Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 14

அத்தியாயம் : 14

ரவியை பார்த்ததும் ரம்யாவின்  தேகம் நடுங்கத் துவங்கியது. மேலும் பாஸ்கரனிடம் நெருங்கி நின்றுக்கொண்டாள். அதனை உணர்ந்த பாஸ்கரன் ஆறுதலாக அவள் தோள் பற்றினான்

 

“நெனச்சேன்டி  அன்னைக்கு உன்ன பத்தி பேசும் போது ஐயா அப்படியே கொதிச்சி எழுந்தாரே…..அப்பவே தெரியும்டி …..இது இப்படித்தான்னு ……என் நகம் உன் மீது படக்கூட நீ அனுமதிச்சதில்ல ஆனா இங்க இவன கட்டிப்பிடிச்சிட்டு நிக்கர ..,.என்ன கள்ளக்காதலா?”

 

“ஏய்….”  என்று பாஸ்கரனின் முஷ்டி இறுக,

 

“வேண்டாம்”என்பது  போல் கண்ணசைத்தாள் ரம்யா.

 

“என்ன கருமமா வேனும்னாலும் இருந்துட்டு போகட்டும் …..நீ யாரை வேனும்னாலும் காதலிச்சிக்கோ……இல்ல வெச்சிக்கோ அதபத்தி எனக்கு கவலையில்லை…..ஆனா நான் தான் சட்டப்படி உன் புருஷன் அதுல எந்த மாற்றமும் இருக்ககூடாது அப்படி ஏதாவது ஆச்சு நான் மனுஷனா இருக்கமாட்டேன்…….ஜாக்கிரதை, என்று கர்ஜித்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

 

“ச்சே…… என்ன மனுஷன்……..இவன் இவன்கிட்ட இருந்து உன்ன காப்பாத்துறது என் கடமை ரம்யா, முதலில் எனக்கு ஒரு விவரம் வேணும். நீ ரவியை என்றைக்காவது புருஷனா பாத்திருக்கியா?”

 

“சீ…ச்…சீ…ச்., அவனையா?  என் உயிர் உள்ளவரை அதற்கு சாத்தியமில்லை ” அவள் குரலில் உறுதி தெரிந்தது.

 

“அப்படின்னா இந்த தாலி எதற்கு?  வேண்டாம் ரம்யா”

 

சட்டென கண்கள் கலங்க தன் தாலியை இருகப்பற்றிக்கொண்டாள்.

 

“இதுதான் நம் பெண்களின் பலம் பலவீனம் எல்லாம். உனக்கு இது நிச்சயம் பலவீனம் தான் ரம்யா. ஒரு பெண் ஒரு ஆணின் கைகளால் தாலி வாங்குகிறாள் என்றால் அதுஅவளது ஒப்புதலோடுதான் நடக்க வேண்டும் பலவந்தப்படுத்தப்பட்டு கட்டப்பட்ட தாலி வெறும் கயிருதான். அதன் புனிதம் அங்கே அழிந்துவிடுகிறது. நிச்சயமாக சொல்கிறேன், இந்தத் தாலியை புனிதமென சுமந்த உன் அம்மா இன்று இருந்திருந்தால் நிச்சயம் இதனை அறுத்து தூக்கியெறியச்சொல்லியிருப்பார்கள்.

 

உன் கழுத்தில் இந்தப் புனிதத்தாலியை ஏற்றி கண்குளிர பார்க்க ஆசைபட்ட பாட்டி இப்போது இருந்திருந்தால். ‘இந்த நாசக்கார ரவியின் கரம் பட்ட நிமிடமே இந்தத்தாலியின் புனிதம் அழிந்து விட்டது. அதனால் இதனை வீசீஎறி’ என்றுதான் கூறியிருப்பார்கள். நானும் அதையேத்தான் சொல்கிறேன். நன்றாக யோசி. சட்டப்பிரச்சனைகளை தீர்க நானாச்சி. பின் இங்கேயே இந்த ஊரிலேயே உனக்கு ஒரு வேலைக்கும் இருப்பிடத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன். மீண்டும் சொல்கிறேன் நன்றாக யோசி.

 

இப்போது வந்து தூங்கு ….சுகுணா அறையிலேயே படுத்துக்கோ? மற்றததை காலையில பேசிக்கலாம் ……வா “என்று கைத்தாங்கலாய் அழைத்து சென்று சுகுணாவின் அறையில் விட்டு விட்டு தன் அறைக்கு சென்றான் இந்த இரவும் இருவருக்கும் தூங்கா இரவானது …….

 

************************

 

உறக்கம் முற்றிலும் அற்ற நிலையில் கட்டிலில் படுத்திருந்தான் பாஸ்கரன்.

 

‘இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

நாளை காலை ரம்யா ரவியுடன் செல்லத்தயாராகும் பொழுது தடுத்து நிறுத்தி, எல்லோரிடமும் உண்மையை கூறிவிடலாமா?  அப்படியே என் மனதையும்….’  ஆசைகொண்ட மனது ஏதேதோ என்ன, ‘ச்…சு… என்ன இது இப்படி ஒரு சுயநலவாதியாக மாறிவிட்டேன். காதல் எப்படி பட்ட மனிதனையும் சுயநலவாதியாக்கி விடுமோ??

இல்லை இது சரிப்படாது. ஏற்கனவே ரம்யாவின் மனம் ரனமாகியிருக்கிறது. அதற்கு மருந்து போடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு மேலும் ரனமாக்கக் கூடாது.

 

அறை கதவினை யாரோ தட்டும் ஒலி கேட்டு  பதறி எழுந்தான் பாஸ்கரன். கடிகாரத்தை பார்தவனுக்கு அதிகாலை ஐந்து என்று காட்டியது, இந்த நேரத்தில் யார்?

சிந்தித்தவன் உடனே சிந்தனைகளை புறம் தள்ளி கதவினை திறந்தான்.வெளியே மணிவண்ணன் நின்றிருந்தார்.

 

“அ……அப்பா …….என்னப்பா இந்த நேரத்துல…….ஏதும் பிரச்சனையா?” என்று பதறியவனை தடுத்தவர்.

 

“ஒன்றுமில்ல தம்பி உன் கிட்ட கொஞ்சம் பேசனும் அதுதான்……”

 

உ…….உள்ளே ஏதோ குடைந்தாலும் அதனை காட்டி கொள்ளாமல் “உ…….உள்ள வாங்கப்பா “என்று வழிவிட்டவன் அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டான்.

 

அதில் அமர்ந்தவர் எதிரில் இருந்த கட்டிலில் பாஸ்கரனையும்  அமரச்சொன்னார்.

 

சற்று நேரம் அமைதியாக இருந்த மணிவண்ணனை பார்த்த பாஸ்கரன்.

 

“என்னப்பா என்ன பிரச்சனை எதுவானாலும் சொல்லுங்க, நான் இருக்கும் போது நீங்க ஏன் இப்படி கவலைப்பட்டு உட்காரனும்…..?

 

“என் கவலையே உன்னை பத்தி தான் யா ”

 

சில நொடி அவரை உற்று நோக்கியவன் “எ…….என்னை பத்தி என்னப்பா? ” என்று கேட்டவனது குரல் எழவேயில்லை.

 

“நான் இந்த ஊரு நாட்டாமை தம்பி , பரம்பரை பரம்பரையா நாம தான் நாட்டாமை பன்னறோம்…நாட்டாமையா இருக்கறவங்க தராசு மாதிரி நியாமா இருக்கனும். சம்பவங்களை உத்து கவனிக்கனும் …அக்கம் பக்கம் நடக்கறத உத்து கேட்கனும் ………எனக்கப்புறம் உனக்குதான் அந்த குணம் இருக்குன்னு நான் உறுதியா நம்பறேன்யா, ரம்யாவையும், ரவியையும் பத்தி நீ என்ன நினைக்ககற தம்பி “எளிதாக கேட்டு விட்டு தன் முகம்பார்க்கும் தந்தைக்கு என்ன பதில் கூறுவதென்று கூட புரியவில்லை பாஸ்கரனுக்கு, அவனது அமைதியை பொருக்க முடியாமல் அவரே தொடர்ந்தார்.

 

“ரவிக்கும் ரம்யாவுக்கும் ஏதோ சரியில்ல தம்பி. அதான் ரெண்டு நாள் இங்க தங்கும்படியா சொன்னேன். ரம்யா பொண்ணு இந்த ரெண்டுநாளா சிரிப்பையே மறந்துடுச்சி. பாக்க பாவமா இருக்கு…. சுகுணா இங்க இருந்திருந்தா இப்படி விட்டிருப்பாளா? ரம்யாகிட்ட பேசி விஷயத்த தெரிஞ்சிகிட்டு அதை சரிசெய்ய பாடுபடுவாதானே? இப்போ சுகுணா சார்பா நாமதான் ஏதாவது செய்யனும், ரம்யாவை கூப்பிட்டு விசாரிக்கலாமா?” கேட்டவர் ஏதோ தேடும் நோக்கோடு அவனது முக மாறுதல்களை உற்று கவனிக்கலானார்.

 

அவர் எதிர்பார்த்தது போலவே பாஸ்கரனின் முகம் ஒருவினாடி வெளிரியது. ஆனால் உடனே சுதாரித்தவன்

 

“வேண்…..வேண்டாம்பா ….”

 

“ஏன்  பா? ”

 

“அது… அது … ” உண்மையை கூற அவன் தினறினான்.

 

“தம்பி…..” என்றவர் அவன் தோள்பற்றி

“நான் சொல்ப்போரத தெளிவா கேட்டுக்கோ, இந்த ஊருக்கு நல்லது கெட்டது பாக்குற பொருப்புல நாம இருக்கோம். கிட்டத்தட்ட ராஜா மாதிரி தான். நம்ம சொந்த வாழ்க்கையை விட மக்கள் நலன் தான் நமக்கு பெருசா தெரியனும். நம்ம சொந்த விருப்பு வெறுப்புக்காக நாம எடுக்கற முடிவு மக்கள் மனசுலேருந்து நாம எறங்க காரணமாயிட கூடாது…”

 

“அப்….பா…. நீங்க… என்ன சொல்றீங்க?  புரியல” புரிந்தும் புரியாமலும் குழம்பினான் பாஸ்கரன்.

 

“நான் உன் அப்பா பாஸ்கரா… உன் வயதை கடந்து தான் நானும் வந்திருக்கேன் உன் நடவடிக்கைகளை கொஞ்ச நாளா கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன் உன் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு எனக்கு புரியுது…ஆனா… நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. நம்ம ஊரு மக்கள் நம்மள கைகாட்டி பேசும்படியா எதுவும் நடந்துடக்கூடாதேன்னுதான் எனக்கு பதறுது. அதுமட்டுமில்லாம, எனக்கு அடுத்து ஊர் பொறுப்பை ஏத்துக்க போறவன் நீ, அதனால தான் சொல்லறேன் பாத்து சூதனமா நடந்துக்கய்யா” என்றவர் பாஸ்கரனின் தோளை இரண்டுமுறை தட்டிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றார்.

 

நெற்றியை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான் பாஸ்கரன்.




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shamika Nazruk says:

    மிக அருமையான, யதார்த்தமான பதிவு


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Ennaya sollavararu appa nalla kolappittu poraru mmm pappom enna natakkuthunu

You cannot copy content of this page