முகங்கள்-17
2027
11
முகங்கள் – 17
மார்பிள் ரெசார்ட் அளவுக்கதிகமான பதட்டத்தில் விழி பிதுங்க காட்சி அளித்தது. எக்கச்சக்கமான பத்திரிக்கையாளர்கள், வீடியோ கேமிராக்கள், மைக் ஏந்திய செய்தியாளர்கள் என்று அந்த பிரம்மாண்ட கான்பரஸ் ஹால், பிரம்மாண்டத்தை அடியோடு மறந்து போகும்படி செய்தது அக்கூட்டம்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சொந்தக்காரனான ருத்ரபிரதாப் பல சோடியம் விளக்கொளிகளின் வெப்பம் முகத்தை சுட்டெரித்த பொழுதும் அமர்த்தலான புன்னகையுடன், ஒரு கதாநாயக தோரணையில் வீற்றிருந்தான். அவனருகில் ஒரு புறம் படத்தின் கதாநாயகன் மித்ரன் ,மறுபுறம் கதாநாயகி நந்தினி அவளருகில் பிரகாஷ், சஞ்சய் இன்னும் சில முக்கியஸ்தர்கள் மேடையில் இருக்க, சஞ்சய்யின் அண்ணன் மதன்குமார் ருத்ரபிரதாப்பை பற்றி மேடையில் ஏற்ற இறக்கத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.
“ருத்ரபிரதாப் ஒரு வட இந்தியன். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்.தமிழ் மிகப்பிடித்த மொழி என்பதனால் தன் எழுத்தையும் இயக்கும் திறமையையும் தமிழ் படங்களில் காண்பிக்கலானார், பொதுவாக தமிழ் பட இயக்குனர்கள் பாலிவுட் ஹாலிவுட் என்று இங்கும் அங்கும் குதித்து தங்களை முன் நிறுத்திக்கொள்ள விழைகையில் எதைப்பற்றியும் கவலைபடாமல் தன் இலக்கை தீர்மானித்துக்கொண்டு அதிலிருந்து சிரிதும் வழுவாமல் சிறப்பாக தன்னைத்தானே செதுக்கிக் கொண்டிருப்பவர் என்றே சொல்லலாம். இதுவரை ருத்ரன் பெற்ற சிறந்த இயக்குனருக்கான விருதுகளின் எண்ணிக்கை அவர் இயக்கிய படங்களை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
தான் நினைத்ததை எப்பாடு பட்டேனும் முடித்து காண்பிக்கும் வல்லமை பெற்றவர். முதல் படத்திலிருந்து எத்தனையோ சவால்களை சமாளித்திருக்கிறார் முதலில் திரையுலக பின்னனி இல்லாமல் உள்ளே நுழைய தலைகீழாக தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. அஸிஸ்டன்ட் டைரக்டராக அவர் சந்திக்காத அவமானங்களே இல்லை எனலாம். இருப்பினும் திறமையை திரைப்போட்டு மறைத்திட முடியாதே!!!!. மேகங்களை கிழித்துக்கொண்டு உதிக்கும் சூரியக்கதிராய் தன் தடைகளை உடைத்தெரிந்து தன் முதல் படத்தை எழுதி இயக்கினார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே அவரை திரும்பிப் பார்த்தது. இருப்பினும் புகழ் தலைக்கு ஏறிவிடாமல் பாராட்டுகளை புன்னகையோடு ஏற்றுக்கொண்டு அதனை அப்பொழுதே மறந்தும் விடுவார். ஆனால் தவறு என்று யார் சுட்டிக்காட்டியிருந்தாலும் அதனை தன் மனதின் ஆழத்தில் பதிய வைத்துக்கொள்வார். அடுத்தமுறை அதுபோன்ற தவறுகள் தவிர்க்கப்பெற்று, குறை கூறியவர்கள் வாயிலாக பாராட்டை பெற்றுவிடுவார்.
இப்படி பல்வேறு திறமைகள் இருக்கும் ஒருவனுக்கு குறையும் நிச்சயமாய் இருக்க வேண்டுமல்லவா!!! ” என்று நீண்ட உரை நிகழ்த்திய மதன் சில வினாடி நிறுத்த கேமராக்கள் மொத்தமும் ருத்ரபிரதாப்பின் முகத்தை போக்கஸ் செய்தன. ஆனால் அவனோ சிறு முக மாற்றமுமில்லாமல் அதே புன்னகையுடன் வீற்றிருந்தான்.
சந்தனா மட்டும் ஆவலாக மதனை நோக்க அதையும் கேமிராக்கள் துள்ளியமாக படமெடுத்தன. “ஆம் அவருக்கும் ஒரு குறையுண்டு – அது கோபம். வேலையில் சிறு பிழையிருந்தாலும் அவருக்கு முகமெல்லாம் சிவக்குமளவு கோபம் வந்துவிடும்.” என்று நிறுத்தியவுடன் அங்கே லேசான சிரிப்பலை எழுந்து அடங்கியது ருத்ரனும் சிரித்தான். அவன் அப்படி சிரிக்கையில் இவனுக்கா கோபம் வரும்? என்று கூட்டத்தில் இருந்த அனைவரும் நிச்சயம் யோசித்திருப்பார்கள். ஏன் சந்தனாவே அவன் புறம் திரும்பி அவனை அதிசயமாக பார்த்தாள். அவளது விழியை சந்தித்தவன் சட்டென கண்சிமிட்டி மையலாக சிரித்தான். உடனே வேறு புறம் முகத்தை திருப்பிக்கொண்டாள் ,அவனது பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை தான் , ஆனால் அந்த அறையிலிருந்த ஓர் கேமிராவில் இவர்களது பார்வை பரிமாற்றம் தத்ரூபமாய் படமாக பதிந்திருந்தது.
சந்தனாவின் காதருகே குனிந்த ருத்ரபிரதாப் “யார் எது பேசினாலும் ஒரு நடிகையின் முகத்தில் புன்னகை மாறக்கூடாது கவனத்தில் இருக்கட்டும் ” என்று சிரித்துக்கொண்டே குட்டு வைத்தான். ஓர் வினாடி திகைத்தாலும் உடனே சமாளித்துக் கொண்டு, ௮வளும் சிரித்தபடியே “நான் நடிகை இல்ல ருத்ரன் சார் ” என்று திருப்பினாள்.
அவனும் விடவில்லை, அவளது சிரித்த முகத்தை கண்களால் சுட்டிக்காட்டி. “இதுவரை எப்படியோ இப்போது நீ நூறு சதவிகிதம் நடிகையாகி விட்டாய்.” சந்தனாவின் கண்கள் அகல.சட்டென அவளது முகத்திற்கு நேரே குனிந்து பேசுவது போல் அவளது முக உணர்வுகளை கேமராக்களிடமிருந்து மறைத்தவன்
புன்சிரிப்பு துளியும் மாறாமல் “என்ன ஆச்சர்யமா இருக்கா ? ஒரு கல்லை கொடுத்தாக் கூட அதை நான் நடிக்க வைச்சுடுவேன் ,அது தான் ருத்ரபிரதாப் ஓகே? அடிக்கடி அந்த வீடியோவை மறந்துடறியே ,நான் மைக்கில் எது பேசினாலும் முகத்தில் சிரிப்பு மாறாமல் பார்த்துக்கோ .” என்று முடித்தவன் அவளது முகத்தில் அதுவரை இருந்த வலியை மறைத்த புன்னகை எழ நிமிர்ந்து தன் இருக்கையில் சரியாக அமர்ந்து கொண்டு மதனை கவனிக்கலானான்.
மேடையில் மதன் தன் பேச்சை தொடர்ந்தார்.
அவரையும் அவரது கோபத்தையும் புரிந்து கொண்ட ஒரே நண்பன் பிரகாஷ் – சிறந்த கேமராமேன். திரைப்படதுறையில் நுழைந்தது முதல் இருவருக்கும் நட்பு உண்டு. முதல் படம் முடிவானதும் பிரகாஷ் தான் தனக்கு ஏற்ற கேமராமேன் என்று உறுதி செய்துவிட்டார் ருத்ரன். அதன் பின் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஒன்பது படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.
இது இவர்களது பத்தாவது படம். படத்தின் பெயர் “மிருதுளா ” அதற்கான அறிவிப்பு கூட்டம்தான் இது” என்று நிறுத்திய மதன் ருத்ரனின் புறம் திரும்பி “வாருங்கள் ருத்ரன் நீங்களே உங்கள் படத்திற்கு முன்னுரை வழங்கிவிடுங்கள்.” என்று மைக்கை விட்டு இறங்கி வந்து தன் இருக்கையில் அமர்ந்தார்.
அர்த்தம் பொதிந்த பார்வை ஒன்றை சந்தனாவின் மேல் வீசிவிட்டு மைக்கிற்கு முன்னே சென்றான் ருத்ரபிரதாப் ஏகப்பட்ட பிளாஷ் தன் கம்பீரக்குரலில் பேசலானான்
“எங்களது அழைப்பினை ஏற்று இங்கே வருகை புரிந்திருக்கும் பத்திரிக்கையாள நண்பர்கள் அத்தனை பேருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இன்று என்னுடைய பத்தாவது படத்தின் அறிவிப்பினை தெரிவிக்கவே உங்களை அழைத்திருக்கிறேன். என்னுடைய முந்தைய படத்திற்கும் இந்த படத்திற்கும் இரண்டு வருட இடைவேளை ஏன் என்று பலர் என்னை கேட்டனர், இது என்னுடைய பத்தாவது படம் என்பதால் இதனை என் திரைப்பட வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக உருவாக்க நினைக்கிறேன். அதனால் கதை கதைக்களம், லொக்கேஷன் என்று நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. ஆம்.. தயாரிப்பாளர் யார் என்று முடிவெடுப்பதிலும் சற்று நேரம் பிடித்தது தான். இந்தத் திரைப்படத்தின் தயாரிப்புத் தொகை 75 கோடியாகும்.. என் ரசிகர்களுக்கு கூடிய விரைவில் விருந்து படைப்பேன். இந்தப் படத்தின் கதாநாயகன் – இளையதீ – மித்ரன்.! கதாநாயகி – நந்தினி. இருவருமே முன்னணி நடிகர்கள். அதனால் அவர்களது ரசிகர்களுக்கும் சிறந்த விருந்துதான். இருபது நாள் ஷீட்டிங் முடிந்து விட்டது. அடுத்த மாதம் இசைவெளியீடு விரைவில் அதன் தேதி அறிவிக்கப்படும்.” முடித்து விட்டது போல் நிறுத்தினான்
கூட்டத்தில் இருந்த பத்திரிக்கையாளன் ஒருவன் “சார் இந்த படப்பிடிப்பின் போது சந்தனான்னு ஒரு பெண் இறந்துட்டாங்களே அந்த கேஸ் கூட முடியலையே அதை பத்தி என்ன சொல்றீங்க ?” எதையோ பெரிதாக கண்டுபிடித்து விட்டதுபோல் எகத்தாளமாக கேட்டான்
“இட் வாஸ் அன் அக்சிடென்ட், அவங்களுக்கு உடம்பு சரியில்லை,,வி ஹவ் ஆல் த ரெக்கார்ட்ஸ் “ என்று தலைகவிழ்ந்திருந்த சந்தனாவை பார்த்துக்கொண்டே பேசியவன் ,
ஏதோ கேள்வி கேட்க எழுந்த இன்னொரு பத்திரிக்கையாளனை கையசைத்து நிறுத்திவிட்டு தொடர்ந்தான்
“என்னுடைய பத்தாவது படத்தினுடைய அறிவிப்பிற்காக மட்டும் நான் உங்களை இங்கே அழைக்கவில்லை. அதனுடன் இன்னுமோர் முக்கிய அறிவிப்பு இருக்கிறது.” கூட்டத்தின் எதிர்பார்ப்பை சில வினாடி ஆராய்ந்தவன்
“நானும் நடிகை நந்தினியும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் ” என்று முடித்தவன் சந்தனாவின் புறம் திரும்பி மையலாக சிரித்தான். சந்தனாவின் முகத்திலிருந்த செயற்கை சிரிப்பும் உறைந்தது.
முகங்களின் தேடல் தொடரும்…..
11 Comments
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Hadijha Khaliq says:
அடப்பாவி இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டான்….ஏன் இந்த திடீர் முடிவு…
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
ugina begum says:
Vachutaanyaa aappuu
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Ha ha ha….. thanks for ur comments pa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Thadsayani Aravinthan says:
Hi mam
ருத்திரன் எமகாதகன்தான்,இங்கே பொதுவெளியில் இப்படி திருமண அறிவிப்பை அறிவித்தால் சந்தனவால் ஒரு துரும்பைகூட அசைக்க முடியாது என்று தெரிந்து அதற்குமுன்பே காணொளி பற்றி மிரட்டல் வேறு விடுத்து தன் காரியத்தை நிறைவேற்றியாச்சுது ,இனி என்ன செய்ய முடியும் சந்தனவால்,ருத்திரன் நன்றாக ஆட்டிப்படைக்கின்றார் பாவம் சந்தனா,இந்த அறிவிப்பை அஸ்வின் எப்படி எடுத்துக்கொள்வார் .
நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
உங்களின் கமன்ட்டிற்கு நன்றி தாட்சாயனி, உங்களது பல கேழ்விகள் என்னை சிந்திக்க வைக்கின்றன – நன்றி
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Nataraj Nataraj says:
Aaka santhana nee pavamma .ruthra kitta irunthu unakku vituthalaie ila po .eppati kokki pottu vachchurukkan.emakathaka.😎
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Kokki pottu….hahaha thanks for ur commentspa
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Lakshmi Narayanan says:
Innum ennalam seiya poran theriyalaiye … Periya தில்லாலங்கடியா இருப்பான் போல 😂😂
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
தில்லாலங்கடியேதான், No doubt. Thank u lakshmi
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
saranya shan says:
itha arivippu aswinukaagavaa……….yappa ivan sema nadigan………….
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
Indra Selvam says:
Thank u saranya