Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 17 ( நிறைவு பகுதி )

அத்தியாயம் –  17

புதுத்தாலி நெஞ்சில் புரள. இது சரியா தவறா என்ற குழப்பம் மேலோங்க முதலிரவு அரையில் தனிமையில் அமர்ந்திருந்தாள் ரம்யா. ஒன்றறை வருடம் ஒரு நாள் போல் ஓடியதை நினைத்து வியந்தாள். ரவி அவசரமாகக் கையெழுத்திட்டுவிட்டு துண்டைக்காணும் துணியைக்காணும் என்று ஓடியது ஏதோ நேற்று ஓடியது போல் தோன்றுகிறது.

 

அன்று மாலை வீட்டில் மணிவண்ணனய்யா கூறியது இன்றும் செவிகளுக்குள் வார்த்தை பிசகாமல் கேட்டது. “நான் இப்போ பேசறது கடைசிவரைக்கும் நமக்குள்ளயே இருக்கட்டும். ஒரு நல்லது நடக்கனும்னா பொய் சொல்லலாம்னு எல்லாம் தெரிஞ்ச வள்ளுவரே சொல்லியிருக்காரு. அதத்தான் நானும் செஞ்சேன்.ரவிக்கிட்டேந்து உன்னைக் காப்பாத்த எனக்கு வேறு வழி தெரியலம்மா, நானும் ஒரு பெண்ணைப் பெத்தவன் தானே? , அதுவும் அவன் உன்னைப் பத்தி அசிங்கமா பேசினதும் மனசு கேக்கலம்மா. நான் சொன்னதுல பாதி நிஜமும் இருக்கு. பாஸ்கரன் உன்னை விரும்பரது நிஜம். உன்னை மருமகளா ஏத்துக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. நான் பயந்தது இந்த ஊர்மக்களுக்குத் தான் எப்போ அவங்களே உன்னை ஏத்துகிட்டாங்களோ எனக்கு ரொம்பச் சந்தோஷம்மா. முடிவு உன்கையில தான்மா ”

ரம்யா அமைதி காத்தாள் இந்த விளக்கம் ஓரளவு அவள் எதிர்பார்த்ததே. ஆனால் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு என்ன பதிலளிப்பது.

 

“இல்லப்பா ரம்யாவை அவசரப்படுத்தாதீங்க. அவள் மனதின் ரணம் ஆறிய பிறகு எல்லாம் பேசலாம்” என்று முடித்தான்.

 

அவனது செய்கையிலேயே மனம் நெகிழ்ந்து விட்டது ரம்யாவிற்கு. துளியும் சுயநலமில்லாத காதல் சாத்தியமா? சாத்தியம் என்று பாஸ்கரன் நிரூபித்தான். கூட்டத்தில், நேசிக்கிறேன் விரும்புகிறேன் என்று கூறியவன் அதற்குப்பின் மறந்தும் அந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தவில்லை. நல்ல நட்புடனே பழகினான். மணிவண்ணன் தன் நிலத்துக் கணக்கு வழக்குகளையும் தன் பங்காளி வீட்டுக் கணக்கு வழக்குகளையும் பார்க்கும் வேலையைப் போட்டுக்கொடுத்தார். காளிதாசன் அவளது வேலைக்கு ஒரு மடிக்கணினி பரிசளித்தான்.

 

விபரம் தெரிந்ததும் ஓடோடி வந்த சுகுணாவோ ரம்யாவை கட்டிப்பிடித்துக் கதறிவிட்டாள். தன் அண்ணனின் கட்டளையால் திருமணம் பற்றி ஏதும் பேசமுடியாமல் போனதைப் பற்றி ஒரு மூச்சு புலம்பினாள்.

 

மரிக்கொழுந்து ரம்யாவை தன் மருமகள்களுள் ஒருத்தியை போலவே நடத்தினாள், பண்டிகைக்குப் புதுத் துணி, வெளியே சென்றால் பரிசுப்பொருள் இப்படி நிறைய,

 

ஊர்மக்களும் சின்னம்மா என்று மரியாதையாக அழைத்துத்தான் பேசினார்கள். பாஸ்கரனின் தாலியை வாங்காமலே அவனது மனைவிக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் எல்லாம் அவளுக்குக் கிடைத்தது

 

காளிதாசன் மதியழகியை பார்க்க சிலநேரம் பாவமாக இருக்கும். பாஸ்கரன் திருமணம்முடிந்தாலல்லவா அவர்களது வழி தெளிவாகும்.

 

இதனைமனதில் கொண்டு ஒரு நாள் பாஸ்கரனை தனிமையில் சந்தித்துப் பேசினாள் ரம்யா

 

“உன்னை எப்படி ரம்யா மறப்பேன். எனக்கு மனைவின்னு ஒருத்தி வந்தா அது நீ தான். நீ மட்டும் தான். காளிதாசனோட கல்யாணம்தானே உன் பிரெச்சனை அதைநான் சரிபன்றேன் ” என்று முடித்தவன் அது பற்றி மணிவண்ணனிடமும் காளிதாசனிடமும் பேசினான். மணிவண்ணன் ஒருவாறு ஒத்துக்கொண்டாலும் காளிதாசன் அடியோடு மறுத்தான்.

 

அண்ணன் இருக்கத் தம்பி திருமணம் முடிப்பது பாவம் என்று வாதிட்டான். முடியவே முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான். மரிக்கொழுந்திற்கோ இதுவே மனச்சிக்கலாகிவிட்டது. மன அழுத்தம் அதிகரித்து BP அதிகமாகிவிட்டது.

 

அதுமட்டு மல்லாமல் மதியழகியின் தாயும் தந்தையும் மணிவண்ணனைச் சந்தித்து “மதிக்கு வயசு ஏறிகிட்டே இருக்குய்யா. நீங்க என்ன சொல்ரீங்க? முடியலன்னா நாங்க வேற சம்பந்தம் பாத்துக்கறோம். சொல்ல கஷ்டமா தான் இருக்குய்யா. ஆனா பொட்டபுள்ளைய பெத்தவன் மனசு உங்களுக்குத் தெரியாதா, சீக்கிரம் நல்லமுடிவா சொல்லி அனுப்புங்கய்யா ” என்று விட்டு சென்றார்

 

அதன்பிறகு காளிதாசனின் துறுதுறு குணம் அடியோடு மாறிப்போய்விட்டது.

 

ரம்யாவின் மனம் குடையத்துவங்கியது. தன்னால் இந்தக் குடும்பம் கஷ்டப்படுவது தெளிவாகத் தெரிந்தது.

 

இதற்கிடையில் மகப்பேருக்காகச் சுகுணா தாய்வீட்டிற்கு வந்தாள். ஏற்கனவே குழப்பம் மிகுந்த ரம்யா வின் மனதை மேலும் குழப்பி எளிதாக மீன் பிடிக்க முயன்றாள். அடி மேல் அடிவைத்தால் அம்மியும் நகருமல்லவா. ஒருவாறு ரம்யா திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டாள்.

 

இதோ இன்று காலை ஒரே முகூர்த்தத்தில் பாஸ்கரன் ரம்யாவிற்கும், காளிதாசன் மதியழகிக்கும் திருமணம் நடந்துவிட்டது.

 

ஆனால் இன்னமும் ரம்யாவின் மனம் அவளுக்கே புரியவில்லை. இந்தத்திருமணம் சரியா தவறா என்று இன்னமும் அவள் மனம் குடைந்தது.

 

அவளது சிந்தனையைக் கதவுதிறக்கும் ஓசை கலைத்தது.

 

பதட்டத்துடன் எழுந்து நின்றாள்

 

பட்டு வேட்டி சரசரக்க உள்ளே நுழைந்த பாஸ்கரன் கட்டிலின் கால்களை இறுகப்பற்றிக்கொண்டிருந்த நின்றிருந்த ரம்யாவை பார்க்க பாவமாக இருந்தது.

 

மெல்ல அவளருகில் சென்றவன் “உட்கார் ரம்யா, ” என்று கட்டிலை காட்டி விட்டுச் சிறு இடைவேளை விட்டு அமர்ந்தான். தயக்கத்துடன் அமர்ந்தவளின் மென்கரத்தை பற்றித் தன் கைக்குள் இருத்தியவன்

 

“ஏன் இந்த நடுக்கம் ரம்யா. உனக்கு விருப்பமில்லாத எதுவும் நம்மிடையே நடக்காது. இப்போ எல்லாத்தையும் மறந்துவிட்டு படுத்துத் தூங்கு, நான் கீழ படுத்துக்கறேன் ” என்றவன் எழுந்து விளக்கனைத்துவிட்டு கீழே படுத்துவிட்டான்.

 

ரம்யாவின் மனதில் பல கேள்விகள் எழுந்தன. பதில்கள்தான் பாதியாய் ஒரு முடிவில்லாமல் முடிந்தது.

 

தூக்கத்திலிருந்து விழித்த பாஸ்கரன் கண்ட காட்சி தலையில் தண்ணீர் சொட்டச்சொட்ட டிரஸ்சிங் டேபிளின்முன் நின்று வகுட்டில் குங்குமம் வைத்துக்கொண்டிருந்தாள். அன்றலர்ந்த மலர் போல் மலர்ந்திருந்தவளை பார்க்கையின் பாஸ்கரனின் உணர்வுகள் விழித்துக்கொண்டன.

 

இரண்டெட்டில் அவளை அடைந்தவன் பின்னாலிருந்து அவளை இருக்க அணைத்தான். எதிர்பாராத இந்த அணைப்பில் நிலைகுலைந்தாள் ரம்யா, விடுபடமுயன்றவளால் முடியவில்லை. பாஸ்கரனின் அணைப்பு மிக மிக இருக்கமாய்.

 

அவனது உதடுகள் அவளது தண்ணீர் துளிகள் நிறைந்த கழுத்தில் கோலமிட. விழிகளை இறுக மூடிக்கொண்டாள் ரம்யா.

 

புதுத்தாலியின் மனம் பாஸ்கரனை கிரங்கச்செய்தது. அவள் மேல் மணம் பரப்பிய சந்தனச்சோப்பும் தன் பங்கிற்கு அவனைப்படுத்தியது. அவனது கைகள் அவளது இடுப்பில் முன்னேர, மெல்ல மெல்ல நெகிழத்தொடங்கினாள் ரம்யா.

 

தன்னுள் பல மாற்றம் நிகழ்வதை அவளால் உணரமுடிந்தது. கழுத்து வளைவில் அவனது மீசைச்செய்யும் இம்சையை ரசிக்கவே தோன்றியது. இடையில்…. அவன் கரம்…..

 

சட்டெனத் திரும்பி அவன் நெஞ்சில் புதைந்தாள்.

 

அப்போது தான் தன்னிலை உணர்ந்தான் பாஸ்கரன்.

 

மெல்ல ரம்யாவை தன்னிடமிருந்து விலக்கி கட்டிலில் அமர வைத்தான்.

 

செங்கொழுந்தாக மாறிவிட்டிருந்தவளைப் பார்க்கவே அவன் மனம் அலைபாய்ந்தது. ஆனால் இது பேச வேண்டிய நேரம் என்பதை உணர்ந்து, பூமிபார்ந்திருந்த அவள் முகத்தை மெல்லப் பிடித்து நிமிர்த்தினான்.

 

அவளது கண்கள் அவனைச் சந்திக்க மறுத்தன

 

“இப்போ நான் ஒண்ணு கேக்கட்டா ரம்யா? ”

 

“ம்….”

 

“இப்படித்தானே தாலி கட்டி உன்ன பொண்டாட்டியா ஆக்கிக்கிட்டான் அந்த ரவி, ஆனா அவன் உன் கையைப் பிடிச்சதுக்கே அன்னைக்கு மாடில எப்படிக் கதறி அழுத. ”

 

அகல விரிந்த கண்களால் பாஸ்கரனை ஏறிட்டாள்.

 

“இப்போ நமக்குள்ள நடந்த விஷயம் எத்தனை இன்பமா இருந்தது. இது தான் காதல் அதுஏன் உன் மண்டைக்குள் ஏறமாட்டேன் என்கிறது. உனக்கு என்மேல காதல் எப்பவோ வந்திடுச்சு ரம்யா, அதை நீ உணரவே விடல. அன்றைக்கு டிரைவரா கூட்டிட்டுப் போக வந்த போதே உன் முகத்துல பல்பு போட்ட மாதிரி வெளிச்சம், உன் மனசுல இருந்த பிரெச்சனைய சுகுணாகிட்ட கூடச் சொல்லாம என்கிட்ட தான் சொன்ன. அப்போ கூடப் புரியலயா இது காதல்னு. வெறும் தாலி என்னிக்கும் மேஜிக் செய்யாது ரவி யோட திருமண வாழ்க்கை மாதிரி. காதலோட கூடிய தாலி நிச்சயம் மேஜிக் செய்யும். இதோ இப்போ நடந்தது போல. உன் மனசுல நிச்சயமா நான் இருக்கேன் இல்லன்னா இப்போ இங்க நடந்தது நிச்சயம் சாத்தியப்படாது. மாறா பளார்னு ஒரு அறை தான் கிடைச்சிருக்கும்., இப்போவாவது ஒத்துக்கறியா என் அன்பு பொண்டாட்டி.” அவளது மூக்கினை பிடித்துச் செல்லமாக அசைத்தவன், கைகளை அகலவிரித்தான்.

 

உடனே அவன் கைகளுக்குள் சரணடைந்தாள் ரம்யா. மனதிலிருந்த பாரம் முற்றிலும் நீங்க நிம்மதியாய் அவனுள் புதைந்தாள்.

 

கதவுதட்டும் ஓசையில் சட்டென விலகிய இருவரையும் குறு குறு வென்று பார்த்துக்கொடு உள்ளே வந்தாள் சுகுணா. கதவை தாழ்போடாமலே ரொமான்ஸா. அங்க மதியை வந்து பாருங்க Do not disturb board போடாத குறை தான், கேட்டா என்னை மாதிரியே பத்து மாசத்துல புள்ள வேணுமாம். நீ எப்படி ரம்யா என்று கேட்டுச் சிவந்திருந்த ரம்யாவை மேலும் சிவக்க வைத்தாள்.

 

சரி சரி சீக்கிரம் கீழ வாங்க அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.என்று விட்டு சென்றாள்.

 

கீழே வந்தவர்களை ஒரு நற்செய்தியோடு எதிர் கொண்டார் மணிவண்ணன்.

 

“ரவியும், அவன் அப்பனும் போனமாசம் பயங்கரப் போதையில் வண்டி ஓட்டிட்டு போய் ஒருமரத்துல மோதிட்டாங்களாம் ஸ்பாட்லயே அவுட்டாம். ரவியுடைய அம்மா வந்து பத்தரத்தை திருப்பிக் கொடுத்துட்டு அழுதுகிட்டே போறாங்க. ”

 

“ஒரு வாய் டீ கூடக் குடிக்கல.” வருந்தினாள் மரிக்கொழுந்து,

 

ரம்யாவின் கரம்பற்றி மெல்ல அழுத்தியவன் “வினை விதைத்தவன் வினையருப்பான்னு சும்மாவா சொன்னாங்க , வா சாப்பிடலாம்.

 

குடும்பம் மொத்தமும் ஒன்றாக உணவருந்த அங்கே சிரிப்பலைக்குப் பஞ்சம்தான் ஏது?

 

வேப்பங்குளத்தில் முளைத்த இந்தக் காதல் பல விழுதுகளுடன் கம்பீரமாய் வளர நாம் வாழ்த்துவோம்.

 

                                                                                          முற்றும்




9 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Cyril Lincy says:

    Short and sweet story.. 👍👌


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Super story, but sekiram mudichiduchi, 2nd time padichuten sema,👌👌👌👌👌👏👏👏


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    arumaiyana story dear. village la nadappathai neril partha mathiri oru unarvu.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lalitha Vasudevan says:

    arumaiyana story. village-le vazhntha mathiri irundhadhu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Punitha. Muthuraman. says:

    ரவிக்கு சொத்து முழுதும் விட்டுகொடுத்ததுக்கு பதிலா தர்மத்துக்கு கொடுத்திருக்கலாம்.அவஞ்செத்து திரும்பிவந்தாலும் கொடுத்தது கொடுத்ததுதானே.ஆனாலும் அருமையான கதை.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Ennappa sikkiram mutunchuruchchu aanal nalla azhagana kiramathu kaathal kathai.tq


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Nandri pa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    Super.. seekrama mudinjidichi 🙁


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Nandri vatsala

You cannot copy content of this page