும் பலன் இருக்குமா! அதை தெரிந்து கொள்ளும் காலமும் வந்தது.

 




18 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Tharani Rajan says:

    Eagerly waiting for your ud


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      update undu pa… corrections pannittu irukken… ll post it by 10 o’clock


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Skanatharajah Sutha says:

    Super


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    kongu jey says:

    today update illayaa nithuma


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Monday thaan pa… Saturday Sunday eppavume leave… 🙂


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sindu R says:

    Dev always unpredictable character… if Madhura accepts him again he will behave in the same way he used to be…. first let him come out of his frustration then he can take Madhura….
    Madhura is just ignoring Dev. Whether she will ever get a chance to express her anger????
    After all the turmoil, Maya is happy.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    பாரதி இன்னமும் சொல்பேச்சு கேட்டு நடக்கவில்லையா,தமயனின் தற்போதய நிலை தெரிந்தும் ஏன் இப்படி பண்ணுகின்றார்.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shafi Asaraf says:

    Nice ud. . sekram nadhu puringita nallarukum. . dev soo sweet , good change in u . . nithya mam unga way of writing s really awesome. .


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Prabhavathi panurathalam pannittu ippo kovil kulam virathamunu irunthu enna pirochanam aathiram arivai azhitthu kulainthaium azhikka pokutha .dev ithu unakkum porunthum mamium marumakanum munna vittu pinna ilukkira vakai.mmmmmmm


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Madhu avan messege un manatirkku siru arutal.dilep dirumba maram era vaicitte madhuvai.prabha amma konjam karunai unga marumaganidam kaattalaam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Dev’s change over is very nice….baby ah ninaicha dhaan thik thik nu iruku…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    ADAAAAAAA DEV NEE IVLOOO NALLAVANAAAAAA DAAAA SUPERRRR


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Dev ivlo porumaiya wow super😍😍😍…madhu nee venumne panra sikarama dev kita poidu apothan thanimai pogum… dev n maya convo sema athuvum dev sonna “kadasiya poranthathungale ipadi than uyirai edukum pola”😂😂😂 sema counter dev


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ganga Narayanan says:

    Hi Nithya,

    Idhuvarai silentaaga thaan padithu kondirundhen kaaranam… Neenga Devraj endra character ai narrate pandra vidham, Sutthama pidikkalai… Avan prachanaigaluku vadikaala Madhuraavai thunburuthuvadhil inbam kaanum sadist aaga thaan avanai ninikka thondriyadhu. Was disappointed in the way he was hitting her… Hitting and asking sorry that is a classic wife abuser… domestic violence… was hoping at some point Madhura will stand up bravely and boldly but that has not happened…

    My guess is the nurse has changed the medication and the baby is ok.. Also both are having psych counselling right… Madhu vin kulandhaiku aval sappitta maatthiraiyal problem varudho illaiyo ippo thookam varalainu ladoo sappidradhu pola she is popping pills… I think in previous ud too that came… Well, she is not a chronic mental health patient right, so wont the counselling have made her see sense that she has to put aside her issues with Dev and focus on the baby now. Once baby is out go all out to face him should have been her thinking .

    Prabavathy no words to say but the person I hate most is maya… Feel for all the confusions that she instigated, even if she calls it in everyone’s best interest, who gave her the right to act like how she did? Dhruv accepting her, i feel Maya was not getting what is due in a harsh way… Probably ulla olinju irukka villain appadi feel pannudho… Av pannina kalagam nichyam nanmai illa… Ava vara idam naalu appalaamnu thonudhu… Sondha thangachi life paarkkalai iva… vandhuttaa Madhu life ai aatuvikka… idhula ippo iva thaan go between Dev and Madhu ku naduvula… sema irrite aagudhu…

    happa motthamaa kottiyaacchu… Achm thavirthu… pongi ezhum Madhu venum… Varuvaala?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya Prabhu says:

    Appo next episode la baby pirandiduma sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Paarra dev nee ivlooo maritiya… Take rest my love ahh…. Semma po


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jansi r says:

    Waiting to know


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    உண்மை தெரிந்தாலும் மதுரா கெத்தா இருக்கா!விடா முயற்சி விஸ்வரூப வெற்றி தேவ்!பிரபாவதி கூட கவலைபடறாளே?!

You cannot copy content of this page