Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-19

அத்தியாயம் – 19

 

சந்தனாவின் அறை வரை அவளை கைப்பிடித்து அழைத்து வந்தவன், அவளது அறை கதவை திறந்து விட்டு. “இப்போ அஷ்வின்  வருவான் ,அவன் கிட்ட எப்படி பேசனும்னு பிளூடூத்ல இன்ஸ்ட்ரக்ஷன் தரேன்” என்றவன் அவளது பதிலுக்காக காத்திராமல் அவனது அறைக்’குள் நுழைந்தான்.

 

நடைபிணம் போல் அவன் விசைக்கு கட்டுபட்டாள். அவளது மூளைதான் செயலிழந்து விட்டதே.

 

‘திருமணம் அதுவும் ருத்ரனுடன். ஒரு கொலைகாரனுடன். கொலை கூட காரணம் சரியாக இருந்தால் சில சமயம் மன்னிக்க பட்டு விடுகிறது. ஆனால் தினம் தினம் எந்த ஒரு தப்பும் செய்யாதவளை சித்திரவதை செய்யும் பாவியுடன் இனி வாழ்க்கை முழுவதும் …….. ” நினைக்கையிலேயே அருவருப்பாக இருந்தது , கோபம் , அழுகை  எதையும் மாற்ற முடியாமல் இருக்கும் அவளது இயலாமை , இப்படி எல்லாம் சேர்ந்து , அவளுள் ஓர் படபடப்பை உருவாக்கியது ,கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது

 

அதற்குள் அவளது செல் சிணுங்கியது, இயந்திரமாய் எடுத்து காதுக்கு கொடுத்தாள். “பிளூடூத் போட்டுக்கோ. அஷ்வின் லிப்ட் ஏறிட்டான் ” என்றது ருத்ரனின் குரல்.

 

பிளூடூத்தை போட்டுக்கொண்டாள். ருத்ரபிரதாப் கூறும் அத்தனையையும் ஒரு சாவி கொடுத்த பொம்மைபோல் செய்தாள். இது எதுவுமே அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை  தான் ஆனால் ஏன் செய்கிறாள்? அவனை எதிர்க்க தோன்றவில்லையே ஏன்? அவள் பதிலை ஆராய்கையில் கதவு தட்டப்பட்டது சிந்தித்த படியே கதவை திறந்தாள்.

 

“குட் மார்னிங் நந்தினி ” என்றபடி உள்ளே நுழைந்தான் அஷ்வின்

 

“குட் மார்னிங் அஷ்வின்னு சொல்லு ” – ருத்ரனின் குரல்

 

“கு… குட் … மார்னிங் அஷ்வின்னு சொல்லு ” – ருத்ரன் கூறியதை அப்படியே கூறிவிட்டாள்

 

நெற்றியில் அடித்துக் கொண்டான் ருத்ரன்

 

“நான் சொல்லனுமா? நீங்க தான் சொல்லனும்., நேத்து லன்ச் டைம்ல பேசினோமே, அப்ப கூட எதுவும் சொல்லலை நீங்க. இப்போ திடீர்னு!!!!  ” முடிக்காமல் குழப்பத்துடன் அவளை பார்த்தான்

 

“படம் முடியட்டுமேன்னு நினைச்சேன் அஷ்வின் ”

 

“நீங்க இவ்ளோ பெரிய விஷயத்தை என்கிட்ட மறைப்பீங்கன்னு நான் நினைக்கல நந்தினி ” அவளை கோபமாகவே பார்த்தான்

 

“ஐ ஆம் சாரி அஷ்வின், உன்னை நேர்ல பார்க்கும் போது சொல்லலாம்னு இருந்தேன். சரி நீ சொல்லு “ஹௌவ் இஸ் யுவர் ஒய்ப்? ” – பேச்சை மாற்ற முயன்றான் ருத்ரன்

 

“ஷி இஸ் ஆல்ரைட். ஆனா…. கல்யாணத்துக்கப்புறம் நடிக்க மாட்டீங்கன்னு ருத்ரன் சொன்னாரே? ” – விடாமல் மீண்டும் தொடந்தான்

 

“எஸ் “- அவளது குரல் நடுங்கியது

 

“கான்சன்ட்ரேட் இன் யுவர் வாய்ஸ் ” அந்தப் பக்கம் கத்திக் கொண்டிருந்தான் ருத்ரன்

 

“அவருக்காக உங்க பேஷனை ஏன் விடனும். உங்களோட மார்க்கெட்டை பத்தி தெரியும் தானே? ” அவளது இந்த திடீர்  முடிவிற்கான காரணத்தை தெரிந்து கொள்ள பலவகையிலும் முயன்றான்

 

“எஸ் ஐ னோ!  பட் போதும், ஐ ஆம் டயர்ட், எனக்கும் ஒரு குடும்பம் வேணும்னு ஆசையிருக்காதா? எனக்கு காதல் வர கூடாதா? ” உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கியது. ருத்ரன் சொல்வதை அப்படியே தான் சொன்னாள் ஆனால் அவளது உணர்வுகள் அவளுக்கு கைகொடுக்கவில்லை. அவளுக்கு துளியும் விருப்பமில்லாததை சொல்லும், செய்யும் அவளை நினைத்து அவளுக்கே பாவமாக இருந்தது. கண்களில் தேங்கியிருந்த நீர் அதன் கட்டுப்பாட்டை இழந்து கன்னத்தில் வழிந்தது

 

“நந்தினி, ஆர் யூ கிரையிங், வாட் ஹாப்பன்ட்? “இரண்டே எட்டில் அவளை நெருங்கி அவளை அணைத்தான் அஷ்வின்

 

அவன் அணைத்த பிறகுதான், அங்கே என்ன நடக்கிறதென்று அவளுக்கே புரிந்தது.

 

உடனே அவனை நெட்டித்தள்ளிவிட்டு ஐந்தடி பின்னடைந்தாள்.

 

“நந்தினி என்ன ஆச்சு ஆர் யூ ஓகே” என்று அவன் அவளை நெருங்க.

 

“கிட்ட வராதே!  வராதே! கத்திக்கொண்டே பின்னடைந்தவள் மூர்ச்சையாகி விழுந்தாள்.

 

“காம்டவுன் சந்தனா காம் டவுன்” என்று எதிர்முனையில் கத்திய ருத்ரனின் குரல் நின்றது

 

மயக்கமடைந்த சந்தனாவை அடைந்த அஷ்வின் அவளது கன்னத்தை தட்டி “நந்தினி நந்தினி எழுந்துருங்க ” என்றது ருத்ரனுக்கு தெளிவாக கேட்டது.

 

“காட் “- போனை துண்டித்தவன் மீண்டும் அவளது எண்ணிற்கு அழைத்தான். அவன் எதிர்பார்த்தது போல் அஷ்வின் தான் போனை எடுத்தான், அவன் பேசுமுன் முந்திக்கொண்ட ருத்ரன்

 

“சாரி டார்லிங்,  இன்னும் கோபமா? சாரி டியர் ” என்று யாசிப்து போல் பேசினான்

 

“நா… நான் அஷ்வின் சார்! சாரி… நந்தினி! ….”

 

“நந்தினி எங்க அஷ்வின் “சாதாரணம் போல் பேச அவனாலுமே முடியவில்லை

 

நல்லவேளையாக அதனை கவனிக்கும் மனநிலையில் அஷ்வின் இல்லை.

 

“சார், மேடம்…. மேடம் மயக்கமாயிட்டாங்க ”

 

“வாட்? ” என்றதோடு தொடர்பை துன்டித்துக்கொண்டவன். சந்தனாவின் அறை நோக்கி விரைந்தான்

 

 

************************************

 

வாடிய பூச்செண்டுபோல் சுருண்டு கிடந்த சந்தனாவை தூக்கும் முயற்சியில் அஷ்வின் ஈடுபட்டிருக்க. அவனை தள்ளிவிட்டு அவளை கொத்தாக தூக்கி படுக்கையில் படுக்க வைத்தான். முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தான். கன்னத்தில் தட்டி அவளை எழுப்ப முயன்றான்,  மணிகட்டில் நாடி பிடித்து பார்த்தான்.

 

“காட் பல்ஸ் டவுனா இருக்கு ” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் செல்லை எடுத்து காதுக்கு கொடுத்தான்

 

“கம் இமீடியட்லி டூ ச..ந்… நந்…நந்தினீஸ் ரூம், எமர்ஜென்சி ”

 

தொடர்பை துண்டித்தவன், கண்களை மூடி தன்னை தானே ஆசுவாசப் படுத்திக்கொண்டான். யானைக்கும் அடி சருக்கும் தானே, சந்தனா நந்தினி என்று அவளின் மனநிலையை பொறுத்து மாற்றி மாற்றி கூப்பிட்டு அவனுக்கே தடுமாறியது, நல்ல வேளை அஷ்வின் எதையும் கவனிக்கவில்லை. அவனது கவனமெல்லாம் நந்தினியிடம் தான் இருந்தது.

 

டாக்டர் சியாமளா, டாக்டர் ஷர்மாவின் அசிஸ்டன்ட் வந்ததும் இருவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள்

 

“நந்தினி மயக்கமாகிற அளவுக்கு இங்க என்ன நடந்து அஷ்வின்?” அவனை குற்றம்சாட்டுவது போலிருந்தது ருத்ரனின் குரல்

 

“சார் நான் எதுவும் பண்ணலை. கல்யாண டிசிஷன் பத்தி விசாரிச்சேன். அவ்வளவுதான். அதற்கு முன்னாலேயே நந்தினி டிஸ்டர்ப்ட்டா தான் இருந்தாங்க. ”

 

உடனே கோபத்தில் ருத்ரனின் முகம் சிவந்தது “எங்க கல்யாணத்தை பத்தி நீ டிஸ்கஸ் பண்ண என்ன இருக்கு.? உனக்கு தேவையில்லாத விஷயத்துல நீ ஏன் மூக்கை நுழைக்கிற” அஷ்வினின் எல்லையை காட்ட முயன்றான்

 

ஆனால் அவனும் சாதாரண ஆள் இல்லையே. “சார் கல்யாணத்தை பத்தி பேசும் பொழுது தான் நந்தினி அழுதாங்க,அப்புறம் மயக்கமாகிட்டாங்க அவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே? “இப்போது சுட்டுவிரல் ருத்ரனின் புறம் நீட்டப்பட்டது

 

“வாட் நான்சன்ஸ் யூ ஆர் டாக்கிங், வீ போத் லவ் ஈச் அதர் ” அவனது கோபம் அதிகரித்தது

 

“அப்போ நந்தினி ஏன் அழனும்? ” அஷ்வினும் விடுவதாக இல்லை

 

இது எதிர்பார்த்த கேள்விதான், அதனால்தானே போனில் சாரியோடு ஆரம்பித்தான்.

 

“எங்களுக்குள்ள சின்ன மிஸ் அண்டர்ஸ்டான்டிங், அதனாலகூட இருக்கலாம் ”

 

“என்ன மிஸ்அண்டர்ஸ்டான்டிங்? ”

 

” இட் இஸ் பர்சனல் ” என்று கூறி அஷ்வினின் எல்லை எது என்று கூறாமல் கூறினான் ருத்ரனின் செல் சிணுங்கியது

 

“சொல்லு பிரகாஷ் ”

 

“……..”

 

“இல்ல இப்போ வர முடியாது, இன்னிக்கு பிளான் பன்ன சீன்ஸ் ஸ்டாட் பண்ணுங்க ”

 

“…..””

 

“எல்லாத்துக்கும் நான் தான் வரனுமா? அசிஸ்டன்ட் டைரக்டர் என்னத்த கிழிக்கறாங்க. ”

 

“…..”

 

“நீங்க ஷுட் போங்க, நான் வந்து பூட்டேஜ் பாத்து ஓகே பண்றேன் ” என்று ருத்ரன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே

 

சந்தனாவின் அறை கதவு திறக்கப்பட்டு டாக்டர் சியாமளா வெளியே வந்தார்

 

உடனே தொடர்பை துண்டித்தவன்

 

“ஸ் ஷீ ஆல்ரைட்? ” என்று அவசரமாக கேட்டான்

 

“என்ன ஆச்சி டாக்டர் ” -பின்னோடு அஷ்வினும் கேட்டான்

 

“பீபி டவுன், ஒரு இன்ஜக்ஷன் போட்டிருக்கேன், ஷி வில் பி ஆல்ரைட், ருத்ரபிரதாப்- லெட் ஹர் டேக் ரெஸ்ட் டுடே, ஷுட்டிங் வேண்டாம்” என்றார்

 

“ஓ கே டாக்டர் “- ருத்ரபிரதாப்

 

“ஓ கே சீ யூ லேட்டர் ” -சியாமளா

 

“தேங்க்யூ டாக்டர் “- அஷ்வின்

 

இருவரும் ரூமினுள் சென்றனர்

 

அஷ்வினை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்த ருத்ரன் கட்டிலில் படுத்திருந்த சந்தனாவை நெருங்கி அவள் கன்னத்தை தொட்டான். பின்பு மென்மையாக வருடிக்கொடுத்தவன் குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.பின்பு அவளது கரத்தை பிடித்தபடி அமர்ந்து விட்டான்.

 

ருத்ரனையே இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அஷ்வின்.

 

முகங்களின் தேடல் தொடரும்….




15 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Deepashvini Writes says:

    ஹாய் இந்திரா.
    எப்படி இருக்கீங்க..😍😍

    நான் ஊருக்கு போயிருந்தேன் அதான் கமெண்ட்ஸ் பண்ண முடியவில்லை, 😢😢😢
    (ஆனா யூடி மட்டும் கரெக்ட்டா படிச்சிட்டோம்ல்ல)😁😁😁

    என்னப்பா நடக்குது இங்க, பாவம் சந்தனா, ரொம்ப படுத்துறீங்க, 😲😲

    பாவம் புள்ள மயங்கி விழுந்துட்டா…

    இந்த ருத்ரன் நல்லவனா கெட்டவனா.. டேய் உனக்கு என்னதாண்டா வேணும்…😡😡

    ருத்ரன் நடிக்கிறானா, இல்ல அவன்
    நிஜமா.. ஒண்ணும் புரியல, 🤔🤔

    சந்தனாவை எதுக்கு இந்த மாதிரி கார்னெர் பண்ணி கல்யாண் பண்ண போறான்,

    நிஜமாவே கல்யாணம் பண்ணிப்பாளா சந்து பேபி..

    அடுத்த அத்தியத்திற்காக இப்பவே மீ waiting

    சீக்கிரம் வாங்கோ…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Ruthra unmaiya santhana virumpuriyo illa ithuvum natippa nee nallavana illa kettavana.


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      ha ha ha…..Thanks for ur comments pa.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lalitha Vasudevan says:

    sandhana pavam.. avalai avalagave mathivittudungalen


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Senjidalam….kathirungal….lalitha…. commentirku nandri


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    சந்தனாவுக்கு ருத்திரன் மேல் ஆர்வம் இருக்கின்றதா இல்லையா என்று தெரியாது,ஆனால் ருத்திரன் நடிப்பாக செய்தாலும் உள்ளம் ஏதோ ஒருவகையில் சந்தனாவை நெருங்கும் என்று சொல்வதாலேயே நடிப்பு கோபம் மிரட்டல் எனும் வழிகளின் ஊடாக நெருங்குகின்றார் ருத்திரன்.

    நன்றி


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      இன்றைக்கு உங்களது கமன்ட் சீக்கிரம்வந்து விட்டதே! நன்றி, உங்கள் அனைவரது கமட்டும் தான் என்னை விடாமல் எழுத தூண்டுகிறது, உங்களின் யூகங்கள் என்னை சந்தோஷப்படுத்தூகின்றது – நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Ava mayakam aagira alavuku tension paduthitan pavi….enna nadipuda….pavi pavi…


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Enna pandradhu adhu avanoda manufacturing defect pa. Thank u for ur comments pa. All ur comments makes me to write continuously, thank u


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nirmala Sundaram says:

    Nice


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Thank u nirmala


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Lakshmi Narayanan says:

    ப்பா என்ன நடிப்புடா இது … நல்ல நடிகன் 😡


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Directorachea……… avan nadikalaina nadipa eppadi solli kodukarathu??? Lol …….. thank u so much for ur comments lakshmi. Give the same suppport till the end pa – thank u


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    ruthranin intha pari davippu nijamaa


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
      Indra Selvam says:

      Poga poga therium en thozhi…….thank u so much saranya……..for active participation in mugangal

You cannot copy content of this page