முகங்கள்-5
2455
10
முகங்கள் – 5
“உனக்கு என்ன பிரகாஷ், ஹாட்டா? கூலா? ” தன் வீட்டு பாரில் அமர்ந்த படி கேள்வி எழுப்பிய ருத்ரபிரதாப்பை குழப்பத்துடன் பார்த்தான் பிரகாஷ்.
அவனது குழப்பத்தை குறித்து கொண்ட ருத்ரபிரதாப் “ஏதோ கன்ஃபியுஸ்டா இருக்க மாதிரி தெரியுது. எனிதிங் சீரியஸ்?” விஸ்கியுடன் சோடாவை கலந்து அதில் இரண்டு ஐஸ் கியூப்ஸை போட்டான்.
பிரகாஷின் விழிகள் அகல விரிந்தன. “எப்படி ருத்ரா? எப்படி இவ்வளவு கூலா இருக்க! சந்தனாவை சந்திரிகா மீட் பண்ண போறாங்க. சந்தனா ஏதாவது உளறிட்டா…” பதட்டத்தோடு பேசியவனை குறுக்கிட்டு
“ஒரு சின்ன திருத்தம். சந்திரிகா மீட் பண்ண போறது சந்தனாவை இல்ல… நந்தினியை. அதனால தேவையில்லாம கவலைப் படறதை விட்டுட்டு, ட்ரிங்ஸை என்ஜாய் பண்ணு” – கையிலிருந்த விலையுயர்ந்த கண்ணாடி கோப்பையை வட்டவடிவில் சுழற்றி அதிலிருந்த திரவத்தை ஸ்டைலாக பருகினான் ருத்ரபிரதாப்
“நீ கொஞ்சம் அலட்சியமா இருக்கியோன்னு தோணுது” கையிலிருந்த கோப்பையை பார்த்தபடி மனதில் தோன்றியதை சொல்லிவிட்டான் பிரகாஷ்
அவனது வரண்டமுகத்தை உற்று பார்த்து “ம்ஹும்? அப்படியா தோணுது?” என்றவனின் குரலில் சிறு கேலியும் அதீத நம்பிக்கையும் இருந்தது.
பிரகாஷ் புரிந்துக் கொண்டான். ‘ஏதோ ஒரு திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறான். அதுவும், இருபத்தி நான்கு மணிநேரம் கூடவே இருக்கும் தனக்கு கூட தெரியாமல்’ – பெருமை பொங்க நண்பனைப் பார்த்தான்.
ஆனால் சந்திரிகாவின் கவலை அகன்றதும் உடனே வேறு ஒன்று நினைவில் வந்தது
“சந்திரிகாவை விடு, கிருபாகரன்? அவரை சமாளிக்கிறது கஷ்டமாச்சே! என்ன பண்ண போறோம்?” தெளிந்திருந்த அவனது முகம் மீண்டும் குழம்பியது
அடர்ந்த மீசைக்கடியில் அவனது இதழோரம் சன்னமாக விரிந்து “ஆல்ரெடி பண்ணியாச்சு” – புன்னகையுடன் கூறினான்.
“அப்படின்னா?!!!! ” புரிந்தும் புரியாமலும் கேட்டவனது முகத்திலும் புன்னகை படர்ந்தது
“டாக்டர் ஷர்மா ” – என்று முடித்தவன் அவன் கைகளுக்கு நேரே கோப்பையை நீட்டினான்
“ஹே…” ஒரு துள்ளலுடன் கோப்பையை பெற்றுக்கொண்டவன் அவனுடன் “சியர்ஸ்ஸ்ஸ்ஸ் ” வைத்தான்.
*************************************
“நந்தினி.. தேக்கோ நந்தினி…” – வரையறுக்கப்பட்ட எல்லையில் நின்றபடி சத்தமிட்டு மகளை எழுப்ப முயன்றாள் சந்திரிக்கா.
“மேடம் என்ன செய்றீங்க? இப்படியெல்லாம் கத்தக்கூடாது. பேஷன்டிற்கு கான்ஷீயஸ் வரும்போது அவங்களே முழிப்பாங்க. தேவையில்லாம அவங்கள தொந்தரவு செய்யாதீங்க ” – கடுமையாகக் கூறினாள் நர்ஸ்.
“ஏ மேரி பேட்டி. உன் கா தபேத் டீக் நெகிஹொனா. முஜே உன் சே மில்னா ஹெ”(அவ என்னோட பொண்ணு, அவளுக்கு உடம்பு சரியில்ல, அவள நான் பார்க்கனும்) என்று ஆரம்பித்தவர். ஹிந்தியில் சரமாரியாக திட்ட ஆரம்பித்தார். அப்போது அங்கே வந்த ஷர்மா சந்திரிகாவிற்கு புரியும்படி ஹிந்தியில் விளக்கினார்
“சந்திரிகா மேடம் கூல் டவுன் . நந்தினி மேடத்திற்கு முகத்தில் அடிபட்டிருக்கு. அதனால அவங்களால் பேச முடியாது. அது மட்டுமில்ல நந்தினிக்கு விழிப்பு வந்ததும் இன்ஸ்ப்பெக்டர் கிருபாகரனுக்கு தகவல் கொடுக்கனும். உங்க கிட்ட பேசிட்டா அப்புறம் அவர்கிட்ட பேசற சக்தி அவங்களுக்கு இருக்காது. புரிஞ்சிக்கோங்க. எல்லாம் நந்தினியோட நல்லதுக்காககத்தான். நீங்களும் ஒத்துழைப்புக் கொடுக்கனும். உங்கள் உணர்வுகள் எங்களுக்கு நல்லா புரியுது. நிச்சயம் உங்க பொண்ணு உங்க கிட்ட பேசுவாங்க ” மென்மையாக பேசி சந்திரிகாவிற்கு நம்பிக்கையூட்டினார்.
தன்னையும் மீறி கண்கள் கலங்கினாலும் ஷர்மா கூறியதை ஏற்றார் சந்திரிகா. கண்களை துடைத்தவர் ஹாஸ்பிட்டல் வாராண்டாவிற்கு வந்தார். அவரை பார்த்ததும் டிரைவர் வேகமாக ஓடி வந்தான்.
ஹிந்தியில் “மேடம் நீங்க ஏர்போர்ட்டிலிருந்து அப்படியே இங்க வந்துட்டீங்க. வாங்க மேடம் வீட்டுல கொண்டுவிடுறேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.”
இங்கே இருந்து மட்டும் என்ன செய்வது? உள்ளே அனுமதியில்லையே!! வேறு வழியில்லாததால் மறுப்பேதும் கூறாமல் டிரைவருடன் நடந்தாள்.
சந்திரிகாவின் கூக்குரல் அடங்கியதும். விழிமூடி மயங்கியது போல் படுத்திருந்த சந்தனாவின் இதயத்துடிப்பு சமன்பட்டது. இந்த முறை தப்பித்தோம் என்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். ஆனால் பத்தே நிமிடம்தான் அவளுடைய அமைதி நிலைத்தது. டாக்டர் ஷர்மா கொண்டுவந்த செய்தி அவளை மீண்டும் பதட்டம் கொள்ளச் செய்தது.அது கிருபாகரனின் வருகை.
சிறிது நேரத்திற்கெல்லாம் கிருபாகரன் வந்துவிட்டான் என்கிற செய்தி அவள் செவிகளில் விழுந்தது. கான்ஷியஸ் வந்துவிட்டதா என்று ஷர்மாவிடம் கேட்டு உறுதி செய்தபின்பே வந்திருக்ககிறான் அதனால் மயக்க நிலை நாடகம் இவனிடம் செல்லுபடியாகாது. இதயத்துடிப்பு பன்மடங்கு அதிகரிப்பதை அவளால் உணர முடிந்தது.
நல்லவேளையாக அவளது இடது கன்னத்தில் பெரிய பிளாஸ்திரியும் மூக்கினையும் வாயினையும் சேர்த்து மறைத்தார் போல் ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் நெற்றியில் கட்டும் போடப்பட்டிருந்தது. அதனால் ஓர் அளவிற்கு தன் முக உணர்வுகளை மறைத்து விடமுடியும். ஆனால் அவரது கேள்விகள்? அதற்கான பதில்கள்? கடவுளே…
மனதிற்குள் ஜில்லிட்டது அவளுக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்தது. நர்ஸ் துடைத்து விட்டாள். டாக்டர் ஷர்மா உடனிருந்தார். அவளது கைகளை பற்றி “டோன்ட் ஒர்ரி “என்றார். இதன் அர்த்தம்???? அவரும் இந்த சதிவேலைக்கு உடந்தையா? .
இருக்கலாம் டாக்டர்ஸ் ஒத்துழைப்பு இல்லாமல் ருத்ரனால் இந்த ஆள் மாறாட்டத்தினை செய்யவே முடியாதே!!!!!! பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஏன் அவளையே அவன் விலைபேசி அழைத்து வரவில்லையா? எல்லோருடைய வீக்னஸ்சையும் சரியாக கையாள்கிறான். இப்படி ஒரு வில்லனை அவள் இதுவரை சினிமாவில் கூட பார்த்ததில்லை. மனம் பலவகையான எண்ணங்கள் புடை சூழ விழிகளை மூடியிருந்தாள்.
கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ஷர்மாவின் பார்வை வாயில் பக்கம் திரும்ப, கிருபாகரன் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தான். அவனுடைய பார்வை நந்தினியை அணுவணுவாக ஆராய்ந்தது. முகத்தில் போடப்பட்டிருந்த பேண்ட்டெய்டுகளும் ஆக்சிஜன் மாஸ்க்கும் அவள் முகத்தை பாதி மறைத்துவிட்டது.
“சின்ன அதிர்ச்சி தான்னு சொன்னாங்க. இவங்களை பார்த்தா ரொம்ப அடிபட்ட மாதிரி தெரியுதே!” – டாக்டர் ஷர்மாவை கேள்வியாக நோக்கினான்.
“ஹ்ம்ம்ம்… அதிர்ச்சிதான்… பட் கீழ விழுந்ததுல இவர்களுக்கும் கொஞ்சம் அடிபட்டிருக்கு. குறிப்பா முகத்தில. ஹீரோயின் இல்லையா… கெரியர் பாதிக்கும்னு பயப்படறாங்க. அதனால நாங்க நியூஸ் வெளியே ஸ்ப்ரெட் ஆகாம பார்த்துக்கிட்டோம். பேஷன்டோட கண்டிஷனை அவங்க விருப்பம் இல்லாம வெளியே சொல்றதுக்கு எங்களுக்கு அதிகாரம் இல்ல” – சின்ன புன்னகையுடன் முடித்தார்.
“முகத்துல அடின்னா…! எப்படி? எந்த அளவுக்கு காயம்”
“சீக் போன் மைல்டா கிராக் ஆயிருக்கு. ஒரு சின்ன சர்ஜரி பண்ண வேண்டியிருக்கும்”
“ஓ!!!” – ஆச்சர்யத்துடன் பார்வையை அவள் பக்கம் திருப்பினான்.
“இஸ் ஷி அவேர் ஆஃப் தட்?”
“யெஸ்”
“ஓகே ”
“மிஸ் நந்தினி … கேன் யூ ஹியர் மீ ” கம்பீரக்குரல் சந்தனாவின் செவிகளில் விழுந்தன.
அவளைத்தான் அழைக்கிறான் கண்விழித்து தான் ஆக வேண்டும். மெதுவாக விழி விரித்தாள்.
“ஆர் யூ ஆல்ரைட். ஹௌ ஆர் யூ ”
பரவாயில்லை என்பதற்கு அடையாளமாய் விழிமூடி திறந்தாள்.
உடனே டாக்டரை ஏறிட்டவன்
“இவங்களால் பேச முடியும் தானே?”
“பேசலாம் ஆனால் ரொம்ப மெதுவா தான் பேசமுடியும்” – டாக்டர் ஷர்மா
“மிஸ் நந்தினி. என் கூட உங்களால பேச முடியுமா?” ஷர்மாவை நம்பாமல் நந்தினியை கேட்டான்
“ம்ம்ம்” – கண்களை முடித்திறந்து அவனுக்கு சம்மதம் சொன்னாள்.
“குட்… மிஸ் நந்தினி… நான் கேட்கும் கேள்விக்கு நிதானமாக யோசிச்சு மெதுவா பதில் சொன்னா போதும்” என்றவன் ஃபோனில் ரெக்கார்டரை அழுத்தினான்.
முழுதாக அரை மணிநேரம்… ஒவ்வொரு கேள்வியிலும் கத்தியின் கூர்மை இருந்தது. நிறுத்தி நிதானமாக யோசித்து ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்க வேண்டும் என்பது தான் ருத்ரனின் அறிவுறுத்தல். அதை சரியாக செய்து முடிக்க சந்தனாவின் பயமும் அந்த வீடியோவும் உந்துதலாக இருந்தது.
எந்த இடத்திலும் உள்ளே அரித்துக்கொண்டிருக்கும் பயத்தினை அவள் காட்டிவிடவில்லை. பதில் தெரியாத ஒரு கேள்வியை கிருபாகரன் கேட்க அயர்வுடன் கண்களை மூடிக் கொண்டாள். உடனே பாதுகாவலனான ஷர்மா தன்னுடைய கடமையை சரியாக செய்தார்.
“இன்ஸ்பெக்டர் ஷீ இஸ் வெரி வீக். எனஃப் ஃபார் த டே.” என்று விசாரனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்
எல்லோரும் ஒன்று போலவேதான் பதிலளிக்கிறார்கள். சந்தேகம் வருவதற்கு துளியும் இடமில்லையே. ஆனால் கிருபாகரனின் போலீஸ் இன்ஸ்டிங் ஏதோ தவறு நடந்திருப்பதுபோல் உணர்த்துகிறது. சரி பார்ப்போம் எங்கே போகப் போகிறார்கள். – எழுந்து கொண்டான் கிருபாகரன்.
அவனிடம் சில ஃபையில்களை ஒப்படைத்தார் ஷர்மா.
அதில் என்ன எழுதியிருந்ததென்றால் “நாளை நந்தினிக்கு அறுவைசிகிச்சை கன்னத்தின் காயத்திற்காக ஒரு மினி சர்ஜரி. அதனால் அடுத்த விசாரணையை அடுத்த வாரத்திற்குத்தான் வைக்க முடியும் என்று எழுதப்பட்டிருந்து. ஃபையிலை பெற்றுக்கொண்டு அர்த்தம் பொதிந்த சிரிப்புடன் விடைபெற்றான் கிருபாகரன்.
முகங்களின் தேடல் தொடரும்
10 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithi Mayil says:
Good
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
கன்னத்தில் அறுவை சிகிச்சை நிஜம் தானா இல்லை சந்தானாவிடம் கிருபாகரன் பேசாமல் இருக்க செய்யும் சதியா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
interesting ud sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Thank u sis
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Deepashvini Writes says:
அருமையான பதிவு😍😍😍
ஒருத்தன் என்னன்னா ஒரு பெண்ணை கொன்னுட்டு, அதை மறைக்க அந்த பொண்ணு மாதிரியே இருக்கும் இன்னொரு பெண்ணை, ஏதோ வீடியோவை காட்டி மிரட்டி பணிய வைக்கிறான்..
ஆனா இந்த பிரகாஷ் என்னன்னா, தன் நண்பன் செய்வதை பெருமையாக பார்க்கிறான் அடேய்😡😡😡
சந்தனா பாவம்ப்பா இன்னும் என்னன்ன காத்திருக்கோ அவளுக்கு😢😢😢
ருத்ரனுக்கு யார் மேல் கோபம், நந்தினி மீதா இல்லை சந்தனா மீதா, எதற்காக இப்படி பண்ணுகிறான், ஆனால் ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்கும் என்று நம்புகிறேன்🙋🙋🙋
கிருபாகரன் சார் இன்னும் கொஞ்சம் அழுத்தி விசாரிங்க, கண்டிப்பா உண்மைக்கு வெளியே வரும்🙋🙋🙋
இந்த கதை ரொம்பவே இண்ட்ரெஸ்டிங்கா இருக்கு😘😘😘
அடுத்த பதிவு நாளை தானே..சீக்கிரமே வந்துருங்க, 😁😁😁
ஆவலுடன் நான்
தீபஷ்வினி..😍😍😍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Nnandri deepa ivvalavu periya commentai parthathum mikka magilchi adainthene…. thodarnthu ungal atharavai tharungal
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Pavam santhana inkattum ankattum maatikkittu parta avastha irukke mmm pavam ponnu .nice going ud chinnama irukku big ud pannungappa👍 👍
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Nandri nataraj
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Pavam pa santhana… Ruthran kiruba rendu peraiyum pathu bayapadura… Ruthran plan than enna 😳
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Hmm….yes pavam than, thanks for your comments