கனல்விழி காதல் -97
11737
23
அத்தியாயம் – 97
கோபத்தில் சிடுசிடுவென்று பேசிவிட்டு வந்துவிட்டானே ஒழிய அவளுடைய அதிர்ந்த முகத்திலிருந்து மீள மறுக்கிறது மனம். ‘இந்த கோபம்தான் அவளை நம்மிடமிருந்து விளக்கி வைத்திருக்கிறது. அதையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன அறுகதையோடு நாம் அவளை அழைக்கிறோம்!’ என்று தன்னைத்தானே குற்றவாளி கூண்டில் நிறுத்தினான் தேவ்ராஜ்.
வெகுநேரமாக தோட்டத்தில் தனிமையில் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருக்கும் மகனை நெருங்கிய இராஜேஸ்வரி பாரதிக்கு வந்திருக்கும் வரன் ஒன்றைப் பற்றி அவனிடம் கலந்தாலோசித்தாள். தங்கையின் வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியோடு தன் வாழ்க்கைப் பற்றிய கவலையை தற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு, முழு ஈடுபாட்டோடு அந்த வரனைப் பற்றிய விசாரணையில் இறங்கினான். முதற்கட்டத் தகவல் திருப்திகரமாக இருந்ததால், மேற்கொண்டு வெளியே விசாரித்துவிட்டு பேசலாம் என்றான்.
தாயிடம் சொன்னபடியே முழு மூச்சாக மாப்பிள்ளையை பற்றியும் அவனுடைய குடும்பத்தைப் பற்றியும் அலசி ஆராய்ந்தான். தனக்கு முழு திருப்தியான பிறகு பாரதியின் அபிப்ராயத்தை கேட்டான். அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமையனும் தாயும் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டாள். எனவே அடுத்தகட்டமாக மாப்பிள்ளை வீட்டில் பேசினார்கள். அவர்களும் ஆர்வத்தோடு சம்மதம் தெரிவித்துவிட நிச்சயதார்த்தம் செய்யலாம் என்று முடிவெடுத்தார்கள்.
“ரொம்ப நாளா கல்யாணம் தடைபட்டுக்கிட்டே இருக்கு. அதனால ரொம்ப நாளை கடத்தாம நேரடியா கல்யாணத்துக்கே தேதி குறிச்சிடுவோம்” என்று அபிப்ராயம் சொன்னாள் இராஜேஸ்வரி.
தேவ்ராஜிற்கு அதில் மாற்று கருத்து எதுவும் இல்லை. மாப்பிள்ளை வீட்டில் பேசினார்கள். அவர்களுக்கும் திருமணத்தை விரைவாக நடத்துவதில் சந்தோஷம் என்று கூறிவிட, பாரதியின் திருமண நாள் நிச்சயமானது.
ஓட்டத்தில் குறியாக இருக்கும் தடகளவீரன் எவ்வளவு வேகமாக ஓடுகிறானோ அவ்வளவு வேகமாக மூச்சுக்காற்றை உள்ளிழுப்பான். அவனுடைய குறி ஓட்டத்திலும் இலக்கை அடைவதிலும்தான் இருக்கும். ஆனால் அவனுடைய உண்மையான தேவை என்னவோ மூச்சுக்காற்றுதான். ஓட்டத்தின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க தன்னை அறியாமல் அதிவேகமாக மூச்சை உள்ளிழுக்கும் தடகள வீரனைப் போல, கடமையை நிறைவேற்ற பரபரப்போடு சுழன்றுக் கொண்டிருந்தாலும்… இயல்பாக தினமும் மனைவியையும் குழந்தையையும் தேடி வந்து கொண்டிருந்தான் தேவ்ராஜ்.
ஆனால், அவனால் முன்பு போல் அதிக நேரம் அவர்களோடு செலவழிக்க முடியவில்லை. அதற்கு வேலை பளு ஒரு காரணம் என்றாலும், மதுராவின் அருகாமையையும் அந்நியத்தன்மையையும் ஒரே நேரத்தில் கையாளமுடியாத அவனுடைய தடுமாற்றம் தான் முக்கிய காரணம்.
தளும்பத்தளும்ப காதலை நெஞ்சில் நிறைத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினால், ஏதோ தூரத்து உறவுக்காரனைப் பார்ப்பதுப் போல் பார்க்கும் அவளுடைய பார்வையை சகிக்க முடிவதில்லை அவனுக்கு.
அதுமட்டுமா! அவளுடைய சிரிக்கும் கண்களும், முத்துதிற்கும் இதழ்களும் செய்யும் இம்சையிலிருந்து தப்பிக்கும் வழியறியாது தவிக்கும் போதெல்லாம் அவள் முகத்தை பார்ப்பதையும் அவளோடு பேசுவதையும் தவிர்த்தான். அப்படியும் அலைக்கழிக்கும் ஆசையிலிருந்து விடுபட முடியாத சந்தர்ப்பத்தில்தான் மாமனார் வீட்டில் தங்கும் நேரத்தை குறைத்தான்.
இப்படியே மூன்று மாதங்கள் கழிந்தன. அப்போதுதான் ஒருநாள், பாரதிக்கு வரன் பேசிக் கொண்டிருக்கும் விஷயம் நரேந்திரமூர்த்தியின் மூலம் பிரபாவதிக்கு தெரியவந்து, பிரபாவதியின் மூலம் மதுராவின் செவியை எட்டியது.
ஏற்கனவே தேவ்ராஜிடம் தெரிந்த மாற்றம் மதுராவிற்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தினமும் தவறாமல் வீட்டுக்கு வருகிறவன் குழந்தையிடம் மட்டும் நேரத்தை செலவு செய்துவிட்டு தன்னை கண்டுகொள்வதில்லை என்கிற வருத்தம் அவள் மனதை குடைந்துக் கொண்டிருந்தது.
முன்பெல்லாம் அவனுடைய பார்வை ஒருவித ஏக்கத்தோடு அவளை விடாமல் பின்தொடரும். அவனுடைய பேச்சில் ஒரு உரிமை இருக்கும். கோபமோ… சந்தோஷமோ… அவனுடைய மனநிலை எதுவாக இருந்தாலும், அவளை பார்க்கும் பார்வையில் ஒரு நெருக்கம் இருக்கும்… ஒரு அன்னியோன்யம் இருக்கும்… இப்போது அது எதுவுமே இல்லை.
அவன் அவளோடு பேசுவதே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அவளோடு சிறிதும் நேரம் கழிக்கவில்லை என்று கூற முடியாது. ஆனால் அந்த பழைய ஓட்டுதல் இல்லை… பிணைப்பு இல்லை… அந்த வெறுமையான கண்கள் வெகு அந்நியமாய் தோன்றியது அவளுக்கு. அந்த அந்நியத்தன்மையை அவள் துக்கத்துடன் உணர்ந்தாள். அந்த துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… விருப்பமும் இல்லை… ஊமை கண்ட கனவு போல மனதில் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் புழுங்கினாள். அந்த நேரத்தில்தான் பாரதியின் திருமண விஷயத்தை கேள்விப்பட்டாள்.
மனம் பொங்கிப்பொங்கி அடங்கியது. தினமும் வீட்டுக்கு வருகிறான்… அவளை பார்க்கிறான்… பேசுகிறான்…! ஆனால் குடும்பத்தில் நடந்து கொண்டிருக்கும் முக்கியமான விஷயத்தை பற்றி அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றவே இல்லையா! தன்னை அந்த குடும்பத்தில் ஒருத்தியாக நினைக்கவே இல்லையா! – உள்ளே வலித்தது. ஆனாலும் எள்ளளவு நம்பிக்கை அவள் மனதில் இருந்தது. இந்த விஷயத்தை பற்றி தானாக தன்னிடம் பேசுவான் என்று ஒவ்வொரு நாளும் காத்திருந்தாள்.
அதே எதிர்பார்ப்பைத்தான் தேவ்ராஜும் அவள் மீது வைத்திருந்தான். பாரதியின் விஷயத்தில் அவன் எவ்வளவு சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பது அவள் அறிந்ததுதான். இப்போது அவள் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டாள் என்று முதல் நாளே அவளிடம் ஓடிவந்து கூறினான். அதன் பிறகு ஒரு வார்த்தை அதைப் பற்றி என்ன ஏது என்று அவள் கேட்கவே இல்லை. நரேந்திரமூர்த்தியின் மூலம் திருமணப் பேச்சுவார்த்தை துவங்கிய முதல் நாளே அவளுக்குத் தெரியப்படுத்திவிட்டான். அதன் பிறகும் கூட வீட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அவனிடம் விசாரிக்கவில்லை… கவலைப்படவில்லை.
‘எங்கே இதை பற்றி பேசினால், வீட்டுக்கு வா என்று அழைத்துவிடுவானோ என்று எண்ணி ஒதுங்கியிருக்கிறாள்…’ – அவன் மனம் புண்பட்டது. மனைவியிடம் அவன் எதிர்பார்ப்பது அக்கறையாக ஒரு வார்த்தை மட்டும்தான். அதற்கு கூட தான் தகுதியற்றவனாகிவிட்டோமா என்கிற எண்ணத்தில் சற்று ஒதுங்கியிருந்தான். இந்த ஒதுக்கம் அவர்களுக்குள் ஒரு பனித்திரையைப் போட்டுவிட்டது. அதை கிழித்துக் கொண்டு வெளியே வர இருவருமே முன்வரவில்லை.
நாட்கள் செல்லச்செல்ல அவர்களுடைய எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் மனதை அழுத்தத் துவங்கியது. அந்த அழுத்தத்தை அவள் மீதிருந்த அன்பையும், அவள் மனதிலிருக்கும் காயத்தையும் முன்னிறுத்தி சமாளித்துக் கொண்டான் தேவ்ராஜ். ஆனால் மதுராவிற்கு முடியவில்லை. உள்ளே இருக்கும் அழுத்தம் பல நேரங்களில் கோபமாய் வெளிப்பட்டது.
அன்று வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நேராக மாமனார் வீட்டுக்கு வந்தான் தேவ்ராஜ். உள்ளே நுழையும் பொழுதே, “சார் என்ன பண்ணறாரு…” என்று மகனை கேட்டுக் கொண்டே வந்தான்.
“வாப்பா… வாப்பா… குட்டிப்பையன் தூங்கறான். இப்படி வந்து உட்காரு…” – மருமகனை வரவேற்று உபசரித்தார்.
டைனிங் ஹாலில், குழந்தையின் பால் பாட்டிலை ஸ்டீம் செய்து துடைத்து வைத்துக் கொண்டிருந்த மதுரா கணவன் வந்திருப்பதை அறிந்தும் வெளியே வராமல் அழுத்தமாக நின்றாள்.
வேலைக்கார பெண் காபி ட்ரேயோடு சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள்.
“யாருக்கு கொண்டு போற?” – மதுரா.
“சார் வந்திருக்காங்க…” – மதுரா காபி கப்பை பார்த்தாள். பால் கலந்த காபி இருந்தது. “யார் இதை ரெடி பண்ணினது?”
“அம்மா…”
‘எத்தனை தடவ சொன்னாலும் புரியாது’ – பல்லை கடித்த மதுரா, “பிளாக் காபி எடுத்துட்டு போ…” என்றாள் எரிச்சலுடன்.
அந்த பெண் சமையலறைக்குள் நுழையும் முன், “ஆஷா…” என்றாள். அந்த பெண் நின்று திரும்பிப் பார்த்தாள்.
“நா கொடுத்துக்கறேன். நீ போ…” என்று கூறிவிட்டு, செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு, சமையலறைக்குள் நுழைந்து அவனுக்கு விருப்பமான விதத்தில் கறுப்புக் காப்பியை கலந்து ஹாலுக்கு கொண்டுவந்தாள்.
“ரெண்டு தேதி இருந்தது. நமக்கு இதுதான் வசதி… அதான் பிக்ஸ் பண்ணிட்டேன்…” – மாமனிடம் பேசிக் கொண்டிருந்தான் தேவ்ராஜ்.
பாரதியின் திருமண தேதியைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துக் கொண்ட மதுராவின் முகம் கடுத்தது. அவன் முகத்தை பார்க்காமல் ட்ரேயை நீட்டினாள்.
மாமனிடம் பேசியபடியே மனைவியை நிமிர்ந்து பார்க்காமல் காபியை எடுத்துக் கொண்டான் தேவ்ராஜ். பார்த்து என்ன புண்ணியம்… அதுதான் அவள் முகத்தில் தகிக்கும் வெப்பம் இவனை சுட்டு பொசுக்குகிறதே!
சற்றுநேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்துவிட்டு பிறகு எழுந்து உள்ளே சென்றான். தொட்டிலில் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை வாஞ்சையோடு பார்த்தான். உள்ளே அழுத்திக் கொண்டிருந்த பாரமெல்லாம் வடிந்தது மனம் லேசாவதை உணர்ந்தான்.
கணவன் ஹாலில் அமர்ந்திருக்கிறான் என்னும் நினைவில் அறைக்குள் நுழைந்த மதுரா அங்கே அவனைக் கண்டு திகைத்தாள். அந்த கணத்தில் இருவர் ஒருவரை ஒருவர் நேருக்குநேர் பார்த்துவிட, திரும்பிச் செல்ல வழியில்லாமல் உள்ளே நுழைந்தாள்.
தேவ்ராஜின் பார்வை அவளை பின்தொடர்ந்தது. அதை அவள் உணர்ந்தாள். இருந்தும் அவன் பக்கம் திரும்பாமல் கர்ம சிரத்தையாக அலமாரியை அடிக்கிக் கொண்டிருந்தாள். சற்று நேரம் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன், “பாரதிக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு” என்றான்.
23 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Buvi Mani says:
Sema epi we want next epi quickly
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Subha Mani says:
Tdy ud Iruka ilaya mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Jeevikajayamala Jayaramoo says:
Madhu Konjam vitto kudugalam. I love you devnu solido challm .( lifela kathal Kovam.vittokodoppu.pidivatham.porumai ellame effalo mukiya idama irrukuratha intha noval solluthu.intha novel read panni ithula irruku lifeku theyana visayangala mathikanum. Nanum niraya kathukitan)thanx
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
latha sundar sundar says:
Very nice update mam
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Baladurga Elango says:
nice update…manam vitu pesunga rendu perum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Mehi Suresh says:
Madhu too much
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Saradha Sekar says:
Superb 👌
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sony Sri says:
Nice ud
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Skanatharajah Sutha says:
Super…….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
Madhu pothunda overa pannathaa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
Acho madhu athu un veedu. Nee than antha illathu arasi. Avano tanikaatu raja. Tholilil paayum puli. Illathil kutty puli. Mudalil amma vettu jaagaiyai maatru.
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
தேவ் மனச திடப்படித்திக்க நிச்சயமா பெருசா மதுரா பொங்கப்போறா
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Subha Mani says:
Super inum knjm big ah potunga and tomorrow next episode post panunga
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Dev good boy ya maaritta .mathu ma nee enn ippati irukka kovamo pasamo ethuva irunthalum velila kottuma .dozhi devukkum mathukkum pirachchanai ventamunu sollirungapa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Pon Mariammal Chelladurai says:
இறங்கி வர்றானா?
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Kani Ramesh says:
Epadi iruntha deva ipadi agitiye madhu manasula patatha solravan ipa unakaga amaithiya irukan… madhu pls dev kita pesu ellam ok agidum
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Banu Priya says:
Dev going good madhu only doing too much
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nithya Yuvaraj says:
Madhu reaction epadi iruku mo. Ipa dev ku pathila kovam padarnthu mathu va. Eagerly waiting for next epi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
இவர்கள் இருவரும் திருப்பியும் பிரச்சனையை கிளப்பபோகின்றார்களா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jansi r says:
அச்சோ எப்ப இவங்க ரெண்டு பேரும் சரியாவாங்க
பொதுவா எல்லோரும்
முதல்ல லவ் பண்ணுவாங்க
அப்புறம் மேரேஜ் அதுக்கு பின்னாடி குழந்தை..
இவங்க இப்ப பையன் பிறந்ததுக்கு அப்புறமாதான் பரபோஸ் செய்ற மாதிரி தடுமாறுறாங்களே…அடுத்த எபியில் பெரிய சண்டை வரும்னு எதிர்பார்க்கிறேன்.
மதுரா ப்ளீஸ் டோண்ட் டிஸப்பாயிண்ட்மெண்ட் அஸ் …ஹி ஹி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Sumithra Ramalingam says:
dev thanave vanthu solluran,madu reaction ennavo
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Dhivya Bharathi says:
Akka yena ipadi pathilaiye mudichitinga … plz. Wait panama epi podunga…. im waiting
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
kumudha devi says:
Wow… Kadaisiyaa dev opened…