Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல்

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 102 (FINAL)

அத்தியாயம் – 102

“இதுக்குதான் மூணு பேரும் நைசா நழுவி மாடிக்கு போனீங்களா!” – உறங்கும் மகனை தொட்டிலில் இட்டபடி கேட்டாள் மதுரா.

மிதக்கும் கண்களால் மனைவியை ரசித்தபடி, “பார்ட்டி டைம் ஹனி… ட்ரிங்க் இல்லன்னா எப்படி?” என்று குழைந்தான்.

“பார்ட்டி டைம் இல்ல… பேமிலி லஞ்ச்… அவ்வளவுதான்… உங்களுக்கு ட்ரிங்க் பண்ணனும். அதுக்கு இது ஒரு காரணம்…”

“டோன்ட் கெட் மேட் அட் மீ ஸ்வீட்டி… ஐ ஜஸ்ட் வாண்ட்டெட் டு என்ஜாய் எவெரி சிங்கள் மொமெண்ட் வித் மை ஹோ…ல் பேமிலி டுடே… தே ஆர் மை பேமிலி… ஐ என்ஜாய்ட் வித் தெம்… ஐம் சோ ஹாப்பி நௌ… டோன்ட் கெட் மேட் அட் மீ டார்லிங்” – ‘என் மேல கோவப்படாத செல்லம்… இன்னைக்கு ஒவ்வொரு நிமிஷத்தையும் என்னுடைய மு..ழு… குடும்பத்தோட என்ஜாய் பண்ண விரும்பினேன். அவங்க எல்லாரும் என்னோட குடும்பம்… அவங்களோட நா என்ஜாய் பண்ணினேன். இப்ப நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… என் மேல கோவப்படாத டார்லிங்…’ – போதையில் பேசினாலும் மனதிலிருந்து பேசுகிறான் என்பதை உணர்ந்தாள் மதுரா.

தன்னுடைய குடும்பத்தை அவனுடைய குடும்பமாக நினைக்கிறான் என்பது அவளுக்கு பெரிய ஆச்சர்யம். நம்ப முடியவில்லை. ஆனால் அவன் முகத்திலிருந்த உண்மை அவளை நெகிழ்த்தியது. கனிவோடு கணவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ஆங்…! தட்ஸ் மை ஸ்டராபி…. தட்ஸ் மை ஸ்வீட் ஸ்டராபி…” – எழுந்துச் சென்று அவள் எதிரில் நின்று இரு தோள்களிலும் கையைப் போட்டான். சட்டென்று அவளுக்குள் இருந்த ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் வெளிப்பட்டாள்.

“ஒழுங்கா போயி படுத்துடுங்க… நீங்க ரெண்டு பேரும்தான் அராத்து… துருவன் பாய் பாவம்… அவரை ஏன் உங்க டீம்ல சேர்த்தீங்க?” என்றாள் கண்டிப்புடன்.

“யாரு? யாரு பாவம்? துருவனா! இந்த வீக் எண்ட் ஸ்டார் நைட் பிளான் பண்ணியிருக்கான். அவனா பாவம்?” என்றான் சிரித்துக் கொண்டே…

“ஸ்டார் நைட்டா! துருவன் பாயா! கதை விடாதீங்க… அதெல்லாம் உங்க வேலை…” – செல்லமாக அடித்தவள் சட்டென்று நாக்கைக்கடித்தாள். ‘கோவப்படப் போறான்’ – சிறு பயம் தோன்றியது.

ஆனால் அவனுக்கு எந்த மனநிலை மாற்றமும் ஏற்படவில்லை. மனைவியின் செல்ல அடிகளை இன்பமாக ஏற்று, “ஸ்ரீ ராம்!! ஸ்ரீ ராம்!!!” என்றான் சிரிப்புடன்.

மதுரா குஷியாகிவிட்டாள். இந்நேரம் பழையா தேவ்ராஜாக இருந்திருந்தால் ரகளை செய்திருப்பான். விளையாட்டாகக் கூட பெண்கள் விஷயத்தில் அவனுடைய ஒழுக்கத்தைப் பற்றி ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. ஆனால் இப்போது விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டது. இது போதாதா!

மனம்கொள்ளா மகிழ்ச்சியோடு அவன் மார்பில் சாய்ந்துக் கொண்டு, “ட்ரிங்க் பண்ணறதை விட்டுட்டீங்கன்னு நெனச்சேன்” என்றாள்.

அவளை இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பிறகு, “விடணுமா?” என்றான்.

“லைட்டா எடுத்துக்கிட்டா ஒண்ணும் பிரச்சனை இல்ல… ஆனா உங்களுக்கு கண்ட்ரோல் இருக்க மாட்டேங்குது. ட்ரிங்க் பண்ணும் போதெல்லாம் ரொம்ப வயலெண்டா ஆயிடுவீங்க. இன்னைக்கு பயந்துகிட்டேதான் இருந்தேன்…”

“சீரியஸ்லி?” – அவளுடைய முகத்தை கைகளில் ஏந்தினான். அவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள். சற்று நேரம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவோடு கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான். பிறகு அவள் நெற்றியில் இதழ்பதித்து, “இன்னைக்கு தான் கடைசி…” என்று உறுதியளித்தான்.

***********

தேவ்தர்ஷன், தந்தையின் மறு பிரதி என்பதை தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் அழுத்தமாக பதிவு செய்து கொண்டிருந்தான். ஜூஹூவில் இருந்ததை விட இங்கு வந்த பிறகு இன்னும் கொண்டாட்டம் போட்டான். அதற்கு முதல் காரணம், கால் முளைத்த பிள்ளைக்கு பெரிய வீடு வசதியாக இருந்தது. இரண்டாவது காரணம் ரோச்சர். அந்த வேட்டை நாயோடு விளையாடுவதென்றால் அவனுக்கு கொண்டாட்டம். ஆனால் இவை இரண்டிற்கும் மேலாக இன்னும் ஒரு காரணமும் இருந்தது. அது அவனுடன் சரிக்கு சரி அலுக்காமல் விளையாடும் அவனுடைய தந்தை…

அலுவலகத்தலிருந்து எவ்வளவு சோர்வாக வந்தாலும் மகனோடு மணிக்கணக்காக நேரம் செலவிடுவான் தேவ்ராஜ். மகனை, நின்றபடியே மெத்தையில் தூக்கிப் போடுவான்… உயரத்தில் தூக்கிப் பிடித்து விளையாட்டு காட்டுவான். கடுமையாக கத்தும் ரோச்சருக்கு அருகில் தூக்கிச் செல்வான். அதன் தலையை தடவ… கழுத்தை வருட கற்றுக் கொடுப்பான்… அவனுடைய முரட்டு விளையாட்டில் மதுராவின் மனம் பதைபதைக்கும். ஆனால் குட்டி தேவ் அதைத்தான் விரும்பினான். தந்தை எப்போது வருவான் என்று காத்திருந்து ரோச்சரிடம் அழைத்துச் செல்ல சொல்வான்.

“அது கடிச்சு கிடிச்சு வச்சிடப் போகுது” என்று பயப்படுவான் மதுரா.

“என் பிள்ளை கருவிலேயே சாவை சாகடிச்சுட்டு வந்தவன்… அவ்வளவு சீக்கிரம் தோத்துட்ட மாட்டான்” என்பான் தேவ்ராஜ்.

“அவன் சின்னக் குழந்தை… நாயோட எச்சில் இன்பெக்ஷன் ஆயிடும்… இந்த பக்கம் கொண்டு வந்துடுங்க” என்று தூரத்தில் நின்று கொண்டே கெஞ்சுவாள்.

“வேணுன்னா இங்க வந்து தூக்கிக்க” என்று வம்பிழுப்பான் தேவ்ராஜ். மதுரா அச்சத்துடன் பின்வாங்கிவிடுவாள்.

“உன் பையன் வருங்காலத்துல எவ்வளவு பெரிய மாவீரனா வரப்போறான்… நீ என்னடான்னா இப்படி பயப்படற!”

“என் பிள்ளை வீரனாவும் வளர வேண்டாம்… சூரனாவும் வளர வேண்டாம்… சாதாரணமா… நல்ல பிள்ளையா வளர்ந்தா போதும். கொண்டுவாங்க இங்க…” என்று மனைவி சற்று கோபமாக கேட்கும் போது, தேவ்ராஜ் சரி போகலாம் என்று நினைத்தாலும் குட்டி தேவ் விடமாட்டான். ரோச்சரை கட்டிப் பிடித்துக்கொள்வான். சில நாட்களுக்குப் பிறகு அதன் மீது ஏறி சவாரி செய்யவே துவங்கிவிட்டான்.

“தேவ் தர்…ஷ…ன் யா…ரு?” என்று மதுரா ராகம் போட்டால், எங்கிருந்தாலும் “பா…ப்…பாகி… ஜா…(ன்)” – “அப்பாவின் உயிர்” என்கிற அர்த்தத்தில் மழலை மொழியில் குரல் கொடுப்பான்.

“பாப்பாகி ஜான் நை… மம்மா கி ஜான்… போல்…” – ‘அப்பாவோட உயிர் இல்ல… அம்மாவோட உயிர்… சொல்லு…’ – மதுரா சொல்லிக் கொடுப்பாள். ஆனால் அவன் தெளிவு… இவள் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் கவனமாகக் கேட்டுக் கொண்டு திரும்ப, “பா….ப்பா கி… ஜா…” என்று தான் இழுப்பான்.

வீட்டில் அனைவரோடும் ஒட்டிக் கொண்டான். வேலைக்காரர்கள் முதல் பாதுகாவலர்கள் வரை அனைவரும் அவனுடைய பாஷயை கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று… ஒரு நாள் பாதுகாவலர்களின் இடுப்பு பெல்ட்டில் இருந்த துப்பாக்கியை கவனித்துவிட்டு அதை கேட்டு ஒரே அடம்… யார் என்ன சமாதானம் செய்தும் கேட்கவில்லை. வெகுநேரம் தானாக அழுது தானாக ஓய்ந்தான்.

மாலை தந்தை வேலை முடிந்து வந்ததும் கச்சேரியை திரும்ப ஆரம்பித்தான். பிறகு ஒரு டம்மி துப்பாக்கியை கொடுத்த பிறகுதான் விட்டான். அதன் பிறகு பல நாட்கள் அதை வைத்தே விளையாடிக் கொண்டிருந்தான். குழந்தையின் முரட்டுத் தனமும் அவனுடைய விருப்பங்களும் பல நேரங்களில் மதுராவின் வயிற்றை கலக்கும்.

“என்ன இவன்! இப்பவே இப்படி இருக்கான்…!” என்று கணவனிடம் புலம்பிவிட்டு பக்தி பாடல்களையும், வேத போதனைகளையும் சொல்லிக் கொடுப்பாள்.

“ரெண்டு வயசு குழந்தைக்கு என்ன தெரியும்… இதையெல்லாம் இப்பவே சொல்லிக் கொடுக்கணுமா?” என்பான் தேவ்ராஜ்.

“அதுசரி… பக்தி வேண்டாம்… வேதம் வேண்டாம்… துப்பாக்கியும் தோட்டாவும் போதும்… கொடுங்க… நல்ல பிள்ளையா வளருவான்” என்று கடுப்படிப்பாள் மதுரா.

“ப்ச்… சும்மா பேசாத மது… துப்பாக்கி மட்டும்தானே வச்சிருக்கான்… அதுவும் விளையாட்டு துப்பாக்கி… தோட்டா எங்க இருக்கு?”

“ஓஹோ! அதையும் கொடுப்பீர்களா?”

“இப்போ இல்ல…”

“பின்ன?”

“தேவைப்படும் போது…”

“ரொம்ப வருத்தப்படறேன்”

“எதுக்கு?”

“பொம்பள பிள்ளையா பெத்திருக்கலாமேன்னு…”

“அப்பவும் கொடுப்பேன்…”

“விளங்கிடும்… எப்படியோ போங்க…” என்று வாய் வார்த்தைக்கு கூறினாலும் குழந்தையை நெறி தவறாமல் வளர்ப்பதில் அவள் வெகு கவனமாக இருந்தாள். அதே போல் மகனை வீரமாகவும் விவேகமாகவும் வளர்ப்பதில் தேவ்ராஜ் குறியாக இருந்தான்.

***********

பாரதிக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதை அறிந்த முகேஷ் அவளை தொடர்புகொள்ள முயன்றான். அவளுடைய மனதை கலைக்க வேண்டும் என்கிற அழுக்கு எண்ணத்தோடு அவளுடைய அலைபேசிக்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தான். குறுஞ்செய்திகள் அனுப்பினான். அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு தன் போக்கில் சென்றுக் கொண்டிருந்தாள் பாரதி.

அடுத்தக்கட்டமாக மோனிக்காவை பற்றி குறுஞ்செய்திகள் அனுப்பி அவளுடைய உணர்வுகளை உடைத்து பலவீனப்படுத்த முயன்றான். ஆனால் அன்றொருநாள் அவன் கண்ணில் கண்ட வன்மத்தை அவள் மறக்கவில்லை. சட்டென்று அவனுடைய தொடர்பு எண்ணை பிளாக் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க துவங்கிவிட்டாள்.

அவளிடமிருந்து எந்த மறுமொழியும் வராததைக் கண்டு கோபம் கொண்ட முகேஷ் சகோதரியிடம் அவளை பற்றி அவதூறாகப் பேசினான். ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியாத மோனிகா, “பாரதி அவரோட பொண்ணு… அவ எங்க இருந்தாலும் நல்லா இருந்தா போதும். அதைத்தான் அவரோட ஆன்மா விரும்பும்… அவரோட ஆன்மா எதை விரும்புதோ அதைத்தான் நானும் விரும்புவேன்… இதுக்கு மேல அவளைப்பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை நீ தப்பா பேசக் கூடாது… அவளுக்கு எதிரா ஒரு காரியம் செய்யக் கூடாது… மீறி செஞ்சா, அது எனக்கு எதிரா செய்யற மாதிரி…” என்று சற்று கடுமையாகவே கண்டித்தாள்.

விருப்பம் இல்லை என்றாலும் அந்த குடும்பத்தை தலைமுழுகித் தொலைப்பது என்கிற முடிவை எடுத்தான் முகேஷ்.

***********

மும்பை மாநகரமே திரும்பிப் பார்க்கும் வகையில் தங்கையின் திருமணத்தை ஏற்பாடு செய்தான் தேவ்ராஜ். அந்த திருமணத்தின் பிரம்மாண்டம் அவன் தங்கையின் மீது கொண்டிருக்கும் அன்பின் அடையாளம். மண்டபம், கேட்டரிங், ஆடை அணிமணிகள், அழைப்பிதழ் என்று அனைத்திற்கும் பணம் கோடிகளில் புரண்டது. அனைத்திலும் மதுராவின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

“தேவ் பாய்… இது என்ன உங்க கல்யாணம்னு நினைச்சீங்களா? பாரதி கல்யாணம்… அவளை கேளுங்க… பத்திரிக்கை பிடிச்சிருக்கா… பாத்திரம் பிடிச்சிருக்கான்னு… மதுராவை கேட்கறீங்க?” என்று எல்லோருக்கும் முன்பாக கிண்டலடித்துவிட்டாள் மாயா.

ஒரு நொடி திருத்திருத்த தேவ்ராஜ், “ஆங்… பாரதிக்குத்தான் கல்யாணம்… ஆனா அவதான் ஆல்வேஸ் போன்ல பிஸியா இருக்காளே! வேற என்ன பண்ணறது.. நாமதான் செலெக்ட் பண்ணனும்…” என்று சமாளித்தான். எல்லோரும் குபீரென்று சிரிக்க மதுராவுக்கு வெட்கமாகிவிட்டது.

“ஏன் இப்படி மானத்த வாங்கறீங்க?” என்று தனிமையில் கணவனை கண்டித்தாள். கண்டிக்கும் மனைவியை கட்டுக்குள் கொண்டுவரும் வித்தையை அவன் கற்றிருந்தான்.

***********

அன்று பாரதியின் திருமணம்… விருந்தினர்களும் முக்கிய பிரமுகர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தார்கள். அனைவரையும் வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் பிசியாக இருந்தான் தேவ்ராஜ்.

எதேர்சையாக மணவறை பக்கம் திரும்பிய தேவ்ராஜின் கண்கள் நிலைகுத்திவிட்டன. பட்டுப்புடவையும் பளபளக்கும் ஆபரணங்களும் அணிந்து அப்சரஸ் போல் வலம்வந்துக் கொண்டிருந்த மனைவியிடமிருந்து மீள மறுத்தன அவன் கண்கள்.

புரோகிதரிடம் குனிந்து ஏதோ கேட்டாள். பிறகு அருகில் நிற்கும் பெண்ணிடம் ஏதோ சொல்லி சிரித்தாள். பிறகு கண்களால் கூட்டத்திற்குள் யாரையோ தேடினாள்… தேடினாள்… தேடித் கொண்டே வந்தவள் அவன் பார்வையை சந்தித்ததும் சட்டென்று பிரகாசமானாள். சைகை செய்து அவனை மேடைக்கு அழைத்தாள். அவன் இங்கிருந்தே, ‘என்ன?’ என்று புருவம் உயர்த்தினான்.

கையை சுற்றி சுற்றி ஏதோ சைகை செய்தாள். பிறகு முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, “வா…ங்…க…” என்று உதட்டை அசைத்தாள். நொடியில் கோவைப்பழத்தை கொத்தி தின்னும் கிளியாய் மாறியது அவன் மனம்.

உணர்வற்ற சிலை போல் அசைவற்று நின்றான். தலையில் அடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள் மதுரா.

“மாப்பிள்ளைக்கு நலுங்கு வைக்கணும். இங்கே நின்னு என்ன பராக்கு பார்த்துக்கிட்டு இருக்கீங்க?” என்று கடிந்துக் கொண்டு அவன் கையைப் பிடித்து மேடைக்கு இழுத்துச் சென்றாள். கணவனும் மனைவியும் சேர்ந்து நின்று மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சடங்கை செய்தார்கள்.

பிறகு சற்று கேப் கிடைத்த போது கணவனை தனியாகத் தள்ளிக் கொண்டு போய், “என்ன அப்படி வெறிச்சு பார்த்துகிட்டு நின்னீங்க?” என்றாள் சிவந்த முகத்துடன். அவளுக்கு தெரியும் அவன் தன்னைத்தான் பார்த்தான் என்று. ஆனாலும் ஒரு அல்ப ஆசை… அதை அவன் வாயால் கேட்க வேண்டும் என்று.

“வேண்டாம்… நா சொல்லிடுவேன்… அப்புறம் நீ திட்டுவ…” என்றான் பயந்தவன் போல் பாவனை செய்து கொண்டு.

“அடடே… நம்பிட்டேன்… சொல்லுங்க? யாரை பார்த்தீங்க?” – ‘உன்னைத்தான் டீ என் செல்ல குட்டி…’ என்று சொல்ல வேண்டும் என்பது அவள் எதிர்பார்ப்பு. ஆனால் அவனோ,

“அதோ நிக்குது பார் ஒரு செர்ரி பழம்…” என்று ஆரம்பித்தான். மறு நொடியே “ஸ்ஸ்… ஏய்…” என்று கிசுகிசுத்தான். காரணம், நறுக்கென்று அவன் கையில் பதிந்தது மதுராவின் நகம்.

“அதை பார்க்கலன்னு சொல்லவந்தேன்… ஸ்ஸ்… திரும்பவும் ஏன்…!”

“பொய் சொல்லாதீங்க”

“நோ… இட்ஸ் ட்ரூ…” – மதுராவின் பார்வை அவன் பார்வையோடு கலந்தது.

“வேண்டாம்… அப்படி பார்க்காத…” – எச்சரித்தான்.

“வீட்டுக்கு வாங்க கவனிச்சுக்கறேன்…” – பொங்கிவரும் புன்னகையை மறைத்துக் கொண்டு அவனை மிரட்டிவிட்டு மணமகள் அறைக்குள் நுழைந்தாள்.

நாத்தனாரை கைபிடித்து அழைத்து வந்து மணவறையில் அமரவைத்தாள். புரோகிதர் விடாமல் மந்திரம் ஓதி கொண்டிருந்தார். மணமக்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்தார்கள். தந்தையின் ஸ்தானத்திலிருந்து தங்கைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்தான் தேவ்ராஜ். மங்கள வாத்தியங்கள் முழங்க, உற்றாரும் உறவினர்களும் அட்சதை தூவ… செல்வி பாரதி திருமதி பாரதியானாள்.

இராஜேஸ்வரியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. “சாதிச்சுட்ட ராஜி… சந்தோஷமா இரு… கண் கண்கலங்காத…” என்று கூறி தங்கையை அணைத்துப் பிடித்து ஆறுதல் அளித்தார் நரேந்திரமூர்த்தி.

விருந்து ஒரு பக்கம்… கேளிக்கை கொண்டாட்டங்கள் ஒரு பக்கம்… பரிசளிப்பும் புகைப்பட பதிவுகளும் இன்னொரு பக்கம் என்று மண்டபமே அமளி துமளியானது. அனைத்தும் ஓய்ந்து விருந்தினர்கள் மெல்ல கரைந்த பிறகு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்தார்கள்.

முதலில் மாப்பிள்ளை வீட்டார் குடும்ப புகைப்படம் எடுத்தார்கள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக எடுத்துவிட்டு பெண்வீட்டிற்கு இடம்விட்டு ஒதுக்கினார்கள்.

“சார்… உங்க ஃபேமிலியை கூப்பிடுங்க… ஒரு ஸ்நாப் எடுத்துடலாம்…” – கேமிரா மேன் குரல் கொடுத்தான்.

“மது…வா…வா… தர்ஷனை தூக்கிட்டு வா…” – தூரத்தில் நின்ற மனைவியை அழைத்தான் தேவ்ராஜ்.

“என்னங்க…?” – அருகில் வந்து நின்ற பிறகு கேட்டாள் மதுரா.

“ஃபேமிலி போட்டோ…”

“ஓ! அத்தையை கூப்பிடறேன்” – கீழே இறங்கிச் சென்று இராஜேஸ்வரியை கையேடு அழைத்து வந்தாள்.

“ரெடியா சார்? எடுக்கலாமா?”

“வெயிட் வெயிட்… மாயா எங்க?” என்று கண்களால் தேடிவிட்,டு தூரத்தில் நின்ற தங்கையை கைகாட்டி அழைத்தான்.

அவள் மேடைக்கு வந்து அண்ணன் அழைத்த காரணத்தை தெரிந்துக் கொண்ட பின், “துருவன் இல்லாம எப்படி நம்ம ஃபேமிலி கம்ப்ளீட் ஆகும். நா போயி கூட்டிட்டு வரேன்” என்று கீழே இறங்கிச் சென்று கணவனை கையேடு அழைத்து வந்தாள்.

“ரெடியா? எடுத்துடலாமா?”

“தம்பி இருப்பா…” – இராஜேஸ்வரி.

“அண்ணனை கூட்டிட்டு வந்துடறேன்” – தன் உடன் பிறப்பை தேடித் சென்று இழுத்துக் கொண்டு வந்தாள் இராஜேஸ்வரி. வரும் பொழுதே “என்ன விஷயம் ராஜி?” என்றார்.

“ஃபேமிலி போட்டோ”

“ஃபேமிலி போட்டோவா! பிரபாவதி வெளியே நிக்கிறாளே! ஒரு நிமிஷம் இரு…” – ஓடிச் சென்று மனைவியை அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தார்.

காத்திருந்த கேமிரா மேன் களைப்புடன், “ரெடியா சா…ர்…?” என்றான்.

“ரெடி… ரெடி…”

“ஒன் மினிட்… திலீப் மட்டும் மிஸ்ஸிங்” – பாரதி.

“காட்! திலீப்பை விட்டுட்டோமே. கொஞ்சம் வெயிட் பண்ணு… நா போயி கூட்டிட்டு வந்துடறேன்… ” – தேவ்ராஜ் கீழே இறங்கினான். வரும் பொழுது திலீப் மற்றும் தேஜாவோடு வந்தான்.

நரேந்திரமூர்த்தி நடுவில் அமர்ந்திருக்க அவருக்கு ஒருபக்கம் மனைவியும் இன்னொரு பக்கம் தங்கையும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இடது பக்கம் தேவ்ராஜ் தம்பதியும், வலது பக்கம் துருவன் தம்பதியும் நின்றுக் கொண்டிருக்க பின்பக்கம் திலீப் பற்றும் தேஜா நின்றார்கள். முன் பக்கம் வீட்டு பெரியவர்களின் மடியில் சாய்ந்தபடி மண்டியிட்டு மணமக்கள் அமர்ந்திருந்தார்கள். ஆதிரா துருவன் கையில் இருந்தாள். தேவ் தர்ஷன் பிரபாவதியின் மடியில் இருந்தான்.

“ஆல் செட்… இப்போ எடு…” – நரேந்திரமூர்த்தியின் ஆணையை ஏற்றான் கேமிரா மேன்.

“சூப்பர்… ரெ…டி… சிரிங்க….”

“வெ….யி…ட்…!!!” – கத்தினாள் ஆதிரா.

“எ…ன்…ன பாப்பா?” – அலுத்துப் போனது அவனுக்கு.

“நா தம்பி பக்கத்துலதான் நிப்பேன்”

“சரி வா… நா தூக்கிக்கறேன்” – நரேந்திரமூர்த்தி பேத்தியை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டார்.

“மம்ம்…மா…” கத்தினான் தேவ் தர்ஷன்.

“ஷ்ஷ்ஷ்ஷப்பா…!!!”

“என்ன வேணும் பேட்டா?”

“தர்ஷ் பாப்…பா கி ஜ்ஜா(ன்)…” – தந்தையின் பக்கம் கையை நீட்டி தூக்கச் சொன்னான். உடனே தன்னுடைய இடத்திலிருந்து நகர்ந்து முன்பக்கம் வந்து மகனை மாமியாரிடமிருந்து வாங்கினான்.

‘முடி…ய…ல…’ – போட்டோ பிடிக்க வந்து வசமாக மாட்டிக்கொண்ட ஜீவன் முணுமுணுத்தது.

தேவ்ராஜ் மனைவியோடு சேர்ந்து நின்ற பிறகு, ஆதிராவும் தாத்தாவிடமிருந்து நழுவி மாமனைத் தொடர்ந்து ஓட அவளை அள்ளிக் கொண்டாள் மதுரா. இப்போது தன் விருப்பப்படி தம்பியின் பக்கத்தில் இருந்து போஸ் கொடுக்க முடிந்தது அவளுக்கு.

“கி…ரே…சி ஃபேமிலி” – வாய்க்குள் முணுமுணுத்தான் கேமரா மேன். தரைக்கு ஒரு ஆளும் தண்ணீருக்கு ஒரு ஆளுமாக இழுக்கும் குடும்பத்தைப் பார்த்து அவனுக்கு வேறு என்ன தான் தோன்றும்!

“என்ன??? என்ன சொன்ன?” – கேமிராகாரனிடம் புருவம் உயர்த்தினான் தேவ்ராஜ்.

‘நாங்க அப்படிதாண்டா இருப்போம். நீ அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது’ என்பது போல் மிரட்டியது அவன் குரல்.

“தும்ஹாரே ஃபேமிலி… ஸ்வீ…ட்… ஃபேமிலி சார்…” – இளிப்புடன் சமாளித்தான். அவனுடைய பேய் முழியையும் சமாளிப்பையும் கண்டு அந்த குடும்பம் குலுங்கி சிரிக்க, கேமரா ‘கிளிக்’ ஒலியை எழுப்பியது.

சிதறி கிடந்த குடும்பத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்து ஒன்றாக ஒரே மேடையில் நிற்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் ஒற்றுமையாக சிரிக்கவும் வைத்தது காலம். அந்த சிரிப்பை சிறப்பாக கேமராவில் பதிவு செய்துவிட்ட திருப்தியோடு, “பக்கா…” என்று கட்டை விரலை உயர்த்தினான் புகைப்பட கலைஞன். குடும்பத்தில் உள்ள அனைவருடைய மனநிலையையும் வெளிப்படுத்துவது போல அந்த ஒற்றை வார்த்தையை உதிர்த்தான் தேவ்ராஜ்…

“மகிழ்ச்சி”

55 Comments

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anusti says:

    Superb mam…really nice

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vaishu says:

    No words to 😍😍😍😍😍😍😍explain sis very nice beautiful loving story and very happy ending starting ga kalavarama aramichu pakkava happy ya mudichu happy pandriya 🖕story Yeppaum Spr lovely tha 👸💖❤💗

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Firoza Nazeer says:

    🤗 it is a beautiful story which recalls ‘the beauty and the beast ‘… I really enjoy your writing style … ’tis superb 💕😘 good luck 🍀 for your future endeavors 😘

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sameera Alima says:

    No words…. it’s a fantastic story…. can’t describe …..
    Such a beautifullllll story….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    S.KalaivaniDhivakar S.KalaivaniDhivakar says:

    Super story thank you

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Susi Selvakumar says:

    The story gives the feel of a rocket journey hats off to the writer

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anbu K says:

    Nice story..One day la padichen sis..Romba nalla irundhudhu..☺️☺️

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepika Krishna says:

    Really a very nice story.. It was heart touching nd full of emotions.. 😍😍😍

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Nithya Karthigan says:

      Thank you… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rozmin Shafina says:

    2 நாள்ள வாசித்து முடிச்சேன். முழுக்கதையிலும் ஒரு இடத்தில கூட விருவிருப்பு குறையவில்லை. ஒவ்வொரு பகுதியும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை தூண்டுகிறது. மிகவும் அருமையான நாவல். நன்றி சகோதரி.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Latha Kalyan says:

    Nice story

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    vimala narayanan says:

    very nice story

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Selvalakshmi Suyambulingam says:

    Very nice story.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Neenga madura delivery episode la soliruntheenga nan nenacha feelinga en ezhuthula solla detail kuduthurkken correct feel panna muditha solunga nu. Not only jn that episode 102 episode la neraya neray edathula ennala kannu kalangratha avoid panna mudila. I felt like iam there as mathura. U r great…

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      admin says:

      Thanks a lot Anjali… Thank you so much… 🙂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Anjali Suresh says:

    Enakum magizhchi. Super story. Night lam thungamudiyama hubby ta tittuvangitte padichu ipo than mudichen. Superb charactarization, story line and way u taken the story is too good.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Saranya Venkat says:

    complicated story wow super ur way of writing is awesome i have no words to express enoda kannu munadi nadakura mathiri iruku nethu night la iruthu unga story thoogama padichen no words to expresz my feeling ☺☺☺

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Radhi Muthuvel says:

    Super

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rangaja Senthil says:

    Oru nallaperumal padam parthadu pola Iruthanu. Superb story.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Helen Helen says:

    Hi mam,
    Super story romba Santhoshama iruku dev ku madura mela evolo love story name romba nalla iruku best wishes mam unga next story ku😊

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    Very nice story super

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    abdul Jas says:

    Super

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thara V says:

    Very nice story

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Glory Queen says:

    Nice story dear keep it up

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sabeetha Sabi says:

    Hi Nithi ,

    very nice story. Thank you so much for give this story. A long back to read your story. can you please post the Kaniyo amutho story.I think its waiting for a more than year.I read the story, after fourth episode i cant continue that story.If possible give link at least one week than only i can read the story,because my personal and official work .Best wishes to write more stories.

    sabeetha

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Karpagam Subramaniam says:

    Hi sis ….
    Sema story sis ena soldrathune therila sema story sema title sema super sis ….
    Avlo alaga kathaiya kuduthurikinga sis …
    Oru feel good movie patha mari irunthuchu ….
    Katha padika pakika apdiye kathaikula poita mari irunthuchu…..
    Ovoru visayathaium rombha alaga etharthama kuduthurukinga …..
    Dev ivana pathi ena soldrathu iyo sema cute ivanu kovantha namaku tha tension varthu nala poitu irukaratha ena pani kolapa poranonu……
    Nama tension pandrathe velaya pochu paya puliku
    Nama orula iruka pathi gents ipadi tha nu sola mudiyathu but ivanta iruka mari neraiya peru irunga sis athu nala a anaum thapu sola mudiyathu.
    Mathu so cute and allagu hmm avalatha over aha paduthita konjam illa rombhave ana ava baby ka feel panarhu rombha super sis
    Ovru characterum nama kuda iruka nama pakara oru alagalukum iruka charcter aha veli kamicha irntha mari irunthuthu
    Chinna chinna poramai ego ithuku ella imporance kudutha ena nadakum karatha rombha super aha soninga sis
    Super story………………….
    🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍😍😍😍😍😍😍😍😍
    Unga next storyku waiting sis 🤩🤩🤩🤩

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Ramya Raja says:

    Nithya sema story devbai sema hero unghaloda plusea hero choclate boy kidayathu but manly.heroine um normal . irukara edathirku etra kathaykalam super nithya.

    Adutha kathay avaludan nanghal

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Suganthi K says:

    Superb story… keep writing….. expecting more stories from u

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Skanatharajah Sutha says:

    Super………….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Jasha Jasha says:

    Super end
    Semma story
    Thank u mam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yazhvenba M says:

    Super story nithya

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vinayagam Subramani says:

    நிறைவான உணர்வுடன் நான். சந்தோஷ சாரலுடன் தேவ்..எழுத்துக்களின் கோர்வை ,காதல்,குடும்ப வாழ்வில் தோல்வி..பிள்ளைகள்..கோபம்,தாபம்,வெருப்பு.,ஈகோ,போட்டி ,பொராமை,பாசம்,நேசம்..சகோதரனின் கடமை,சகோதரியின் கடமை…தாய்க்கு அடங்கும் பிள்ளை..எத்தனை எத்தனை அத்தனையும் அருமை. நீதி,நியாயம் நிறைந்த அற்புதமான கதை. இல்லை, இல்லை,காவியம்.இதை வரைந்த நித்தியா கார்த்திகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Navaneetham Chonai says:

    Superb story, recently I start to read this fantastic the way of travel . 👌👌👌

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Saradha Sekar says:

    Nice 👌 👍

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    பூவின் வாழ்வில் புயல் ஒன்று நுழைந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது இந்நாவல் ,கடைசியில் பூ தன்னுடைய மென்மையை புயலுக்கு பரிசளித்து புயலையே தென்றலாக்கிவிட்டது,இரு குடும்பங்களில் நடக்கும் குடும்ப நிகழ்வுகளை நல்ல சுவாரசியத்துடன் அழகாக தந்திருந்தீர்கள்,திட்டு வாங்கினாலும் தேவ் எங்கள் எல்லோர் மனதிலும் இடம்பிடித்திருக்கின்றார்,அதே போல் மதுரா அனுதாபத்தை அள்ளிக்கொண்டுபோய்விட்டார்,எங்களுக்கு அழகான நாவல் தந்தமைக்கு நன்றி.

    நன்றி

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    C Menaka says:

    Super ending nice story

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Nice ending adhukula finish panitinga….😢😢😢😢 im waiting for kanal vizhi part 2…. yen dev yenaku venum…..😂😂😂😂

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    uma manoj says:

    Superb Nithya…….congrats. .
    Devsquare 😙😙😙

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Super sis.. Dev wow wat a change😍😍😍… madhu n dev cute couples…kutty dev apadiye dev than bold n adament so sweet😍😍😍…. bharathi mrge la dev madhu va sight adichathu sema😍😍😍…photo eduka panna azhumbu so cute😘😍😍😍😘…. fantastic ending sis…. miss u dev😭😭😭😭

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Manju La says:

    Neega pora picture super. Ethu ena film plz tell me mam

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Buvi Mani says:

    Lovely story sis dev boya romba miss pannuvom part 2 podungalen

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Manju La says:

    Super lovable story

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    wowwwwww semaaaaaaaa ending sisssssssss superuuuuuuuuuuuuuu

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Sema sema finish….manasuku niraiva iruku….magizhchi

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Shanmugaselvi V. says:

    Semma ……. Super 👌 … Waiting for next story……come back soon ….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kirthika Karthick says:

    Sema chance illa. Photographer pavam 🤣🤣. Enjoyed well but feel sad of ending the story.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Supernu oru varthail mutikka mutiyathu avlavu uirottamana kathaippa.dev mathuku mattrum mukkiyathuvam kotukkamal ellarukkum.enn rorchar dhuvarapalarkku muthal konttu ellam kathapathirathukkum mukkiyathuvam kotuthullirkal super. Ungalota atuththa kathaiku waiting pa.sikkiram vanthirungappa .👋

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vatsala Mohandass says:

    மிக்க மகிழ்ச்சி! கடைசி எபிரேய எப்படி இருக்கும் னு ஒரு ஆர்வம் இருந்தது.. அடி தூள்!! திரும்ப வாங்க இதே மாதிரி அருமையான ஒரு கதையோட… நன்றிகள் பல!

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kalai Mano says:

    Semma nitya…but dev va romba miss panuvom…nice story..neenga ezhuthuna vitham arumai..oru edathula koda bore adikama semmaya kondutu ponenga..semma story..book release ana udan onnu vangi vachita vendiathu than…miss u badly devvvvv boy…..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    jansi r says:

    Super

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kayalvizhi Ravi says:

    சந்தோஷ சாறல்! 😍😍😍💐💐💐

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Pon Mariammal Chelladurai says:

    முஜே ஏக் காப்பி பேஜியே தேவ் பேட்டா..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Gaayathry Kiruba says:

    அருமை👍

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Indra Selvam says:

    First

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      அருமை, மிக அருமை, நித்யாவின் எழுத்துக்கள் அப்படியே நம் கண்முன் கதாபாத்திரங்களை வளையவர வைக்கின்றன, ஆரம்பம் முதல் கடைசிவரை கனல்விழி காதல் பயனம் மிகமிக அழகாக, உணர்வுப்பூர்வமாக, அதிரடியாக, வலிகளுடனும், அதனை முறியடிக்சகும் சந்தோஷங்களுடனும் நிறைந்திருந்தது. இப்படிபட்ட அற்புதமான படைப்பை கொடுத்த நித்யாவிற்கு எனது நன்றிகளும் வாழ்த்துகளும், பல சோகமான தருணங்களில் நான் கனல்விழிகாதலை படித்துவிட்டு என் சோகத்தையும் மறந்து சிரித்திருக்கிறேன். நித்யா உங்களின் எழுத்து மிகவும் சக்திவாய்ந்தது. மீண்டும் ஒரு கதையுடன் சீக்கிறம் வரவேண்டும், Love u nithya…… i miss dev….and madhu….. and your writing…… come back sooooon.

You cannot copy content of this page