Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 90

தோழமைகளுக்கு வணக்கம்,

இந்த அத்தியாயத்தை படிக்கும் போது இவ்வளவு விரிவாக… இரண்டு அத்தியாயத்திற்கு இதை நீட்டி முழக்காமல் சுருக்கமாக சொல்லியிருக்கலாம் என்று வாசகர்கள் உணர கூடும் என்று எனக்கு தோன்றியது. ஆனால் இதை விரிவாகத்தான் சொல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். முடிந்த அளவுக்கு சுவாரசியமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். படிக்கும் போது அந்த சூழ்நிலையை உங்களால் உணர முடிந்தால் என் கற்பனையில் தோன்றிய காட்சியை சரியாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறேன் என்று அர்த்தம். இல்லையென்றால் எழுத்தில் இன்னும் முன்னேற்றம் தேவை… எதுவாக இருந்தாலும் மனதில் தோன்றுவதை கமெண்டில் குறிப்பிடுங்கள்.

இந்த அத்தியாயத்தை ஒவ்வொரு தாய்க்கும்… தாய் மனம் கொண்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

நட்புடன்,
நித்யா கார்த்திகன்.

*********************************

அத்தியாயம் – 90

மதுராவிற்கு இது ஒன்பதாவது மாதம்… மேதா கொடுத்த ஒரு தன்னம்பிக்கை புத்தகத்தை வாசித்தபடி மெத்தையில் ஒருக்கணித்துப் படுத்திருந்தவள், திடீரெண்டு அடிவயிற்றில் ஒரு அசவுகரியத்தை உணர்ந்தாள். வயிறு இறுகுவது போல் இருந்தது. சற்று வசதியாக புரண்டு படுத்து அந்த உணர்விலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றாள். அந்த நொடியே அவளுடைய வயிறு மற்றும் இடுப்புப் பகுதி தசைகளில் ஏற்பட்ட அழுத்தத்தில் அவள் கண்கள் அகல விரிந்தன. மறு நொடி அந்த அழுத்தம் குறைந்து இயல்பானது.

கையிலிருந்த புத்தகத்தை பக்கவாட்டு மேஜையில் மூடி வைத்துவிட்டு எழுந்து அமர்ந்தவள், அறைவாசலில் அரவரம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். லேசாக மூடியிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் தேவ்ராஜ். வழக்கமான நேரத்திற்கு சரியாக அவளை பார்க்க வந்துவிட்டான். வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் மனம் ரகசியமாய் மகிழ்ந்தது. அவளுடைய கலவரமாக முகத்தை கவனித்துவிட்டு “என்ன ஆச்சு? இஸ் எவ்ரித்திங் ஆல்ரைட்?” – புருவம் முடிச்சிட அவள் கைகளை பற்றிக் கொண்டு அருகில் அமர்ந்தான்.

அவள் தலையை மேலும் கீழும் அசைத்தாள். எப்போதும் அவனுடைய அருகாமையை தவிர்க்க முயல்கிறவள்… அவனிடமிருந்து விலகிச் செல்ல விழைகிறவள் இன்று அமைதியாக அமர்ந்திருப்பது அவனுடைய குழப்பத்தை இன்னும் அதிகமாக்கியது.

“வாட் ஐஸ் இட், மது? இஸ் சம்திங் ராங்?” – கலக்கத்துடன் கேட்டான்.

“நோ… ஐம் ஆல்ரைட்” என்றவள் மீண்டும் அடிவயிற்றில் அந்த உணர்வை உணர்ந்தாள்.

“தேவ்… நீங்க கொஞ்சம் வெளியே இருங்க” – அவள் முகத்தில் தெரிந்த கலவரத்தில் அவன் பதறினான்.

“இல்ல… நா இங்கேயே இருக்கேன். உனக்கு ஏதோ பண்ணுது. என்னனு சொல்லு…”

“இல்ல… ஐ… ஐ ஜஸ்ட் நீட் டு யூஸ் ரெஸ்ட்ரூம்… ” – அந்த அசவுகரிய உணர்வு அதிகரித்துக் கொண்டே சென்றது. சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது. எந்த நொடியிலும் அவளுடைய கட்டுப்பாடு இழந்துவிடும் போல் தோன்றியது. அவனுக்கு எதிரில் அசிங்கமாகிவிடுமோ என்கிற தவிப்பில், “ப்ளீஸ்…” என்றாள். அவள் கண்கள் கெஞ்சின.

அவளுடைய நிலைமை அவனுக்கு சிறிதும் புரியவில்லை. ஏன் இப்படி விசித்திரமாக நடந்துக்கொள்கிறாள் என்று குழப்பமாகத்தான் இருந்தது.

“ரெஸ்ட்ரூம்தானே போகணும்… போ… நா இங்க வெயிட் பண்ணறேன்” என்றான். அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

“ஐயோ! ஏன் இப்படி உயிரை எடுக்குறீங்க? ஒருதரம் சொன்னா புரியாதா? வெளியே போங்க… கெட் அவே ஃப்ரம் மீ….” என்று பெருங்குரலில் கத்தினாள். திடுக்கிட்டுப்போன தேவ்ராஜ் அவளை வியப்புடன் பார்த்தான்.

“மது ப்ளீஸ்…”

“ஐ நீட் மை ஸ்பேஸ்… லீவ் மீ அலோன்…” – செக்கச்செவேறென்று சிவந்துவிட்ட அவள் முகம் அவனுடைய கவலையை அதிகப்படுத்தியது. அவள் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறாள் என்று சிறிதும் புரியவில்லை. மாயாவிடம் கேட்கலாம் என்று தோன்றியது.

“ஓகே ரிலாக்ஸ்… நா போறேன்… ஹால்லதான் இருப்பேன். ஏதாவதுன்னா உடனே குரல் கொடு ஓகே?” – மனமே இல்லாமல் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

எப்போதடா அவன் அங்கிருந்து நகர்வான் என்று காத்துக் காத்துக்கொண்டிருந்தவள், அவனுடைய தலை மறைந்ததும் கட்டிலிலிருந்து எழுந்து காலை கீழே எடுத்து வைத்தாள். மறுகணமே அவள் பயந்தது நடந்துவிட்டது.

ஆடை நனைந்து தரையெல்லாம் ஈரமாகிவிட்ட போது அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாவில்லை அவளால். ‘கடவுளே!’ – மிகவும் சங்கடத்துடன் சமைந்து நின்றுவிட்டவள், ‘நம்முடைய கட்டுப்பாட்டை மீறி எப்படி!’ – இன்னமும் கூட நம்பமுடியவில்லை அவளால். இதுவும் ஹாலுசினேஷனா! குழப்பத்துடன் கீழே குனிந்து தரையைப் பார்த்தாள். அவளுடைய விழிகள் தெரித்துவிடுவது போல் விரிந்தன. காலை சுற்றி குளம்கட்டி நின்ற நீர்…! இன்னமும் நிற்காத போக்கு…! அப்படியென்றால் இது! – உடலில் நடுக்கம் பிறந்தது. முகம் வெளிறி இதயம் எகிறிக் குதித்தது.

பனிக்குடம் என்றால் என்ன… அது உடைந்தால் எப்படி இருக்கும்… என்று மகப்பேறு மருத்துவர் படித்துப்படித்து சொல்லிக் கொடுத்த பாடம் சரியான நேரத்திற்கு அவள் நினைவில் வந்தது.

‘நீ தனியா இருக்க வாய்ப்பில்லை… ஆனாலும்… ஒருவேளை… தனியா இருக்கற சூழ்நிலை வந்தா… அந்த நேரத்துல பனிக்குடம் உடைஞ்சிடுச்சுன்னா… உடனே பயந்துடக் கூடாது. உன்னோட குழந்தை இந்த உலகத்துக்கு வர ரெடியாயிடிச்சுனு நெனச்சு சந்தோஷப்படணும். நிதானமா இருக்கணும்…’ – மருத்துவரின் குரல் அவள் செவிகளில் எதிரொலித்தது. அவளுடைய பதட்டம் கட்டுக்குள் வந்தது.

“பனிக்குடம் உடைஞ்ச பிறகு குழந்தை பிறக்க மூனுலேருந்து நாலு மணிநேரம் கூட ஆகலாம். அதுக்குள்ள நீ யாரோட உதவியையாவது கேட்டுக்கலாம்…” – தன்னைக் கண்டு தானே வியக்கும் அளவிற்கு அவளுக்குள் திடம் பிறந்தது.

மேதாவோடு இனைந்து மகப்பேறு மருத்துவரும் அவளுக்கு சிறப்பு ஆலோசனை கொடுத்து, எந்த சூழ்நிலையையும் தாக்குப்பிடிக்கும்படி அவளை தயார் செய்திருந்தார்கள். அதன் பலனாக மதுரா மெல்ல அடியெடுத்து வைத்து குளியலறைக்குள் நுழைந்து உடைமாற்றிக் கொண்டாள். பெரிய விஷயம்தான்… தைரியமான பெண்களே உடைந்து போகும் தருணம் அது… ஆனால் எதெற்கெடுத்தாலும் பயந்து நடுங்கும் மதுரா அந்த சூழ்நிலையை அருமையாக கையாண்டாள்.

அவள் விரும்பிய அளவுக்கு வேகமாக செயல்பட முடியவில்லை. அவளுடைய மெலிந்த உடலுக்கு வயிறு மிகவும் பெரிதாகத்தான் இருந்தது. அதை தேவ்ராஜ் மிகவும் ரசிப்பான்.

‘தன்னுடைய குழந்தை அவளுடைய வயிற்றில்…’ என்னும் எண்ணம் அவனுக்கும் அவளுக்குமான தொடர்பை உறக்கக் கூறுவது போல் தோன்றும்.

அவள் எத்தனைமுறை உதறி தள்ளினாலும்… விரட்டி அடித்தாலும்… அவள் வயிற்றோடு உரையாடும் வழக்கத்தை அவன் கைவிடவே மாட்டான். தினமும் குழந்தையோடு பேசும் சாக்கில் அவளோடு கழிக்கும் நேரம் அவன் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. அவளை போல் ஒரு பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடிக்கடி கூறுவான். வயிற்றிலிருக்கும் குழந்தையை பிரின்சஸ் என்றுதான் விளித்துப் பேசுவான். ஆனால் அவளுக்கு ஆண் குழந்தைதான் விருப்பம்… காரணம் அவள் மனம் மட்டுமே அறிந்த ரகசியம். என்ன குழந்தை பிறக்குமோ! – பயத்தை உள்ளே மறைத்து இன்ப படபடப்போடு வெளியே வந்தாள்.

ஆண்கள் மூவரும் வீட்டில் இல்லை… ஆதிராவை அழைத்துக்கொண்டு பிரபாவதி கோவிலுக்கு போய்விட்டாள். மாயாவோடு பேசியபடி சோபாவில் அமர்ந்திருந்த தேவ்ராஜ் மனைவியைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து அவளிடம் நெருங்கினான். அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டான். அவள் நடக்க சற்று சிரமப்பட்டாள். அவள் இடுப்பை ஒரு கையால் அணைத்துப் பிடித்து அழைத்துச் சென்று சோபாவில் அமரவைக்க முற்பட்டான்.

“வெயிட்…” – அமர மறுத்தாள் மதுரா.

“என்ன ஆச்சு?” – தேவ்.

“ஆர் யூ ஓகே?” – மாயா.

“ஆர் யூ ஹர்ட்? ஆர் யூ இன் பெயின்?” – அவனுடைய பதற்றம் மதுராவின் மனதை வருடியது.

“இல்ல… எனக்கு வலிக்கல… ஆனா தேவ்… யூ ஸ்டே காம்… நா சொல்ல போறத பதட்டப்படாம கேளுங்க… இட்ஸ் ஆள் குட் அண்ட் ஓகே… பட்…” – அவனுடைய புருவம் உயர்ந்தது. அவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று காத்திருந்தான். மதுராவின் பார்வை அவன் முகத்திலேயே நிலைத்திருந்தது.

“பனிக்குடம்… உடஞ்சிடிச்சு…!” – அவள் என்ன சொல்கிறாள் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“வாட்!” – மாயா.

“வாட் இஸ் தட்?” – குழப்பத்துடன் தங்கையின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.

“குழந்தை பிறக்க போகுது…” – மாயாவின் முகத்திலும் கலவரம் சூழ்ந்தது.

“ஷிட்!! வாட் த ஹெல்…! மை காட்! இன்னும் ரெண்டு நாள் இருக்கே! அதுக்குள்ள எப்படி!” – பதறினான். படபடவென்று அடித்துக் கொண்டது அவன் இதயம். அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

“தேவ் பாய் டென்ஷன் ஆகாதீங்க”

“மாயா… வி ஆர் நாட் ரெடி… வி ஆர் நாட் ரியலி ரெடி… இது எப்படி! மது… ஓ மை டியர்…!” – அவன் முகத்தில் வியர்வை அரும்பியது. அவளை அணைத்துப் பிடித்திருந்த அவனுடைய கைகள் நடுங்கின.

“தேவ் பாய்… அவளை பயமுறுத்தாம பேசாம இருங்க” – அதட்டினாள் மாயா.

“பயமா…! நோ நோ… மது… நீ பயப்படாத… இது ஒண்ணும் இல்ல… நாம… நாம ஹாஸ்ப்பிட்டலுக்கு போயிடலாம்… பயப்படாத ஓகே?” – உளறினான்.

“தேவ்! ஐம் ஓகே…” – தன்னுடைய பதட்டத்தையும் பயத்தையும் மறைத்துக் கொண்டு அவனுக்கு தைரியம் கொடுத்தாள் மதுரா.

“ஆர் யூ ஷூர்… ஆர் யூ ரியலி ஷூர் பேபி…?” – அதீத பயம் தெரிந்தது அவனிடம். அவனுடைய கையை அழுத்தி கண்களை மூடி திறந்து ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தவள், மறுநொடியே, “அம்ம்…ம்மா…!” என்றாள் பல்கலைக் கடித்துக் கொண்டு.

“வா…ட்ஸ் ரா…ங்!” – தேவ்ராஜின் கண்கள் அகல விரிந்தன. மிரண்டு போய் மாயாவைப் பார்த்தான்.

“ஏதாவது கான்டராக்க்ஷன்ஸ் பீல் பண்ணறியா மது?” – தேவ்ராஜை நகர்த்திவிட்டுவிட்டு மதுராவிடம் நெருங்கினாள் மாயா.

“ஆமாம்… கொஞ்சம்… அதோட… வாட்டர் ப்ரோக் ஆகி பத்து நிமிஷம் ஆயிடிச்சு…”

“அதனால ஒண்ணும் இல்ல… நாம ஹாஸ்ப்பிட்டல் போறதுக்குள்ள எதுவும் ஆயிடாது. பயப்படாத…” – அவளை தாங்கி கொண்டாள்.

“வேர் ஆர் யூ மேன்…? கெட் த கார்” – போனில் கத்தினான்.

“வாசல்லதான் சார் இருக்கேன்” – அந்த பக்கத்திலிருந்து பயந்த குரலில் பதில் சொன்னான் ட்ரைவர்.

“கார் ரெடி…” என்று கூறிவிட்டு மருத்துவரின் தொடர்பு எண்ணை அழுத்தினான்.

“நீங்க கீழ கூட்டிட்டு போங்க தேவ் பாய்… நா மதுவோட பேகை எடுத்துட்டு வந்துடறேன்” என்றாள் மாயா அவசரமாக.

அவளுக்கும் பதட்டம்தான். கையும் ஓடவில்லை… காலும் ஓடவில்லை… முயன்று மனதை நிலைப்படுத்தி, தேவையான பொருட்களை பையில் சேகரித்தாள். அதை செய்யும் போதே தேஜாவை சத்தம் போட்டு அழைத்தாள். அவளிடம் விபரத்தை சொல்லிவிட்டு இவள் கீழே வரும் போது தேவ்ராஜ் மதுராவை காரில் அமரவைத்திருந்தான். சீட்டில் அமரமுடியாமல் அவள் சிரமப்படுவதைக் கண்டு தவித்துப்போன தேவ்ராஜ், தங்கையைக் கண்டதும் சீறினான்.

“யூ ஆர் டோட்டலி யூஸ்லெஸ்… என்ன பண்ணின இவ்வளவு நேரம்? ஏறு வண்டில…” – காட்டுக்கத்து கத்தினான்.

“நீங்க வண்டியை ஸ்டார்ட் பன்ணறதுக்குள்ள நா ஏறிடுவேன்”

“அதுக்கு ட்ரைவர் இருக்கான். ஆர்கிவ் பண்ணாம ஏறு” – கடுப்படித்தான்.

அவனுடைய கடுப்பை காதில் போட்டுக்கொள்ளாமல் அவசரமாக ஏறி மதுராவிற்கு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள் மாயா. மறுபுறம் வந்து மனைவிக்கு அருகில் அமர்ந்த தேவ்ராஜ், “ஸ்டார்ட் பண்ணு வேகமா போ…” என்று ட்ரைவரை அதட்டினான்.

அவன் பயத்துடன் காரை அதிவேகமாக விரட்ட, “என்னடா ட்ரைவ் பண்ணற?பார்த்து ஸ்மூத்தா போ…” என்று அதற்கும் கத்தினான்.

“தேவ் பாய் ரிலாக்ஸ்…” – மாயா தமையனை அடக்கினாள்.

மதுராவின் அடிவயிற்றில் சுறுசுறுவென்று ஒரு உணர்வு… அதிக வலியில்லை… ஆனால் வலிக்க போகிறது என்பது போல் ஒரு உணர்வு… தேவ்ராஜின் பதட்டத்திற்கு பயந்து பல்லை கடித்துக் கொண்டு ரியாக்ட் செய்யாமல் அமர்ந்திருந்தவள் ஒரு கட்டத்தில் முனகினாள்.

“வாட்ஸ் ராங்… வாட்ஸ் ராங் பேபி… இதோ வந்துட்டோம்… பயப்படாத ஓகே…” – பதறினான். அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான். அவள் கரத்தை ஆதரவாகப் பற்றிக்கொண்டான். மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் மதுரா. சுரீர் என்று பாய்ந்தது… “ஆ…ம்ம்மா…” – அவள் கத்த, “என்ன என்ன…” என்று இவன் பதற… “ரிலாக்ஸ் மது… ஒண்ணும் இல்ல… நல்லா மூச்சுவிடு… ரிலாக்ஸ்சா இரு…” என்று மாயா டென்ஷனை குறைக்க முயன்றாள். தேவ்ராஜின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

சற்று நேரத்தில் அந்த வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட, “ஒண்ணும் இல்ல… ஐம் ஓகே…” – என்று கணவனுக்கு தைரியம் கொடுக்க முயன்றாள்.

அடுத்த சில நிமிடங்களில் கார் மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. தேவ்ராஜின் உதவியோடு காரிலிருந்து இறங்கினாள் மதுரா.

(அடுத்த அத்தியாயம் இன்னும் சிறிது நேரத்தில் பதிவிடப்படும்)

23 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    tamilarasi senthilkumar says:

    suprr its prince .dev a eni kailaye pidikka mudiyathu

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Tamilarasi… 🙂

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you pa… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    தேவ்வின் இந்த பதட்டம் படபடப்பெல்லாவற்றையும் மதுரா உணர்ந்திருக்கின்றார் ஆனால் அதன்பின் ஒளிந்திருக்கும் தேவ்வின் அன்பை உணருவாரா .

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      உணர்ந்தால் நன்றாக இருக்கும்… நானும் கதையை முடித்துவிடலாம்… வாசகர்களுக்கும் விடுதலை கிடைக்கும்… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jayashree swaminathan says:

    Motherhood described at the best.Feelings of a father narrated in a superb way, Simply awesome.thanks for the update

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Jayashree… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    அருமை தேவ்ராஜின் அன்பை உணர மதுராவிற்கு மிகச்சிறந்த வாய்ப்பாக நிகழ்வுகள் அமைந்திருக்கிறது.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      மிக்க நன்றி சுகன்யா… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Madhuvin mana thidam acathuthu.prabha intha nerathil vettil illamal.madhuvin maru pirappai paarkka poraanaa dev.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Saranya… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    Wow super

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Ugina… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    அருமை…நாங்களும் ஆட்டோவில் வந்துட்டோம்…இளவரசியா…இளவரசனா?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ka….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Wow sis super wen i read i back to mydays its awesome feel with pain😍😍… super narration sis… dev u r crying man tis is the power of luv…madhu u r great i lik the way u handle ur pain.. very nice sis👏👏👏

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Hi Kani,
      Oh really! Glad to know that you remembered your old days and I’m so happy that you liked the story flow and narration… Thank you so much… 🙂

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Kani Ramesh says:

        Really i feel my labour pain wen i read tis… u r great narrator sis👏👏👏👏👏

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          admin says:

          🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Woww … Nithya enna solla inga valikkuthu nithya padikkum bothu… Appadiye feel panna vaikuriga… Amazing… Madhu my darling semma po… Ellathukkum bayappadura enga madhuva ithu…. Nithya love u so much ..😘😘😘

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Lakshimi… I’m really glad you liked the episode….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    uma manoj says:

    உணர்வுகளை உணர்வுப்பூர்வமாக கொடுத்து இருக்கீங்க நித்யா…அடுத்து என்னனு எதிர் பார்க்க வைக்கிறது. .அடுத்த எபி க்கு வைடிங். .குழந்தை நல்ல ஹெல்த் கண்டீசனோட இருக்கணுமே…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி உமா… 🙂

You cannot copy content of this page