Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-14

அத்தியாயம் – 14

 

ஷூட்டிங் முடிந்து அதிக களைப்புடன் அறைக்கு திரும்பினாள் சந்தனா. உடல் களைப்பை விட மனக் களைப்பு தான் அதிகமாக தோன்றியது அவளுக்கு. எப்போது இந்த படம் முடியும்???  அப்படி முடிந்துவிட்டால் பிறகு அவள் யார் ? நந்தினியா?? சந்தனாவா???? சந்தனாவின் சடலத்தை தான் தகனம் செய்து விட்டார்களே. அப்படியானால் இறுதிவரை இந்த அரிதாரத்தை பூசத்தான் வேண்டுமா?  முடியவே முடியாது!  அது நிச்சயம் முடியாது. இதற்கு முடிவுதான் என்ன??

 

இந்தப்படம் முடிந்ததும். எப்படியேனும் அந்த வீடியோவை டெலீட் செய்ய வைத்துவிட்டு. ஒரு பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்து இனி நடிப்பதில்லை என்பதை கூறிவிடவேண்டும். ஆனால் டெலீட் செய்வானா? இப்படி கொஞ்சமும் கருணையில்லாத மனிதன் இருப்பானா? இவனை பெற்றவளும் ஒரு பெண் தானே??

 

இவனது படம் முடிந்து விட்டால் விட்டுவிடுவான் தானே!!!???? . விட்டுவிட வேண்டுமே????  ஆனால் எவ்வளவு யோசித்தும் ஒன்று மட்டும்தான் புரியவேயில்லை. தன் படத்தின் மீதும் சினிமாவின் மீதும் இத்தனை ஈடுபாடுள்ளவன் எதற்காக படப்பிடிப்பின் நடுவில் நந்தினியை கொல்ல வேண்டும்?? படப்பிடிப்பு முடிந்த பிறகே செய்திருக்கலாமே.???

 

கடுமையாக யோசித்த பின் , இந்த கேள்விக்கான பதில் அவளுக்கே தெரிந்துவிட்டது. அப்படி செய்திருந்தால் புது நந்தினியை எப்படி உருவாக்குவது?. போலீஸ் அவனை பிடித்து விடுமே. நடிப்பிலும் சரி மற்ற விஷயங்களிலும் சரி இவளை நந்தினியாக மாற்றிவிட்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடலாம் , அதற்கான அவகாசம் தானே இந்தப் படப்பிடிப்பு.

 

கிருபாகரன் உண்மையை கண்டுபிடித்துவிடுவாரா?

 

பாவம் அவரும் எவ்வளவோ முயல்கிறார் தான், ஆனால் அதற்குள் இவனது பணம் வேலை செய்து விடுகிறது.

 

இப்படி பற்பல எண்ணங்களோடு குளியலை முடித்தாள். பஞ்சுபோன்ற  துவலையால் தலையை துவட்டியபடியே வெளியேறியவளின் கால்கள் அங்கே கட்டிலில் உரிமையாய் அமர்ந்திருந்தவனை பார்த்ததும் நிலத்தில் வேறூன்றி விட்டன.

 

சட்டென மீண்டவள் தூவாலையை எடுத்து தன் இரவு உடையை மறைத்தார் போல் போட்டுக்கொண்டாள்.

 

“ஹோ.. சஞ்சய் … நீங்களா? இப்போதானே குட்நைட் சொல்லிட்டு புறப்பட்டீங்க . ஏதாவது முக்கியமா பேசனுமா படத்தை பத்தி ” படத்தில் ஓர் அழுத்தம் கொடுத்தே பேசினாள் சந்தனா. அவனது கண்களை ஊடுறுவ முயன்றாள். அவள் பயப்படும் விஷயம் நடந்துவிடுமோ என்று உள்ளுக்குள் அஞ்சினாள்.

 

“ருத்ரனிடம் கொடுத்துவிட்டபிறகு படத்தை பற்றி பேச எதுவுமே இல்லை நந்தினி. ” என்றான் ஒரு மாதிரிக்குரலில்

 

‘பிறகு என்ன? ‘ என்பது போல் ஓர் நடுக்கத்துடனே அவனை ஏறிட்டாள்

 

“என்ன நந்தினி, இது தான் முதல் முறை போல இப்படி பாக்குற ” – மெல்ல அவளருகில் வந்தான்.

 

‘அய்யோ! இவன் எதை கூறுகிறான் ‘ –  பயத்திலும் கோபத்திலும் கண்கள் செம்மையுற்றன, தைரியத்தை இழுத்துப்பிடித்து

 

“சஞ்சய் இன்னைக்கு ஷுட்டிங்ல அதிக களைப்பு. எதுவாயிருந்தாலும் காலையில பேசிக்கலாம். ” கொட்டாவி விடுவது போல் பாவனை செய்தாள்.

 

“டார்லிங். பிளீஸ் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா? ” என்றான் கிரக்கத்துடன்

 

அழுகை வேறு இப்போது வரவா அப்போது வரவா என்று கேட்டது.  எச்சிலை விழுங்கி கண்ணீரை அடக்கி சிந்திக்க முயன்றாள்

 

‘பூட்டியிருந்த அறைக்குள் இவன் எப்படி? ” – உடனே பொரிதட்டியது

 

அவள் சிந்தித்த சில வினாடிகளை தனக்கு சாதகமாக்கிக்கொண்டவன் அவளை நெருங்கி அவளது கைகளை பற்றினான்.

 

ஒரு திடுக்கிடலுடன் அவனது கைகளை தட்டிவிட்டவள். அவனது கண்ணத்தை பதம் பார்த்தாள்.

 

கன்றிச்சிவந்த தன் கன்னத்தை தேய்த்தவன். அவள் தன்னை அடித்துவிட்டதை உணர்ந்து சினத்துடன் நிமிர்கையில், அவள் அங்கே இல்லை.

 

நடந்தவற்றை யூகித்து வேகமாக கதவை நெருங்கியவனுக்கு ஏமாற்றமே. அது வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது.

 

**************************************************************************

 

 

தன் அறையினுள் புயலென நுழைந்த சந்தனாவை ஓர் ஆச்சர்யத்துடன் எதிர்கொண்டான் ருத்ரன்.

 

அவனும் அப்போதுதான் குளித்திருப்பான் போலும் இடுப்பில் ஒரு டவலும் உடல் முழுவதும் நீர்முத்துக்களுடனிருந்தான்.

 

இது எதுவுமே அவளுடைய கண்களுக்குத் தெரியவில்லை. நேரே அவனது விழிகளை குரோதத்துடன்  சந்தித்தவள்

 

“என்ன மாமா வேலை பாக்கறியா?  த்தூதூ…. வெக்கமாயில்லை. ஏன் டைரக்டர் தொழிலில் வரும் வருமானம் பத்தலையோ?  ச்…சீ… நீயும் ஒரு மனுஷனா. கூட்டிக் கொடுக்க நான் தான் கிடைச்சேனா? ??? ”  உதடுகள் துடிக்க வார்த்தைகள் வரம்பு மீறி வெளியேறின.

 

“ஸ்ஸ்ஸ்ஸ்டாடாப்பிட்… ” கோபத்தில் அவனது முகம் சிவந்தது. அவளை அடித்துவிட துடித்த கைகளை இறுக மூடிக்கொண்டான்

 

அவனது பேச்சு சந்தனாவின் கோபத்தை பல மடங்கு அதிகப் படுத்திவிட்டது.

 

“என்னடா செய்வ???  கொல்லுவியா?  கொல்லு!!!!  ”

 

ஆக்ரோஷமாக அவனருகில் வந்து நின்றவளின் கண்களில் கண்ணீர் தேங்கிற்று.

 

சட்டென தன் கண்களை மூடிக்கொண்டான் ருத்ரன்

 

வேகமாக பல மூச்சுக்களை உள்ளிழுத்து வெளியேற்றினான்.

 

எதிர்மறையான வாக்கியத்தை எதிர்பார்த்திருந்து நெருப்பை உமிழ தயாராகயிருந்த சந்தனாவை, அவனது அமைதி சமன்படுத்தியது. அவளது கோபத்தை குறைத்தது.

 

அவன் மெல்ல கண் திறப்பதை பார்த்தவள் உடனே வேகமாக மூச்சை உள்ளிழுத்து கத்தத் தொடங்கும் முன், சட்டென அவளது வாயை தன் வலிய கரத்தினால் மூடினான்.

 

அவளது விழிகளை நேருக்கு நேர் சந்தித்து. “என்ன நடந்தது?  விவரமா சொன்னா தான் எனக்கு புரியும்.  ஒழுங்கா பேசுறதா இருந்தா பேசலாம். இல்லேன்னா நீ உன் ரூமுக்கு போகலாம் ” அவனுமே களைத்துதான் இருந்தான் இதில் தினம் தினம் இவளால் வேறு பல பிரச்சனைகள்.

 

ரூம் என்ற வார்த்தையை கேட்டதும் துள்ளி குதித்து தன்னை விடுவித்துக்கொண்டாள். அவனும் அதிக பலம் காட்டவில்லை.

 

“ரூ….ரூ….மா???  நான் போகமாட்டேன் ” அச்சத்தில் அவளது உடல் நடுங்கியது

 

“அப்போ இங்க இருக்கப் போறியா?  இப்போ கொஞ்ச நேரத்துல இங்க ஜென்சி வருவாளே ” – ஓர் அர்த்தப் புன்னகையுடன் சர்வ சாதாரணமாக கூறினான்

 

ஓர் அருவருப்பான பார்வையை அவனிடம் செலுத்தியவள்  “அந்த ஜென்சியை என் ரூமிற்கு அனுப்பிடு “அங்கதான் நீ அனுப்பின பொம்பள பொருக்கி இருக்கானே! ”

 

“என்ன சொல்ற?   உன் ரூம்ல யார்? ” கலவரமான அவனது முகம் அவளை குழப்பியது.

 

இருப்பினும் இவன் சாவியை கொடுக்காமல் கண்ட நாயும் எப்படி பூட்டிய ரூமின் உள்ளே வரும்?  மட்டு பட்டிருந்த கோபம் மீண்டும் தலை தூக்கியது.

 

“நடிப்பு சொல்லிக்கொடுத்து சொல்லிக்கொடுத்து நீ மாஸ்டர் வாங்கிட்ட. என்ன நடிப்பு!!!!!.சாவிய கொடுத்து ஒரு நாயை என் ரூமுக்கு அனுப்பினியே, அவன் கிட்ட எவ்வளவு பணம் வாங்கின? .”

 

“என்ன உளரல்” கோபத்தில் அவனது குறல் கடுத்தது

 

“உளரலா????  இந்த நடு ராத்திரில உலகத்திலேயே நான் அதிகமா வெருக்கும் உன் ரூமூக்கு வந்து உளர எனக்கு வேண்டுதல் பார் ” நக்கலாகவே பேசினாள்

 

சில நொடி அமைதிக்கு பின்  “உன் ரூமில் இருப்பது யார்? ”

 

“உனக்கு பணம் கொடுத்தவன்தான். வேறு யார்? ” எரித்துவிடுவது போல் பார்த்தாள்

 

அவளை ஒருமுறை ஆழப்பார்த்தவன். பாத்ரூமை நோக்கி நடக்கலானான்.

 

“இப்…போ.. எங்க போற…????” – தான் இப்படி கத்துகிறோம் அவன் எனக்கென்ன என்பது போல் போவது சரியா?  என்று கோபம் எழுந்தது

 

“இப்படியே இந்த நேரத்தில் உன் ரூமுக்கு போனா நாளைய தலைப்புச்செய்தி நம்ம தான், எனக்கு கிசு கிசு பிடிக்காது ” என்றவன் கைகளை கட்டிக்கொண்டு நின்றான்

 

அப்போதுதான் அவனது தோற்றத்தை கவனித்தாள். மேலாடை இல்லாமல் அவன் டவலுடல் நிற்பது கவனத்தில் பட சட்டென அவனுக்கு முதுகுக்காட்டி நின்றாள்.வேகமூச்சுக்களை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்

 

முகங்களின் தேடல் தொடரும்….




6 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    சஞ்சய் ஏன் சந்தனாவிடம் அப்படி நடந்துகொள்ளனும்,சஞ்சய்தானே கிருபாகரனிடம் கவனமாய் இரு ,சந்தனாவை கவனமாய் பார்த்துக்கொள் என்று சொன்னார் ,பின் ஏன் இப்படி,அங்கே இருப்பது நந்தினி இல்லை அது சந்தனா என்று தெரியும்தானே ,சந்தனாவை ருத்திரன் பக்கம் திருப்புவதற்காகவா அல்லது மனசு மாறி கிருபாகரனுக்கு உளவு பார்க்கவா சஞ்சய் இப்படி அநாகரீகமாக நடக்க முயன்றார்.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      உங்களது சில கேள்விகள் என்னை சிந்திக்க வைக்கின்றன தோழி, முதலில் உங்கள் கேள்விகளுக்கு நன்றி, சஞ்சய் பெண்கள் விஷயத்தில் week, சந்தனாவை பார்த்ததும் தடுமாரிவிட்டான், அவளை கவனமாக பார்த்துக்க சொன்னது படத்திற்காக, அது வேற department. புரிஞ்சிருக்கும்னு நினைக்கரேன். நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    Kiruubaakku ithu oru cluevaa

    S


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Irukalamo???? Thanks for ur comments pa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Ayyo ruthra un akkaporukku slave illa po.super.very interesting .


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Thank u pa

You cannot copy content of this page