Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 16

அத்தியாயம் -16

ஊர் மக்களின் கண்கள்  அகலவிரிந்து அங்கே நடப்பதை உற்று நோக்கின. இப்படி ஒரு அசாத்திய திருப்பு முனையை அங்கே யாரும் எதிர்பார்கவில்லை. நாட்டாமை வீட்டிற்கு வந்திருக்கும் பட்டனத்துப்பெண்ணிற்கு முளைத்திருக்கும் கணவனைபற்றி அரசல் புரசலாக பேச்சு எழத்தான் செய்தது இருப்பினும் இப்படி ஒரு சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை.

 

தாலியை பால் பானைக்குள் போட்டஉடன் சிலநொடி பானையை உற்று பார்த்தவள் பாரம் குறைந்ததன் அறிகுறியாக ஒரு பெருமூச்சினை வெளியிட்டாள். எழுந்து நின்றுவிட்டிருந்தவனின் கரம் பற்றி அமர வைத்தார் மணிவண்ணன். ஊர்மக்கள் தங்களுக்குள் சலசலக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

மணியக்காரர் திரும்பவும் “அமைதி அமைதி “என்று குரல் கொடுக்க சத்தம் நின்றது. மணிவண்ணன் பேசலானார்.

 

“கனகம் உன் வழக்கு முடிந்தது. ஒரு பெண்ணை பெற்ற அப்பங்கர முறையில சொல்றேன். உன்னோட இந்த முடிவு சரியான முடிவு. இனி கனகத்தையோ அவளோட குடும்பத்தையோ தொந்தரவு செஞ்சா கோபாலுக்கு தக்க தண்டனை கொடுக்கப்படும். இது தான் தீர்ப்பு. நீ உன் அப்பா அம்மா கூட போய் நில்லு கண்ணு.” என்றவர் இன்னமும் பால் குடத்திலிருந்த கண்களைவிலக்காத ரம்யாவினை அழைத்தார்.

 

“ரம்யா…. ரம்யா… ம் …உன்னைத்தான். இங்க வந்து இப்படி நில்லும்மா. டேய் அவர விடுங்கடா. ரவி இங்க வந்து நில்லுப்பா” என்று முன்னால் கனகம் நின்ற இடத்தில் ரம்யாவையும் கோபால் நின்ற இடத்தில் ரவியையும் நிற்கவைத்தார். நடக்க. முரன்டுபிடித்த ரவியை கிட்டத்தட்ட இழுத்து வந்து நிறுத்தினார்கள்.

 

அவன் மனதில் கொலைவெறி கொழுந்துவிட்டெரிந்தாலும் அதனை காட்டும் நேரம் இதுவல்ல என்பது நரி புத்தி கொண்ட அவனுக்கு தெரியாதா என்ன? பின்னே… சிங்கங்கள் நிறைந்திருக்கும் சபையில்  நரியில் செயல் எடுபடுமா என்ன????

 

“இப்போ சொல்லு ரம்யா உன்னோட இந்த செயலுக்கான காரணம் என்ன?”

 

“ஐயா முதல்ல என்ன மன்னிச்சிடுங்க ஒரு வழக்கு நடக்கும் பொழுது இடையில நுழைஞ்சிட்டேன். இவன் என் தூரத்து மாமன் மகனுங்க…..” என்று தொடங்கி ஒன்று விடாமல் கூறிமுடித்தாள்.

 

“இவனுக்கு பயந்து தான் நான் ஊரைவிட்டே ஓடி வந்தேன். நான் இந்த ஊர்லயே இருந்துடறேங்க. இவனுகிட்டேருந்து என்னை காப்பாத்துங்க ஐயா” என்று இரு கரம்கூப்பி கண்ணீருடன் நின்றவளை பார்க்க அவரது இரும்பு மனமும் அசைந்தது.

 

‘இத்தனை சின்ன வயசுல இத்தனை பிரச்சனைகளா?’ ஆனால் எதிர்வாதத்தை கேட்டுதானே ஆக வேண்டும்.

 

“நீ என்ன ரவி சொல்லப்போர? ”

 

“ஐயா இவ சொல்றா மாதிரி சொத்துக்காக எல்லாம் ரம்யாவ கல்யாணம் செய்யலங்கய்யா. தாய்தகப்பணில்லாத பொண்ணுக்கு நாமதான் ஆதரவா இருக்கனும்னு எங்க அப்பா சொன்னதுனால ஒத்துகிட்டேங்க. இப்போ இங்க வந்ததும்தான் யாரோ இவ மனச கலைச்சிருக்காங்க.” என்னறவனது தனல் பார்வை பாஸ்கரனை சுட்டெரிக்க தயாரானது.

 

“என் பொண்டாட்டிய என் கூட அனுப்பிவைங்கய்யா ”

என்றான் பாவமாக.

 

“ஐயா தயவு செய்து என்னை இந்த அயோக்கியனோட அனுப்பிடாதீங்கய்யா. இவன் கூட பொண்டாட்டியா நான் ஒருநாளும் வாழல, அப்படி நினைக்க கூட எனக்கு அருவருப்பா இருக்கு. இதை நிரூபிக்க நான் எந்த ஹாஸ்பிடலுக்கு வேனும்னாலும் வரேனுங்க, ஆனா தயவு செய்து என்னை இவன் கூட மட்டும் அனுப்பிடாதீங்கய்யா” இப்படிகதறி அழும் ரம்யாவை பார்க்க அவருக்கே பாவமாகத்தான் இருந்தது.

 

அவளது பேச்சை கேட்ட ரவியோ பொருமையிழந்தான்

 

“ஆமான்டி ஆமாம்…. கட்டுன புருஷனை தொடவிடமாட்ட கண்ட கழுதைங்கள கட்டிபுடிச்சிட்டு நிப்ப…. உனக்கு வெக்கமாயில்ல ”

 

பாஸ்கரனின் கரங்கள் ரவியை துவம்சம் செய்ய பரபரத்தது.  இருப்பினும் கூட்டத்தை அவமதிக்கக் கூடாதே என்று பொருமை காத்தான்

 

அதற்குள் மணிவண்ணனோ

“தம்பி … இது சரியில்ல. பெண்களை தெய்வமா வணங்கர பூமி இது. இங்க பெண்களை அவமதிக்க ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. உங்களுக்கும் ரம்யாக்கும் நடந்த கல்யாணம் ஒரு பொம்மைக்கல்யாணம்னு நீங்க ரெண்டு பேருமே ஒத்துகிட்டீங்க. நீங்க சொன்ன கழுதை பாஸ்கரன்தானே. அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கு. இப்போ உங்க யாருக்குமே தெரியாத ஒரு உண்மையை நான் சொல்லப்போறேன்.

 

இதோ இந்த ரம்யா சுகுணாவோட  கல்லூரித்தோழி. லீவுக்கு சுகுணாவை அழைச்சிட்டு வரப்போகும் போது பாஸ்கர் ரம்யாவை பார்த்திருக்கான் அப்பவே அவனுக்கு ரம்யாவை ரொம்ப பிடிச்சு போச்சு. உடனே ரம்யாகிட்ட கூட சொல்லாம என்கிட்ட தான் சொன்னான். என் பொஞ்சாதிக்கு கூட இது தெரியாது. நான் எப்போதுமே மனங்களுக்கு மதிப்பு கொடுக்கரவன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். உடனே ரம்யா கல்லூரிக்கு போகக்கூடிய நேரமா பாத்து அவங்க வீட்டுக்கு போனேன். அவளோட பாட்டி மட்டும்தான் வீட்டுல இருந்தாங்க. நம்ம குடும்பத்த பத்தியும் பாஸ்கரனின் விருப்பத்தை பத்தியும் எடுத்து சொன்னேன். அதுக்கு அவங்க ‘ரம்யா ரொம்ப சின்ன பொண்ணு. அவ காலேஜி முடிக்கட்டும், முடிச்சதும் நிச்சயமா நாம மறுபடி பேசலாம். எங்க பொண்னை விரும்பி கேக்க வந்ததே ரொம்ப சந்தோஷமா இருக்கு ‘ன்னு சொன்னாங்க. உடனே நான் போன் நம்பர் வீட்டு முகவரி எல்லாம் எழுதி கொடுத்துட்டு வந்தேன்.

 

மூனு மாசத்துக்கு முந்தி அவங்க கிட்டேந்து எனக்கு போன் வந்தது. ஐயா இங்க நெலம கொஞ்சம் சரியா இல்ல அதனால பசங்க கல்யாணத்த சீக்கிரமா வெச்சிக்கலாமான்னு கேட்டாங்க. அப்ப சுகுணா கல்யாணம் நெருங்கிட்டதால அது முடிஞ்சதும் பேசலாம்னு சொல்லிட்டேன். ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்துடுச்சு. இத்தனை தவிப்போட எங்களை நம்பி ஓடி வந்த பொண்னை சுகுணா கல்யாணத்துக்கு வந்த பொண்ணா நான் நினைச்சிட்டேன். ரம்யாவும் நல்லது நடக்கர எடத்துல

நம்ப சோகத்தை ஏன் சொல்லனும்னு மனசுக்குள்ளயே போட்டு வெந்திருக்கு. திடீர்னு ரவி ரம்யா புருஷனா வந்து நிக்கவும் எங்களுக்கு ஒன்னுமே புரியல., குறிப்பா பாஸ்கரனுக்கு பெரியா அதிர்ச்சியா இருந்தது. யாருகிட்டயும் சொல்ல முடியாம என் புள்ள மனசு தவிச்சது எனக்கு மட்டும் தான் தெரியும்.

 

இப்போ இந்த வழக்கு என் குடும்ப வழக்கா இருக்கரதால. இதற்கான தீர்ப்பை ஊர்மக்கள்தான் சொல்லனும் ”

 

நீளமாக பேசி முடித்து விட்டு எழுந்து நின்றார் மணிவண்ணன்.

 

இது எப்படி சாத்தியமாகும் என்று தந்தையை நம்பாமல் நோக்கியமகனுக்கு சிறு சைகை காட்டியவர். கீழே ரம்யாவின் அருகில் வந்து நின்று கொண்டார். வேறுவழியில்லாமல் பாஸ்கரனும் அவர் அருகில் நின்றான்.

 

ரம்யாவின் நிலையோ சொல்வதற்க்கே இல்லை. பாட்டியிடம் ஐயா பேசினாரா? பாட்டி ஏன் சொல்லவே இல்லை? பாஸ்கரன் என்னை விரும்பினாரா?  பாட்டி எங்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினாங்களா?  எது நிஜம்?

 

ரவியோ “என்ன உளர்ரீங்க, சும்மா கதை கட்டரீங்களா? நீங்க எங்க வீட்டுக்கு வரவே இல்லை. பொய் சொல்லாதீங்க ”

 

“தம்பி நான் வந்த போது நீ கூடத்தான் வீட்ல இல்ல, அப்போ நீ அவங்க ஒரவே இல்லன்னு சொல்லிட முடியுமா?  நான் வந்த போது நீ இல்லை அதனால உனக்கு தெரியலை அவ்வளவுதான்.”

 

“இல்ல.,” ஏதோ பேச முயன்றவனை மணியக்காரர் அதட்டினார்

 

“தம்பி பேச வேண்டியதெல்லாம் முடிஞ்சிடுச்சு, இனி தீர்புதான். இனி ஊர்மக்கள்தான் ஒரு நல்ல தீர்ப்பா சொல்லனும். ”

 

சிறிதும் தாமதியாமல் அங்கே பல குரல்கள் ஒன்றாக ஒலித்தன.

“சின்னய்யாக்கு ரம்யாம்மாவ பிடிச்சிருக்கும்போது இதுல யோசிக்க என்ன இருக்கு,  உடனே தாலி கொண்டுவாங்க, இப்பவே கட்டிடுங்கய்யா. இந்த மோசக்காரன்கிட்டருந்து ரம்யாம்மாவை காப்பாத்துங்க ”

 

“ஆமாம் காப்பாத்துங்க ”

எல்லோரும் ஒன்றாக குரல் கொடுக்க ரவி கலவரமானான்

 

“இந்த மரத்து கீழ நின்னு நாலு பேரு சொல்லிட்டா எங்க கல்யாணம் செல்லாம போகுமா. சட்டப்படி இவ என் பொண்டாட்டி இவள கூட்டிட்டு போற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு, நான் கோர்ட்டுக்கு போவேன். உங்க எல்லாரையும் போலீஸ்ல மாட்டிவிட்டு முட்டிக்கு முட்டி தட்டல என் பேரு ரவி இல்ல ” ரம்யாவின் கைபற்றவந்தவனின் நெஞ்சில் கைவைத்து பின்னே தள்ளிய பாஸ்கரன்

 

“உன்னால என்ன கழட்ட முடியுமோ கழட்டுடா பாத்துக்கலாம். கோர்ட்டு போலீசுன்னா பயந்துடுவோமா?  ரம்யா எங்க பக்கம் இந்த கேசை தூள் தூளாக்க என்னால முடியும் ”

 

உடனே ரவியின் நரிபுத்தி விழித்துக்கொண்டது. ரம்யா நிச்சயமா நமக்கு சாதகமா சாட்சி சொல்ல மாட்டா, மெடிகல்டெஸ்ட் எடுத்தா அதுலயே நாங்க சேந்து வாழலன்னு தெரிஞ்சிடும். என்ன செய்யலாம்.? உடனே ஒரு  யோசனை அவனுக்கு தோன்றியது.

 

“அது தானே பார்த்தேன்.,எங்க ரம்யா சொத்து எனக்கு வந்துடுமோன்னு உனக்கு பொறாமை. அந்த சொத்துக்குதானே ரம்யாவ மூளை சலவை செஞ்சு என் கிட்டருந்து பிரிக்க பாக்குற.?”

 

“அடி ராஸ்கல் யார்கிட்ட வந்து என்னடா பேசுர?  சொத்துக்காக நடிக்கிற கேவலமான பொழப்பு எங்களுக்கெதுக்குடா. நான் ரம்யாவை உயிரா நேசிக்கிறேன். அவள் சொத்து எனக்கு தேவையில்லைன்னு என்னால இப்பவே நிரூபிக்க முடியும்.

செந்தில் இங்க வா நம்ம வக்கீலையும் ரெஜிஸ்டரரையும் உடனே கூப்பிடு ”

 

தன் இறுதி பானம் வேலை செய்ய ஆரம்பித்ததை நினைத்து சந்தோஷப்பட்டான் ரவி. மணிவண்ணனின் பேச்சு பாஸ்கரனின் காதில் சிறிதும் ஏறவில்லை.

 

ஒரு மணிநேரத்தில் இருவரும் வந்து விட்டனர். பாஸ்கரனின் தொலைபேசி தகவலின்படி எல்லாம் தயாராகவே வந்தார்கள்.

 

அவர்கள் கொண்டு வந்த காகிதத்தை ரம்யாவிடம் காண்பித்து. ஒரு பத்திரத்தில் கையெழுத்திட்டு அவளிடம் நீட்டினான். இது என்னுடைய பங்கு சொத்து ரம்யா. நான் உன்னை மனமார நேசிக்கிறேன் ஆனால் உன்னுடைய மனநிலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் இல்லை. என்னுடைய சொத்து என்றும் உனக்கு பாதுகாப்பாய் இருக்கும். இந்த பத்திரத்தில் உன் கையெழுத்து தேவை. இந்த பணப்பேய்க்கு உன் பணத்தை கொடுத்து…’

 

அவன் பேசிமுடிக்குமுன் ரம்யாவின் கையெழுத்திட்ட பத்திரத்தை அவன் முன் நீட்டினாள் ரம்யா.

“எனக்கு இவன் கிட்டேந்து விடுதல கிடைச்சா போதும் பாஸ்கரன், பணம் தேவையே இல்ல, உங்க சொத்தும் தான், என்படிப்புக்கு ஏதாவது வேலைகிடைக்காமலா போய்டும்?

 

“நீ ஏன் தாயி வேலைக்கு போகனும் , எங்க சின்னையாக்கு பொண்டாட்டியா ராணி மாதிரி வாழவேண்டியவ நீ ” என்று ஒரு நடுத்தர வயது பெண்கூற

 

ரம்யா பாஸ்கரனை தவிப்புடன் பார்த்தாள்.

 

உடனே பாஸ்கரன் “இல்ல சின்னாத்தா, ரம்யா இப்பதான் ஒரு கட்டாயக்கல்யாணத்துலேந்து வெளிவந்திருக்கா. அவமனசுக்கு மதிப்பு கொடுக்கணும். அவளுக்காக காலம்முழுக்க நான் காத்திருப்பேன். அவமனசு மாறினாலும் சரி மாறலைன்னாலும் சரி.”

“இந்த டைவர்ஸ் பத்திரத்தில் சைன் போட்டுட்டு  சொத்து பத்தரத்த எடுத்துக்கிட்டு ஓடு ” என்று பாஸ்கரன் கர்ஜித்தது தான்தாமதம் அவசரமாக கையெழுத்திட்டுவிட்டு பத்திரத்தை பிடுங்காத குறையாக ஓடிச்சென்றான்.

 

பாஸ்கரன் கொடுத்த பத்திரத்தை மணிவண்ணனிடம் கொடுத்த ரம்யா,

“இதுக்கு  எந்த அவசியமும் இல்லை ஐயா, எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்க போதும் ” என்றாள்

 

மக்களிடம் கைகூப்பி தன் நன்றியை தெரிவித்தாள். கூட்டம் கலைந்தது…




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Very intersting . ana ravi ninachchathu natanthuchu soththu avan kaikku poiruchche.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    அருமை

You cannot copy content of this page