Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 92

அத்தியாயம் – 92

“இட்ஸ் எ பாய்…” என்கிற மருத்துவரின் குரலைக் கேட்டதும் மதுராவின் மனம் பூரிப்பில் நிறைந்தது. அதை அடுத்து கேட்ட குழந்தையின் அழுகுரல் அவள் கண்களில் ஆனந்த கண்ணீரை கொண்டுவந்தது. மனைவியின் கையை பிடித்தபடி அவளுடைய தலைப்பக்கம் நின்றுக்கொண்டிருந்த தேவ்ராஜ் அவளுடைய கண்ணீரை துடைத்து நெற்றியில் இதழ்பதித்தான்.

‘பிரின்சஸ் பிரின்சஸ்னு சொல்லிட்டு இருந்தானே! பையனா பிறந்துட்டானே! எப்படி ஃபீல் பண்ணறான்!’ – கணவனை ஏறிட்டாள். கனிந்த முகத்தோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன். இருவருடைய பார்வையும் பின்னிக் கொண்டது.

“பை…யன்…” – மதுராவின் உதடுகள் முணுமுணுத்தன. பற்றியிருந்த அவள் கையில் முத்தமிட்டு, “என்னோட பையன்’ என்றான் பெருமை பொங்க.

“உங்கள மாதிரிதான் இருக்கானா?” – மீண்டும் முணுமுணுப்பாக ஒலித்தது அவள் குரல். கலைத்துப் போயிருந்த அவன் முகம் புன்னகையில் மலர்ந்தது.

“பேபியை இங்க கொண்டு வாங்க” – தொப்புள் கொடியை வெட்டிக் கொண்டிருந்த மருத்துவரிடம் கூறினான்.

“கிளீன் பண்ணி கொண்டுவரேன் சார்” – நர்ஸ்.

“நோ நீட்… இங்க கொடுங்க…” – உதிரத்தில் குளித்திருந்த குழந்தையை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டான்.

நொழுநொழுவென்றிருந்த அந்த குட்டி உடல் தன் கையிலிருந்து நழுவிவிடுமோ என்கிற பயத்துடன், “என்ன…! பேபி இவ்வளவு சின்னதா இருக்கு!” என்றான்.

ஐந்து வயது சிறுவனிடம், பிறந்த குழந்தையைக் கொடுத்தால் அவன் முகத்தில் எப்படி ஒரு பயமும் உற்சாகமும் கலந்த கலவையான உணர்வு தோன்றுமோ அப்படி ஒரு உணர்வுதான் இப்போது தேவ்ராஜின் முகத்திலும் இருந்தது. அதைக் கண்ட நர்ஸ் சிரித்தாள். சற்றுநேரத்திற்கு முன் ஆவேசத்துடன் தன்னிடம் சீறி கொண்டிருந்த மனிதன் இப்போது சட்டென்று குழந்தையாய் மாறிவிட்டதை வியப்புடன் பார்த்தபடி, “நார்மல் சைஸ் தான் சார்…” என்றாள்.

“அப்படியா! நார்மல் சைஸ்தானா!” – நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை கேட்டான்.

“பீடியாட்ரீஷியந்தான் இருக்காங்களே… கேட்டுடுங்க…” – அவனுடைய பார்வை குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்றது.

“அவங்க சொல்றது சரிதான்… பயப்படாதீங்க”

“தேங்க் யூ…” – மெய்சிலிர்க்க தன் நெஞ்சோடு குழந்தையை அணைத்தபடி மனைவியிடம் எடுத்துச் சென்றான்.

“பாரு… யார் மாதிரி இருக்கான்னு நீயே சொல்லு” என்றான். அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தை கண்ட மதுரா புன்னகையுடன் அவன் கையிலிருந்த குழந்தையைப் பார்த்தாள். குட்டி உருவம்… யார் சாயல் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வைத்த கண்ணை அகற்ற முடியவில்லை. அப்படி ஒரு ஈர்ப்பு… தாய் என்பதால் வந்த ஈர்ப்போ! – மெல்ல தொட்டுப் பார்த்தாள். உள்ளே இனித்தது.

“கேன் ஐ ஹோல்டு ஹிம்?” – ஆசையோடு கேட்டாள்.

“உன்னால முடியுமா?”

“ம்ம்ம்…”

“ஹெல்ப் பண்ணுங்க….” – நர்ஸை அழைத்தான். அவள் வந்து அவனிடமிருந்த குழந்தையை வாங்கி மதுராவின் மீது அழகாக படுக்க வைத்தாள். அது அவளிடம் முட்டி மோதியது. ஆச்சரியப்பட்டுப்போனாள் மதுரா.

“என்ன செய்றான்!” – விரிந்த விழிகளுடன் நர்ஸை பார்த்தாள்.

“அம்மாவை கண்டுபிடிச்சிட்டான்…” என்று சிரித்தவள் “பீடியாட்ரீஷியன் பார்த்துடட்டும்… அவங்க பார்த்த பிறகு கிளீன் பண்ணி கொண்டு வரேன். பீட் பண்ணலாம்…” என்று கூறிவிட்டு அதே அறையில் இருந்த குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டுச் சென்றாள்.

அதுவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி இருந்தவளுக்கு, பீடியாட்ரீஷியன் என்கிற வார்த்தையைக் கேட்டதும் மாத்திரையின் நினைவும், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்கிற பயமும் தோன்றியது.

“பேபிக்கு… எதுவும்… இல்லைல… நல்லா இருக்கு தானே” என்றாள் பதற்றத்துடன். தேவ்ராஜின் டென்ஷன் நொடியில் உச்சத்திற்கு சென்றது. உடல் இறுக குழந்தையை பரிசோதிக்கும் மருத்துவரின் முகபாவத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். மனைவியின் கேள்விக்கு பதில் சொல்லும் நிலையில் கூட அவன் இல்லை.

“ஹி இஸ் அப்சலியூட்டலி நார்மல்” என்று அவர் உறுதி கொடுத்த பிறகுதான் உயிரே வந்தது.

“ஓ காட்! ஹி இஸ் நார்மல்… ஹி இஸ் டாம் நார்மல்…” என்று அவன் கூச்சலிட மதுராவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.

கோவிலிலிருந்த பிரபாவதிக்கு அலைபேசியில் அழைத்து தேஜா விபரம் சொல்ல, அங்கிருந்தபடியே அரக்க பறக்க மருத்துவமனைக்கு ஓடினாள். தாய் மனம் பதறியது. போகும் வழியிலேயே கணவனுக்கும் மகன்களுக்கும் போன் செய்தாள். தேஜாவின் மூலம் அவர்களுக்கும் ஏற்கனவே விஷயம் தெரிந்திருந்தது. வந்து கொண்டிருப்பதாக கூறினார்கள். பிரபாவதி மருத்துவமனைக்கு வந்த போது மதுரா வலியில் கதறிக் கொண்டிருந்தாள். ஓரிருமுறை மகள் உள்ளே சத்தம் போடுவதை வெளியே நின்றபடி கேட்ட தாய் கலங்கி தவித்தாள். வயிற்றில் புளியை கரைத்தது… கால்களெல்லாம் வலுவிழந்தன. மகள் படும் துன்பத்தை சகிக்க முடியவில்லை அவளுக்கு… ‘அம்பிகையே! அபிராமியே!’ என்று கடவுளின் நாமத்தை முணுமுணுத்தபடி அமர்ந்திருந்தாள்.

சற்று நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் “ஆரோக்கியமான ஆண் குழந்தை” என்று சிரித்துக் கொண்டு சொன்ன போதுதான் நிம்மதியாக மூச்சுவிட்டாள்.

தங்கள் குடுபத்தின் புதுவரவை அனைவரும் ஆவலோடு வந்து பார்த்தார்கள். சச்சரவுகள்.. கோப தாபங்கள்… மனஸ்தாபங்கள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது அவர்களுடைய மனதில்.

****************************

அன்று இரவு மதுராவுக்கு உதவியாக பிரபாவதியும் மாயாவும் மருத்துவமனையில் தங்கியிருந்தார்கள். பேரனை பார்க்கப்பார்க்க பிரபாவதியின் மனதில் மத்தாப்பூ ஒளிர்ந்தது. அவ்வளவு அழகாக இருந்தான். அதோடு மதுரா குழந்தையாக இருந்த போது எப்படி இருந்தாளோ அதே போல் இருந்தான். நெற்றி, மூக்கு, கன்னம் தாடை அத்தனையும் மதுராவின் சாயலிலேயே இருந்தது.

தொட்டிலில் உறக்கிக் கொண்டிருந்த குழந்தையை ஆசையோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த பிரபாவதி, அவனிடம் அசைவு தெரியவும் தொட்டிலை ஆட்டிவிட்டாள். குழந்தை உறங்க மறுத்து லேசாக முனகியது. ‘பசிக்கிறதோ!’ – எழுந்து தூக்கினாள். முனகி கொண்டிருந்த குழந்தை கண்விழித்து பாட்டியின் முகத்தை பார்த்தது.

பிரபாவதியின் புருவன் சுருங்கியது. அவள் பேரனை கூர்ந்து பார்த்தாள். சுருக்கங்களுடன் இருந்த குட்டி கண்கள் தான்… இமைகளை மூடிமூடி திறந்து, கண்களை சுருக்கிச்சுருக்கிப் பார்க்கும் குழந்தை பார்வைதான்… ஆனாலும் அவளால் அந்த கண்களை இனம்காண முடிந்தது. தாயிடமிருந்து வந்த அத்தனை அம்சங்களையும் தோற்கடித்துவிட்ட அந்த கண்களை அவளால் கண்டுகொள்ள முடிந்தது. கர்வமும் கம்பீரமும் கொண்ட தேவ்ராஜின் கண்கள் அது…

‘ஹும்ம்ம்…’ – நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது அவளிடமிருந்து. ‘முகமெல்லாம் மது மாதிரிதான் இருக்கு. ஆனா இந்த கண்ணை மட்டும் அப்படியே அவன்கிட்டேருந்து கொண்டு வந்துட்டானே!’ – அந்த நேரத்தில் பிரபாவதியின் மனதில் ஒரு விஷயம் தோன்றியது. ஆனால் அவள் அதை வாய்விட்டு சொல்லாமல் விழுங்கி கொண்டாள்.

குழந்தையை மகளிடம் எடுத்துச் சென்று பசியாற்றினாள். அதன் பிறகும் கூட பேரனை தொட்டிலில் இட மனமே வரவில்லை. தூக்கியே வைத்திருக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது. சற்று நேரம் மடியிலேயே வைத்திருக்கலாம் என்று நினைத்தாள். ஆனால் வீறிட்டான் தேவ்ராஜின் மகன். ‘கண்ணே… மணியே…’ என்று எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தாள். அவன் அடங்கவில்லை.

நள்ளிரவுவரை விழித்திருந்துவிட்டு அப்போதுதான் கண்ணயர்ந்த மாயா குழந்தையின் அழுகுரல் கேட்டு உடனே எழுந்தாள்.

“என்ன ஆச்சு? ஏன் அழறான்? என்ன பண்ணுனீங்க?” – கேள்விமேல் கேள்வி கேட்டபடி எழுந்து வந்தாள். எரிச்சலுடன் அவளை முரைத்த பிரபாவதி, “நா என்ன பண்ணுனேன்… திடீர்ன்னு அழறான்…” என்றாள்.

“கொடுங்க…” – உறக்கத்தை உதறிவிட்டு அண்ணன் மகனை அள்ளிக் கொண்டாள். குழந்தையின் அழுகை சன்னமாய் குறைந்தது. அதை வியப்புடன் பார்த்த பிரபாவதி பொருமினாள்.

“இவ்வளவு நேரமா நா தூக்கி வச்சிருந்தேன்… என்ன கத்து கத்தினான்! இப்போ அத்தைக்காரிகிட்ட போனதும் அப்படியே அடங்கிட்டானே! அந்த குடும்பத்து வாசனை தெரியுமோ! அப்படியே அப்பன் மாதிரி…” என்று தனக்குள் முணுமுணுத்தாள் கொண்டாள்.

அந்த குட்டிக் கண்ணனுடைய கண்களை பார்த்த போது தோன்றிய, ‘அப்படியே அப்பன் மாதிரி’ என்கிற எண்ணம் இப்போது வெளிப்பட்டது.

“ஏதாவது சொன்னீங்களா?” – மாயா.

“இல்லையே! நா என்ன சொல்ல போறேன்… பிள்ளை சமத்து… தூங்கிட்டான் போலருக்கே!” – எரிச்சலை மறைத்துக் கொண்டு பல்லை காட்டினாள். வேறு வழி!

28 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jasha Jasha says:

    Arumaiyana pathivu
    Nammaloda prasava tharunam kannula vanthu poccu karpainaiyavae paakka mudila love ur writing
    Na unga story ippa thaan padikkiraen orae naal mudikkama thoonga mudila

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganya Samidoss says:

    நித்யா உங்கள் கதை மிகப்பிரமாதம். ஆனால் ஒரு வருத்தம் நீங்கள் வாரத்திற்கு 3நாட்கள் தான் எபிசோட் கொடுக்குறீங்க. இதில் சனி ஞாயிறு கண்டிப்பாக எபிசோட் போடுவதில்லை. ரொம்பவே disappointment ஆக உள்ளது.

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      சண்டையை கூட எளிதாக எழுதிவிட முடிகிறது தோழி… ஆனால் இந்த சமாதானம் பெரிய தொல்லை… ஓவர் வழிசலாகவும் இருக்கக் கூடாது… நியாயமாகவும் இருக்க வேண்டும்… வாசகர்களை திருப்தி படுத்துவது போலவும் இருக்க வேண்டும்…. எத்தனை முறை எழுதி அழித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது… நேற்று முழுவதும் இரண்டு பாரா தாண்டவில்லை. இப்போது பாதி கிணறு தாண்டிவிட்டேன். இன்று பதிவிட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் நாளை சனிக்கிழமை என்றாலும் பதிவிட்டுவிடுவேன்…. உங்களை சங்கடப்படுத்தியதற்கு வருந்துகிறேன்… வெரி சாரி…

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Suganya Samidoss says:

        Thank you for your reply. ரொம்ப அழகாக உணர்வுகளை பிரதிபலிக்கிறது உங்கள் எழுத்து .ரொம்ப காத்திருக்க முடியல வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை அதனால் அதுபோல கமெண்ட் கொடுத்தேன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

        • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
          admin says:

          இல்லை இல்லை தோழி… உங்களுடைய வருத்தத்தை என் மனம் புண்படாத வகையில் அழகாக சொல்லியிருந்தீர்கள். எனக்கு மகிழ்ச்சிதான்… உங்களுடைய கேள்வியும் என்னுடைய பதிலும் சைலட்டாக தளத்தை விசிட் செய்து கொண்டிருக்கும் மற்ற தோழிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாசகர்கள் காத்திருப்பது எனக்கும் வருத்தம் தான்… முடித்துவிடலாம்… முடித்துவிடலாம் என்று எண்ணியபடியே எழுதிக் கொண்டிருப்பேன். நேரம் கடந்துவிடும்…. ஆனால் நான் முழுமையாக எழுதியிருக்க மாட்டேன். பதிவிட முடியாமல் போய்விடும். என்னுடைய நிலையை சொல்ல இது ஒரு வாய்ப்பு… நன்றி…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Mam pls tdy ud venum

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      🙁

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Tdy ud Iruka mam

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Innum type panni mudikkala Subha… Solla mudiyaadhu… so wait panna vendaam….

      • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
        Subha Mani says:

        Oh k mam but mrg read panra Mari post panunga plz next ena nu romba eager ah Iruku

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Avan alukurathukku kaaranam neethane ennai alikka ninachcha antha kovam than . dev mathu kalavai alagu

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shri lakshana Sakthivel says:

    Powerful magnetic eyes of deva prabha amma ……..ippo yena Pana poringa ……..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Chriswin Magi says:

    Ha ha prabavathy adangathu polayeee

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    குட்டி பையன் செம க்யூட்!!
    அப்பாஆஆ பிறந்த குழந்தையிடம் கூட இத்தனை வெறுப்பா?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sow Dharani says:

    ஜாடை தான் மது கண்ணு பவர் ஹவுஸ் தேவ் வோட கண்ணு…. அது எப்பவும் ப்ரபாவுக்கு குத்தி கிட்டே தான் இருக்கும்
    .
    ……
    டேய் குட்டி தேவ் உனக்கும் உங்க அத்தை கிட்ட போனவோடனே சமாதானம் ஆகிடியே

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    அழகான பதிவி,இனிவரும் காலத்தில் பேத்தியாரும் பேரனும் முட்டிக்கொள்வார்களோ,குழந்தை இப்பவே அம்மம்மாவிடம் சேரமாட்டேன்கிறாங்களே.

    நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jayashree swaminathan says:

    thanks for a interesting update.Very light and relieved that baby was normal.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    kumudha devi says:

    Ha ha ha… Appadiye appanai maadhiri…. Thanks nithya… Roomba naal kazhichu or light aana update… Punnagai Oda episode padichu mudichen…

    Last week epi padikkumbodhu en ponnu exam ku padikkara maadhiri moonji yen ivlo serious aa irukkunu kindal pannaa…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    selvipandiyan pandiyan says:

    அப்பாடா,பிள்ளைக்கு ஒண்ணும் ஆகலை!இனி ப்ரபாவதி எப்படி பேரனை கொஞ்சுவா?!

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Haha haha. .. kutty paiyanukku koodathu teriyuthu prabavathi ya

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepashvini Writes says:

    சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் அத்தியாயம்😍😍😍😍

    அதிலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது மனத்துக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு 😘😘😘(தேங்க்ஸ் நித்யா மேம்)

    தேவ்ராஜை அதட்டி உருட்ட அவனின் சிங்க குட்டி வந்துட்டான்…💃💃💃

    ஹா ஹா பிரபவதி ஹா ஹா பாரு பிறந்த
    குழந்தைக்கு கூட உன்னை பத்தி தெரிஞ்சி இருக்கு😏😏😏

    அழகான நிறைவான அத்தியாயம்😍😍😍

    ஆனா அடுத்து என்னன்னு இன்னும் கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கு மேம்
    🙋🙋🙋

    அடுத்த பதிவுக்காக ஆவலுடன் நான்
    தீபஷ்வினி😁😁😁😁

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Oh god am very happy to read tis😍😍.. Dev paiyan dev oda periya aala irupan pola he realize prabhavathy ha ha karma is boomerang nee deva evlo nogadichirupa ipa avan paiyan thirupi thara poran😜😜😜

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jansi r says:

    So cute
    Very nice epi

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Hahaha prabavati semma nose cut poi savu…. super epi akka

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    தேவ் மவனுக்கும் தெரிஞ்சிருக்கே…பிரபாவதி பற்றி….இனி உன் பேரன் திருப்பி கொடுப்பான்..
    நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன்…எண்ணிக்கொள்ளடி …..வாங்கி சேர்த்து வைம்மா….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    uma manoj says:

    ஹ ஹா…பிரபாவதி…நீ என்ன நினைச்சா என்ன?
    அவன் எத்தனுக்கு எத்தனா இருக்கான்….
    செத்தான்டி பிரபாவதி😃😃😃😃😃

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    Magan appan maathiri illamal veru eppadi iruppan.devai siru vayathil siruthu aravanaisirunteenganaa ippadi irukka maattaan.peranidam ippadiye muraisenganna athu ayiram kelvi ketkum.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Uma Deepak says:

    Feeling relaxed nithya akka after reading this epi…

You cannot copy content of this page