Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 13

   அத்தியாயம் : 13

ரம்யாவின் விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தன. அதனை பார்த்த பாஸ்கரனுக்கோ கோபம் எல்லை                                  மீறியது.ஆத்திரத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதையே மறந்தான்.

 

ரம்யாவின் இரு தோள்களையும் பற்றி ஆவேசமாக உலுக்கியவன், “எதுக்குடி இப்படி அழுது கறையர, ஏன்டீ எங்க வீட்டுக்கு           வந்த?” இங்கேயே தங்கிவிட என் மனம் துடிக்கிறது. அதற்கான வாய்ப்பு உண்டா சார்னு என்ன  கேட்டியே மறந்துருச்சா?

நேத்து ….நேத்து கூட உன் புருஷன் வாசல்ல நின்னு  கத்துரான்…

சுகுணா  படிக்கிற கதையில வர கதாநாயகி மாதிரி கதாநாயகன் வந்ததும் ஓடிப்போய் கட்டிப்புடிச்சு குலாவாம ஏன்டி என்                   பின்னாடி வந்து ஒளிஞ்சி நின்ன?

 

மதியம் என்னடான்னா? உன் புருஷன் உன்ன தொட்டதும் காப்பாத்துங்கன்னு உன் கண்ணு சொல்லாம சொல்லிச்சே அதுக்கு என்னடி அர்த்தம்……… சொல்லித் தொலையேன்..

 

உன் புருஷன் தானே அவன்? ….உன் பாஷையில் சொல்லனும்னா உன்னை தொட்டுதாலி கட்டின புருஷன்…. அவன் ரூம்க்குள்ள போகுறதுக்கு ஏன்டி மதியை கூட்டிட்டு போன?  …..என்ன நடக்குது  இங்க? காலையில அவன  கூட்டிட்டு நீ போயிடுவ.?  நான்……..நான்……” அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை, அந்த கோபத்தில்  அவன் அதிவேகமாக அவளை உலுக்க, சோர்ந்து விட்டாள் ரம்யா!!!

 

அவளது சோர்வையும் வலிநிறைந்த கண்களையும், அவனையே அதிர்ச்சியாய் பார்ப்பதையும், பார்த்தவன் சட்டென அவளை விடுவித்தான்.

 

நெற்றியில் உள்ளங்கைகளால் ஓங்கி அடித்துக் கொண்டான். எத்தனை பெரிய பாவம் செய்யவிருந்தான்?  கோபத்திலும் ஏமாற்றத்திலும் தன் நிலை மறப்பது எத்தகு மதியீனம். நல்ல வேளை வெளிப்படையாக எதையும் கூறிவிட வில்லை. அவள் மனதிலிருக்கும் பாரத்திற்கு அவளுக்கு நான் பேசியதிலிருந்து எதுவும் விளங்கியிருக்காது என்றுதான் நினைக்கிறேன்… நிச்சயம் அவளுக்கு ஏதோ பிரெச்சனை இருக்கிறது என்பது உறுதி. இல்லையென்றால் திருமணத்தை எங்களிடம் மறைப்பானேன்.

 

படிப்படியாக பாஸ்கரனின்  கோபம், தவிப்பு, ஆவேசம்  எல்லாம் ஒன்றன்  பின்  ஒன்றாக குறைந்தது…  தன்  மனதை  சமநிலைக்கு  கொண்டு  வந்தான்….

 

என்ன இருந்தாலும்  ரம்யா  ரவியுடைய மனைவி  அவளை  இனி  நினைப்பது  பாவம்  எத்தனையோ  பேர்  காதலிக்கிறார்கள் காதலித்தவனை  கைபிடிப்பது  சிலர்  தானே. இனி எதுவும் மாறிவிடப் போவதில்லை. அவரவர் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும் ….இப்படி மனதை தேற்றிக் கொண்டவன் தன் தவறுகளை திருத்திக் கொள்ள உபாயம் தேடினான் ……..உபாயம் கிடைத்தும் விட்டது.உடனே அதனை செயலாற்றும் துடிப்பில் …..ரம்யாவிடம் சென்றவன்…….

 

“என்னை மன்னிச்சிரு ரம்யா? ஏதோ கோபத்துல……தெரியாம ……..ஏதேதோ பேசிட்டேன் …

இப்போ என் தங்கச்சியோட தோழிங்கர அக்கறையில கேக்கறேன் .உனக்கு என்ன பிரச்சனை……..அதாவது ரவிக்கும் உனக்கும் என்ன பிரச்சனை? எதுக்காக ஊரை விட்டு ஓடி வந்த…….எங்ககிட்ட கூட கல்யாணத்த மறைக்கிற அளவுக்கு என்ன நடந்தது?

 

“நீ இப்படி மௌனமாக இருந்தா என்ன அர்த்தம் ……. ஏதாவது சொன்னாத்தானே அதற்கான தீர்வை தேடமுடியும் …..?”

 

“ரம்யா ……ஏதாவது சொல்லும்மா …..நான் இருக்கேன். “என்று ஆதரவாய் அவள் தலையை தொட்டதுதான் தாமதம் தரையில்சரிந்து அமர்ந்து கதறியழுதுவிட்டாள் பாஸ்கரனின் நிலையோ வார்த்தைகளால் வர்ணிக்க முடியாமல் போனது……..

 

தான் காதலிக்கும் பெண் கதறியழுகிறாள்ஆனால் ஆறுதல் கூற முடியாத பாவியாகி விட்டான் ……அவள் இன்னொருவனின் மனைவியாயிற்றே…..தான் என்ன செய்ய வேண்டும் என்பது கூட அவனுக்கு தெரியவில்லை. இதற்கு முன் என்றுமே ஒரு முடிவை எடுக்க அவன் இத்தனை அலைப்பாய்ந்ததில்லை…..

 

அழுது கரைந்தவள் தானாகவே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு எழுந்து நின்றாள்……

 

அவள் கண்களை துடைக்க தன் கைக் குட்டையை கொடுத்தவன். அவள் துடைத்து முடித்ததும்.

 

“இதற்கு என்ன அர்த்தம் ரம்யா? “…!!

 

“உன் மௌனத்துக்கான பொருள் என்னன்னு  எனக்கு சத்தியமா தெரியல ..தயவு செஞ்சு எதாவது வாய் திறந்து பேசு “என்ற கண்டிப்பான பாஸ்கரனின் குரலுக்கு.

 

“என் வாழ்க்கையில எல்லாமே தப்பு தப்பா தான் நடக்குது …….செத்து போயிடலாம் போல தோனுது பாஸ்கர்…”

 

“செத்து போறதா? ஓங்கி ஒன்னு உட்டன்னு வைய்யி அவ்வவளவுதான்…..மனுஷன் உசுரு என்ன அவ்வளவு சல்லிசா போச்சா? உனக்கு என்ன பிரச்சனை கொஞ்சம் விளங்கும் படியா சொல்லு அப்பத்தான் அதுக்கான தீர்வை நாம யோசிக்க முடியும்.”

 

“ம்…ஹீம்”ஒரு பெருமூச்செரித்தவள் நிதானமாக பேசலானாள்.”எங்க அப்பா  சென்னையில பெரிய பிசினஸ்மேன், ஏகப்பட்ட தொழில் …அவர்  தொட்டதெல்லாம் பொன்னாச்சு…….அப்பா, அம்மா நான் ,எங்க பாட்டி நாலு பேருதான்.

 

ரொம்ப சந்தோஷமா இருந்தோம் ……..அப்பா எனக்காக பாத்து ,பாத்து சேத்து வெச்சாரு சந்தோஷமா இருந்த எங்க வாழ்க்கையில ஒரு சூறாவளி வந்துச்சு ……..அம்மாவுக்கு பிளட் கேன்சர்……அதுவும் அட்வாஸ் ஸ்டேஜ்……எத்தனையோ டாக்டர்கிட்டகாட்டினோம் ஆனா பலன் இல்ல…..,அதுமட்டுமில்லாம அம்மாவுக்கு மனதிடம் சுத்தமா இல்ல ….அதனால சீக்கிரமா கடவுள் கிட்ட போயிட்டாங்க…., மரணப்படுக்கையில எங்க அம்மா சொன்னது இப்பவும் நல்லா நினைவிருக்கு.

 

“அம்மாடி ரம்யா? நான் இனி பொழைக்க மாட்டேன், உங்க அப்பாவையும், பாட்டியையும் நீதான் பாத்துக்கனும் ……பொறுப்பா இருக்கனும் விட்டுக் கொடுத்து போகனும் “பேசிக்கிட்டு இருக்கும் போதே அம்……அம்மா…..பேசமுடியாமல் தொண்டையை அடைத்தது.

 

அவளை சமாதானப்படுத்த துடிதுடித்த கைகளை அடக்கி கொண்டான் பாஸ்கரன். அவளே தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு தொடந்தாள்

“அம்மா இறந்த கொஞ்ச நாள்ளயே அப்பாவும் இறந்துட்டாரு…….அவங்க அன்பை பத்தி ஊரே பேசுச்சி …..ஆனா நான் அனாதையா நின்னேன் …….

பத்தாம் வகுப்பு பாஸ் ஆன எனக்கு தொழிலை நடத்த எப்படி தெரியும்? …நானும் பாட்டியும் திண்டாடிய நேரம் தான், என் மாமாவோட ஒன்னுவிட்ட அண்ணனும் அவர் குடும்பமும் எங்க வீட்டுக்கு வந்தாங்க ….எங்களுக்கு உதவியா தொழிலை எடுத்து நடத்தறதாவும் அதற்கான சம்பளத்தை மட்டும் போட்டு கொடுத்தா போதும்னும் சொன்னாங்க, நானும் பாட்டியும் வேறு வழிஇல்லாம சம்மதிச்சோம்.

 

தொழிலை நல்லாத்தான் நடத்தினாங்க நல்ல லாபம் கிடைச்சது …….முதலில் நாணயமாய் இருந்த மாமா பின் மெல்ல மெல்ல மாறிவிட்டார்…. பொய் கணக்கு  கொடுப்பது …..செலவுகளை கூட்டி காண்பிப்பது லாபத்தை குறைத்து காண்பிப்பது இப்படிநிறைய ….

முதலில் நான் கண்டும் காணாமலும் விட்டுட்டேன்.

 

ஆனா ஒரு நாள் பொறுக்க முடியாம கேட்டுட்டேன் அப்போ நான் ……BBAபடித்து விட்டதால் கொஞ்சம் தைரியம் வந்தது.கணக்கு வழக்குககளை பார்த்து கேள்வி எழுப்பினேன்.உடனே மாமாவின் மூளை குறுக்காக யோசிக்க ஆரம்பித்து விட்டது. தன் மகன், ரவி அவன் ஒரு பொம்பள பொறுக்கி குடிகாரன், காட்டு மிராண்டி, …அவனை எனக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்கள் ….,நான் மறுத்தேன். ஆனால் என் பாட்டியை கடத்தி வைத்துக் கொண்டு என்னை மிரட்டி தாலி கட்டி விட்டான் அந்த ராஸ்கல்.எனக்கிருந்த ஒரே பிடிப்பு என் பாட்டி தான் அதனால் வேறு வழியில்லாமல் அவனுக்கு கழுத்தை நீட்டிவிட்டேன்.

 

எப்பொழுதும் என் பாட்டி சொல்லிக்கிட்டே இருப்பாங்க “என் பேத்திக்கு கல்யாணம்னா என் மகளோட தாலியைத் தான் போடனும் ….அவள் எப்படி கடைசி வரைக்கும்சுமங்கலியா வாழ்ந்தாளோ அந்த பாக்கியம் என்பேத்திக்கும் கிடைக்கனும் “னு

 

இது தெரிஞ்ச என் மாமாஎன் அம்மாவோட தாலியே எனக்கு போடவெச்சுட்டாங்க….இதோ இது என் அம்மா கழுத்துல நிலைச்ச தாலி.,…என்று மறுபடியும் தன் தாலியை எடுத்து  காண்பித்தாள்.

 

எனக்குன்னு உறவுகளே இல்லை ……ஒரே ஒரு ஆதரவு என் பாட்டி தான்அவர்களை இழக்க என் மனம் மறுத்தது அதனால் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்தேன்.

 

ஆனால் …….தன்னால் தான் எனக்கு இந்த நிலை என்றுணர்ந்த என் பாட்டி திருமணத்தன்றே தூக்கில் தொங்கிவிட்டார். பிறகு துக்கம் முடியும் வரை அமைதி காத்த ரவியும், என் மாமாவும் காரியம் அன்று பிரச்சனை பன்ன ஆரம்பித்து விட்டார்கள்.

 

காரியத்திற்கு வந்த கார் ஒன்றின் டிக்கியில் ஏறி தப்பித்து இங்கே வந்து விட்டேன்.இது தான் நடந்தது. இதில் என் தவறு என்ன பாஸ்கர்? பணக்காரியாக பிறந்தது குற்றமா? தாய், தந்தையை இழந்தது குற்றமா? தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் அனாதையாய் நிற்கிறேனே அது குற்றமா? சொல்லுங்கள் பாஸ்கர். எது குற்றம்? இப்போ கூட அவன்……..அவன் என் கையை பிடிச்சு……….”மேல கூற முடியாமல் வெடித்து விசும்பி அழுதவளை சில நிமிடம்  வெறித்து பார்த்தவன்…….

 

“போதும் அழுகை இனி நீ அழக்கூடாது “என்ற பாஸ்கரன்  அவளது கண்களை தன் கையாலேயே அழுந்தத்துடைத்தான்.

 

“நான் இருக்கேன் உனக்கு? என்னை நம்பு என்றவனை விழிவிரிய பார்த்தாள் ரம்யா…

 

பின்னால் இரு கை தட்டும் ஓசை கேட்டு இருவரும் திடுக்கிட்டு திரும்பினர் ………அங்கே ரவி ……சிரித்துக் கொண்டிருந்தான் “சபாஷ் …….பேஷ்,பேஷ்,….ரொம்ப நன்னா இருக்கு என் பொண்டாட்டி இன்னொருவன் அணைப்புல ……பாக்க ரெண்டு கண்ணு பத்தலையே…………,




1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vats says:

    OMG!

You cannot copy content of this page