முகங்கள்-15
2210
5
அத்தியாயம் 15
சந்தனாவின் அறையின் வெளித்தாப்பாளை விடுவித்து உள்ளே நுழைந்த ருத்ரன் அதிர்ச்சியில் உறைந்தான்.
“நீ….யா…!!!!?”
கன்னத்தில் கைவைத்து கட்டிலில் அமர்ந்திருந்தான் சஞ்சய்
சந்தனா வந்து புகார் கொடுத்ததும் எப்போதும் நடிகைகளுக்கு தொல்லை கொடுக்கும் சில ஈனப்பிறவிகளுள் ஒருவன் என்று தான் நினைத்தான். அப்போதும் பெரிதாக அவன் எதுவும் சிந்திக்கவில்லை நந்தினி என்று தான் இவளை நெருங்கியிருப்பார்கள் ஏதாவது சொல்லி சமாளித்து விடலாம் என்று தான் அவன் அங்கு வந்ததே. ஆனால் சஞ்சய்யை பார்த்ததும் அவனுள் எரிச்சல் மூண்டது.
“வாட் இஸ் திஸ் சஞ்சய்??? ” என்றான் கோபமாக
சட்டென கட்டிலிலிருந்து எழுந்தவன்
“வா ருத்ரா, தேங்க் காட் நீ வந்த. இந்த நந்தினிக்கு எவ்வளவு திமிர் பாத்தியா. கைய நீட்டி என்கிட்ட காசு வாங்கற நாய் என்னையே கைநீட்டி அடிக்குது.” அவன் முகத்தில் கோபம் கொப்பளித்தது
கைகளை கட்டிக்கொண்ட விரைப்பாய் நின்ற ருத்ரபிரதாப்
“முதல்ல அவ நந்தினியில்ல சந்தனா, ரெண்டாவது உன்கிட்ட காசு வாங்கிறது நான் மட்டும்தான் அதைவிட பல மடங்கு அதிகமா உனக்கு லாபம் வந்திடும். அதுமட்டுமில்ல ,நீ கொடுக்கற காசு நாங்க செய்யற வேலைக்குதான், இந்த மாதிரி அசிங்கத்துக்கு இல்ல, ” அவனது குரலில் ஒரு அழுத்தம் இருந்தது
“அட நீ என்னப்பா அவளுக்கு சப்போர்ட்டா? ” ஏளனமாகவே கேட்டான்
அடக்கி வைக்க முயன்ற கோபம் எட்டிப்பார்க்க “எனக்கு கீழ வேலை பார்க்கிறவங்க யாரையும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது, அண்ட் யூ நோ ஐ டோன்ட் லைக் சச் அ நான்சன்ஸ் இன் மை செட், மைன்ட் யூ” என்றான் கடித்த பற்களிடையே
“யோசிச்சு பேசு ருத்ரா நான் இந்த படத்தோட புரொடியூசர் ” திமிராக பேசலானான் சஞ்சய்
ருத்ரபிரதாப் மட்டும் சளைத்தவனா என்ன, “நீயும் யோசிச்சு பேசு சஞ்சய் இப்போ கூட நான் இந்த படத்துலயிருந்து பேக் அவுட் பண்ண ரெடி ” மிரட்டும் கண்களால் சஞ்சய்யை முறைத்தான்
“வாட்.????!!!! ருத்ரா நீ என்ன பேசறேன்னு தெரிஞ்சிதான் பேசறியா? ” நம்பமுடியாமல் தடுமாறினான் சஞ்சய்
“………” முக இறுக்கத்துடன் அமைதி காத்தான் ருத்ரபிரதாப்
“வெய்ட் வெய்ட் இப்போதான் எனக்கு எல்லாம் புரியுது ஷுட்டிங் முடியறவரைக்கும் சந்தனாவை சாந்தமா வெச்சிக்கனும்னு நினைக்கிற அதுதானே?” இறங்கி வந்தான் சஞ்சய்
“அப்படியும் வெச்சுக்கலாம் ” அவனது முக இறுக்கம் துளியும் குறையவில்லை
“ஒகே ருத்ரா படம் முடியட்டும் அப்புறம் பார்த்துக்கிறேன். எங்க போயிட போறா? ” படப்பிடிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக வளைந்து கொடுத்தான் சஞ்சய்
ருத்ரனுக்குமே இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தும் எண்ணம் இல்லை. படப்பிடிப்பு தடைப்படுவது அவனுக்கு எப்போதுமே பிடிப்பதில்லை.
அதனால் சஞ்சய்யின் இறுதி பேச்சை விடுத்தவன் வேறு கேள்வி கேட்டான்
“ரூமுக்குள்ள எப்படி வந்த சஞ்சய்? ” – கண்களில் கூர்மை ஏறியது.
” அது…து… நான் உன்னை பாக்க தான் வந்தேன் ருத்ரா, நந்தினியோட ரூம் கிராஸ் பண்ணும்போது ஏதோ ஒரு எண்ணத்துல கைவச்சேனா அவ சரியா லாக் பண்ணலைன்னு நினைக்கிறேன் கதவு தானா திறந்துடுச்சு. அப்புறம் நடந்தது எல்லாமே அவுட் ஆப் மை கண்ட்ரோல். ” அப்பாவி போல் பேசுபவனை எரித்து விடுவது போல் பார்த்த ருத்ர பிரதாப்
“உண்மையை மட்டும் பேசு சஞ்சய். கதவை லாக் பண்ணாம இருக்க வாய்ப்பே இல்ல…டூப்ளிகேட் கீ எங்க கிடைச்சது.? ”
அவனை குழப்பமாக பார்த்த சஞ்சய் ” தெரிஞ்சே கேட்கறியே ருத்ரா. இந்த ஹோட்டல் வொர்கர்ஸ் எல்லாருமே உன்னோட விஸ்வாசிகள் எனக்கு எப்படிப்பா டூப்ளிகேட் கீ தருவாங்க.ஏதோ கதவு திறந்திருந்ததேன்னு வந்தேன். ஓங்கி விட்ட அரையில எல்லாமே மறந்தும் போயிடுச்சு போ” மீண்டும் சிவந்திருந்த கன்னத்தை தடவிக்கொடுத்தான்
அவன் உண்மையை பேசியும் அவனை கண்களால் ஆராய்ந்து கொண்டிருந்தான் ருத்ரன்
இதற்குமேல் இங்கே நிற்பது சரியில்லை என்று புரிய “ஓ.கே ருத்ரன் குட் நைட், ” என்று கதவை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தவன். ருத்ரபிரதாப்பை திரும்பி பார்த்து. “ஒன்னு மட்டும் எனக்கு புரியவேயில்ல ருத்ரா.. உனக்கு மட்டும் எப்படி விஸ்வாசிகளா மாட்றாங்க??? ”
பதில் ஏதும் பேசாமல் ருத்ரன் சஞ்சய்யை முறைத்தான்
“எ…எ…எதுக்கு சொல்றேன்னா, நான் தப்பா நடந்தும் நான் நந்தினி இல்லன்னு சந்தனா சொல்லவே இல்ல தெரியுமா.? ஐ ஆம் இம்ப்ரஸ்ட். ” என்று கையால் கன்னத்தை தேய்த்துக்கொண்டே வெளியேறியவனின் கண்களில் குரோதம் இருந்தது. மனதில் வன்மம் குடியேறியது. தன்னை அடித்த சந்தனாவின் வாழ்வை அழிக்கவில்லை என்றால் சஞ்சய் உயிருடன் இருப்பது வேஸ்ட்.
அவன் கண் பார்வையிலிருந்து அகலும் வரை அவனது முதுகையே வெறித்திருந்த ருத்ரபிரதாபின் மூளைக்குள் என்ன ஓடியது என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்
முகங்களின் தேடல் தொடரும்……
Next ud – Monday
5 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
என்ன இன்று ருத்திரபிரதாப் கொஞ்சம் நல்லவராய் தெரிகின்றார்,ஆனாலும் சுயநலவாதிதான்,இந்த சஞ்சய்க்கு இன்னும் நாலு அடி கொடுத்திருக்கணும் சந்தனா.
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
jothi jk says:
Aduthu yenna nadakkumnu Thrilling ah irukku.. Chanthana bayapadara antha video yenna nanthiniya yen kolai panninanga… Thookamae varala yosichu yosichu .. Sema
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Rexi Anto says:
Nice
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
interesting ud sis
innummmmm yenaavellaam pannaporaanooooooo
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
Dei rudhrapratap nee enna avvalavu nallavana? But idhulayum un suyanalam velipattuchu paarthiya…..padam nallabadiya mudiya dhaan ivvalavu nallavana aaniya nee…