Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-12

முகங்கள் – 12

 

“ஒரு நிமிஷம் ருத்ரபிரதாப்” சந்தனாவின் தெளிவான குரலுக்கு அவனது கால்கள் தாமாக நின்றன.

 

சற்றுமுன் பயத்தினாலும் பற்பல குழப்பங்களாலும் தெளிவற்றிருந்த சந்தனாவின் முகம் தற்போது தெளிவடைந்திருந்ததை ருத்ரன் கண்டு கொண்டான்.

 

ஓர் எதிர்ப்பை எதிர்பார்த்தே அவளை ஏறிட்டான்

 

“என் ரூம் எக்ஸ்ட்ரா சாவியை கொடுத்துட்டா சந்தோஷம். இப்படி கண்ட நேரத்துல கண்டவன் நுழையறதுக்கு இது நந்தினியோட ரூம் இல்ல ,என்னோட ரூம், மைன்ட் இட்” அவளது தெளிவான பேச்சும் ,நேர் பார்வையும்,தடையற்ற ஆங்கிலமும், என்னோட ரூம் என்பதில் அவள் கொடுத்த அழுத்தமும் அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. எதுவும் பேசாமல் தன் ஜிப்பா பாக்கெட்டிலிருந்த சாவியை அந்த அறையில் கிடந்த டீபாயில் பொத்தென வீசினான்.

 

அவளது கண்கள் அவனை இகழ்ந்தன ‘ஒரு பெண்ணின் ரூம் சாவியை அவளுக்கு தெரியாமலே வைத்திருக்கிறான், பிறகு சாத்திய ரூமில் அவளுக்கு என்ன பாதுகாப்பு? ‘

 

அவனது கண்கள் அவளை முறைத்தன ‘இந்த சாவி இருந்ததால்தான் தக்க நேரத்தில் இங்கே வரமுடிந்தது, இல்லையென்றால் பயத்தில் வெட வெடத்து செத்திருப்பாள், ஆனால் அது புரியாமல் தன்னையே குற்றவாளி போல் பார்ப்பவளை பார்க்க அவனுக்கு கோபமாக வந்தது, எங்கே கோபத்தில் ஏதாவது செய்துவிடுவோமோ என்கின்ற பயத்தில் முகம் இறுக்கமுற முன்னோக்கி நடந்தான் ருத்ர பிரதாப்

 

பிரகாஷின் மனம் குழம்பியது ‘அந்த கண்டவன் பட்டியலில் நாம இல்லையோ? ருத்ரனை மட்டும் தான் பாத்து பேசறாங்க. அவங்க டார்கெட் ருத்ரன் தான்னு நல்லாவே தெரியுது. ஆனா நாமளும் தானே அந்த குகைக்குள்ள இருந்தோம்???? ஒரு வேளை  மறந்துட்டாங்களா,???? எப்படியோ அவங்களுக்கு நம்ம மேல கோபமில்லை. அது போதும் ” மனதிற்குள் நிம்மதி படர்ந்தபோதும் அங்கே நிற்காமல் ருத்ரனுடன் வெளியேறிவிட்டான். அவர்கள் வெளியேறியதும் ஓங்கி அரையப்பட்ட கதவின் சத்தம் ருத்ரபிரதாப்பின் செவிப்பரையை கிழித்தது.

 

************************************

 

படுக்கையில் பல மணி நேரமாக புரண்டு கொண்டிருந்தான் கிருபாகரன். சட்டென படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான்.

 

கண்கள் கடிகாரத்தை நோட்டமிட்டது, மணி விடியற்காலை நான்கு என்று காட்டியது.

 

படுக்கையிலிருந்து எழுந்தவன் ஃபிரிட்ஜை திறந்து பாட்டிலில் இருந்த குளிர்ந்த தண்ணீரை கடகடவென குடித்து முடித்தான்.

 

மீண்டும் படுக்கையில் அமர்ந்த அவனை குழப்பம் சூழ்ந்து கொண்டது.

 

ஏனோ தெரியவில்லை கண்களை மூடினாலே நந்தினியின் கண்கள் கண்முன் நிற்கிறது. அவளது கண்கள்????? அதில் ஏதோ!!!!!!’

 

அந்த கண்கள் அவனிடம் ஏதோ கூற விழைவதை அவனால் உணர முடிந்தது. ஆனால் அது என்ன???

 

இது வரை எத்தனையோ இன்வஸ்டிகேஷன்களை எதிர்கொண்டிருக்கிறான், ஆனால் தூக்கமின்மை அவனுக்கு ஒரு போதும் வந்ததில்லை. இதில் மட்டும் ஏன்????

 

இன்னமும் சந்தனா கேஸை அவன் முடிக்கவில்லைதான். அதற்குள் இரண்டு கிரைம் கேஸ் அவசரமாக முடிக்கவேண்டிய கட்டாயத்தில் வந்துவிட இதனை தள்ளிப்போட்டிருந்தான்.

 

உடன் வேலைபார்க்கும் தோழன் ரவியும் அதைத்தான் கூறினான். “சந்தனா கேஸ் ரொம்ப சிம்பிளான கேஸ். அது ஒரு ஆக்சிடன்ட்தான். கேஸ் ஃபைலை பாத்தாலே தெரியுது. நீ ஏன் வளவளன்னு வளக்கற? சீக்கிரம் முடிச்சா அடுத்த ஃபைலை எடுக்கலாமே??” என்று

 

ஆனால் அவனுக்கு தான் மனம் வரவில்லை. போலீஸ் இன்ஸ்ட்டிங்ன்ட் .அதிலும் இப்போது அவனை தூங்க விடாத அந்த கண்கள் அவனை ஏதோ செய்தது.

 

‘நாளை முதல் வேலை நந்தினியை பார்ப்பதுதான் ‘ என்று முடிவெடுத்தபின்புதான் அவனது மூளையும் மனமும் அமைதியடைந்தது. அவனுக்கு தூக்கமும் வந்தது

 

************************************

 

மார்பிள் ரெசார்ட் :

 

தனது அறையினில் புரொடியூசருடன் மீட்டிங்கில் இருந்தான் ருத்ரபிரதாப்

 

கதவை இரண்டு முறை தட்டிவிட்டு உள்ளே வந்தார் வேனுகோபாலன்.  “சார் உங்கள பாக்க இன்ஸ்பெக்டர் கிருபாகரன் வந்திருக்கிறார் ”

 

கண்கள் கூர்மையுற்ற பொழுதும் அதனை முகத்தில் காட்டாமல்.

 

“வரச்சொல்லுங்க வேணு ” என்றான்

 

புரொடியூசரிடம் “ஓ.கே சஞ்சய் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடலாம். ஈவினிங் நம்ம மீட்டிங் ஸ்பாட்ல சந்திக்கலாம் ”

 

“ஓகே ருத்ரன்” – தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்

 

அவன் வெளியேறவும் கிருபாகரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

 

கிருபாகரனை பார்த்ததும் அவனை வரவேற்க்கும் நோக்குடன் எழுந்து நின்றான் ருத்ரபிரதாப்

 

“வாங்க மிஸ்டர். கிருபாகரன் ஹௌ ஆர் யூ?? ” ஸ்நேகமாய் கைநீட்டினான்

 

“ஃபைன் மிஸ்டர்.ருத்ரபிரதாப் தேங்க்யூ” நீட்டிய அவனது கைக்குள் தன் கையை கொடுத்து குலுக்கினான்

 

“டேக் யுவர் சீட் ” –

 

“ஷூயர் ” –

 

“ஹௌ கேன் ஐ  ஹெல்ப் யூ? ” –

 

“சந்தனா டெத் கேஸ் இன்னமும் க்ளோஸ் பண்ணலை அது விஷயமா கொஞ்சம் விசாரிக்கனும் ”

 

“சொல்லுங்க கிருபாகரன் என்ன விசாரணை?” அவனது கேள்விகளுக்கு தயாராவது போல் நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்தான்.

 

“இல்லை விசாரணை உங்க கிட்ட இல்ல நந்தினி மேடம் கிட்ட தான்” சொல்லியவரின் கண்கள் கூர்மை பெற்றன

 

“அப்போ  ஸ்ட்ரையிட்டா அவங்க ரூமுக்கே போயிருக்கலாமே. பக்கத்து ரூம் தான்.” என்றான் சாதாரணமாகவே

 

“பிரகாஷ் சாரையும் நந்தினி மேடமையும் இங்க வரவைக்க முடியுமா மிஸ்டர் ருத்ரபிரதாப்” என்று முடித்தவர் ருத்ரபிரதாபின் முகத்தை உற்று பார்த்தார் ஆனால் அதில் எந்த மாற்றமும் இல்லை

 

“ஓ.எஸ் ” என்றவன் செல்பேசியை எடுத்தான்

 

முகங்களின் தேடல் தொடரும்

 




6 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    superruuuuuuuuuu


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    கிருபாகரனின் இந்த ஆர்வத்தை பார்த்தால் ருத்திரனின் ஆள்மாறட்டத்தை கண்டுபிடித்து சந்தனாவை இதிலிருந்து காப்பாற்றுவாரா.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Girubakaran crt pointe pitiththu vittar antha nulla pitiththu ponal ruthra kantippa maattuvan.sathana thappichchuruva pavam ava.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Sandhana aval yedhipai kaata aarambichuta super….but Prakash ninaichamaadhiri aval yen rudran na mattum target panra? Kirubakaran edhavadhu kandupidipara?


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    Santhana semma


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nithi Mayil says:

    Super interesting ah eruku….

You cannot copy content of this page