மனதோடு ஒரு ராகம்-21
4671
1
அத்தியாயம் – 21
“பூ…ர்ர்ர்…ணி…மா… கண்ண்ண்ணைத் தி…ற…ந்ந்ந்ந்துப் பா…ரு… உ..ன…க்..கு ஒண்…ணு…ம் இல்ல்ல்ல… நீ… நல்ல்ல்லா இரு…க்…க…” தேய்ந்துப் போன ரெக்கார்டை ஓடவிட்டது போல் தூரத்தில் யாரோ பேசுவது இழுவையாகக் கேட்டது.
அவள் கண்விழிக்க முயன்றாள். தூக்கம் கண்ணை இழுப்பது போன்ற உணர்வு இமைகளைப் பிரிக்கவிடாமல் தடுத்தது.
“பூ…ர்ர்ர்…ணி…மா… கண்ண்ண்ணைத் தி…ற… யு ஆ…ர் ஆ…ல் ரை…ட் நௌ…” மீண்டும் அந்தத் தேய்ந்த ரெக்கார்ட் அவளை எழுப்பியது. இந்த முறை இன்னும் பிடிவாதத்துடன் இமைகளைப் பிரித்தாள். முதலில் மங்கலாகத் தெரிந்தக் காட்சி மெல்ல மெல்லத் தெளிவடைந்தது. எதிரில் வெள்ளை உடையில் நர்ஸ் ஒருத்திப் பளீர் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்.
“என்னைத் தெரியுதா?” – இப்போது அவள் பேசுவது சரியான அலைவரிசையில் கேட்டது.
“என்னை ஏன் காப்பாத்துனீங்க?” – முனகலாகக் கேட்டாள்.
“உனக்கு ஆயுசுக் கெட்டி. இன்னும் நூறு வருஷத்துக்குச் சாகமாட்ட. இப்போ நாக்கை நீட்டுப் பார்க்கலாம்”. நர்ஸ் சொன்னபடி பூர்ணிமா நாக்கை நீட்டினாள்.
“கையில் வலி ஏதும் இருக்கா?”
“ம்ஹும்…”
“சரி. ரெஸ்ட் எடுத்துக்க. இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்து பார்ப்பார்” என்று கூறிவிட்டு கேஸ் ஷீட்டை எடுத்து ஸ்டேட்டஸ் குறித்து வைத்தாள்.
அயர்வுடன் கண்மூடிய பூர்ணிமா அப்படியே தூங்கிப் போனாள். அவள் மீண்டும் கண்விழிக்கும் போது அவளுக்கு அருகில் பெரியம்மா சரளா அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் கோபம் டன் டன்னாய் குடியேறியிருந்தது. தன்னுடைய குட்டு வெடித்துவிட்டது என்பதைப் பூர்ணிமா புரிந்து கொண்டாள். இப்போது சித்தார்த் அவளுக்குச் செய்த துரோகத்தை விட, அவள் தன் குடும்பத்திற்குச் செய்த துரோகத்தின் குற்ற உணர்ச்சிதான் விஸ்வரூபம் எடுத்து அவளை வருத்தியது.
கண் கலங்க… உதடு துடிக்க “அ…ம்…மா…” என்றாள். சரளா விருட்டென்று எழுந்து அறையிலிருந்து வெளியேறிவிட்டாள். சற்று நேரத்தில், “என்ன நல்ல தூக்கமா?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள் நர்ஸ். அவளுக்குப் பின்னால் பெரியம்மா வந்தாள்.
“ம்ம்ம்…” என்று முணுமுணுத்தாள் பூர்ணி.
அவளுடைய உடல்வெப்பம், ரெத்த அழுத்தமெல்லாம் சோதித்துவிட்டு, இறங்கிக் கொண்டிருந்த சலைன் பாட்டிலில் இரண்டு ஊசியை ஏற்றித் தான் வந்த வேலையை முடித்துவிட்டு வெளியேறினாள் நர்ஸ். பூர்ணிமா மீண்டும் சரளாவிடம் பேச்சுக் கொடுத்தாள். அவளோ பிடிவாதமாகப் பேச மறுத்தாள். பூர்ணிமா கெஞ்சினாள்… அழுதாள்… ஆனால் சரளா கரையவில்லை. இரும்பு போல் இறுகிப் போயிருந்தாள். அவளாவது பரவாயில்லை. குறைந்தபட்சம் பூர்ணிமாவுடன் நாள் முழுவதும் ஒரே அறையில் இருந்தாள். ஆனால் வேல்முருகனும் அவருடைய அண்ணன்களும் அவளை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
பூர்ணிமா வீட்டிற்கு வந்து ஒரு வாரம் கழிந்துவிட்டது. சொந்த வீட்டிலேயே அகதி போல் உணர்ந்தாள். அறையைவிட்டு வெளியே வருவதே இல்லை. வேளாவேளைக்கு உணவு மட்டும் வேலைக்காரி மூலம் வந்து சேரும். மற்றபடி உறவுகள் யாவும் அவள் செத்தாளாப் பிழைத்தாளா என்று கூடப் பார்க்காமல் ஒதுங்கியிருந்தார்கள்.
அம்மா இருந்திருந்தா இப்படி நம்மைத் தனியா விட்டுருப்பாங்களா என்கிற கழிவிரக்கத்தில் சில நேரம் அழுவாள். இப்படி ஒரு எண்ணம் தனக்கு இதுநாள் வரை வந்ததில்லை, அதற்குத் தன் தந்தை இடமளிக்கவில்லை. அப்படிப்பட்டவரை வருத்திவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியில் சில நேரம் அழுவாள். சித்தார்த்தின் நினைவில் சில நேரம் அழுவாள்… பிறக்கப் போகும் குழந்தையின் நினைவில் சில நேரம் அழுவாள். போதாததற்கு உடல் உபாதைகள் வேறு. ஏக்கமும் துக்கமும் அவளைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. வாழவும் பிடிக்காமல் சாகவும் முடியாமல் விதியின் பிடியில் சிக்கி உழன்று கொண்டிருந்தாள்.
“பூர்ணி…” – எங்கோ சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்தக் குரல் கேட்டது. ஒரு நொடி உடல் விரைக்கச் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
‘அ..ப்..பா…’ – பல நாட்களுக்குப் பிறகு மகள் முன் வந்து நின்றார். அவன் முகத்தில் வேதனை அப்பியிருந்தது. ஆளே உடைந்து போயிருந்தார். அவர் பூர்ணிமாவை பார்த்த பார்வையில் கோபம் இல்லாமல் இரக்கம் கசிந்தது. ‘எப்படி! – அவளுக்குப் புரியவில்லை.
“வாடா…” – இரண்டு கைகளையும் விரித்து மகளை அழைத்தார்.
“அ..ப்..பா…” சிட்டாய் பறந்து வந்து தந்தையிடம் தஞ்சம் புகுந்தாள். “அப்பா… ப்பா… ” – அடக்கிவைத்திருந்த துக்கமெல்லாம் வெடித்துக் கொண்டு வெளிப்பட்டது. தேம்பித் தேம்பி அழுதாள்.
“பூர்ணி… பூர்ணி…” கண்ணீருடன் மகளின் தலையைக் கோதினார்.
“தப்புப் பண்ணிட்டேன் ப்பா… பெரிய தப்புப் பண்ணிட்டேன். ரொம்பப் பெரிய தப்பு… ” – கண்ணீருடன் கதறினாள்.
“நீ ஒண்ணும் பண்ணலடா. விடு… அப்பா பார்த்துக்கறேன்” – மகளைத் தேற்ற முயன்றார்.
“என்னை ஒதுக்கிடாதீங்கப்பா… அப்பா… அப்பா…”
“இல்லடா… இல்ல… பூர்ணி… சொன்னாக் கேளு. அப்பா சொல்றேன்ல”
“சாரி ப்பா… சாரி… சாரி… என்னை… என்… என்னைக் கொன்னுடுங்கப்பா… நா வேண்டாம்… நா இருக்கக் கூடாதுப்பா… ப்பா…” – உணர்ச்சி வேகத்தில் அவள் உடல் நடுங்கியது. தொடர்ந்து தேம்பித் தேம்பி அழுததில் சீராக மூச்செடுக்க முடியாமல் தடுமாறினாள். நாவரண்டு, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.
“அழாத பூர்ணி. பூர்ணி… பூ… பூர்ணி… பூ…ர்…ணி…” – கையொரு பக்கம் காலொரு பக்கம் என்று இழுத்துக் கொண்டு சரியும் மகளைக் கண்டு அலறினார் வேல்முருகன்.
******
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பூர்ணிமாவின் அறை…
“நாந்தான் கிளியரா சொல்லியிருந்தேனே சார். பூர்ணிமாவோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப வீக்கா இருக்கு. நல்ல டயட் ரொம்ப அவசியம். ஏன் நீங்க அவங்கள சரியா கவனிக்கல” – குடும்ப மருத்துவர் கண்டிப்புடன் கேட்டார்.
“இல்ல… டயட்டெல்லாம் கரெக்டா தானே!” – வேல்முருகன் திணறினார்.
“இல்ல சார்… அவங்க சரியான டயட் எடுத்துக்கல. சரியாத் தூங்கல… ரொம்ப அனிமிக்கா இருக்காங்க. இதுல மெடிசன்ஸ் எழுதியிருக்கேன். ரெகுலரா கொடுக்கச் சொல்லுங்க. கேர் ஃபுலா பார்த்துக்கங்க. நான் வரேன்” – டாக்டர் கிளம்பிச் சென்றார்.
“அண்ணீ …” – சத்தம் போட்டார்.
வேலைக்காரப் பெண்மணி வந்து நின்றாள். “அண்ணி எங்க?”
“அம்மா கோவிலுக்கு…”
“பூர்ணி சரியாச் சாப்பிட்டாளா இல்லையா? வீட்டுல இருக்கப் பொம்பளைங்கல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” – வேல்முருகன் கடுமையாகக் கோபப்பட்டார். அந்தப் பெண் பதில் பேசவில்லை.
“பூர்ணியோட கண்டிஷன் தெரிஞ்சும் ஏன் அவளைச் சரியாக் கவனிக்கல. அதைவிட உங்களுக்கெல்லாம் இங்க என்ன வேலை?”
“ஏன், உங்க பொண்ணக் கவனிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வேலை எதுவும் இருக்கக் கூடாதா?” – சட்டென்று உள்ளே நுழைந்தாள் சரளா.
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Niveta Mohan says:
poorni conceive ah irukirakthu iva appakku theriyuma theriyuathaaa… ..
good question sarala .. nalla kelunga….
intha iranthu pona raaaji… yaaroda ponnu….. avalukaga thudikkatha manasu poorni kaga thudikuthaa.. yangaiyooo idikuthey……..
avalum paavam thaane… eppidi ellam valichu irukkum….