முகங்கள்-3
2662
7
முகங்கள் – 3
மருத்துவமனையின் ஐசியூ கதவினை தள்ளித்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் ருத்ரபிரதாப். அவனை பதட்டத்துடன் எதிர்கொண்டார் மருத்துவர் ஷர்மா.
“தேங்க் காட் மிஸ்டர் ருத்ரபிரதாப் நீங்க வந்துட்டீங்க. நைட் பேஷன்டிற்கு மயக்கம் தெளிஞ்சது. அப்போ உங்களை கொலைகாரன்னும், போலீசில் பிடிச்சுகொடுக்கனும்னும், ஒரே ரகளை, வேறு வழியில்லாமல் ஊசி போட்டு தூங்க வச்சேன் இல்லைன்னா பெரிய சிக்கலாகிப் போயிருக்கும்”
“தேங்க்யூ டாக்டர். இப்போ பேஷன்டின் நிலை? ” – எந்த உணர்வுமில்லாமல் கேட்டான் ருத்ரபிரதாப்
“பயங்கர அதிர்ச்சியில் இருக்காங்க, இன்னமும் முழு நினைவு திரும்பலை, கருவிழி அசைந்தது, உடனே உங்களுக்கு தெரியப் படுத்தினேன், யாரும் அவங்களை பார்ப்பது சரியில்லை. குறிப்பா நீங்க மிஸ்டர் ருத்ரபிரதாப் ” முகத்தில் சிறு பதட்டத்துடன் ஆனால் ருத்ரனை எச்சரிக்கும் விதமாக பேசினார்
“ஐ நோ இட். பட் நோ அதர் வே. ஐ வில் டேக்கேர் ” என்றான் அலட்சியமாக
“சொல்ல வேண்டியது என் கடமை பிறகு உங்கள் விருப்பம் . சீ யூ, ஹென்டுல் வித் கேர்” என்றார் குறிப்புடன்
“தேங்க்யூ டாக்டர்” என்றவன் டாக்டர் ஷர்மா வெளியேறியதை உறுதி செய்து கொண்டு அந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த பெட்டின் அருகே சென்றான்
கட்டிலில் படுத்திருந்தவளை உற்று பார்த்துக்கொண்டு அருகில் நின்றான்
அவளது கைகள் அசைந்தன, கருவிழிகள் அசைந்தன, கால் விரல்கள் அசைந்தன. வேகமாக மூச்செடுக்க முயன்றதால் நெஞ்சுக்கூடு விரிந்து சுருங்கும் அசைவிருந்தது. டாக்டர் ஷர்மாவின் எச்சரிக்கை நினைவுவர. அருகில் இருந்த டேபிளில் டிரெஸ்சிங் செய்வதற்காக வைத்திருந்த வெள்ளை பேன்டேஜை எடுத்து கத்தரித்து அவளது இதழ்கள் இரண்டையும் சேர்த்து ஒட்டியபின் அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்து அவள் கண்விழிக்க காத்திருந்தான்.
ஆனால் நேரத்தை வீணாக்குவது என்பது ருத்ரபிரதாப்பின் அகராதியில் இருந்ததில்லை.
உடனே செல் பேசியை எடுத்தான் “டாக்டர் முகுந்தன் போஸ்ட்மார்ட்டம் முடிந்ததா? ஏதும் பிரச்சனையில்லையே, ”
“நத்திங் ருத்ரன் “என்றது கரகரப்பான குரல்
“குட். அப்போ பாடியை பிரகாஷிடம் ஒப்படைத்து விடுங்கள். உடன் ஒரு காப்பி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்சும், மெடிக்கல் ஹிஸ்டரியையும் கொடுங்கள், பிறகு அதன் இன்னொரு காப்பியை ஹாஸ்பிடல் சார்பாக பிரஸ்ஸுக்கு அனுப்பிடுங்க, மூன்றாவது காப்பி இன்ஸ்பெக்டர் கிருபாகரனுக்கு.”
“ஓகே, நான் பார்த்துக்கிறேன் ”
“ஓகே, குட் தேங்க்யூ முகுந்தன் ”
தொடர்பை துண்டித்து விட்டு கட்டிலை பார்த்தான். இன்னமும் அவளுக்கு முழுநினைவு திரும்பவில்லை.
செல்லில் பிரகாஷை தொடர்பு கொண்டான்.
“பிரகாஷ், உள்ளே வா?” கட்டளையை பிறப்பித்து விட்டு காத்திருந்தான்
உள்ளே வந்த பிரகாஷிடம், “டாக்டர் முகுந்தனோட பேசிட்டேன் பாடியை சந்தனா வீட்டில் ஒப்படைச்சிடு, அப்படியே அந்த முப்பது லட்ச ரூபாய்க்கான செக்கை சந்தனாவுடைய சித்தி கையில கொடுத்துடு. மெடிக்கல் ஹிஸ்டரி போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ஸ் சேர்ந்த ஃபைலையும் அவங்ககிட்ட கொடுத்துடு, மற்றது பிளான் படியே செய்யலாம் ” என்று பிரகாஷ் செய்யவேண்டியதை அடுக்கிக்கொண்டே போக, அவனை இடைவெட்டிய பிரகாஷ்
“ரிப்போர்ட்சா!!!! ” என்று இழுக்க
அவனது தோள்களில் சினேகமாய் கை போட்டபடி “எல்லாம் சரியாகத்தான் இருக்கும் கவலை வேண்டாம் ” என்றான் கூலாக
“ஓ….. அப்போ சரி. அவங்களுக்கு நினைவு திரும்பிவிட்டதா? ” சிறு பயத்துடன் கேட்டவனுக்கு
எந்த உணர்வையும் வெளிப்படுத்தாத ஒரு “இல்லை” யை சொல்லி வைத்தான்
“பார்த்து ருத்ரா” – எச்சரித்தான் பிரகாஷ்
“நான் பார்த்துக்கிறேன், நீ போ” – என்றான் ஒருவித திமிருடன்
அவனை அனுப்பிவிட்டு மீண்டும் ஸ்டூலில் அமர்ந்து கொண்டான் ருத்ரபிரதாப்
லேசான முணங்கல் சத்தம் கேட்டு கட்டிலருகே எழுந்து நின்றான்
அவன் நிற்கவும் சிரமங்களுடன் அவள் கண்விழிக்கவும் சரியாக இருந்தது.
விழி விரித்தவளின் பார்வையில் விழுந்தவன் ருத்ரபிரதாப் தான். உடனே அவளது வெளிறிய முகம் மேலும் வெளிறியது.
“ம்….ம்…ம்…” பேச முயற்சித்தவளால் முடியவில்லை, அவளது உதடுகள் தான் ஒட்டப்பட்டிருக்கிறதே, அவளால் பேச முடியாவிட்டாலும் அவளது கண்களில் மரண பயம் தெரிந்தது
படுக்கையிலிருந்து திமறி எழ முயன்றாள். முடியவில்லை காரணம் அவளது தோள்களை அழுந்தப் பற்றியிருந்தான் ருத்ரன்
திமிரியவள் ஒரு கட்டத்திற்கு மேல் ஓய்ந்து துவண்டு விழ. இப்போது தப்பிக்கமுடியாது என்று அவளுக்கு புரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தவன், மெல்ல பேன்டேஜை அகற்றினான்.
உடனே அவளுள் மிச்சமிருந்த பலத்தை திரட்டி பெருங்குரலெடுக்க அவள் எத்தனிக்கையில்.
தன் வலிய கரத்தினால் அவளது வாயை மூடினான் ருத்ரன்
அவளது துடிப்பை ரசித்தவனாக, அவளது முகத்திற்கு நேரே குனிந்தவன், “போதும் … நீ கத்தினாலும் கதறினாலும் உன்னை காப்பாற்ற யாரும் வரமாட்டாங்க நந்தினி.” அவளது கண்கள் பயத்தில் விரிய அவன் தொடர்ந்தான். “உன் வாயிலிருக்கும் என் கையால் இரண்டு கைவிரல் தூரம் மேலே சேர்த்து மூக்கையும் பிடித்தால், இரவு நீ கூறிய கொலை உண்மையிலேயே நடந்து விடும் ஜாக்கிரதை” உருட்டிய விழிகளுடன் மிரட்டிவிட்டு அவளை விடுவித்தான்.
தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மருண்ட விழிகளுடன் அவனை வெறித்தாள். அவனும் சாவதானமாக ஸ்டூலில் அமர்ந்துகொண்டு அவளுக்கான நேரத்தை கொடுத்தான். மிகுந்த சிரமத்துடன் எச்சிலை விழுங்கிய படி மெல்ல இதழ் விரித்தவள்
“நா…. நா… நான் நந்தினி இல்லை ச…. ச… சந்தனா…” என்றவளின் பார்வையில் அச்சம் நிறைந்திருந்தது.
அவளை பார்த்துக்கொண்டிருந்த ருத்ரபிரதாப்பின் கண்களில் நயவஞ்சகத்தனம் தெரிந்தது.
முகங்களின் தேடல் தொடரும்…
7 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Ruthran is very dangerous 😢 but t really👌
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
கொடூரத்தின் மறு பெயர் ருத்ரன்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Arumai ruthravukku nandhini entea peyaril sathana ventuma athan nandhini konnuttu sathanava antha itathula vachurukkana pavam sathana ava oththukka ventama avan istathukku pannalama mukangal thetal arumai
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
SUPER UD SIS
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Omg, omg 😲😲😲
இப்போதான் மூன்று அத்தியாயங்களையும் படித்தேன், அருமை அருமை..👏👏
ருத்ரன், பேரை உச்சரித்தாலே சும்மா அதிருது… 😍😍😍
நல்லா தானே போய்ட்டு இருக்குனு நினைச்சேன், ஆனா வச்சிங்க பாருங்க டுவிஸ்ட் சூப்பர்…😲😲😲
ஆமா எதுக்கு நந்தினி இறந்தாள் கொன்றது ருத்ரன் ஆஹ்ஹ்..😲😲😲
எதுக்கு இறந்தது சந்தனான்னு சொல்லி நம்ப வைக்கிறான்..🤔🤔
இப்போ சந்தனாவை எதுக்கு நந்தினினு சொல்றான்.. 🤔🤔
ஏதோ மர்மம் இருக்கு,
எனக்கு படிக்க இன்டெரெஸ்டிங் ஆஹ்ஹ் இருக்கு 😘😘
சூப்பர் சூப்பர்.. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் நான்😍😍
தீபஷ்வினி😊😊
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
நன்றி தோழி, உங்களின் இந்த பெரிய அற்புதமான கமன்ட் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. நன்றி, தொடர்ந்து படிங்கள்.