Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள் – 1

அத்தியாயம் – 1

‘ஹட் பே தீவு’ – அந்தமான் நிக்கோபார் தீவுகளுள் ஒன்று. மாலை நான்கு மணி. சூரியக்கதிர்கள் மென்மையாக வருட, அந்தத் தீவு தேவலோகம் போல் காட்சியளித்தது. அதிலும் ஹெலிகாப்டரில் இருநூறு அடி தூரத்திலிருந்து பார்க்க இரு கண் போதாது.

இப்படிப்பட்ட ரம்யமான காட்சியை  ரசிக்க வேண்டிய கண்கள், புருவ முடிச்சிக்களுடன் கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தன. அதற்கான காரணம் அவை ருத்ரபிரதாப்பின் கண்கள்.

தீவின் அழகை ஹெலிகாப்டரின் ஜன்னல் வழியே பார்க்காமல், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராவோடு இணைக்கப்பட்டிருக்கும் சின்னத்திரையில் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இன்னும் கொஞ்சம் லெப்ட், அந்த பெரிய மரம் இந்த முறை நிச்சயம் ஃபிரேமுக்குள்ள வரனும்” அவனது நுனிநாக்கு ஆங்கிலத்தில் கட்டளை தெரித்து விழுந்தது.

ஹெலிகாப்டர் ஓட்டிய தேவ் நாயரின் வயிற்றில் அக்குரல் பீதியை கிளப்பியது. இன்று இரண்டாம் நாள் நான்காவது டேக். இவன் குணத்திற்கு இன்னமும் மேலே விழுந்து புரண்டாமல் இருப்பதே அதிசயம்,  கடவுளே காப்பாற்று என்று தன் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டு லேசாக இடது பக்கம் வளைத்து ஓட்டினான்.

ஹெலிகாப்டர் ஹட்பே தீவை முழுவதுமாக ஒரு வட்டமடித்து வொயிட் சர்ப் நீர் வீழ்ச்சியை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் அதன் பிரம்மாண்டத்தைக் காண்பிக்கவே படமெடுக்கப்பட்டது.

“கட் ” என்று கூறியவன் சின்னத்திரையிலிருந்த கண்களை விலக்கினான்.

“சூப்பர்ப்… டேக் ஓகே. குட் மூவ். பட் வெரி லேட் மூவ்.” என்றான் தேவ் நாயரை பார்த்து

‘பாராட்டை கூட குட்டு போல வைக்க இவன் ஒருவனால் தான் முடியும் மனதில் நினைத்ததை மறைத்து, “தேங்க்யூ சார் ” பொதுவான ஒரு பதிலை அளித்து விட்டு ஹெலிகாப்டரை தரையிரக்கினான் தேவ்.

தேவ் மற்றும் கேமராமேன் பிரகாஷுடன் ஹெலிகாப்டரிலிருந்து இறங்கியவன் நேரே ஹீரோயின் கேரவனுக்குள் நுழைந்தான்.

அவனை பார்த்ததும் ஹீரோயின் நந்தினியின் புதிய அஸிஸ்டென்ட் சந்தனாவுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த ஹீரோவின் மேனேஜர் சந்திரன் அவசரமாய் எழுந்து நின்றான்.

எப்பொழுதும் முடிச்சிட்டிருக்கும் புருவம் மேலும் ஆழமான முடிச்சிட்டு சந்திரனை முறைத்தன. அருகில் நெளிந்து கொண்டிருந்த சந்தனாவிடம் “நந்தினி எங்கே? ஹரியப். இன்னும் பதினைந்து நிமிஷத்துல நம்ம காட்டு குகைக்குள் இருக்கனும்” என்றான்.

“மேடமும் சாரும் அடுத்த சீனுக்கான டிஸ்கஷன்ல இருக்காங்க சார்” – சந்திரன்.

அவனை சுட்டெரிப்பதுபோல் பார்த்து, “மித்ரனுடைய இன்றைய ஷாட்கள் முடிஞ்சாச்சே, இப்போ அவர் ஹட்பேயில் அவரது ரூமில்  இருக்கணுமே ” குரலில் நக்கல் அப்பட்டமாய் தெரிந்தது.

பதில் கூறத் தெரியாமல் அசடு வழிந்தவனை சட்டைசெய்யாமல் சந்தனாவிடம் தன் பார்வையை ஆழப் பதித்துவிட்டு வெளியேறினான்.

*************************************

மரங்கள் நிறைந்த அந்த காட்டிற்குள் கார் செல்ல வழியில்லை, அதனால் ஹெலிகாப்டரில் தான் சென்றார்கள்.

குகைக்கு அருகில் சரியான இடத்தில் சரியான தூரத்தில் ஹெலிகாப்டரை அவன் நிறுத்த, அதிலிருந்த கயற்று ஏணி வெளியே போடப்பட்டது, மேக்கப்மேன், பிரகாஷ், நந்தினி எல்லோரும் கைவந்த கலையாக வேகமாக இறங்கி விட சந்தனா விழித்தாள், இதுவரை அவள் இப்படி இறங்கியதில்லை, கைகளை பிசைந்து கொண்டு அவள் நிற்க,  தன் மிகப்பெரிய கிட்பேக்கை மாட்டிக்கொண்டு கீழே இறங்க திரும்பிய ருத்ரன் அவளை பார்த்தான்,

“தேவ், கயிறு கொடு” என்ற ருத்ரனின் குரலுக்கு உடனே அருகேயிருந்த கயரை அவன் பக்கம் தூக்கியெரிந்தான் தேவ்

அதனை லாவகமாக தன் இடது கையால் பிடித்தவன்,  அதன் ஒரு நுனியை பிடித்துக்கொண்டு சந்தனாவை நெருங்கினான்,  சந்தனாவிற்குள் அபாய மணியடித்தது,எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறாள்,

அவன் அந்த கயரை அவளது இடுப்பில் கட்டத்தான் வருகிறான், ஐய்யோ!,  கூடாது அதற்கு இந்த ஏணியில் இறங்கி விழுந்து தொலைத்தாலும் பரவாயில்லை,’ என்று முடிவெடுத்தவள் அவசரமாக அந்த கயற்று ஏணியில் கால் வைத்தாள்,

பழக்கமில்லாததால் கால்கள் நடுங்கின, இருப்பினும் தன்னுள் இல்லாத திடத்தை திரட்டி  கயரை இறுகப்பிடித்தபடி இறங்கலானாள்

வெற்றிச்சிரிப்புடன் கயிறை கீழே போட்டவன் அவளுக்கு பின்னால் இறங்கலானான்.மிக மெதுவாக அவள் இறங்க பொறுமையிழந்தவனாய் தொங்கிக்கொண்டிருந்த ஏணியில் அவளுக்கு எதிர்புறம் தாவினான்

அவளது கைகளை மிதித்து விடாமல் அவளை தாண்டடியவன் ஒரு நொடி நேருக்கு நேர் சந்திக்கையில “சீக்கிரம் இறங்கு, குகைக்குள்ள வெளிச்சம் வந்துடபோகுது? ” என்று சிடுசிடுத்துவிட்டு அவளை தாண்டி வேகமாக இறங்கி விட்டான்.

சற்று வேகமாகவும் கவனமாகவும் இறங்கியவள் கடைசி படிகட்டிலிருந்து குதிக்க பயந்தாள், அவளாக குதிக்க சில நொடி காத்திருந்த ருத்ரன், அவள் குதிக்கப்போவதில்லை என்று தோன்ற அவளது இடுப்பை இறுகப்பிடித்து தூக்கி கீழே நிறுத்தினான்.

இதுதான் நடக்கிறது என்று புரிந்து, துள்ளி குதித்து அவனது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவளிள் முகம் கோபத்தில் சிவந்தது .

அதனை சிறிதும் சட்டை செய்யாத ருத்ரன் “கமான் ஹரியப், இட்ஸ் கெட்டிங் லேட் ” என்று முன்னே நடந்து வாக்கிடாக்கியில் “எல்லாரும் லேன்ட் ஆகியாச்சு, தேவ் ” என்று தேவ்நாயருக்கு தகவல் தெரிவித்தான்

பிரகாஷ், நந்தினி,சந்தனா மற்றும் மேக்கப்மேன் ரன்வீர்அவனை பின் தொடர்ந்தனர்

*************************************

அடுத்த பதினைந்தாவது நிமிடம் ருத்ரபிரதாப், பிரகாஷ், நந்தினி சந்தனா. ஆகிய நால்வர் மட்டுமாய் குகைக்குள் இருந்தனர்.

வெளியே ரன்வீர் நந்தினிக்கு தண்ணீரில் கரைந்து போகாதபடி போடப்பட்ட மேக்கப் சாமான்களை மறுபடியும் அடுக்கிக்கொண்டிருந்தான்

மாலை சரியாக 5.00 மணிக்கு சூரியஓளி மேற்கு முகமாக அமைந்த அந்த குகையின் உள்ளே படர்ந்து ஒருவகையான தெய்வீக ஓளியை தரும். சிறிதும் தவறாமல் அந்த நேரத்தில் பதினைந்து நிமிட ஷாட் எடுக்க முடிவு செய்திருந்தான் ருத்ரன் அதற்கு மேல் வெளிச்சம் குறைந்து விடும். எந்த செயற்கை ஒளிக்கதிர்களாலும் அந்த இயற்கை ஒளியை ஈடுகட்டிவிடமுடியாததால் நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்கின்ற பதட்டம் அந்த நால்வர் முகங்ளிலும் தெரிந்தன.

நந்தினி தன் பொஷிஷனில் நிற்க “கேமிரா ரோல் பண்ணு பிரகாஷ் – ஷாட் நியாபகம் இருக்குதானே நந்தினி?” இல்லை என்ற பதில் கூறமுடியாத படி தான் அவனது கேள்வி எப்போதும் இருக்கும்.

‘இருக்கிறது’ என்பது போல் வேகமா தலையசைத்தாள் நந்தினி.

“குட் – ஆக்ஷன் ” என்றதும் குகைக்குள் இருந்த நீர் ஊற்றினுள் சட்டென குதித்து விட்டாள்

அதற்குள் அவனது பார்வை சந்தனாவின் மேல் அர்த்தமாய் படிய. உடனே அவள் தன் உடை சிகை அணிமனிகள் எல்லாவற்றையும் அங்கே இருந்த சிறு பாறைக்குப் பின்னால் சென்று மாற்றிக்கொண்டு வந்து விட்டாள்.

அவளை ஏற இறங்கப் பார்த்த ருத்ரபிரதாப்பின் பார்வை அவளை பாராட்டின. ஆனால் அவள் அவன் பார்வையைத் தவிர்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.

உள்ளே குதித்த நந்தினி வெளியேற கேமரா திரையை உற்று பார்த்துக்கொண்டிருந்த ருத்ரன் “கட் ” என்றான்

“டேக் ஓக்கே – குட் நந்தினி ” – என்றவனின் பாராட்டில் உச்சிகுளிர்ந்தாள் நந்தினி

“அடுத்து நீதான், வந்து பொஷிஷன்ல நிற்கவேண்டியதுதானே அதுக்கு தனியா வேண்டனுமா? டயம் போயிட்டே இருக்கு,  இன்னமும் எட்டு நிமிடம்தான் பாக்கி கமான்” என்ற அதட்டலுக்கு கட்டுப்பட்டவள் போல் பொஷிஷனில் நின்று கொண்டாள் சந்தனா

“ஆக்ஷன்” என்றதும் சட்டென தண்ணீரில் குதித்து விட்டாள்.

நந்தினி உள்ளே குதித்தாள் வெளியே எழுந்தாள் அவ்வளவே ஆனால் சந்தனா தண்ணீருக்குள் மூழ்கியபடியே வேகமாக நீந்தினாள் அதிலும் ஒரு மீன் போல அவளது அசைவுகள் இருந்தது. அதுமட்டுமல்லாமல் வட்ட வடிவத்திலும் தண்ணீருக்குள் நீந்தினாள். அவளது அங்க அசைவுகள் அவள் தண்ணீருக்குள் நாட்டியமாடுவது போலவே காட்சியளித்தது. ருத்ரபிரதாப் எதிர்பார்த்ததும் அதுவே தான். அத்தனையும் கண்கொட்டாமல் பார்துக்கொண்டிருந்த அவனது கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. எல்லாம் முடிந்து அவள் மேலே ஏறியதும்

“கட், டேக் ஓக்கே – பேக்அப்” என்றவன் நந்தினிக்கு கூறிய “குட்” டை கூட இவளுக்கு சொல்லவில்லை.

“சான்சே இல்ல சந்தனா யூ ஆர் கிரேட், ஒரே ஷாட்ல இத்தனை கிளாரிட்டி இதுவரை என் அனுபவத்தில் பார்த்ததில்லை” என்றான் பிரகாஷ்.

ஒரு அலட்சியப் பார்வையை ருத்ரபிரதாப்பிடம் செலுத்திவிட்டு மீண்டும் அந்த பாறைக்குப் பின்னால் சென்றுவிட்டாள்.

“என்னால் இன்னமும் கூட நம்பமுடியவில்லை ருத்ரா. இவள் உடல் வாகு அப்படியே என்னைபோலவே இருக்கே, ஏன் முகமும் ஒரு சில கோணத்திலிருந்து பார்த்தால் என்னைபோலவேதான் இருக்கு. எப்படி இவளை எனக்காக தேடி பிடிச்சீங்க?” குழைவும் நெளிவுமாய் ருத்ரபிரதாப்பின் தோளில் சாய்ந்தவண்ணம் வினவினாள் நந்தினி.

அவளது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, “ஒரு திருத்தம். உங்களுக்காக சந்தனாவை தேர்ந்தெடுக்கல அவளை பார்த்த அப்புறம் தான் உங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தேன். கிளம்பலாமா? – சந்தனா முடிந்ததா?” என்று அவன் திரும்புவதற்கும்,

“ஆ….” என்ற அலறலுடன் நந்தினி கீழே விழுவதற்கும் சரியாக இருந்தது.

“என்ன ஆச்சு மேடம்?” என்று ஓடிவந்த சந்தனா நந்தினியிடம் மண்டியிட்டு அவளை ஆராய்ந்தாள். நந்தினியின் தலையிலிருந்து கசிந்த ரத்தத்தை பார்த்தவள், ஒருவித பதட்டத்துடன் ருத்ரனை பார்த்தாள்,  அவனோ நந்தினியை பார்த்தான். அதற்குள் பிரகாஷும் நந்தினியை ஆராய்ந்து ருத்ரனை நோக்கி தன் உதடுகளை பிதுக்கினான். ஒரு நொடி ருத்ரனின் கண்களில் தோன்றி மறைந்த பதட்டத்தை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

அரை நிமிடம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் சட்டென்று தன் கிட்பேகினுள் எதையோ துழாவிவிட்டு, நந்தினியின் பக்கம் பார்த்தான். ‘மேடம் மேடம்…என்ன ஆச்சு மேடம்… எந்திரிங்க” – சந்தனா தொடர்ந்து அவளை எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தாள். அவர்களுக்கு அருகே சென்று மண்டியிட்டான் ருத்ரபிரதாப். நந்தினியை பார்ப்பதற்காக குனிந்தவன் சட்டென சந்தனாவின் முகத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தினான், அடுத்த சில நொடிகளில் சந்தனா மயங்கி சாய்ந்தாள். அவள் நாசியிலிருந்து தன் பிடியை தளர்த்திய ருத்ரபிரதாப், குளோரோபார்ம் தடவப்பட்ட கைக்குட்டையை மீண்டும் தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்தான்.

முகங்களின் தேடல் தொடரும்….




7 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sadha says:

    Super


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Radhi Muthuvel says:

    Nice ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Very good start


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Hi Indra…..vera oru thalathil indha unga kadhaiya padichi iruken…..nalla interesting part le vera nippateenga…..continue pannamateengalanu irukum….thank God thirumba story ah start pannittenga….very eager to read


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      nandri thozhi, Ippo nippata vaipea illa, mudinja alavu daily ud koduka try pandrene. Ungaludaya indha encouragementku ennoda manamarntha nadrigal. But oru mukiya aruvipu. Antha thalathula eludhunathula naraiya edit panni mathi iruken. Padichi parthu unga comments sa upload pannunga


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Arumai kathai aarampame kalakkal


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Nandri, iruthi varai ithea pol ungal adharavai tharavum.nandri

You cannot copy content of this page