கனல்விழி காதல் – 94
11553
19
அத்தியாயம் – 94
“தேவ்தர்ஷன்” – தேவ்ராஜ் தன் மகனுக்கு சூட்டிய பெயர். பிரம்மாண்டமாக கொண்டாட நினைத்திருந்த பெயர்சூட்டும் விழாவை மிக எளிமையாக குடும்பத்திற்குள்ளேயே முடித்துக் கொண்டான்.
மதுரா பாலி ஹில் வர மறுத்துவிட்டதால் நரேந்திரமூர்த்தியின் வீட்டிலேயே விழாவை ஏற்பாடு செய்தான். அது பாரதிக்கு தெரிந்த போது அவள் வருத்தப்பட்டாள். அவளை பொறுத்தவரை திலீப் இருக்கும் வீட்டில் அடி எடுத்து வைப்பது என்பது இயலாத காரியம். அப்படியானால் அவளை பற்றி கவலையேதும் இல்லாமல் விழாவை ஏற்பாடு செய்கிறார்களா! – மனம் புழுங்கியது.
தன்னுடைய வருத்தத்தை தாயிடமும் சகோதரியிடமும் தெரியப்படுத்தினாள். இருவருக்குமே அவளுடைய கஷ்டம் முழுமையாக புரியவில்லை. அவளைதான் சமாதானம் செய்தார்களே ஒழிய விழாவிற்கு மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றவில்லை.
மதுரா இங்கு வர விரும்பவில்லை என்றால் ஏதாவது ஒரு பொது இடத்தில்… ஹோட்டலில் ஏற்படு செய்யலாமே! இவள் எப்படி அந்த வீட்டு படியேறுவாள் என்று யோசிக்க மாட்டார்களா! – அவள் மனம் வெதும்பியது.
தாயும் சகோதரியும் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் விழாவில் கலந்து கொண்டவள், நெருப்பு மேல் நிற்பது போல் சற்று நேரம் இருந்துவிட்டு உடனே கிளம்பிவிட்டாள். மகளை வால் பிடித்துக் கொண்டு ஓடவும் முடியாமல், பேரனின் விழாவில் மகிழ்ச்சியோடு பங்கெடுக்கவும் முடியாமல் தவித்துப் போன இராஜேஸ்வரி, மனதை கட்டுப்படுத்திக் கொண்டு உணவுவேளை வரை தாமதித்தாள்.
மொத்த குடும்பமும் அங்கு சந்தோஷமாக இருக்கும் போது தன்னால் அவர்களுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை… அவர்களும் தன்னுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்பதில் பாரதியின் மனம் வேதனைப்பட்டது. வீட்டில் வந்து தனியாக அமர்ந்திருக்க பிடிக்கவில்லை என்பதால் மோனிகாவைத் தேடித் சென்றாள்.
மது போதைக்கு அடிமையானவன், சந்தோஷம் துக்கம் அனைத்திற்கும் அதையே தேடுவான் என்பார்களே… அது போல பாரதியும் தன்னுடைய சுகதுக்கங்களை பகிர்ந்துக்கொள்ள மோனிகாவைத்தான் நாடினாள். அவள்தான் தன்னை புரிந்துகொள்கிறாள் என்று எண்ணினாள். அதோடு தன்னனுடைய விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காத குடும்பத்திற்கு தான் ஏன் மதிப்பளிக்க வேண்டும் என்கிற வீம்பும் அவளை மோனிகாவின் வீட்டிற்கு துரத்தியது.
மகள் புறப்பட்டு சென்றதும் கிடைகொடுக்காமல், அவசர அவசரமாக உணவை முடித்துக் கொண்டு இன்னொரு முறை பேரனை தூக்கிக் கொஞ்சிவிட்டு வீட்டிற்கு ஓடிவந்த இராஜேஸ்வரி, அங்கே மகளை காணாமல் திகைத்தாள். உடனே அலைபேசியில் அழைத்து விபரம் கேட்டாள். தோழிகளோடு வெளியே வந்திருப்பதாக சமாளித்தாள் பாரதி. அதை அப்படியே நம்பி மகளின் வரவுக்காகக் காத்திருந்தாள் தாய்.
**********************
அன்று குட்டி தேவ் மிகவும் அழகாக இருந்தான். விதவிதமான ஆடை உடுத்தி புகைப்படம் எடுத்த போது, அழகழகான ரியாக்ஷன்ஸ் வெளிப்பட்டது அவனிடமிருந்து.
மனைவி தன் குழந்தைக்கு உடை மாற்றும் அழகு… உணவளிக்கும் அழகு… அதை அவன் துப்பித்துப்பி சேட்டை செய்யும் அழகு என்று அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தவனுக்கு அவர்களைவிட்டு பிரியவே மனமில்லை. கூண்டுக்குள் அடைபட்டது போல் அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டில், நாள் முழுவதும் அடைபட்டுக் கிடப்பது அவனுக்கு மிகவும் சிரமமான காரியம்தான். ஆனால் அந்த சிரமமேதும் இப்போது தெரியவில்லை. மனைவியோடும் குழந்தையோடும் கழிக்கும் நேரம் சொர்க்கத்தில் கழிவது போலிருந்தது.
வெகு நேரமாகியும் புறப்பட மனமில்லை அவனுக்கு. அங்கேயே தங்கிவிடலாம் என்கிற எண்ணம் கூட வந்தது. மதுரா ஒரு வார்த்தை சொல்லிவிடமாட்டாளா என்று எதிர்பார்த்து ஏங்கினான். ஆனால் அவளோ வாய் திறக்காத பதுமையாய் நடமாடிக் கொண்டிருந்தாள்.
“எனக்கு கிளம்பவே மனசு இல்ல… இவனை விட்டுட்டு போகவே முடியல” என்றான் கட்டுப்பாட்டை மீறி.
அதன் பிறகாவது ‘இன்னிக்கு நைட் இங்கேயே தங்கிடுங்க’ என்கிற வார்த்தை அவள் வாயிலிருந்து வெளிப்படுமா என்று அவள் முகத்தையே அடிக்கடி பார்த்தான். அவனுடைய எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக ஒன்றை சொன்னாள் மதுரா.
“வேணுன்னா பையனை இன்னைக்கு நைட் உங்க கூட வச்சிருந்துட்டு நாளைக்கு காலையில கொண்டு வந்து கொடுங்க. தூங்கிட்டான்னா அழ மாட்டான். இடையில ஒரு தரம் எழுந்து பால் ஆத்தி கொடுத்தா போதும்” என்று அதி தீவிரமாக அவள் சொல்லிக் கொண்டிருக்க, நறநறவென்று பல்லை கடித்தான் தேவ்ராஜ்.
அவனுடைய முகமாற்றத்தை கவனித்துவிட்டு, “என்ன?” என்றாள்.
“உன்னோட அறிவை எப்படி பாராட்டறதுன்னு பார்க்கறேன்” – எரிச்சலுடன் கடுகடுத்தான்.
“இல்ல நா நிஜமாதான்…” – “இனஃப்… இனஃப் யுவர் நான்சென்ஸ் ஓகே… கிளம்பறேன்… நீ மட்டும் அவனோட ச…ந்…தோ…ஷமா இரு…” – கடுப்புடன் கூறிவிட்டு எழுந்து விறுவிறுவென்று வெளியே நடந்தான்.
‘ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை… ஸ்டே பண்ணுங்கன்னு சொன்னா முத்து உதிர்ந்துடுமா! நா என்ன அவளை கடுச்சு சாப்டுடவா போறேன்! ஹும்ம்ம்’ – படபடவென்று மனம் பொறுமை ஏக்க பெருமூச்சு வெளிப்பட்டது அவனிடமிருந்து.
அவனுடைய மனநிலை மதுராவிற்கு நன்றாகவே புரிந்தது. அதனால்தானோ என்னவோ இந்த முறை அவனுடைய கோபம் அவள் முகத்தில் புன்னகையை வரவழைத்தது. அன்று இரவு முதல் முறையாக அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
சாதாரண ‘குட் நைட்’ மெசேஜ் தான். ஆனால் அது அவன் மனதில் எத்தனை பெரிய சந்தோஷத்தை கொண்டு வந்தது என்பதை அவள் அரியமாட்டாள்.
வீட்டிற்கு வந்ததும் வழக்கம் போல ரெப்ரெஷ் செய்துவிட்டு குளியலறையிலிருந்து வெளியே வந்தவன், சாதாரணமாக அலைபேசியை எடுத்து தவறவிட்ட அழைப்புகள் குறுஞ்சேதிகள் ஏதேனும் உள்ளனவா என்று சோதித்தான். அப்போது மனைவி அனுப்பிய மெசேஜை பார்த்துவிட்டு முகம் மலர்ந்தான். அவள் மீதிருந்த பிணைக்கெல்லாம் சூரியனைக் கண்ட பனித்துளி போல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்ட, ஆனந்தத்துடன் அதை மீண்டும் மீண்டும் படித்தான்.
பிறகு “குட் நைட் மை லவ்” என்று அவளுக்கு பதில் அனுப்பிவிட்டு, அன்றைக்கு எடுத்த புகைப்படங்களை பார்க்காத துவங்கியவன், கண் அயர்ந்து போகும் வரை அவற்றை ரசித்துவிட்டு படுக்கையில் சாய்ந்தான்.
*****************
மோனிகாவை பார்க்க சென்ற பாரதிக்கு அன்று ஆறுதல் கிடைக்கவில்லை. மாறாக அவளுடைய மனவருத்தம் இன்னும் அதிகரிக்கத்தான் செய்தது. காரணம் எவ்வளவு சிக்கலான உறவுக்குள் தான் தலையை கொடுத்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது.
வழக்கம் போல பாரதியை பார்த்ததும் அவளை ஆரத்தழுவி நடுவீட்டில் அமரவைத்து அவளுக்கு பிடித்த பணத்தை தன் கையாலேயே தயார் செய்து கொடுத்துவிட்டு, “என்ன ஒரு மாதிரி இருக்க?” என்றாள் மோனிகா.
வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவித்தாள் இளையவள். அதை அருகில் அமர்ந்துக் கேட்டுக் கொண்டிருந்த மோனிகாவின் தம்பி பொங்கினான்.
“இது என்ன அநியாயமா இருக்கு… உனக்கு பிடிக்கலைன்னா விட்டுட்டு போக வேண்டியதுதானே? எதுக்கு கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போகணும்?” என்றான்.
“உன்ன வேண்டான்னு சொல்லி ஒதுக்கின வீட்டுக்கு உன்ன வலுக்கட்டாயமா கூட்டிட்டு போயி அவமானப்படுத்துறதுல அவங்களுக்கு என்ன அப்படி சந்தோஷம்” என்று சீறினான்.
பாரதி பதில் ஏதும் சொல்லவில்லை. அவள் மனத்திலும் அதே கோபம் இருந்ததால் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால் அவன் அடுத்து பேசிய வார்த்தை அவள் உயிரை பிடுங்கி வெளியே போட்டது.
“உங்க அண்ணன்தான் முரட்டு முட்டாள்… உங்க அம்மாவுக்காவது அறிவு இருக்க வேண்டாம்! அவங்க உனக்குத்தானே சப்போர்ட் பண்ணியிருக்கணும்” என்றான் முகத்தை சுளித்துக் கொண்டு.
வெடுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தாள் பாரதி. ‘யாரை பார்த்து யார் என்ன பேசுவது!’ – நுனிமூக்கு சிவந்து கோபத்தில் முகமே மாறிவிட்டது அவளுக்கு.
‘கம்பீரத்தின் மறு உருவான நம் அண்ணனை இவன் முரடன்… முட்டாள் என்று அழைப்பதா!’ – கடும் கோபத்திற்கு ஆளானவள், அடுத்து அவன், தன் அன்னையை… சுயமரியாதையின் திருவுருவை… சுயமாக தனித்து நின்று மூன்று பிள்ளைகளை சிறப்பாக வளர்த்த பெண் புலியை, அறிவற்றவள் என்று அழைத்ததில் கொதித்துப் போனாள்.
அவளுடைய பார்வை மோனிகாவின் பக்கம் திரும்பியது. அவள் முகேஷை கண்டிப்பாள் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவளோ வாயையே திறக்காமல் தம்பியின் பேச்சை அங்கீகரிப்பது போல் அமர்ந்திருந்தாள்.
என்னதான் மோனிகா தன்னிடம் வழித்து குழைந்து பேசினாலும்… தான் அவளிடம் இழைந்து உருகி ஓட்டினாலும், இந்த சிக்கலான உறவை நீடிக்க முடியாது என்பதை, அவளுடைய பொட்டில் அறைந்து சுட்டிக்காட்டியது அந்த ஒற்றை சம்பவம்.
என்னதான் வெறுப்பும் கோபமும் இருந்தாலும், தன் அண்ணன் மீது தனக்கு இருக்கும் தனி மதிப்பையும், அவனை இகழ்ந்து யாரேனும் ஒரு வார்த்தை பேசினாலும் அதை தன் காது கொண்டு கேட்க முடியாது என்கிற உண்மையையும் அன்று தெள்ளத்தெளிவாக அறிந்துக் கொண்டாள்.
“ஒரு சின்ன பொண்ணோட மனசு கஷ்டப்படுமேங்கற அக்கறை அந்த வீட்ல யாருக்காவது ஒருத்தருக்கு ஒருத்தருக்காவது இருந்ததா பாரு! என்ன குடும்பம் அது!” – முகேஷின் அக்கறை(!) அதீதமாக அதிகரித்த போது தாங்கமுடியாமல் சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தாள் பாரதி.
“என்ன ஆச்சு பாரதி? ஏன் எழுந்துட்ட? ஏதாவது வேணுமா?” – பதறினாள் மோனிகா.
“இல்ல… ஒண்ணும் வேண்டாம்… எனக்கு… நா போகணும்…”
“ஏண்டா? என்ன திடீர்ன்னு கிளம்பற…! இரு… சாப்பிட்டுட்டு போகலாம். அங்கதான் ஒண்ணும் சாப்பிடாம வந்துட்டியே!” – அக்கறை காட்டினாள். சற்று நேரத்திற்கு முன் இருந்த பாரதியாக இருந்திருந்தால் அவளுடைய அன்பில் உருகியிருப்பாள். ஆனால் இப்போது எதிர்மறையாகத்தான் உணர்ந்தாள்.
“வேண்டாம்… பசிக்கல… கிளம்பறேன்” – அங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மீது நிற்பது போல் தகித்தது. அவர்களிடமிருந்து தன்னை பிடிங்கி கொண்டு ஓடுவது போல் அங்கிருந்து வெளியேறி ஓடினாள்.
யாருமே இல்லை என்று இவளிடம் ஓடிவந்தாள் இவளும் நெருப்புக் கணையைக் கட்டிக் கொண்டு அணைக்கிறாள். என்ன செய்வாள் அந்த சிறு பெண். கனத்த மனதோடு வீட்டுக்குச் சென்றாள்.
கலையிழந்த முகத்தோடு வீட்டிற்குள் நுழையும் மகளை ஆதுரத்துடன் பார்த்த இராஜேஸ்வரி, “எங்கடா போயிட்ட… வா வந்து சாப்பிடு… உங்கக்காக… உனக்கு பிடிச்சதை சமைக்க சொல்லியிருக்கேன். வா…” என்று மகளின் கையை பிடித்தாள்.
உடனே உடைந்து போய் தாயின் தோளில் சாய்ந்தாள் மகள். தோளில் உணர்ந்த வெதுவெதுப்பான ஈரம் மகள் அழுகிறாள் என்பதை உணர்த்த அவளை அணைத்துப் பிடித்துக் கொண்ட தாய், “அழாத கண்ணா… உனக்கு என்ன குறைச்சல். நீ ஏன் பழசையே நினச்சு மனச குழப்பிக்கிற. நீ மட்டும் ‘ம்ம்ம்’-ன்னு ஒரு வார்த்தை சொல்லு… தேவ் உனக்காக எந்த நாட்டு இளவரசனை வேணுன்னாலும் பிடிச்சு கொண்டு வந்துடுவான். இந்த திலீப் தான் பெரிய ஆளா…!” என்று ஆறுதல் கூறினாள். திலீப்பின் காரணமாகத்தான் மகள் அழுகிறாள் என்பது அவளுடைய ஊகமாக இருந்தது.
ஓரிரு நிமிடங்களில் தன்னை தேற்றிக் கொண்ட பாரதி, “சாரி ம்மா… இனி அழ மாட்டேன். என்ன சமைக்க சொல்லியிருக்கீங்க… ரொம்ப பசிக்குது” என்றாள் சின்ன புன்னகையுடன்.
19 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Uma Sai says:
Superb
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jothi jk says:
Intha novel 2days b4 than fb LA pathen… Sema v2ula work complete pannala ana 94th epi varaikkum mothama one dayla mudichiten…. Super story… Neraya epis padikkum pothu throat LA our azhutham azhanum pola our feel devoda love tolerate pannikka mudila ipdiyum love panna mudiyuma nu thona vaikkuthu… Madhu semma…. Kutti dev ivanga life LA yenna change konduvararunu paka eager ah wait pannitruken…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
Devin asai madhuvirkku kondattam. Barathi unmaiyaana anbu engennu terinthathaa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumithra Ramalingam says:
Oru vazhiya all episode yum padichutten. Avan kobama irkkum podu kooda irunthava ippo romba thavikka vidurale
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rajan Yoges says:
At last… Finished… 👍👍👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dhivya Bharathi says:
Ohh ohh sema episode akkka.. i really luv it
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kani Ramesh says:
Super madhu pavam dev avan evlo yenguran avanoda poidu pls…Bharathi oru vazhiya monica n ava thambi pathi therinjikita so ini ava life nalla agidum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Udaya Suman says:
Super…..Bharathi manasu maridum fullah seekiram dhev also sema
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
selvipandiyan pandiyan says:
போதும் மது,அவனை கொஞ்சம் விட்டு பிடி!பாரதியின் உணர்வை யாரும் புரிஞ்சுக்கல!
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rexi Anto says:
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
குழந்தையின் வருகை நல்ல மாற்றத்தை விதைத்திருக்கின்றது தேவ்விற்கு,தேவ் வீட்டு கடைக்கட்டிக்கு இப்போதுதான் ஞானம் கிடைத்திருக்கின்றது,பார்ப்போம் இப்படியேதான் பாரதி இருப்பாரா அல்லது பழைய குருடி கதவை திறவடி கதைதானா என்று.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
yeppa just missaaaaaa barathiiiiii
super ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jansi r says:
இப்போவாவது பாரதி புரிந்துக் கொண்டாளே
அழகான அத்தியாயம்
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
பேருக்கு ஏற்றாற்போல் அறிவு வந்துடுச்சு போல பாரதிக்கு…மகிழ்ச்சி.
தேவ் உன் பொண்டாட்டி …ரெம்ப அறிவாளிடா….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Super devdarsan azhaga peyar mathuma pavam dev ippati panniteyama ippa un kalam natatthu…natatthu.. bhara thi thirunthi varamathiri theriyuthu ava valkkaikku athan nallathu iththanaala kaanalneer sonthosththula iruntha imel unmai purinthukkolva👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
வரலாற்றில் முதல் முறையாக தேவோட கோபமும் அழகா இருக்கு….ஹா ஹா….டேய் குட்டி கண்ணா உன்னோட அப்பாவை எப்படி எல்லாம் மாத்தி இருக்க….
அப்பாடா பாரதிக்கும் ஒரு வழியா மூலை வேலை செய்ய ஆரம்பிச்சு இருக்கு…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Vatsala Mohandass says:
Super
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
First
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Ada da devai ippadi yeamathitalea madhura…… pavam dev…… evlo aasaiya thangarenenu soldran…. antha sms vizhayam kuda en ithazhil punnagai pooka vaithathu…. devdarshan…….devin magan…… wow….. kuzhanthai nichayam ammavukum appavukum irukura idaivealayai kuraipan