Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் 85

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 91

அத்தியாயம் – 91

“வேர் இஸ் டாக்டர் ப்ரீத்தி…” – காரிலிருந்து இறங்கியதும் ரிஸப்ஷனை நோக்கி கத்தினான் தேவ்ராஜ்.

“தேவ்! கத்தாதீங்க” – மதுரா அவனை அடக்க முயன்றாள். ஹால்வேயில் சென்றுக் கொண்டிருந்த சில செவிலியர்களும் மருத்துவர்களும் அவனுடைய சத்தத்தைக் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தார்கள்.

“நீங்கதான் தேவ்ராஜா?” – அனுபவம் மிக்க செவிலியர் ஒருவர் அவனிடம் நெருங்கி கேட்டாள்.

“ஆமாம்…” – சீற்றத்துடன் வெளிப்பட்டது அவன் குரல். அவன் அப்போது இருந்த மனநிலைக்கு, டாக்டர் நர்ஸ் எல்லாம் வாசலில் வந்து அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தால் கூட திருப்தியடைய மாட்டான். அப்படி ஒரு ஆர்பரிப்பில் இருந்தது அவன் மனம்.

“உங்க மனைவிக்காக டாக்டர் ரூம் ரெடி பண்ணி வச்சிருக்காங்க. வாங்க என்கூட” – அவனுடைய கோபத்தைக் கண்டு அஞ்சாமல் அமைதியாக பேசினாள் அந்த பெண்மணி.

“தேவ்… என்னால நடக்க முடியும்…” – மதுரா அவனுடைய பிடியிலிருந்து விலகி தனித்து நடக்க முற்பட்டாள். சட்டென்று அவளிடம் திரும்பியவன்,

“இல்ல… நீ இப்படியே வா…” என்றான் அழுத்தமாக.

விவாதம் செய்யும் நிலையில் அவள் இல்லை. எனவே அவனுடைய தோளில் சாய்ந்து, பாதி கனத்தை அவன் மீது சுமத்தியபடியே சென்று லிஃப்ட்டில் ஏறினாள்.

“இதுதான் உங்களுக்கு ஒதுங்கியிருக்க ரூம்…” என்று ஒரு அறையை காட்டினாள் நர்ஸ்.

விஐபி அறை என்று சாதாரணமாக அதை சொல்லிவிட முடியாது. அனைத்து வசதிகளுடனும் காணப்பட்ட அந்த பெரிய அறையில் வைக்கப்பட்டிருந்த அத்தனை பொருட்களும் புதிதாக இருந்ததை அந்த இக்கட்டான நேரத்தில் கூட மதுராவால் கண்டுகொள்ள முடிந்தது. இந்த ஏற்பாடுகளுக்காக தேவ்ராஜ் சிரத்தை எடுத்திருக்கிறான் என்று அவளுக்கு புரிந்தது.

மதுராவை படுக்கையில் அமரவைத்து அவளுடைய முதுகுக்கு அணைவாக தலையணையை எடுத்து வைத்தபடி, “ப்ரீத்தி எங்க?” என்றான் செவிலியரிடம்.

“ஆப்பரேஷன் தியேட்டர்ல இருக்காங்க” – அலட்டிக்கொள்ளாமல் பதில் வந்தது.

“என்ன! ஆப்பரேஷன் தியேட்டர்லயா! இந்த நேரத்துல அவங்க இங்கதானே இருந்திருக்கணும்… இப்போ இங்க யாரு டெலிவரி பார்க்கறது?” – கத்தினான்.

அவனுடைய கோபத்தைக் கண்டு மதுரா நெற்றியை நீவினாள். அவளுடைய ஓரக்கண் பார்வை நர்ஸின் மீது படிந்தது. சிரஞ்சை எடுத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினாள்.

“வலிக்காது…” என்று கூறியபடி அவளுடைய கையில் ஊசியை ஏற்றினாள். கண்களை மூடிக் கொண்டு வேறுபக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள் மதுரா. அவளிடமிருந்து சின்ன முனகல் வெளிப்பட்டது. உடனே தேவ்ராஜ் நர்ஸை முறைத்தான். “ஏ…யேய்…!! என்ன பண்ணின? என்ன ஊசி அது?” என்று சீறினான்.

“தேவ் பாய்…” – மாயாவின் குரல் அவனை அதட்டியது.

“சார் ப்ளீஸ்… நா என்னோட வேலையை தான் செஞ்சுகிட்டு இருக்கேன். அதோட உங்க மனைவிக்கு இப்போதான் காண்ட்ராக்ஷன்ஸ் ஸ்டார்ட் ஆயிருக்கு. குழந்தை பிறக்க இன்னும் சில மணிநேரம் கூட ஆகலாம்… அது அவங்களோட உடம்பை பொறுத்தது. நாங்க இதெல்லாம் தினம் தினம் நிறைய பார்த்துகிட்டு இருக்கோம். அதனால நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” – பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கூறினாள். ஆனால் அவன் சமாதானம் ஆகவில்லை.

“அதுவரைக்கும் இவ இப்படி வலியோட கஷ்ட்டப்படணுமா? எப்போ தான் வருவாங்க உங்க டாக்டர்?”

இப்போது அவள் முகத்தில் எரிச்சல் தெரிந்தது. “இந்த உலகத்துலேயே முதன்முதலா உங்க மனைவிதான் குழந்தை பெத்துக்கறாங்களா? அமைதியா இருங்க சார், அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது”

தேவ்ராஜின் பார்வை அவளை பஸ்பமாக்கியது. “இவ எ…ன்…னோட மனைவி… இவளுக்கு இதுதான் முதல் தரம்… அதிகமா பேசாம டாக்டரை வர சொல்லு” – பல்லை கடித்துக் கொண்டு பேசினான்.

அவன் நர்ஸிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது, “ஆஆ…ம்…மா….” என்று பெரிதாக ஒரு அலறல் ஒலி மதுராவிடமிருந்து எழுந்தது. சட்டென்று அவனுடைய கவனம் மனைவியிடம் திரும்பியது. “ஒண்ணுல்ல… ஒண்ணுல்ல… அவ்வளவுதான்… முடிஞ்சிடிச்சு… முடிஞ்சிடிச்சு… மது…” என்று பதறி துடித்தபடி அவளுடைய கைகளை பிடித்தான்.

சிக்கிய அவனுடைய கைகளை பலம் கொண்டமட்டும் இறுக்கிப் பிடித்தாள். இன்னும் இன்னும் அதிகமாக… அவளுடைய கூர் நகங்கள் அவன் கைகளை பதம்பார்க்கும் அளவிற்கு… அவனுடைய தோல் பிய்த்துக் கொண்டு இரத்தம் கசியும் அளவிற்கு…

அதைபற்றியெல்லாம் யோசிக்கக் கூட அவனுக்கு நேரமில்லை… அதற்குள் அவளுக்கு அடுத்த வலி வந்துவிட்டது. உயிரே போய்விடும் போல் கத்தினாள். “வ…லி…க்கு…து…!” – மதுராவின் அலறல் ஒலி அறையை நிறைத்தது. கதிகலங்கிப் போனான் தேவ்ராஜ்.

“ஐயோ… ஏதாவது செய்யேன்!” என்று நர்ஸிடம் கெஞ்சினான்.

அடுத்தசில நிமிடங்களுக்கு வலியில்லை. மெல்ல கண்களைத் திறந்து கணவனின் முகத்தை ஏறிட்டாள். கண்ணீரின் ஊடே கலங்களாகத் தெரிந்த அவன் முகம் இருண்டு போயிருந்தது.

முத்துமுத்தாக வியர்த்திருந்த அவளுடைய முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட்டாள் மாயா. அந்த குளிர்ச்சி அவளுக்கு சற்று ஆசுவாசத்தைக் கொடுத்தது. அதை முழுவதும் அனுபவிப்பதற்கு முன் அடுத்த வலி… கத்திக் கதறினாள்.

“முடியில… ரொம்ப வ…லிக்கு…து… இட்ஸ் டூ… ம…ச்…!!”

“மது.. மது ப்ரீத்… மூச்சை நல்லா இழுத்துவிட்டு… ப்ரீத்…” – தேவ்ராஜின் குரல் அவள் செவிக்கு அருகில் ஒலித்தது.

“ஐம் ப்ரீத்திங் யூ இடிய…ட்… கெட் அவே…” – கடுங்கோபத்துடன் கத்தினாள். அவனுடைய கையை பிடித்து முறுக்கினாள். ஏற்கனவே காயம் பட்டிருந்த இடத்தில் மீண்டும் அவளுடைய நகம் பதிந்திட போது தன்னையறியாமல் தேவ்ராஜிடமிருந்து ஒரு சிறு முனகல் வெளிப்பட்டுவிட்டது.

‘வலிக்குதா! இந்த வலியை தாங்க முடியலையா உனக்கு…! நா எவ்வளவு அவஸ்த்தை பட்டுக்கிட்டு இருக்கேன்… உனக்கு உன்னோட கை வலி பெருசா போச்சா!’ – அவன் மீது எரிச்சல் மண்டியது. மீண்டும் வலி… கத்தல்… அழுகை… ‘ஓ மை காட்…! மது…!’ – அரற்றியது தேவ்ராஜின் உள்ளம்… பார்க்க முடியவில்லை… சகிக்க முடியவில்லை அவனால்… அவளுடைய கையை விட்டுவிட்டு அவளிடமிருடந்து விலகிச் சென்றான்.

பற்றியிருந்த பற்றுக்கோலை விட்டுவிட்டு நடுக்கடலில் தத்தளிப்பது போல் தவித்துப் போனாள் மதுரா. ‘நோ தே…வ்…! வாங்க… என்கிட்ட வந்துடுங்க!’ – உள்ளம் கூக்குரலிட கண்விழித்துப் பார்த்தாள். சற்று தொலைவில், இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு நின்றான்.

கோட் இல்லை… டை தளர்ந்து பாதி அவிழ்ந்த நிலையில் கழுத்தில் சுற்றிக் கிடந்தது… உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. தலை கண்டபடி கலைந்திருந்தது. அவன் இவ்வளவு அலங்கோலமாக காணப்படுவது இதுதான் முதல் முறை… மிகவும் சோர்வாகத் தெரிந்தான். அவளுடைய வலியை அவன் உணர்வது கண்கூடாகத் தெரிந்தது.

“ப்ரீத்தி எங்க?” – நூறாவது நுரையாக அந்த கேள்வியை கேட்டான். அவன் குரலில் கூட சோர்வு தெரிந்தது.

“எமர்ஜென்சி கேஸ் சார்… வந்துடுவாங்க” – – நர்ஸின் பதிலைக் கேட்டதும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.

“என்ன எமர்ஜென்சி யூ ப்ளடி டாஷ்…” என்று சீறினான்.

“தேவ்… ப்ளீஸ் வாங்க…” – கத்திக்கத்தி வறண்டுபோயிருந்த மனைவியின் குரலைக் கேட்டு அவளிடம் பாய்ந்து வந்தான்.

அவனுடைய நெற்றி அவளுடைய நெற்றியில் பதிந்திருந்தது. அவனுடைய கண்கள் அவளுடைய கண்களோடு பின்னியிருந்தது. “என்னை கொஞ்சம் நிமிர்த்தி உட்கார வைங்க”

அவளுடைய முதுகில் கைகொடுத்து தூக்கி நிமிர்த்தி அமறைவைத்தான். முதுகுக்கு அணைவாக தலையணையை எடுத்து வைத்தான்.

“உங்களுக்கு இன்னும் சரியா வலி வரலம்மா”

“வாட்! உனக்கு கண்ணு தெரியிதா இல்லையா! இவ்வளவு வலில துடிக்கிறா… இன்னும் வலி வரலைன்னு சொல்ற!”

பிரசவத்தைக் கூட எளிதாக பார்த்துவிடலாம். ஆனால் இவனை சமாளிப்பதுதான் பெரும்பாடு என்று எண்ணியபடி, அவனுடைய பேச்சிற்கு பதில் சொல்லாமல், “எழுந்து கொஞ்ச நேரம் நடங்க… ஈஸியா இருக்கும்” என்றாள்.

“ஹேய்…!!! ஆர் யு கான் மேட்…!” – கடுப்பானான் தேவ்ராஜ்.

“ஷட்அப் தேவ் பாய்… உங்கள வெளியேதான் துரத்தப் போறாங்க…”

“யாராலயும் அதை செய்ய முடியாது…! ஐ வில் கில் ஆல் ஆஃப் தெம்…” – கொலைவெறியோடு உறக்கக் கூவினான்.

இது போல் ஒரு பிரசவத்தை வாழ்க்கையில் இதற்கு முன் அந்த செவிலியர் பார்த்திருக்கவே மாட்டாள். இங்கு குழந்தை பெற்றுக்கொள்வது மதுராவா அல்லது இந்த முசுட்டு மனிதனா என்கிற சந்தேகமே அவளுக்கு வந்திருக்கும். அந்த அளவிற்கு அவளை படுத்தி எடுத்துவிட்டான்.

“ஐயோ பாய்… அவங்க சரியாதான் சொல்லறீங்க. மதுராவை நடக்க வைங்க…”

“அறிவு இருக்கா உனக்கு? லூசு… போசாம போ அந்த பக்கம்…” – தங்கையிடம் எரிந்து விழுந்தான். ‘படுக்கவே முடியாம கத்தறா! அவளை போயி நடக்க வைக்கணுமாம்!’ – கோபத்தின் உச்சத்திலிருந்தான்.

“தேவ்…” – மதுரா.

“சொல்லு மது… என்ன?” – நொடியில் கோபம் மறைந்து குரல் குழைந்தது.

“எனக்கு ஹெல்ப் பண்ணுங்க… நா நடக்கணும்”

“நோ…”

“தேவ்… எனக்கு ஒண்ணும் இல்ல…”

“வேண்டாம் மது…” – பயம் அப்பட்டமாக தெரிந்தது அவன் குரலில்.

“ஐ கேன் டூ திஸ் தேவ்… வி கேன் டூ திஸ்… உங்க பிரின்சஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க கைல இருப்பா… ப்ளீஸ் ஹெல்ப் மீ டு வாக்…” – அவனுடைய முகத்தை கைகளில் ஏந்தி அவன் கண்களை பார்த்து பேசிக் கொண்டிருந்தவளுக்கு சட்டென்று வலி வந்தது. நிதானிக்க நேரமின்றி அவன் முகத்தை அழுத்தப் பற்றினாள். கைகளை பதம்பார்த்த அவள் நகங்கள் இப்போது அவன் முகத்தையும் கீறி கிழித்தன.

அவள் படும் துன்பத்தைக் கண்டு அவன் மனம் கலங்கித்தவித்தது. ‘இதெல்லாம் ஏன்…!’ என்கிற எண்ணம் கூட எழுந்தது. அவள் வலி குறைந்து சற்று நிதானப்பட்டதும் அவளை நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அவனுடைய வன்மையான இதயம் தாறுமாறாக துடுப்பதை அவள் உணர்ந்தாள். “பயப்படாதீங்க… ஐம்… ஐம் ஆல்ரைட்…” என்று தடுமாற்றத்துடன் அவனுக்கு தைரியம் கொடுத்தாள்.

“ஐ லவ் யூ… ஐ ரியலி லவ் யூ டியர்…” – அவள் காதோரம் அவன் உதடுகள் முணுமுணுத்தன. அவன் கண்களில் கசிந்த கண்ணீர் அவள் தோள்பட்டையை ஈரமாக்கியது. அவளுடைய கண்களிலும் கண்ணீர் வடிந்தது.

கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தான். மருத்துவர் ப்ரீத்தி உள்ளே நுழைவதைக் கண்டு சீறி கொண்டு எழுந்தவன், “எங்க போயி தொலைஞ்சீங்க இவ்வளவு நேரம்?” என்று பாய்ந்தான்.

திடுக்கிட்ட அந்த பெண், “எக்ஸ்கியூஸ் மீ…” என்றாள் கட்டுப்படுத்திய கோபத்துடன்.

“தேவ் பாய்… இது பிரச்சனை பண்ணற நேரமா. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப்… டாக்டர்… நீங்க மதுவை பாருங்க… ரொம்ப கஷ்ட்டப்படறா…” – மாயா இருவருக்கும் நடுவில் புகுந்தாள்.

“ஆப்ரேஷன் பண்ணி குழந்தையை வெளியே எடுங்க. இதுக்கு மேல அவளால தாங்க முடியாது…” – பொறுமையிழந்து சிடுசிடுத்தான்.

யாருக்கும் பதில் சொல்லாமல் மதுராவை பரிசோதித்த மருத்துவர் “பத்து நிமிஷத்துல குழந்தை பிறந்துடும். சர்ஜெரியெல்லாம் தேவையில்லை…” என்றாள். அவள் சொன்னது போலவே, தாயின் உயிரை பிழிந்து அவளை அரை உயிராக்கிவிட்டு இந்த உலகத்தில் வந்து உதித்தது தேவ்ராஜின் குழந்தை.

“இட்ஸ் எ பாய்…” – மருத்துவரின் குதூகல குறளைத் தொடர்ந்து வீறிட்ட குழந்தையின் அழுகுரல் தேனாய் பாய்ந்தது தேவ்ராஜின் செவியில்.

72 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    admin says:

    ஃபிரண்ட்ஸ்,
    நேற்றைய அத்தியாயம் நல்லா இருந்ததுன்னு எல்லாரும் சொல்லியிருந்தீங்க. ரொம்ப சந்தோஷம்… இந்த மாதிரி ஸீன் எழுதறது எனக்கும் இதுதான் முதல் முறை… பிடிக்குமோ பிடிக்காதோ அப்படிங்கற ஒரு சின்ன சந்தேகத்தோடுதான் பதிவு செஞ்சேன்… நிறைய பேர் பாராட்டியிருந்தீங்க… மிக்க நன்றி நட்புக்களே! இன்னிக்கு எபிஸோடு இன்னும் முடிக்கல… காத்திருக்க வேண்டாம்… நாளை சந்திப்போம்…

    நட்புடன்,
    நித்யா கார்த்திகன்.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      kongu jey says:

      nithuma nalla ellam illa semayaa irunthuchu

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kaviram Ram says:

    Super ud

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Kaviram… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Inaiku epi iruka sis

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Illa Kani… innum mudikkala…. Sorry…

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Kani Ramesh says:

        K sis take ur time… nalaiku kutty Dev oda vanga sis😍😍😍

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shafi Asaraf says:

    Sema sema ud . .

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Shafi… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba M says:

    U achieve it mam… great

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:
    • Thank you so much Yazhvenba… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    mathurambaal mathurambaal says:

    intha update kalakal

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Madhurambal…. 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vijaya muthukrishnan says:

    nice episode, eagerly waiting for your next update

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Vijaya…. 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Madhu viruppa padiye payyan..kanner epi.i

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Saranya… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Fantastic episode

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Vatsala… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Riy Raj says:

    தேவ் நீ பண்ணற அலப்பரைக்கு முடிவு கட்ட வந்தாச்சு குட்டி தேவ்……. இனி நீ கத்தி பாரு அப்ப தெரியும்…… ஹா…. ஹா……

    செம எப்பி சிஸ்….. நிகழ்வுகள் நிழலயாய் இல்லாமல் நிஜமாய் தெரிந்தது…..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      ஹா ஹா… மிக்க நன்றி ரியா…
      //நிகழ்வுகள் நிழலாய் இல்லாமல் நிஜமாய் தெரிந்தது// அருமையான வார்த்தை கோர்வை… நன்றி தோழி… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jaya Bharathi says:

    Super…. Engalayum feel panna vechitinga

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Jaya bharathi… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    ஆஹா ஆண்குழந்தை மதுவின் விருப்பம் நிறைவேறியுள்ளது.

    நன்றி

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி தாட்சாயணி… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    seline seline says:

    very nice

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Seline Seline… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    uma manoj says:

    பையன் பிறந்தால் எதையோ செய்வதாக நினைத்தாலே மது..என்னது அது?

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Pon Mariammal Chelladurai says:

      Achcho…home work ah…uma

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        admin says:

        🙂

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        uma manoj says:

        நம்ம புத்தி நம்மை விட்டு போகாது பொன்ஸ் 😅😅😅

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      என்னை ரொம்ப யோசிக்க வச்சுடீங்க உமா… எப்போ மது அப்படி சொன்னான்னு ரொம்ப நேரம் குழம்பிட்டேன்… அப்புறம்தான் நியாபகம் வந்தது… ஆண் குழந்தை அவளுக்கு ஏன் விருப்பம் என்பது அவள் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்னு சொல்லியிருந்தேன். அதைத்தானே கேட்கறீங்க?

      அவனுக்கு மதுரா மாதிரி ஒரு குட்டி உருவம் வேணும். அதனால பொண்ணு பிடிக்கும்… அப்போ அவளுக்கு? அதை வெளியே சொல்ல முடியாதுல்ல… அவதான் கோபமா இருக்காளே! அதான் ஒரு குறிப்பா சொன்னேன்… ஆனா என்னோட குறிப்பு புரியற மாதிரி இல்லை போலருக்கே!!! :O

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        uma manoj says:

        ரகசியம் னு சொன்னதால் வந்த சந்தேகம் நித்யா. ..கதையோட ஆழத்துல குதிச்சுடோமில்ல…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Sema Sema super ud mam really super… Tom also post two ud….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Subha… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Solla vartthai illaippa .dev un atakka oruththan vanthuttan…….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much friend… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithya Prabhu says:

    Sema sema sema ya irundichu
    Words I’ll
    Avalavu alaga irukudu neenga eludunathu

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Nithya… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Reena thayan says:

    Adai Dev Nee panra alumpu thanka mudiyalada ……….

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Ha Ha… indha maadhiri comment edhirpaarththu thaan ezhudhinen… avanoda alumbu thaangak koodaadhunnu ninachchen… 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jansi r says:

    Wow
    கண்ணு முன்னாடி பார்க்கிற மாதிரி இருந்தது ரெண்டு எபிசோடும்ந்ந்

    Dev உன்னை யாராலும் திருத்த முடியாது…குட்டிப்பையா வந்தாச்சு

    மகிழ்ச்சி 😃

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      மிக்க நன்றி ஜான்சி… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    டேய்..பையனாம்…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Yes Yes…. Paiyan… 😀

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    Yepaa dev super

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you Ugina… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    ஆஹா!பையன் பொறந்துட்டானா?!

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      நன்றி க்கா… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Wow sis its epic.. dev u r crzy on madhu its very beautiful to see both of them sis… deftnly madhu ll realize his luv for her😍😍… finally dey blessed wit baby boy😍😍… fantastic sis..luv u for givng epu lik tis sis😘😍😍😘😘

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Kani…. love u too sis…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vinayagam Subramani says:

    Wow… beautiful & legendary episode….
    Dev and Madhu blessed with a baby boy…. sounds good…very Satisfied… what a miracle??? love changes a man completely. Dev.you are the best example for all the men.. though you have received so many complaints from us.. today you scored 1000out of 100..me happy.. superb update.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much sir… Such an encouraging comment… I’m glad Dav won your heart…. 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    kongu jey says:

    nice ud nithuma

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Kongu jey… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Alamu Sri says:

    Super Nithya. No words.to say. I felt dev and mathura s feel. Thank you .

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Alamu… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rama karupasamy says:

    Wow..sooper..dev va oru valiyaka varisu vanthachu

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you ka…:)

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    kumudha devi says:

    Wow… Enna oru wonderful narration… Kalakitteenga…. Super…
    It’s a boy…. Yappaa nimmadhiyaa irukku… Papa nalla padiyaa porandhuduchu…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Kumudha… Unga comment parkkum podhu enakku eppavume happy… old days niyaabagam varum… Penmai la comment paarkkara feel… 🙂

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        kumudha devi says:

        Nyabagam irukkaa dear ungalukku… Wow…. Thanks Enna nyabagam vachirukkaradhukku… Ungaloda kadhaigal la neenga kaatchi amaippa soldra vidham dhaan highlight… And adhu merugu eritte pogudhu

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          admin says:

          எப்படி மறக்கும் தோழி… நான் எழுத ஆரம்பித்த காலம் அது… குமுதா, சுமதி ஸ்ரீனி, கங்கா, நாக லட்சுமி, லக்ஷிமி, உமா மனோஜ், உமா, ஹத்திஜா ஷாகி, ஸெய்யது அப்புறம் முக்கியமா நம்ம அனுப்ரியா… இதெல்லாம் முதல் செட்… அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பொன்ஸ் அக்கா, நிதா, தேனு, கிளோரியா இவங்க எல்லாருமே பெண்மைல ஆரம்ப காலத்துல என்னோட கதைக்கு நிறைய சப்போர்ட் கொடுத்தவங்க… இன்னும் நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க… இப்போ டக்குன்னு மனசுல தோணினவங்களை மட்டும் குறிப்பிட்டிருக்கேன். அந்த பீரியட் ரொம்ப மனசுக்கு நெருக்கமானது. அந்த டைம்ல பழகினவங்களை திரும்ப ஏதாவது ஒரு கமென்டலேயோ போஸ்ட்லேயோ சந்திக்கும் போது ஒரு அதீத சந்தோஷம்…

          அப்போ இருந்த பூனை குட்டி க்ரூப், ரீடேர்ஸ் அண்ட் ரைடர்ஸ் கிளப் எல்லாம் இப்போ இருக்கான்னு கூட எனக்கு தெரியல… யாரையும் அதிகம் பார்க்க முடியல… ரொம்ப சைலென்ட்டா இருக்க என்னையெல்லாம் க்ரூப்ல இழுத்துவிட்டு பிரண்ட்ஸ் மேக் பண்ண வச்சதே அனு தான்… அவங்களுக்கு பிறகு அந்த செட் அப்படியே கொஞ்ச கொஞ்சமா கலைஞ்சு போயிட்ட மாதிரி ஒரு பீல் எனக்கு. ரீசன்ட்டா உங்களோட ஒரு போஸ்ட் பார்த்தேன். அனுவோட நினைவுகளை குறிப்பிட்டு… ஒரே வரி… ‘எங்கடீ போயிட்ட!!’ – அந்த போஸ்ட்டை பார்க்கும் போதெல்லாம் உள்ள ஒரு வலி… சோகம்… இவ்வளவு வருஷம் கழிச்சும்… தொடர்புகொள்ள முடியாத தூரத்து போயும்… மறக்க முடியாத ஆன்லைன் தோழி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ambika V says:

    Kutty dev vandhutan

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Yes Ambika… Kutty Dev vandhuttaan… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Meena PT says:

    so lively update. the way Madhura handled the situation is wow. Description of Dev’s feelings is awesome

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Meena… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Ohhh … Nithya baby eppadi irukkunu sollave illaiye 😟😟

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Baby nalla irukkum… next epi la detail la theriyum… 🙂

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Lakshmi Narayanan says:

        Thanku thanku 😘

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lashmiravi VIJAYALAKSHMI says:

    No words to say…..unarvukalin pidiyil engal manam…. How to express our feelings… Excellent…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thank you so much Lakshimi… I’m happy you liked the story

  • You cannot copy content of this page